Pages

Saturday, October 2, 2010

அபிநிவேசம்:



स्वरसवाही विदुषोऽपि तथारूढ़ोऽभिनिवेशः ।।9।।

ஸ்வரஸவாஹீ விது³ஷோ'பி ததா²ரூஃ‌டோ⁴'பி⁴நிவேஶ: || 9|| 

{பகுத்தறிவு இல்லாத ப்ராணிகளுக்கு எப்படியோ} அப்படியே சாஸ்திரங்களின் அனுமானங்கள் மூலம் பின்னால் வரும் முக்தியையும் முன்னால் உள்ள பந்தத்தையும் நன்கு அறிந்தவர்களுக்கும் கூட முந்தைய ஜன்மத்தின் அனுபவத்திலிருந்து உண்டாகும் வாசனையை ஒட்டி ஏற்படுவது அபிநிவேசம் ஆகும்.
முந்தின ஜன்மங்களில் ஏற்பட்ட மரண துக்கத்தை அனுபவித்ததில் ஏற்பட்ட வாசனையின் கூட்டம் ஸ்வரஸம் எனப்படும். இதுவே பண்டிதர் முதல் பாமரன் வரை எல்லாஒரையும் இனி எனக்கு மரணம் வேண்டாம் என நினைக்க வைக்கிறது. இந்த ஸ்வரஸத்தை ஒட்டி உண்டாவதே அபிநிவேசம்.
க்லேசங்களையும் அவற்றை நீக்கும் உபாயங்களை உபதேசித்தார். இவற்றை தேய்க்க கிரியா யோகங்களும் மைத்ரீ முதலிய சித்த பரிகர்மங்களுமே.

4 comments:

R.DEVARAJAN said...

மன்னிக்கணும், சிறு பிழை. மந்த்ரா ஆர்க்கில் சுத்த பாடம் இருக்கு. ஹிந்தில இருந்தாலும் மூலம் உபயோகப்படும்.

स्वरसवाही *विदषोऽपि* तथारूढ़ोऽभिनिवेशः ।।9।।
स्वरसवाही *विदुषोSपि* तथारूढोSभिनिवेश:

2.9 स्वरसवाही – जो परम्परा से चला आ रहा है, विदुषः अपि तथारूढा – विद्वान या विवेकयुक्त में भी विद्यमान देखा जाता है, वह (मृत्युभय), अभिनिवेशः – अभिनिवेश है।

http://www.mantra.org.in/yoga/myweb/yoga_sutra_in_hindi.htm

'ஸ்வரஸம்’ புது தகவல்; கொஞ்சம் ஸ்வாரஸ்யமா பேசணும், இப்ப குறுக்க புகுந்து பேசலாமா தெரியல


தேவ்

திவாண்ணா said...

வாங்க தேவ்! என்ன்னிடம் இருக்கிற ஒண்ணு ரெண்டு புத்தகங்களிலேயே பாட பேதம் இருக்கு. பையரை கேட்டா யோக சாஸ்திரத்திலே பலதும் வித்தியாசமா இருக்கும். சாதாரண சம்ஸ்க்ருத அறிவை வெச்சு கொண்டு பார்க்கப்படாது என்கிறார். யோக சாஸ்திரம் படித்தவர்களிடம்தான் கேட்க வேணும் போலிருக்கு. அது வரை பதிவையும் உங்க கமென்டையும் அப்படியே விட்டு வைக்கிறேன்.

திருப்பி பாத்ததிலே விதுஷோபி ன்னு இருக்கனும் போல இருக்கே? அப்படித்தான் எங்கிட்ட இருக்கும் புத்த்கங்களிலே இருக்கு. பதிவிலே இருக்கிற ஒரு வலை தளத்திலேந்து சுட்டது. எல்லாத்தையும் சரி பார்க்கணும் போல இருக்கு!

// கொஞ்சம் ஸ்வாரஸ்யமா பேசணும், இப்ப குறுக்க புகுந்து பேசலாமா தெரியல //
தாராளமா பேசலாம்!

R.DEVARAJAN said...

विदुष: अपि - विदुषोSपि

’வித்வான்களுக்குக்கூட’ இது சரியா இருக்கு


தேவ்

திவாண்ணா said...

சரி செய்தாச்சு!