Pages

Wednesday, January 27, 2010

மாக புராணம் 29




30.குரு பரம்பரை:

க்ருத்ஸமதர்: புண்யகரமான வைஸா2கம் துலா கார்த்திகம் இவைகளிலும் மிகச்சிறந்தது மாகமாதம். மாகஸ்நாநம் யக்ஞசாரம், தபஸ்ஸாரம், கர்மஸாரம், தர்ம ஸாரமுமானது. ஸி2வன், விஷ்ணு, இந்த்ரன், ரவி முதலிய ஸகல தேவர்களுக்கும் ப்ரீதிகரமானது. எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டாலும் மாகஸ்நாநம் மாகபுராண ஸ்2ரவணம் செய்ய வேண்டும். இதைக்கேட்டாலே ஸகல பாபங்களும் அகன்று விடும். ஸகல ஸம்பத்துமுண்டாகும். இதை ஸி2வன் உமாதேவிக்குக் கூறினார். தேவி நாரதருக்கும், நாரதர் வியாஸருக்கும். வியாஸர் ஸூதருக்கும், ஸூதர் நைமிசாரண்ய வாஸிகளுக்கும் கூறினார் என க்ருத்ஸமதர் ஜனஹ மஹர்ஷிக்குக் கூறினார்.

ஸ்காந்த புராணத்தில் மாக மஹாத்மியம் முற்றிற்று.

ஸ்நாந ஸங்கல்பம்.

காலலம்பி ஆசமனம் செய்து,
ஸு2க்லாம்பரதரம் ஸ2ஸி2வரணம்சதுர்புஜம்|
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஸா2ந்தயே||

ஸு2பே ஸோ2பனே முஹூர்த்தே ஆத்ய ப்ரும்மண: த்விதீய பாரார்த்தே ஸ்2வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே கலௌயுகே. பிரதமேபாதே, ஜம்பூ த்வீபே பாரத வர்ஷே. பரதக்கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்2வே ஸ2காப்தே அஸ்மின் வர்த்தமானே வியவகாரிகே, ப்ரபவாதி ச2ஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே.....நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஸீ2ஸீர ருதௌ மாக மாஸே...பக்ஷே.....திதௌ.. நக்ஷத்ர யுக்தாயாம் ஏவங்குண விஸே2ஷண விஸி2ஷ்டாயாமஸ்யாம் …. ஸு2பதிதௌ இஹஜன்மனி ஜன்மாந்தரே சக்ருத் க்ருதானாம் ஸர்வேஷாம் பாபாநாம் ஸத்ய அபநோதநார்த்தம் ….புண்ய க்ஷேத்ரே ஹரிஹர ஸந்திதௌ/ அச்வத்த ஸன்னிதௌ/ ப்ராம்மண ஸந்நிதௌ மாகஸ்நாநமஹம் கரிஷ்யே.

மாகமாஸே ரடந்த்யாப: கிஞ்சிதப்யுதிதே ரவௌ
ப்ரும்மக்னம் வா ஸுராபம் வா கம்பதந்தம் புனீமஹே
துக்க தாரித்ர்ய நாஸா2ய ஸ்ரீ விஷ்ணோஸ் தோஷணாய ப்ராதஸ்நானம் கரோம்யத்ய மாகே பாப விநாஸ2நம்.

ப்ரார்த்தனை:

மகர ஸ்தே ரவௌ மாகே3 கோவிந்தாச்யுத மாத4வ|
ஸ்நாநேந அநேந மே தேவ யதோக்த பல2தோ பவ||

அர்க்ய மந்த்ரம்
ஸவித்ரே ப்ரவித்ரே ச பரந்தாம ஜலே மம|
த்வத் தேஜஸா பரிப்ரஷ்டம் பாபம் யாது ஸஹஸ்ரதா||

ஸவித்ரே நம: இதமர்க்யம்.

30 நாளும் தேங்காய், பழம், தாம்பூலம், வஸ்த்ரம், கம்பளம்; ஸ2க்திக்கேற்றபடி இவைகளிலொன்று நித்யம் தாநம் செய்யவும்.

ஸு2பமஸ்து.


Tuesday, January 26, 2010

மாக புராணம் 28




29. க்ரூர ஸ்த்ரீக்கும் நற்கதி:

க்ருத்ஸமதர்: விதேஹ நாட்டிலே க்ரூரா என ஒரு உழவாளியின் மனைவி இருந்தாள். பெயருக்கேற்றபடி தன் க்ரூர குணத்தைப் பதி புத்திரரிடமும் காண்பிப்பாள். சேற்றில் தாமரை உண்டாவது போல அவளுக்கு நற்புத்திரன் உண்டானான். இவள் எவ்வளவு க்ரூரமோ அவ்வளவு சாத்விகமான மகன். அவனுக்கேற்ற உத்தம மனைவி கிடைத்தாள். இருவரும் முதலில் பெற்றோர் பணிவிடை, பிறகு சாதுக்களுக்கு உபசாரம், தெய்வ பக்தி, ஏழைகளிடம் இரக்கம் முதலிய நற்குண நற்செய்கை உள்ளவர்கள். க்ரூர சேர்க்கையால் அவள் பதியும் க்ரூரனாகிவிட்டான். இருவரும் சேர்ந்து சதா காரணமின்றியே மகனையும் அவன் மனைவியையும் திட்டுவார்கள். கையாலும் கம்பாலும் அடிப்பார்கள். இவர்கள் என்ன செய்தாலும் அது நம் வினைக்கேற்ற பயன் என பொறுமையுடனிருப்பர். எப்படி சாந்தமாக இருந்தாலும் வலுச்சண்டைக்கு இழுத்து ஓயாமல் கத்துவர், அடிப்பர் பெற்றோர். ஒரு நாள் தன் மனைவி படும் கஷ்டம் தாளாமல் பெற்றோரை பணிந்து தாயே! ஸதா கலஹம் நடந்தால் அது குடும்பத்துக்கும் தங்களுக்கும் நல்லதல்ல. உற்றார் உறவினரும் மதிக்க மாட்டார். பரிஹஸிப்பர். கோபத்தால் நம் குலமும் நாஸ2மாகும். அம்மா! குற்றமிருந்தாலும் பொறுத்துக்கொள். தங்களுக்கு தெரியாததுண்டா? பொறுமைக்கு சமமான தபஸ் உண்டா? என்றான் புத்திரன்.

இதைக்கேட்டவுடன் சீறினாள். தடியை எடுத்து அடித்தாள். "நேற்று வந்தவளுக்கு பரிந்து கொண்டா என்னை நீ அடக்குகிறாய்? அவள்தான் ஓயாமல் சண்டையிடுகிறாள்" எனக்கூறி, ஓங்கி இருவரையும் அடித்தாள். வலி தாளாமல் அவனுக்கும் கோபம் வந்தது. அதை அடக்கித் தனக்குள் சிந்தித்தான். பெற்றோரை- அதிலும் தாயை த்வேஷிப்பவன் கோரமான நரகஞ்செல்வான் அன்றோ? மாதா பிதாவுக்கு ஸமமான தெய்வமுண்டோ? ஸதிக்குப் பதிக்கு ஸமமான தெய்வம் இல்லை; விஷ்ணுவுக்கு சமமான தேவனில்லை என ஸா2ந்தனான். க்ரூரா கையை சொடுக்கிப் பலவகையாக மருமகளை வைது, அடித்து ஒரு உள்ளேத் தள்ளி கதவை பூட்டிவிட்டாள். அப்போதும் புத்ரன் பெற்றோர் பணிவிடையை முன்னிலும் பன்மடங்கு பக்தியுடன் செய்து வந்தான். இதைக்கண்ட பந்துக்கள் அவளை நிந்தித்ததுடன் புத்ரனையும் கோபித்துக் கொண்டார்கள்.

