Pages

Wednesday, December 1, 2010

ப்ராணாயாமத்தின் லக்ஷணம்:





तस्मिन्सति श्वासप्रश्वासयोर्गतिविच्छेदः प्राणायामः ।।49।।
தஸ்மிந்ஸதி ஶ்வாஸப்ரஶ்வாஸயோர்க³திவிச்சே²த³​: ப்ராணாயாம​: || 49||

தஸ்மிந்ஸதி = அப்படி ஆசன ஜயம் ஏற்பட்டபின்; ஶ்வாஸ = வெளிக்காற்றை உள்ளிழுத்தலான சுவாசம்; ப்ரஶ்வாஸயோர் = உள்ளிருக்கும் வாயுவை வெளிவிடுதல் ஆகியவற்றின்; க³தி = கதியை விச்சே²த³​: தடை செய்யும்; ப்ராணாயாம​: =பிராணாயாமத்தை (செய்ய வேண்டியதாகும்).

மூச்சை உள்ளிழுப்பது, வெளிச்செலுத்துவது, இந்த இரண்டுக்கும் நடுவில் மூச்சை உடலில் அப்படியே நிறுத்துவது. இந்த மூன்றும் இயற்கையாக நிகழ்வன. இப்படி இயற்கையாக நிகழ்வதை நிறுத்துவது பிராணாயாமம்.
இங்கேயும் நமக்கு கொஞ்சம் வித்தியாசமாக தோன்றலாம். யோகா குரு மூச்சை இழு, பிடி, விடு என்று கற்று கொடுத்து இருக்கலாம். ஆனால் பாதஞ்சல சாஸ்திரத்தில் மேலும் பல வகைகள் உண்டு. மூச்சை இயல்பாக எடுக்கும் நேரத்தில் எடுக்காமல் இருப்பதும், வெளிவிடும் நேரத்தில் வெளிவிடாமல் இருப்பதும் கூட ப்ராணாயாமமே! (சோதனை செய்து பார்க்காதீங்க. குரு முகமாகவே பயில வேண்டும்.)


2 comments:

Geetha Sambasivam said...

யோகா குரு மூச்சை இழு, பிடி, விடு என்று கற்று கொடுத்து இருக்கலாம். //

நல்ல குருவானால் மூச்சு விடுவதையும், இழுப்பதையும் கடந்து நீயாக உட்செல்லாதேனும் சொல்லிடுவார். யோகா குரு சொல்லிக் கொடுக்கும் மூச்சுப் பயிற்சியிலும், (அதைப் பிராணாயாமம்னு சொல்றது தப்புனும் சொல்லுவார்) மனம் ஒத்துழைக்க வேண்டும். மனம் கட்டுக்குள் வரவேண்டும். இல்லாட்டி, மூச்சு பாட்டுக்கு எங்கேயோ போகும், மனசு எதை எதையோ நினைச்சுட்டு இருக்கும். செய்யறதும், நினைப்பும் ஒண்ணா இருக்காது! :(((((

திவாண்ணா said...

உங்களுக்கு நல்ல குரு கிடச்சு இருக்கார்!