Pages

Tuesday, July 6, 2010

பாரத ஸாவித்ரீ-2



நம் பெரியோர்கள் எந்த விஷயங்களை முக்கிய நோக்கங்களாக வைத்துக்கொண்டு ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று கருதினார்களோ, அவற்றை ஒருவன் காலையில் எழுந்ததும் ஸ்மரிப்பது அவன் கடமை என நூல்களில் சொல்லுவது வழக்கம். அந்த ஸ்லோகங்களை பிரதி தினம் படிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கின்றபடியால் இவற்றில் அடங்கியுள்ள கருத்துக்கள் நம் தேசத்தில் உள்ள எல்லா மக்களின் வாழ்க்கைக்கும் அடிப்படைத் தேவை என்பதில் ஐயமில்லை. இந்த நான்கு ஸ்லோகங்களின் கருத்துக்களைத்தான் வியாஸ பகவான் உலகத்தாருக்குச் செய்யும் முக்கிய உபதேசமாகத் தீர்மானித்திருக்கிறார். அவையாவன:

1. மாதாபித்ரு ஸஹஸ்ராணி புத்ர தா3ர ஸ2தாநி ச |
ஸம்ஸாரேஷ்வநு பூ4தாநி யாந்தி யாஸ்யந்தி சாபரே ||

இவ்வுலகில் ஒரு ஜீவன் எண்ணிறந்த பிறப்பு இறப்புக்களை அனுபவிக்கிற படியால் இந்த அனாதியான ஸம்ஸார வாழ்க்கையில் பல ஆயிரக்கணக்கான தாய் தந்தையர்களையும் பிள்ளை பெண்டிர்களையும் பார்த்து பழகி இருக்கிறான். இனி வரும் பல பிறப்புக்களிலும் இவர்களிடம் பழகப்போகிறான். ஆதலால் உலகம் அநித்யம்.

2. ஹர்ஷ ஸ்தா2ன ஸஹஸ்ராணி ப4ய ஸ்தா2ந ஸ2தாநிச |
தி3வஸே தி3வஸே மூட4மா விஸ2ந்தி ந பண்டிதம் ||

இந்த ஜீவனுக்கு ஸந்தோஷத்திற்கும் பயத்திற்கும் பல இடங்களில் பல காரணங்கள் ஏற்படுகின்றன. ஆனால் அவையெல்லாம் அறிவில்லாதவனைத்தான் ஆட்கொள்ளுமே தவிர விவேகமுள்ளவனை அணுகா.

3.ஊர்த்வ பாஹுர் விரௌம்யேஷ ந ச க: சிச் ச்2ருணோதி மே |
த4ர்மாத3ர்த2 : ச காம: ஸ கிமர்த்2ம் ந ஸேவ்யதே ||

இரு கைகளையும் உயரத்தூக்கிக்கொண்டு நான் இதைக்கத்துகிறேன். ஆனால் ஒருவனும் கேட்கிறான் இல்லை. அதாவது: - தர்மத்தில் இருந்துதான் அர்த்தமும் காமமும் உண்டாகின்றன. அப்படி இருக்க ஏன் தர்மம் அனுஷ்டிக்கப்படவில்லை?

4. ந ஜாது காமாந் ந ப4யாந் ந லோபா4த் த4ர்மம் த்யஜேஜ்ஜீவிதஸ்யாபி ஹேதோ: |
நித்யோ த4ர்மஸ் ஸுக2 து3: கே2த்வ நித்யே ஜீவோ நித்யோ ஹேதுரஸ்யத்வ நித்ய: ||

ஒரு பொழுதும் காமத்தினாலாவது பயத்தினாலாவது, உலோபத்தினாலாவது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தர்மத்தை விடக்கூடாது. தர்மம் எப்போதும் நிலையாக உள்ளது. சுகமும் துக்கமும் நிலையில்லாதவை. ஜீவன் நித்தியமாக உள்ளவன். ஆனால் உடல் நித்தியமில்லை.
இக்கருத்துக்களை பின்பற்றி மனிதன் தன் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வர வேண்டுமென்பது நம் பாரத தர்மத்தின் அடிப்படியான நோக்கமாகும்.

5 comments:

Geetha Sambasivam said...

அதாவது: - தர்மத்தில் இருந்துதான் அர்த்தமும் காமமும் உண்டாகின்றன. அப்படி இருக்க ஏன் தர்மம் அனுஷ்டிக்கப்படவில்லை?

தர்மம் அநுஷ்டிக்கப் படணும்கிற வரைக்கும் சரி. ஆனால் தர்மத்தில் இருந்து தான் அர்த்தமும், காமமும்னா??? புரியலையே? தர்மத்தை ஒருவன் சரியாக அநுஷ்டிக்கும்போது அர்த்தமோ, காமமோ அவனை எப்படி அணுகும்??? கொஞ்சம் குழப்பமாய் இருக்கே? :((((((((

திவாண்ணா said...

கீதா சாம்பசிவம் has left a new comment on your post "பாரத ஸாவித்ரீ-2":

அதாவது: - தர்மத்தில் இருந்துதான் அர்த்தமும் காமமும் உண்டாகின்றன. அப்படி இருக்க ஏன் தர்மம் அனுஷ்டிக்கப்படவில்லை?

தர்மம் அநுஷ்டிக்கப் படணும்கிற வரைக்கும் சரி. ஆனால் தர்மத்தில் இருந்து தான் அர்த்தமும், காமமும்னா??? புரியலையே? தர்மத்தை ஒருவன் சரியாக அநுஷ்டிக்கும்போது அர்த்தமோ, காமமோ அவனை எப்படி அணுகும்??? கொஞ்சம் குழப்பமாய் இருக்கே? :((((((((

திவாண்ணா said...

தர்மம் அநுஷ்டிக்கப் படணும்கிற வரைக்கும் சரி. ஆனால் தர்மத்தில் இருந்து தான் அர்த்தமும், காமமும்னா??? புரியலையே? தர்மத்தை ஒருவன் சரியாக அநுஷ்டிக்கும்போது அர்த்தமோ, காமமோ அவனை எப்படி அணுகும்???

சரியா அனுஷ்டிக்கும்போதுதான் அவனை அர்த்தமும் காமமும் சரியா வந்தடையும்.
க்ருஹஸ்தனுடைய தர்மம் மற்ற மூன்று ஆச்ரமிகளை ரக்ஷிப்பது. அப்ப அவன் சம்பாதிச்சே ஆகணும். சம்பாதிக்கிரதை கொடுத்தது புக மீதியை அனுபவிப்பான். அது காமத்துக்கு ஹேது. இப்படியாக தர்மமானது அர்த்தம் காமம் ஆகியவற்றுக்கு உற்பத்தி ஸ்தானம் ஆகும்.

குமரன் (Kumaran) said...

இந்த சுலோகங்களில் வரும் ஸஹஸ்ரம், ஸதம் போன்ற எண்ணுச்சொற்களை அப்படியே ஆயிரம், நூறு என்று பொருள் கொள்ளாமல் எண்ணிறந்த என்று பொருள் கொள்ள வேண்டுமா ஐயா?

திவாண்ணா said...

வாங்க குமரன்! நீங்க சொல்கிறது சரியே! பல இடங்களில் அப்படித்தான் வரும்.