Pages

Tuesday, March 16, 2010

மானச பூஜை




சரி பெண்கள் செய்யற பாவ புண்ணியங்கள் பலன் யாருக்கு? புண்ணியங்கள் பலன் அத்தனையும் அவங்களுக்கேதான். போனா போகுது. பாவமும் அப்படித்தானே? இல்லியே! 50% பாபம் அவங்களோட கணவனுக்குதான். எங்க போறீங்க? கொடி தூக்கவா? இதுல இருக்கிற லாஜிக்கை சொல்லுங்களேன்.....

ஆண்கள் பூஜை செய்ய பெண்கள் உதவணும். பூஜை செய்கிற இடத்தை மெழுகி கோலம் போட்டு, பூக்கள் போன்ற தேவையான பொருட்களை கொண்டு வந்து வைத்து நிவேதனம் செய்ய ஏதேனும் தயார் பண்ணி - இப்படி பல வேலைகளை ஒழுங்கா செய்து இருந்தாதான் நிம்மதியா பூஜையை ரங்கமணி செய்யலாம். இல்லாவிட்டால் எங்கே வில்வம் காணோம், நிவேதனம் கொண்டு வர இவ்வளவு நேரமா ன்னு ஆரம்பிச்சு பல பிரச்சினைகள் துவங்கி பூஜை செய்கிற குறிக்கோளே போயிடும். கடேசில கோபம்தான் மிஞ்சும்.
அதனால பூஜைக்கு உதவற தங்கமணிகளுக்கு 50% புண்ணியம்.

மனைவி செய்கிற புண்ணிய காரியத்திலே இந்த மாதிரி பங்கு ஏதும் இல்லாம போகிற வாய்ப்பே அதிகம். அதனால அவங்க புண்ணியம் முழுக்க அவங்களுக்கே.

மனைவி தப்பு பண்ணா சரியா சொல்லிக்கொடுத்து செய்ய வைக்காத தப்பு ரங்கமணிது. அதானால 50% பாபம் ரங்கமணிக்கு.

ரங்கமணி செய்கிற தப்புக்கு தங்கமணி பாவம், என்ன பண்ணுவா? முழு பொறுப்பு ரங்குக்கு. அதனால பாபம் முழுக்க அவனுக்கே!
என்ன தங்கமணிகளே சரிதானே?

பூஜைகள்ல ஆயிரத்து எட்டு விதங்கள் இருக்கிறதால அதுக்குள்ள இப்ப போகலை. அடுத்ததா...

பலரும் கேக்கிறது. தினசரி பூஜை செஞ்சுகிட்டு இருக்கேன். திடீர்ன்னு ஊருக்கு போகணும். என்ன செய்யறது?
இப்படி பட்ட கேள்விகள் ஆயிரம் முளைக்கலாம். ஒரே விடை எல்லாருக்கும் பொருந்தாது. எங்கே போனாலும் பூஜையை கூட எடுத்துகிட்டு போய் போகிற இடத்திலே செய்கிற சிலரைத்தெரியும். அந்த காலத்திலே அப்படித்தான் இருந்து இருக்காங்க.
இப்ப இது கொஞ்சம் கஷ்டமா போயிடுத்து. ஆசார அனுஷ்டானங்களோட இருக்கிறவங்களுக்கு இது சிரம சாத்யம் ஆகிகிட்டு இருக்கு.
இதிலே என் வழி என்னன்னு சொல்கிறேண். உங்களுக்கு சரின்னு தோன்றினா அப்படியே செய்யுங்க.
ஊருக்கு பூஜையை எடுத்துக்காமலே கிளம்பிடுவேன். வீட்டிலே மனைவி, அம்மா அப்பா இருக்கிறதாலே யாரானா சின்னதா பூஜையை செஞ்சுடுவாங்க. அப்படி வாய்ப்பில்லாத போதும் மற்றும் சில நாட்களும் பூஜை நேரத்திலே பஸ், ட்ரெயின் எதுலே இருந்தாலும் அப்படியே மனசுலே பூஜையை ஆரம்பிச்சு செய்வேன். இதிலே சில அட்வான்டேஜ் இருக்கு. நிறைய விதவிதமான பூக்களை அர்ப்பணிக்கலாம். நைவேத்யம் இஷ்டத்துக்கு எது வேணா எவ்வளோ வேணா செய்யலாம்!
மனசால செய்கிறது சுலபமா தோணினாலும் அப்படி இல்லை. முழு கான்சென்ட்ரேஷன் வேணும். இல்லை வழக்கம் போலே மனசுக் குதிரை எங்கானா மேய போயிடும். ஆரம்ப காலத்திலே இது பழகாதது என்பதாலே சுலபம். பழகின பிறகுதான் கஷ்டம். ஏன்னு புரியுது இல்லே?

2 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

சிவ மானச பூஜைக்கான ஸ்லோகங்கள் கீழே!

http://maduraiyampathi.blogspot.com/2008/03/2.html

திவாண்ணா said...

பொருத்தமான தொடுப்பு! நன்றி மௌலி!