க்ரூராவின் மகன் எதற்கும் பதில் சொல்லாமல் பெற்றோர்களுக்கு பணிவிடை புரிந்து வந்தான். ஒரு வாரமாயிற்று. “உள்ளே இருக்கும் தன் மனைவி உயிருடன் இருக்கிறாளோ? எப்படித் தவிக்கிறாளோ? என்னை அடுத்து வந்த அப்பெண்ணுக்கும் இந்த கதி நேர்ந்ததே!” என எண்ணித்தவித்தான். வாய் திறவாமலிருக்கும் போதே ஓயாமல் சண்டையிடும் தாயிடம் எப்படிக் கூறுவது? அக்நி புடத்திலுள்ள பொருள் போல் உள்ளும் புறமும் தவித்தான். பன்னிரண்டு நாட்களாகியும் தாய் மனமிரங்கவில்லை. கதவைத் திறக்கவில்லை. துணிந்து உள்ளே செல்லவோ திற எனக் கூறவோ இவன் மநமும் இடமளிக்கவில்லை.
ஆனால் தாய்க்கு பயந்து ரஹஸ்யமாக சந்து வழியாகப் பார்த்தான். பிராணன் அப்போதுதான் போவதைக் கண்டான். தன்னை அறியாமல் வாயைவிட்டு கதறி அழுதான். ஸோ2கத்தால் மூர்ச்சையாகி விழுந்தான். அப்போதுதான் க்ரூரா கதவைத் திறந்தாள். பிணத்தைக் கண்டாள். அவளே ஓ என அழுதுவிட்டாள்! ஊராரெல்லாம் கூடி, க்ரூரையை பலவாறு நிந்தித்தார்கள். பயனென்ன? அவள் உடலைத் தீயிலிட்டார்கள். புத்ரன் ஸோ2கந் தாளாமல் கங்கா தீரம் சென்றான். சில நாட்கள் சென்றபின் உடலைவிட்டு நற்கதி அடைந்தான். க்ரூரையும் அவள் பதியும் பாபத்தால் மநம் நொந்து, மண்ணை வாரி தலையிலும் முகத்திலும் போட்டுக்கொண்டு இரவும் பகலும் அழுதுக் கொண்டே இறந்தார்கள். யம தூதர்கள் இவர்களை அஸிபத்ர வநம் முதலிய மிகப்பயங்கரமான நகரங்களில் அறுபத்து நான்கு யுகம் வதைத்தார்கள். பிறகு பாம்பாக பிறந்து பம்பா தீரத்தில் ஓர் அரஸ2 மரப்பொந்தில் வஸித்தனர்.

தீரர், உபதீரர் என்ற இரு சாதுக்கள் பம்பையில் மாகஸ்நாநம் செய்து பகவானை அர்ச்சித்து மாக புராணம் படித்தனர். அந்த ஸ2ப்தம் காதில் விழுந்தவுடன் பாம்புகள் வெளியில் வந்து வீழ்ந்திறந்தன. அதிலிருந்து திவ்ய ஸ2ரீரமேந்திய க்ரூரையும் பதியும் தம்பதிகளாக வைகுண்டஞ் சென்றனர். மாக புராண ஸ்2ரவணமே இந்தப் பாபிகளுக்கு நற்கதி தந்தது.


Monday, January 25, 2010

மாக புராணம் 27



27.(தொடர்ச்சி)

வனத்திலே முநிவர்கள் மாக ஸ்நாநம் செய்ய கோஷ்டியாக வந்தனர். இக் குழந்தையை கண்டவுடன் குழந்தையில்லா முநிவர் ஒருவர் நமக்காகத்தான் பகவான் இதைத் தந்திருக்கிறார் என அதை அன்புடன் எடுத்து மனைவியிடமளித்தார். அவருக்கு இரு மனைவிகள். முதலில் இருவரும் இரண்டாண்டுகள் அன்புடன் அதை வளர்த்தனர். பிறகு இது என் குழந்தைதான், உனக்கல்ல என்று இருவரும் சண்டையிட்டனர். ஒரு நாள் மூத்தவள் குழந்தையை வநத்திலே கொண்டுவிட்டு இருவருக்கும் வேண்டாம் என திரும்பி வந்தாள். முனிவர் ஸி2ஸு2வைக் காணாமல் பலவிடங்களிலும் தேடினார். எப்படி வந்ததோ அப்படியே சென்றதென ஸா2ந்தி அடைந்தார். குழந்தை தவழ்ந்து சென்று தெய்வச்செயலாக துளசீ வநத்திற்குச்சென்றது. அது தெய்வச்செடியல்லவா? அங்கு யாதொரு தீங்குமின்றி சுகமாக உறங்கிற்று.


மறுநாள் காலையில் குழந்தை பசியால் வாடி அழுதது. அவ்வநத்திலுள்ள பக்‌ஷிகளும் மிருகங்களும்கூட இதைக்கண்டு வருந்தின. சில பக்ஷிகள் இறக்கையால் நிழலளித்து மூக்கால் கனிகளை கொண்டளித்தன.பசி தாஹமகன்றது. துளசி தர்ஸ2னம் ஸ்பர்சம் இவைகளால் குழந்தைக்கு வாக்கில் கிருஷ்ணா! வாஸுதேவ! அநந்த! அச்யுத! என்ற பகவன் நாமாக்கள் தோன்றின.


28. ஸுதர்மனுக்கு விஷ்ணு வரம்:

ஸுலக்ஷணன், முநிவரருளால் நிச்சயமாகக்குழந்தை பிறந்திருக்கும் என நம்பித் தாயையும் சேயையும் சாரரைக்கொண்டுத் தேடித்தேடி அகப்படாமல் வருந்தினான். துளஸீ வனத்தில் வளர்ந்த குழந்தைக்குத் தாய் தகப்பனும் சகோதரரும் குருவும் மற்ற பந்துவும் துளஸீயேயாயிற்றே. நாம கீர்த்தனம் செய்த மஹிமையால் பூஜை புரியவும் எண்ணமுதித்தது. நீரை எடுத்து துளஸீ வேரில் அபிஷேகம் செய்தான். துளஸீ தளத்தால் அர்ச்சித்தான். அதையே நிவேதனம் செய்தான். துளஸீ தேவீ விஷ்ணு பத்னீ அல்லவா? விஷ்ணு த்யானம் பூஜை முதலியன அவன் மனதில் உதிக்கும்படிச் செய்தாள். ஆறு மாதம் பக்தியுடன் பூஜித்தான். "பகவான் பக்தருக்கு விரைவில் அருள் புரிவாரே! அவரேன் எனக்கு தர்ஸ2னம் தரவில்லை?” என களங்கமில்லா மனதில் எண்ணினான். பகவானே ஆகாஸ2வாணியாகக் கூறினார்.

