Pages

Wednesday, October 20, 2010

த்ரஷ்டா



द्रष्टा दृशिमात्रः शुद्धोऽपि प्रत्ययानुपश्यः ।।20।।
த்³ரஷ்டா த்³ரு«ஶிமாத்ர​: ஶுத்³தோ⁴'பி ப்ரத்யயாநுபஶ்ய​: || 20||

த்³ரஷ்டா = காண்பவன் (புருஷன்); த்³ரு«ஶி மாத்ர​: = ஞான ஸ்வரூபமாக மட்டும் (உள்ளான்); ஶுத்³தோ⁴'பி =(எந்த மாறுதலும் இல்லாமல்) சுத்தனாக உள்ளான்; ப்ரத்யய =(இருப்பினும்) புத்தியை; அநு பஶ்ய: =அனுசரித்து பார்க்கிறவன் (ஆகிறான்.)

புருஷன்தான் த்ரஷ்டா. இவன் ஞான சொரூபன்; அதாவது புருஷனின் தர்மம், ஞானம் என்று இல்லை; அவனேதான் ஞானம். இவனுக்கு மாறுதல் (பரிணாமம்) இல்லை என்றாலும் புத்திக்கு அவை உள்ளன. சப்தம் முதலான விஷயங்கள் புத்திக்கு எட்டாது போனால் நாம் அவற்றை அறியமாட்டோம். விதிவிலக்காக ஏதோ ஒரு சமயம் மட்டும் ஸம்பிரக்ஞாத ஸமாதியின் காலத்தில் உள்ள ஸூக்ஷ்ம விஷயங்களையும் ஸமாதி கலைந்து எழும் (வ்யுத்தான) காலத்தில் உள்ள ஸ்தூல விஷயங்களையும் புருஷன் அறிவான். ஆகவே புருஷன் வேறு, புத்தி வேறு.
மேலும் புத்தி கர்மம், க்லேசம், வாசனை, இந்திரியம் ஆகியவற்றுடன் சேர்ந்துகொண்டு புருஷார்த்தத்தை உண்டு பண்ணுகிறது. ஆகவே புத்தி பிறருக்காக ஏற்பட்டது, பரார்த்தம் எனப்படும். புருஷன் வேறு யாருக்காகவும் ஏற்படவில்லை. சாந்தம், கோரம், மூடம் என புத்தி முக்குணங்களாக உள்ளது. ஆனால் இந்த புத்தியின் விருத்தியில் புருஷன் பிரதி பிம்பமாக பிரகாசப்படுத்துவானே தவிர அவன் புத்தியைப் போல விஷயத்தை ஒட்டி எந்த மாறுதலையும் அடைய மாட்டான். ஆனால் அந்த விஷய வடிவமாக இருப்பதாக தோற்றம் அளிக்கிறான். இதுதான் 1-4 இல் "வ்ருத்தி ஸாரூப்யம் இதரத்ர" எனப்பட்டது. இருந்தாலும் நடைமுறை சௌகரியத்துக்காக புருஷனை காண்பவனாக (த்ரஷ்டாவாக) பல இடங்களில் சொல்லப்படும்.

1 comment:

R.DEVARAJAN said...

நம: சாந்தாய கோராய மூடாய குணதர்மிணே |
நிர்விசேஷாய ஸாம்யாய நமோ ஜ்ஞாநகநாய ச ||

(கஜேந்த்ர ஸ்துதி)


தேவ்