Pages

Thursday, September 30, 2010

ராகம்:



सुखानुशयी रागः ।।7।।

ஸுகா²நுஶயீ ராக³: || 7|| 

சுகத்தையும் அதை அடையும் சாதனத்தையும் அனுசரித்து உண்டாகிற சித்த விருத்தி ராகம் ஆகும். இது நல்லதாக- உதாரணமாக மோக்ஷத்தை அடைய வேண்டும் - என்றும் இருக்கலாம். அல்லது மலினமான விஷயங்களிலும் இருக்கலாம். ஒரு முறையோ சில முறையோ பல முறையோ அனுபவித்த சுகத்தின் நினவு வந்து, அது போன்ற சுகமும், அது ஏற்படும் சாதனமும் மீண்டும் வேண்டும் என தோன்றும். இது ஒருவனை அடிமை ஆக்கிவிடுகிறது. பின் இதை அடைய மனிதன் என்ன வேண்டுமானாலும் செய்ய தூண்டப்படுவான்.
பிறர்க்கு ஏற்படும் சுகத்தை தன் சுகமாக யார் கருதுகிறானோ அவனுக்கு ராகம் ஏற்படுவதில்லை; ஒழிந்துவிடுகிறது. இது விலகினால் சித்தமும் மழை பெய்து நின்றதும் தெளியும் நீர் போல தெளிவாகிவிடும்.

3 comments:

RVR said...

Good posting with detailed explanation. Thank you--Venkat

திவாண்ணா said...

நல்வரவும் நன்றியும் வெங்கட் சார்!
ஆமா நெஜமா ப்ரொபைல்ல போட்டு இருக்கற ப்ளாக் அத்தனையும் படிக்கிறீங்களா? voracious reader! :-)

Geetha Sambasivam said...

நிறையச் சேர்ந்திருக்கு, மெதுவாத் தான் படிக்கணும்! இந்தப் பதிவு கொஞ்சம் புரியறாப்போல் இருக்கு. மத்ததும் படிச்சுட்டு வரேன்.