“ஸுதர்ம! நீ தர்மம் செய்தாய். மாக ஸ்நாநமும் செய். ஹரியின் அருளை பெறுவாய்.” என்றார். இதைக்கேட்டவுடன் மாக ஸ்நாந விதியும் மனதில் தோன்ற, அதையும் அனுஷ்டித்தான். அடுத்த நாள் ஸ்நாநம் செய்து பூஜை ஆரம்பிக்கும்போது, கருணைக் கடலான கருடவாஹனனன் அவன் முன் தோன்றி, “ஸுதர்மா என்ன வரம் வேண்டும்?” என்றார். சிறியவனாயினும், துளஸி ஸங்கத்தாலும், பகவதாராதநத்தாலும், மாகஸ்நாநத்தாலும். மஹர்ஷிகளைப் போல் "வேறென்ன வேண்டும்? உமது திருவடியே வேண்டும்" என்றான்! "குழந்தாய்! உனது தந்தை ஸுலக்ஷணனிடம் சென்று யுவராஜனாகி, அவர் வனஞ்சென்றபின் ராஜ்ய பாலனம் செய்து, உன் புத்ரனிடம் ராஜ்யமளித்து, வைகுண்டம் வா!” எனக் கூறி அருகிலிருந்த ஸுநத ரிஷியை அழைத்து "இவனை ஸுலக்ஷணனிடம் அழைத்துச் சேர்" எனக் கூறி மறைந்தார்.

பகவான் கூறியபடி ஸுநந்தர் சிறுவனை அழைத்துச்சென்று, சக்களத்திகள் விஷமளித்தது; அவளைப் புலி கொன்றது; ஹம்ஸம் இவனைக்காத்தது; துளஸீ வநத்தில் வளர்ந்தது; ஹரி பூஜை, மாகஸ்நாநம் செய்தது, விஷ்ணுவிடம் வரம் பெற்றது முதலிய விருத்தாந்தங்களை வர்ணித்தார். தர்மமிவனை வளர்த்ததாலும், தர்மம் செய்ததாலும், ஸுதார்மிகன் எனப் பெயர் பெற்றான் என்றார். அரசன் முநிவரைப் பணிந்து நன்கு பூஜித்து அனுப்பினான். குழந்தையை கட்டித்தழுவி, துளஸி அருளால் ஸகல பாக்கியமும், ஸகல கலைகளிலும் சிறந்த அவனுக்கு யுவ ராஜ பட்டாபிஷேகம் செய்வித்தான். ஸுதர்மனும் பெற்றோரை [அம்மாதான் "ஊருக்கு" போயாச்சே? தந்தையுடன் அவரது (வேறு) மனைவிக்கும் என கொள்ள வேண்டும்.] வணங்கி குடிகளை ஆதரவுடன் ஆண்டு, புத்ர பௌத்ர பாக்கியமும் பெற்று மாகஸ்நம் செய்து ஸத்கதி பெற்றான்.


Saturday, January 23, 2010

மாக புராணம் 26




27.சுலக்ஷண ராஜன்

துவாபர யுகத்திலே ஸூர்ய வம்ஸ2த்தில் உதித்த ஸூலக்ஷணன் என்றோர் ராஜனிருந்தான். பெயருக்கேற்றபடி நல்ல லக்ஷணமுள்ளவன். பரம தர்மிஷ்டனான அவனுக்கு நூறு மனைவிகள் இருந்தும் ஒரு புத்ரன் கூட பிறக்கவில்லை. புத்ரனில்லாதவன் தரித்ரன். வேதம் ஓதாதவன், நன்றி கெட்டவன் ஆகியவர்களுக்கு நற்கதி இல்லை என்கிறார்களே! நமக்குப்பின் இந்த அகண்ட ராஜ்யத்தை ஆளப்புத்திரனில்லையே எனக் கவலை கொண்டு, தபோவநம் சென்றான். மஹரிஷிகளை வணங்கி புத்ர பாக்யமுண்டாகும்படி அருள் புரியக் கோரினான். நைமிசாரண்ய வாஸிகள் அவனை வர வேற்று, நீ முற்பிறவியில் மாகஸ்நாநம் செய்யவில்லை. சுக்ல ஸப்தமியில் கூஸ்2மாண்டம், திலம், நெய் ஆகிய தாநமும் செய்யாமல் மற்றவற்றை செய்தாய். அத்னால் புத்ர பாக்யமில்லை என்றனர். அரசன் அவர்களை வணங்கி, இனி யான் அவைகளை விடாமல் செய்கிறேன். இப்பிறவியில் உடனே ஒரு புத்ரன் பிறக்க ஏதேனும் அனுக்ரஹம் செய்யுங்கள் என்றான். அவர்கள் நன்கு யோசித்து அபிமந்த்ரணம் செய்து ஒரு மாதுலம் பழத்தை அளித்து மனைவிகளுக்கு கொடு என்றனர்.
அரசன் சந்தோஷத்துடன் அவர்களை வணங்கி விடைபெற்று வீட்டிலதை ஜாக்ரதையாக வைத்தான். நூறு புத்ரர் ஜனிப்பர் என மகிழந்து வந்த களைப்பால் அயர்ந்து உறங்கினான். மனைவிகளில் கடைசியானவள் ஒருவருமறியாமல் அந்தப் பழத்தை புஜித்துவிட்டாள். காலை கர்மானுஷ்டானம் முடிந்தவுடன் மாதுலம் பழத்தைப் பங்கிட எண்ணினான். ஆனாலதைக்காணவில்லை. ஆஸ்2ரியப்பட்டான்! கோபங்கொண்டான். ரிஷி பிரஸாதத்தை அரண்மனையில் திருடியவர் யாராயினும் அவர்களை கடுமையாக ஸி2க்ஷிப்பேன் என்றான். அதைக்கேட்டு ராஜ பத்னீ உண்மையை கூறி மன்னிக்க வேண்டினாள். பத்நிதானே உண்டாள்! அவளிடம் குழந்தை பிறக்குமென ஒருவாறு ஸந்தோஷம் அடைந்தான்.
அவள் கர்ப்பிணீயானாள். மற்ற மஹிஷிகள் தங்களுக்கு அந்த பாக்யமில்லாததாலும், அரசன் அவளையே மதித்து தங்களை மதிக்க மாட்டாரே என்றும் எண்ணி அவளுக்கு விஷமிட்டுவிட்டார்க்ள். குழந்தையையோ, தாயையோ அது கொல்லவில்லை. ஆனால் தாய்க்கு பைத்தியம் பிடித்தது. காட்டில் திரிந்தாள். அரசன் அவளைத் தேடியும் அகப்படவில்லை. பத்தாம் மாதம் காட்டில் ஒரு ஆண் ஸி2ஸு2வை பெற்றாள். அருகிலுள்ள குகையிலிருந்து ஒரு புலி அவளை பக்ஷித்துவிட்டது. குழந்த அனாதையாக அழுது கொண்டிருந்தது. தற்செயலாக மேலே பறந்து சென்ற ஹம்ஸம் குழந்தையிடம் இரக்கம் கொண்டு தன் இறக்கையால் நிழலமைத்து, தனது இனத்தவர் மூலம் தேனும் கனியும் தந்து காத்தது. குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. (ஒருவராலும் காக்கப்படாததை அரண்யத்திலும் தெய்வம் ரக்ஷிக்கிறது. வீட்டில் நன்றாக ரக்ஷிக்கப்பட்டதும் [கூட] நாசமடைகிறது.)


