Pages

Tuesday, December 14, 2010

தாரணைக்கும் த்யானத்துக்கும் வித்தியாசம்....



तत्र प्रत्ययैकातानता ध्यानम् ।।2।।
தத்ர ப்ரத்யயைகாதாநதா த்⁴யாநம் || 2||

தத்ர = அங்கு; ப்ரத்யய = த்யானிக்கப்படும் வஸ்துவைப்பற்றி உண்டாகும் சித்த விருத்தியின்; ஏகதாநதா = ஒன்றேயான (வேறு விஷய கலப்பில்லாத தொடர்ச்சியான பிரவாஹமே) த்⁴யாநம் [ஆகும்]

இந்த தாரணைக்கும் த்யானத்துக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டுமே சித்த விருத்திதான். தாரணையில் மற்ற விஷயங்களிடத்தில் உண்டாகும் சித்த விருத்திகள் குறுக்கிடலாம். அதை கஷ்டப்பட்டு அடக்க வேண்டும். த்யானத்தில் அப்படி இராது. மற்ற சித்த விருத்திகள் எந்த முயற்சியும் இல்லாமல் விலகிப்போம்.
எப்படி தாரணை செய்வது? விஷ்ணு புராணம் சொல்லுகிறது: ப்ராணாயாமத்தால் வாயுவை வசப்படுத்த வேண்டும்; ப்ரத்யாஹாரத்தால் இந்திரியங்களை வசப்படுத்த வேண்டும்; பிறகு சுபாஶ்ரயத்தால் மனதை பந்தம் வராது காக்க வேண்டும். அம்மனதை பகவானின் சொரூபத்தில் நிலைப்படுத்துதல் ஆந்தர தாரணை. த்யானம் பெறும் வரை இதை பயிற்சி செய்து வர வேண்டும். த்யானத்தை அதற்கு முன் உள்ள யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை ஆகிய யோகத்தின் அங்கங்கள் ஏற்படுத்துகின்றன.

2 comments:

Geetha Sambasivam said...

ஓஹோ, இதைப் படிச்சிருக்கணும் முதல்லே. கொஞ்சம் மனசிலே ஏறுகிறது இப்போ. சரிதான் , போகவே ஆரம்பிக்கலை இன்னமும்! :(

திவாண்ணா said...

அப்பாடா! ஒத்தராவது புரிஞ்சுதுன்னு சொல்லறாங்களே! :-))