Friday, January 22, 2010

மாக புராணம் 25




26. தர்மோபதேசமும் நால்வர் கதியும்.

வீர வ்ருதர்: இப்போது உங்கள் பாபங்கள் எல்லாம் அகன்றன. உன்னிடம் பிரும்ம வர்சஸ் உண்டாயிற்று. ஆயினும் மூன்று நாட்கள் உபவாஸமிரு. மந்திர ஜலத்தால் தர்ப்பையுடன் உனக்கு ஸ்நாநம் செய்விக்கிறேன் என்றார். அங்ஙனமே அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் தர்மோபதேசம் செய்தார்.
ஸுகத்தைத் தரும் வேத மார்க்கத்தை விடாதே. நல்ல குலத்திலிருந்து கன்யகையை மணந்து கிருஹஸ்த தர்மத்தைச் செய். எந்தப் பிராணியையும் ஹிம்சிக்காதே. பிராசீநமான ஸம்ப்ரதாயத்தை விடாதே. ஸந்த்யாதி நித்ய கர்மாக்களை விடாமல் செய். பக்தியுடன் சாதுக்களை சேவி. கண் காது முதலிய இந்த்ரியங்கள் போன வழியில் போகாதே. அவைகளுடன் மனதையும் அடக்கு. நித்யம் ஹரி பூஜை செய். பிறர் தோஷத்தைக் கூறாதே. அஸூயையை விடு. மற்ற ஸ்த்ரீக்களை தாய் போல கருது. வேதமறிந்தோர், அதிதி இவர்களை அவமதிக்காதே. விதிப்படி ஸ்2ரத்தையுடன் ஸ்2ராத்தம் செய். இதிஹாஸம், புராணம், வேதாந்தம் இவைகளைப் படி அல்லது கேள். ஸதா ஹரி நாமம் கூறு. விபூதி அணி. மாலை தரி. துளஸீ பில்வங்களால் ஹரி ஹரர்களை ஒரு வேளையாவது பூஜை செய். பஞ்ச மஹா யக்ஞம் செய். யதிகளை பூஜி. காயத்ரி ஜபம் தவறாதே. காம க்ரோதாதிகளுக்கு இடங்கொடுக்காதே. மாக ஸ்நாநத்தை மறவாதே. பௌர்ணமி, ரத ஸப்தமி, த்வாதசி இந்த மூன்று நாட்களாவது மாகஸ்நாநம் செய்.
மறு பிறவியில் துன்பந்தரத்தக்க பாபங்களை அகற்றும் ஸ்வகர்மா சித்த ஸு2த்தியையும் தரும். மநமே பந்தத்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணம். நாம் செய்த பாபத்தை நினைத்து மனம் வருந்தினாலே பாபம் அகலும். ஸாதுக்களும் ஸத்கர்ம நிரதருக்கும் மனம் ஏகாக்ரப்படும். மாக வ்ரதத்திற்கு ஸமமான வ்ரதம் வேறு இல்லை, நீங்கள் பக்தியுடன் மாகஸ்நாநம் செய்து மாக புராணம் கேளுங்கள் என்று வீரவ்ருதர் கூறினார். பிராம்மணனும் மற்றோரும் அவரை வீழ்ந்து வணங்கி விடை பெற்றுக்கொண்டு காசி சென்று அவர் சொன்னபடி செய்து நற்கதி அடைந்தார்கள்.


Thursday, January 21, 2010

மாகபுராணம் 24




25.பாபமும் பிராயச்சித்தமும்.

வீரவ்ருதர் பதித ப்ராம்மணணைப் பார்த்துகூறினார்: உனது சிஷ்யனான வேடன் பிரும்மஹத்தி, ஸுராபானம், ஸுவர்ணம் திருடுதல் எனும் மஹா பாபங்களைச் செய்பவன், அவனது நண்பன் ஸுவர்ணம் திருடுவதையே ஜீவனமாக கொண்டவன். இவர்களுக்கு தொண்டு செய்பவன் பெற்ற தாயையே புணர்ந்தவன். இவர்களுடன் சேர்ந்திருந்தால் நீயும் அந்த பாபம் செய்தவனாவாய். வேதியன் தீர்த்தப் பாத்திரத்துடனும் தர்ப்ப பவித்திரத்துடனும் இருந்தால் அன்னியர் பாபம் இவனிடம் வராது. தெரிந்தே இந்த மஹா பாபம் செய்தவர்களின் அருகே செல்லக்கூடாது. இவர்கள் பல கல்பம் பயங்கரமான நரகங்களை அனுபவித்து ப்ரும்மராக்ஷசர்களாவர் என்றார்.

இதைக்கேட்ட ப்ரஷ்ட புரோஹிதன் நடு நடுங்கி அவரை வணங்கி, “ஐயா! எனது பாபத்தைபோக்க ப்ராயச்சித்தம் கூறுங்கள்" என்றான். "மநு முதலிய தர்ம ஸா2ஸ்த்ரக்ஞர் கூறியதைக்கேள். பன்னிரண்டாண்டு ஊர் ஊராகச் சென்று, "நான் பாபி! எனக்கு பிக்ஷை தாருங்கள்!” எனக் கேட்க வேண்டும். பன்னிரண்டாண்டுகளும் பக்தி சிரத்தையுடன் மாக ஸ்நாநம் செய்ய வேண்டும். ப்ரயாக க்ஷேத்திரத்தில் மாக ஸ்நாநம் செய்து மாதவனை தர்ஸ2னம் செய். ப்ரயாக ஸ்மரணமும் ஸ்நாநமும் உடனே பாபங்களை போக்கி பாவநமாகச் செய்யும். ப்ராயச்சித்தம் ஆரம்பிக்கும் போதும் இடையிலும் முடிவிலும் ப்ரயாகத்தில் மாக ஸ்நாநம் செய். அங்கு கோஸா2லையில் அன்னமருந்தி வஸிக்க வேண்டும்" என்றார்.

இதைக்கேட்டு "ஸ்வாமின்! பரோபகாரத்திற்காகவே ஜநித்த தாங்கள் என்னுடன் கூடிய மூவருக்கும் உசிதமான பிராயச்சித்தத்தையும் கூறுங்கள்" என பிராம்மணன் வேண்டினான். வீரவ்ருதர் மேலும் கூறினார். அவர்களும் இதே போல்தான் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். பதி மூன்றாம் ஆண்டில் பாபங்கள் போன பின் என்னிடம் வாருங்கள். மேலே என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிறேன் என்றார். பிராம்மணன் அவர்களிடம் சென்று, "நாம் செய்த பாபம் பல கோடி ஆண்டுகள் நரக யாதனையை உண்டு பண்ணும். பிறகு பல்லாண்டுகள் பிரம்மராக்ஷசாக இருக்க வேண்டுமாம். ஆதலால் வீரவ்ரதர் கூறிய பிராயச்சித்த விரதத்தை செய்வோம்!” என நால்வரும் பல புண்ய தீர்த்தங்களிலும் ஸ்நாநம் செய்தனர். பசுவுக்கு அரிசியைத் தந்து மூன்று பிடி அரிசியை கோமயத்தால் பாகம் செய்து [சமைத்து] சாப்பிட்டனர். பிரயாகம் காஸி2 முதலிய புண்ய தீர்த்தங்களிலும் மாக ஸ்நாநமும் செய்தனர். இங்ஙனம் பன்னிரண்டாண்டுகள் செய்து முடித்து நைமிசாரண்யத்திலே உள்ள வீரவ்ரதரை நமஸ்காரம் செய்து நின்றனர்.

Wednesday, January 20, 2010

மாக புராணம் 23



24. பஞ்ச மஹா பாதகிகள்.

பிராம்மணனைக்கொல்வது, ஸுராபானம், ஸ்வர்ணத்தைத் திருடுவது, குரு ஸ்த்ரீ ஸங்கமம் செய்வது, இவர்களுடன் [இவற்றை செய்வோருடன்] சேர்ந்திருப்பது என்பன பஞ்ச மஹா பாதகமெனப்படும். மற்றெல்லா பாபங்களுக்கும் பிராயச்சித்தம் உண்டு. பஞ்ச மஹா பாதகங்களுக்கு பிராயச்சித்தமே கிடையாது. அவர்கள்பல கோடி கல்பம் நரக யாதனைகளை அனுபவித்து பூமியில் பிரும்ம ராக்ஷஸாக பிறப்பர். அத்தகைய பாபத்தைக் கூட போக்க சக்தியுள்ளது மாகஸ்நம் என்பதை விளக்க பஞ்ச மஹாபாதகிகள் சரித்திரத்தை இந்த அத்தியாயம் கூறுகிறது.

க்ருத்ஸமதர்: ஓ ஜன்ஹோ! தர்மத்தைக் கேட்க விரும்புகிறவர்களுக்கு அதைக்கூறாவிடில் பாபம் உண்டாகும். ஆதலால் நீ விரும்பும் மாக மஹிமையை மேலும் கூறுகிறேன் கேள். கலிங்க தேசத்திலே மிக க்ரூரமான குணமுள்ள ஒரு வேடன் இருந்தான்.வேட்டையாடுவது, கொல்வது, கொள்ளையடிப்பது அவன் ஸ்வபாவம். ஆயிரக்கணக்கான மிருகங்களையும் பக்ஷிகளையும் கொன்று மாம்ஸம் விற்று தனிகனானான். வியாபாரத்திற்காக மட்டுமல்ல. விளையாட்டாகவும் பிராணிகளை வதம் செய்வான். ஒரு குளத்தங்கரையின் மரத்தடியிலே ஒரு வேதியன் படுத்திருக்ககண்டான். அவர் வெகு தூரம் நடந்து வந்த களைப்பால் அயர்ந்திருந்தார். வேடன் அவரிடமிருந்து வஸ்த்ரம், பாத்ரம், தண்டம் முதலியவற்றைப் பிடுங்கிக் கொண்டான். இன்னும் ஏதேனும் பொருளை ரகசியமாக வைத்திருப்பார் என அவரைக் கத்தியால் வெட்டிக் கொன்றான். [லாஜிக் புரியலை. யாரையானா மூலத்தை பாக்கச்சொல்லணும். தேவ்ஜி?] அது பிரம்ம ஹத்தி பாபம் ஆகும்.

அவனுக்கோர் பொற்கொல்லர் நண்பன். அவன் பலரிடம் ஸுவர்ணத்தை வாங்கி ஆபரணம் செய்து கொடுப்பதாகக் கூறி அதை அபகரிப்பான். அவன் இந்த வேடன் திருடி வரும் ஆபரணங்களை விற்று அவனையும் ஏமாற்றி ஸுவர்ணம் திருடுவான். இது ஸ்வர்ணஸ்தேயமென்னும் இரண்டாவது மாபாதகம்.

இவர்களுக்கு தொண்டு செய்பவன் ஒரு குடிகாரன். தாஸீகமனம் செய்பவன். அவன் குடிப்பது, சூதாடுவது, திருடுவது முதலிய துர்க்குணங்களுள்ளவன். முன்னிருவர்களுடன் சேர்ந்து தநத்தை திருடி பல ஸ்த்ரீக்களை கெடுத்தவன். இவனது தாயும் கற்பில்லாதவள். கணவனிறந்தபின் தன்னிஷ்ட்டப்படி பல அன்ய புருஷர்களுடன் காமத்தை அனுபவித்தாள். ஒரு சோர புருஷன் வீட்டிற்கு சென்று அவன் வரவை எதிர்பார்த்திருந்தாள். அவன் வேறெங்கோ சென்றுவிட்டான். அவனது நண்பனான இவளுடைய மகன் கிருஷ்ணபக்ஷ அஷ்டமி இரவில் தாயென அறியாமலே சங்கமம் செய்தான். முடிவில் ஒருவரை ஒருவர் அறிந்து வெளியில் கூற முடியாமல் அந்த வினை மனதை அறுக்க வருந்தினர். தாய் தனது தவறை நினைத்து துக்கித்து கங்கைக்கு சென்று உயிரை விட்டாள். இது குரு ஸ்த்ரீ கமன பாபம்.
[ஒருவனுக்கு தந்தையே முதல் குருவானதால் தாய் குரு பத்னீ ஆகிறாள்]

விஸ்2ருங்கலன் என்றோர் வேதியன் வேடனுக்கு புரோஹிதராயிருந்தார். இரண்டாண்டுகள் அம்மூவருடன் கூடவே இருந்து பழகினார். இது தத்ஸங்கம் என்ற ஐந்தாவது மஹா பாதகம். அவர்களது சேர்க்கையால் ப்ராம்மண்யம் அகன்றது. நான்கு நாட்கள் சேர்ந்திருந்தாலே தினம் கால் பாகமாக முழு ப்ராம்மண்யமும் போய்விடும். இரண்டாண்டுகள் அவர்களுடன் உண்பது, உடுப்பது, உறங்குவது முதலியவைகளால் மிகப்பதிதனானான். தெரிந்து செய்த பாபங்களுக்கு பிராயச்சித்தமே இல்லை. பல கோடி கல்பம் நரகத்தை அனுபவித்து பிரும்ம ராக்ஷஸராக பிறப்பர் பஞ்சமாபாதகிகள்.

விஸ்2ருங்கலன் வேடனுக்கு புரோஹிதனாக இருந்து தாஸனாகவுமாய் விட்டான். வழியிலே வீரவ்ரதன் என்ற உத்தம வேதியனைக் கண்டான். அவரது விபூதி, ருத்ராக்ஷமும், ஜப மாலையும், பகவன் நாமோச்சாரணமும் விஸ்2ருங்கலனையும் வணங்கி நிற்கும்படிச் செய்தது. எதிரில் அஞ்சலி செய்து பேசாமல் நிற்கும் அவனை "நீ யார்?” என வீரவ்ருதர் வினவினார். உள்ளதை ஒளிக்காமல் வேறு ஜீவந வழியின்றி வேடனது புரோஹிதனாகி அவனுடன் வாழ்கிறேனென்றான். உடனே வீரவ்ரதர் இவனைப்பார்த்த தோஷமகல ஆசமனம் செய்து இரண்டு நாழி த்யானம் செய்து அவன் கதியைப் பற்றி கூற ஆரம்பித்தார்.


Tuesday, January 19, 2010

மாக புராணம் 22




23. துளசீ மஹிமை.
பகவான் இந்த்ரனைப் பாரிஜாதத்துடன் ஸ்வர்க்கம் செல்லும்படி அனுமதித்தார். துளசீ மநுஷ்யரைபோல பேச ஆரம்பித்து, “ப்ரபோ! நான் உமது பாதத்தையே விரும்புபவள்! என்னைக் கைவிடலாகாது! எனக்கு நீரே கதி!” என்று வேண்டினாள். "அமிருதத்தில் பிறந்த ஓ துளசியே! நீ எனக்கு மிக பிரியமானவள். உன்னை மனதிலும் மார்பிலும் சதா தரிக்கிறேன். பவித்ரமான உனது கோமள தளத்தால் என்னை அர்ச்சிப்போர் கங்கா ஸ்நாந பலனைப்பெறுவர். துளஸீ தள மாலையை எனக்களிபோர் பல கல்பம் வரை வைகுண்டத்தில் வசிப்பர். உன்னை வளர்ப்பவரது உக்ரமான ஸகல் பாபங்களும் நஸி2க்கும். காலையில் எழுந்தவுடன் துளஸீ தர்ஸ2னம் செய்தால் அன்றெல்லாம் சுபதிநமாகும். துன்பம் தோன்றாது. உனது வேரில் உள்ள ம்ருத்திகை உடலிலும் நெற்றியிலும் தரித்தால் சுகமுண்டாகும். பூதப்பிரேதங்கள் அருகே அணுகா. உன்னையும் ஸ்ரீதேவியையும் சமமாகவே கருதுகிறேன்" என்று கூறி பகவான் இரு கைகளாலும் துளஸீ செடியை தடவினார். உடனே அது லக்ஷ்மி போல திவ்ய தேஹம் தரித்துப் பகவானை வணங்கினாள்! துளஸீ! உன்னை யான் ஏற்றுக்கொண்டேன். ஆயினும் நீ பூலோக க்ஷேமத்திற்காக செடி ரூபத்துடனே இரு என்றார். பகவானது இடது கை பட்டவிடம் கருந்துளஸியாயிற்று. அதே க்ருஷ்ண துளஸீ. துளஸீ செடியின் அருகிலுள்ள பூமியே மிக மிகப்பவித்ரமானதாகும்.

ஸத்யஜித்தை அநுக்ரஹித்து பகவான் "நீ பதினொரு நாள் உபவாசமிருந்தாயல்லவா? இன்று பூஜையை முடித்து எனக்கு நிவேதனம் செய்வதை பாரணை செய். இது ஏகாதசி எனப்படும். இதே போல் உபவாஸம் இருந்து கண் விழித்து பூஜை செய்பவர் வைகுண்டம் செல்வர்" என்று கூறி மனைவியுடன் கூடிய ஸத்யஜித்தும் துளஸியும் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே வைகுண்டம் சென்றார். இப்படிப்பட்டது ஏகாதசி விரதம். அதிலும் மிகப்புண்யகரமானது மாக ஏகாதசி. அன்று உபவாஸமில்லாதவன் பிரும்ம ராக்ஷஸனாக ஆவான். த்வாதசியில் வேதமறிந்தவர்க்கு கன்றுடன் கோ, பூமி, ஸ்வர்ணம், வஸ்த்ரம், ஸாளக்ராமம், நிலம், பழம், தத்யன்னம், தாம்பூலம், உபவீதம், முதலியவற்றை பக்தியுடன் தாநம் செய்பவர் சக்ரவர்த்தி போன்ற பாக்கியத்தை அநுபவித்து முடிவில் வைகுண்டம் செல்வர்.

Monday, January 18, 2010

மாக புராணம் 21



22. ஏகாதசி வ்ரத வர்ணநம்.

க்ருத்ஸமதர்: ஸத்யஜித் அந்தப் பதினோராவது நாளில் விசேஷமாக பகவானைப் பாரிஜாத மரத்தடியில் ஆவாஹனம் செய்து தேவர்களது நன்மையை நாடி கோவிந்த கோவிந்த என்ற மந்திரங்களால் பூஜித்தான். இரவெல்லாம் கண் விழித்து பகவன் நாம சங்கீர்த்தனம் செய்தான். அவனது பூஜை தன் நலத்துக்கல்லாமல் தேவர்களுக்காக செய்ததால் அதிக சந்தோஷத்துடன் பகவான் சங்க சக்ர பீதாம்பரியாக கருடன் மீது அமர்ந்து வந்து ஸத்யஜித்துக்கு தர்ஸ2னம் தந்தார். உடனே எழுந்து பணிந்து துதித்தான். உனக்கு என்ன வரம் வேண்டுமென்று பகவான் கேட்க " ப்ரபோ! முதலில் ஆகாச கதியை இழந்து தவிக்கும் தேவர்களுக்கு அந்த சக்தியை அளியுங்கள்; பிறகு இங்கு தங்கி எல்லோருக்கும் முக்தியை கொடுங்கள் என்று வேண்டினான்.
அப்படியே ஆகட்டும்! நீ இந்தப் பாரிஜாத மரத்தை இந்திரனுக்கு தானம் செய். போகாசை உள்ள அவன் இதை எடுத்துச்செல்லட்டும். எனக்கு மிகப்பிரியமான துளசியைக் கொண்டு நீ பூஜை செய்" என்றார். மறுநாள் த்வாதசி. மனைவியுடன் கூட, காலையில் பகவானைத் துளசியால் அர்ச்சித்து அந்த பாரிஜாதத்தை வேருடன் எடுத்து இந்த்ரனுக்கு தானம் செய்தான் ஸத்யஜித். விழித்து எழுந்த ஸ2க்ராதிகர் அங்கு விஷ்ணுவை தர்சித்து நமஸ்காரம் செய்து போற்றினர். அவர்கள் முன்னிலையில் "ஓ பக்த, இன்று பதினொன்றாவது நாள் ஆஹாரமின்றி என்னை பூஜித்தாய் அல்லவா? இது எனக்கு மிகப்பிரியமான ஏகாதசி திதி; அதே போல் ஒரு பக்ஷத்தின் பதினோராம் நாள் உபவாஸம் ஜாக்ரணமிருந்து என்னைப் பூஜிப்போர், த்வாதசியில் அன்னம் முதலியன தானம் செய்வோர் வைகுண்டம் செல்வர். பூர்ண தக்ஷிணையுடன் அஸ்2வமேதம் செய்வதால் உண்டாகும் பலன் ஏகாதசி உபவாஸம் இருப்பவர்க்கு உண்டு. தேவர்களுக்கு உயிர் அளித்த நாளான த்வாதசியில் அன்னதானம் செய்பவனுக்கும் அது கிடைக்கும்.

தசமி அன்று ஓரு வேளை புஜித்து ஏகாதசியில் சுத்த உபவாஸம் இருந்து த்வாதசியில் ஒரே வேளை போஜனம் செய்தால்தான் ஏகாதசீ விரதம் பூரணமாகும். ஏகாதசி திதியில் சாப்பிடுமன்னம் புழுவுக்கு சமாநம். மஹா பாபங்களைப்போக்கி மஹா ப2லங்களை தருவதும் எனக்கு மிக ப்ரியமாயுமுள்ள இந்த விரதத்தை செய்வோர் எனது ரூபத்தை அடைவர். நான்கு வர்ணத்தவரும் நான்கு ஆஸ்2ரமத்தவரும் ஸன்யாசிகளும் பாலரும் வ்ருத்தரும் ஸ்த்ரீக்களும் இதை அவசியம் அனுஷ்டிக்க வேண்டும். ஏகாதஸி2 அன்று உண்பவரை எனதாணையால் யமன் நரகத்தில் தள்ளி ஸி2க்ஷிப்பான். மறு பிறவியில் துக்கப்படும் அல்ப பிராணியாக பிறப்பர்.

"ஸ்த்ரீ ஆலிங்கனம், எண்ணெய் தேய்த்துக்கொள்ளல், வபநம், போஜநம், தாம்பூலம், நித்திரை முதலியவற்றை விட்டுப்பக்தியுடன் என்னை பூஜிக்க வேண்டும்.” என்று கூறி பகவான் கையை மேலே தூக்கிக்கொண்டு "மானிடராய் பிறந்த அனைவரும் ஏகாதசியில் அன்னத்தை உண்ணாதீர்கள். எல்லா மாதங்களிலும் எல்லா பக்ஷங்களிலும் பதினோராவது நாளான ஏகாதசியில் சாப்பிடாதீர்கள், சாப்பிடுபவன் மஹா பாபியாவான்" என்றார்.



Sunday, January 17, 2010

மாக புராணம் 20



21.இந்திரனும் திகைத்தான்.

க்ருத்ஸமதர்: தனது வேலைக்காரன் வராரததைக்கண்டு தன் பரிவாரத்துடன் சக்ரன் துளஸீ பாரிஜாத வநத்தை நாடி வந்தான். அவர்களும் நிர்மால்யத்தை காலால் மிதித்ததால் ஆகாஸ2 மார்கமாக செல்லும் சக்தியையும் பலத்தையும் இழந்து பூமியில் இறங்கி பதினொரு நாள் அன்ன ஆகாரமின்றி தவித்தனர். ஸத்யஜித் அவர்களைப்பார்த்து "ஐயா தாங்கள் மூன்று லோக அதிபதியாக இருந்தும் இந்த கஷ்டத்திற்கு ஆளானதேன்?” என்று வினவினான்.அவர்கள் வெட்கத்தில் தலை குனிந்து "ஐயா! இந்தப்பாரிஜாத மலரில் ஆசை கொண்டு, அதனால் மதியையும் மற்றவைகளையும் இழந்தோம்" என்று, அன்ன ஆகாரமின்றி வருந்தினர். தன் இருப்பிடம் வந்தவர் உணவில்லாமல் இருக்கும்போது தான் மாத்திரம் உண்பது நியாமல்ல என்று தோட்டக்காரனும் அவன் மனைவியுங்கூட புஜிக்காமல் இருந்தனர். தேவர் மனித அன்னத்தை புஜிக்கமாட்டார். ஆதலால் அனைவரும் பட்டினி.
ஸத்யஜித் பதினோராவது நாள் மரத்தின் மீது போடப்பட்டிருந்த நிர்மால்யங்களை எல்லாம் கூட்டி அப்புறப்படுத்தினான். அச்சமயம் ஸுவர்க்கத்திலிருந்து மற்ற தேவர்களும் இந்திரனைத் தேடி துளசி வனத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் நிர்மால்யத்தை மிதிக்காமல் இருந்ததால் பூர்ண சக்தியுடன் இருந்து, மூச்சை மட்டும் விட்டுக்கொண்டு சாகாப்பிணம் போலிருந்த அவர்களை கண்டு திகைத்து நின்றனர். இவர்களுடன் வந்த நாரத முனிவர் இந்த நிலையைக்கண்டு வருந்தினார். வைகுண்டம் சென்று துதித்துப் பகவானிடம் இதை விக்ஞாபனம் செய்து கொண்டார். பகவான் "சத்யஜித் அந்த வநத்தை பாதுகாத்து அதனால் ஜீவித்து இருக்கிறான். இந்த்ரன் அந்த புஷ்பங்களை பறித்து தேவ ஸ்த்ரீகளுக்கு அலங்காரம் செய்தான். புஷ்பம் குறைய, அதை எடுத்துச்செல்பவரை கண்டு பிடிக்க என்னை பூஜித்த பழைய புஷ்பங்களையும் பத்ரங்களையும் அந்த மரங்களின் மீது தூவியிருந்தான். எனது நிர்மால்ய புஷ்பம், பத்ரம், அபிஷேக தீர்த்தம், நைவேத்யம் செய்த பொருள் இவைகளை அறிந்தோ அறியாமலோ காலால் மிதித்தாலும் தண்டினாலும் உடனே பங்குவாக ஆவர். இப்படி இந்திராதிகள் பங்குவாகத் தவிப்பதை கண்ட எனது பக்தன் அந்த நிர்மால்யங்கள் யார் காலிலும் படாதபடி அப்புறப்படுத்தினான். ஆஷாட மாத பிரதமை முதல் தேவர்கள் அங்கு வந்து பதினொரு நாட்களாக பங்குவாகி ஆஹாரமின்றி அவர்கள் பங்குத்தன்மை அகன்று முன் போல் ஸுவர்க்கம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் பதினொரு நாளாக என்னை பூஜிக்கிறான். இன்று ஏகாதசி திதி. எல்லோரும் உபவாஸத்துடன் தூங்காமல் இருக்கின்றனர். நான் சத்யஜித் முன் தோன்றி ஏகாதசி மஹிமையை கூறி நற்கதி தரப்போகிறேன்" என்றார். இதைக்கேட்டு நாரதர் தன் இருப்பிடம் சென்றார்.


மாகபுராணம் 19



20.பாரிஜாதமும் துளசியும்:

க்ருத்ஸமதர்: அஸ்2வமேதம், மாகஸ்நாநம், ஏகாதசி உபவாஸம் இம்மூன்றும் சமமான புண்யமுள்ளவை. பதினந்து திதிகள் இருக்க ஏகாதசிக்கு ஏன் இவ்வளவு பெருமை ஏற்பட்டது எனக்கூறுகிறேன் கேள். ஏகாதசி உபவாசம் த்வாதசி அன்னதானம் செய்வதுடன் சேர்ந்தது. முன் ஒரு சமயம் தேவரும் அசுரரும் சேர்ந்து அமிருதம் பெறுவதற்காக பகவான் சொற்படி பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து உண்டான லக்ஷ்மீ தேவி விஷ்ணுவிடம் சென்றாள். அச்வைஸ்2ரவஸ் என்ற வெண்குதிரை, ஐராவதம், கல்ப விருக்ஷம், காம தேனு, சிந்தாமணி ஆகியவற்றை தேவேந்திரனுக்கு அளித்தனர். பயங்கரமான ஹாலஹால விஷம் தோன்ற அதன் ஜ்வாலை எல்லோரையும் தகிக்கச்செய்தது. “நமோ பவாய ருத்ராய" என்று பரமஸி2வனை துதித்து ஸ2ரணம் அடைந்தனர். அவர் விஷத்தை கையிலேந்தி கழுத்தில் நிறுத்திக்கொண்டார். அதனாலவர் நீலகண்டர்.

தன்வந்திரி தோன்றி, அம்ருத கலசத்தை இந்த்ரனிடமளித்தார். அஸுரர் அதை அபகரித்துக்கொள்ள தேவ்வாஸுர யுத்தம் தோன்றியது. விஷ்ணு மாயையால் மோஹினி ரூபமெடுத்து அங்கு வந்து தான் எல்லோருக்கும் அம்ருதத்தை பங்கிட்டு கொடுப்பதாக கூறினார். அங்ஙனமே அஸுரர் ஒரு பக்கம் ஸுரர் ஒரு பக்கமாக அமர்ந்தனர். முதலில் தேவர்க்கு மோஹினி அம்ருதமளித்தாள். சைம்மிகேயன் என்னும் அரக்கன் தேவ உருவம் தாங்கி சந்திர ஸூர்யரிடையே வந்தமர்ந்தான். மோஹினி அவனுக்கும் அம்ருதமளித்தாள். அவன் அருந்தும்போது சந்த்ர ஸூர்யர் "இவன் அஸுரன்" என ரஹஸ்யமாக கூறினர். அவர் கரண்டியாலேயே அவன் கழுத்தை வெட்டினார். அம்ருத சம்பந்தத்தால் அவன் இறக்கவில்லை. ராகு கேது என்று இருவராகி கோள் சொன்ன சந்த்ர ஸூர்யரை க்ரஹணம் என்ற பெயரால் பீடிக்கிறான்.

அம்ருத கலசத்தில் இருந்து தற்செயலாக இரு பிந்துக்கள் பூமியில் சிந்தின. ஒன்றிலிருந்து துளசி உண்டாயிற்று. மற்றொன்றிலிருந்து அத்புதமான வாசனையுள்ள பாரிஜாதம் என்ற வ்ருக்ஷம் உண்டாயிற்று. தபோதனர் வைகுண்டவாசிக்கு மிகப்பிரியமான துளசி தலத்தால் பகவானை ஆராதித்தனர். ஸகல தேவர்க்கும் பிரியமான பாரிஜாத புஷ்பத்தைக் கொண்டு தெவ்வ பூஜை செய்தனர். முனிவர்க்குப் பணிவிடை செய்துவந்த விருஷளன் அவ்விரு செடிகளுக்கும் பாத்தி கட்டி ஜலம் பாய்ச்சி வேலியும் போட்டு காத்து வந்தான். தானும் அப்படியே பகவானை பூஜித்தான்.

தேவேந்த்ரன் ஒரு சமயம் அஸுரரை ஜயித்து அவ்வழியாக விமானத்தில் சென்றான். பாரிஜாத வாஸனை அவனை இழுத்தது. கண்ணுக்கும் கருத்துக்கும் ருசியான அந்தப் புஷ்பத்தை பறித்து இந்த்ராணியிடம் அளித்தான். ஸ்வர்க்கத்திலும் கிட்டாத பாரிஜாதம் தினமும் தனக்கு வேண்டும் என விரும்பினாளவள். இந்தரன் குஹ்யகன் ஒருவனை அனுப்பித் தினமும் பாரிஜாத புஷ்பம் எடுத்து வரும்படிச் செய்தான். ஒரு மரம் பலவாக வரிசையாக வளர்க்கப்பட்டு வநமெல்லாம் மணம் வீசிற்று.


20. நிர்மால்யத்தை மிதிக்காதே!

குஹ்யகன் புஷ்பத்தைக் கொண்டு செல்வதனால் நாளுக்கு நாள் புஷ்பம் குறைந்துகொண்டே வந்தது. ஸத்யஜித் இதன் காரணமென்ன என்று கண்டறிய மிகப்பாடு பட்டான். புஷ்பமெடுத்து செல்பவர் தேவராதலால் இவன் கண்ணுக்கு புலப்படவில்லை. அதைக்கொண்டு செல்பவரை கண்டு பிடிக்க வேண்டுமென்று எண்ணினான். ஸாதுகளுக்கு பணிவிடை புரிபவன்; ஸதாசாரத்தை நன்கு உணர்ந்தவன். ஆதலால் பாரிஜாத வ்ருக்‌ஷத்தின் மீது பகவானுக்கு அர்ச்சனை செய்த நிர்மால்யத்தை (பழைய புஷ்பத்தை) தெளித்திருந்தான். இந்த்ர தூதன் வழக்கப்படி வந்து புஷ்பங்களை பறித்துக்கொண்டு ஸ்வர்க்கம் செல்ல முயற்சித்தான். விண்ணில் செல்லும் சக்தி அவனுக்கு நிர்மால்யத்தை மிதித்த பாபத்தால் அகன்றது. விண்ணைவிட்டு மண்ணிலேயே சஞ்சரித்தான். ஸத்யஜித்தின் கண்ணிலேயே பட்டான். "நீ யார்? ஏனிதை கொண்டு செல்கிறாய்?” என்று கேட்க குஹ்யகன் தன் விருத்தாந்தத்தைகூறினான். ஸத்யஜித் ஒன்றும் தோன்றாமல் தன் வீட்டிற்கு சென்றான். குஹ்யகன் இந்த்ரனிடம் இதைத்தெரிவிக்கமுடியாமல் மூன்று நாட்கள் அங்கேயே தங்கினான்.

Thursday, January 14, 2010

மாக புராணம் 18



18.முனிவர் பத்தினிக்கு கூறும் தத்துவம்:

முனிவர்: ப்ரியே! துக்கப்படுவதில் பயனென்ன? பிறந்தவர்க்கு இப்போதோ, நாள் சென்ற பின்னோ மரணம் என்பது நிச்சயம். பதிமூன்று வயதில் புத்ரன் இறந்தால் மற்றும் சில ஆண்டுகள் சென்றதும் நீயுமிறப்பாய். நானும் இறப்பேன். இறந்தவர் பிறப்பதும் [இறந்தவர் இறப்பதும் ஸஹஜந்தானே? காலத்தில் வரும் மரணத்தை யார் எப்படி தடுக்க முடியும்? வருவது வந்தே தீரும். அவரவர் செய்த கர்மாவிற்கேற்றபடி இளமையிலோ யௌவனத்திலோ கிழத்தன்மையிலோ மரணம் வரும். புண்ணியம் செய்தவர் புத்ர சோகத்தை அனுபவிக்கமாட்டார்.
ஸு2க்ல சுரோணித சேர்க்கையால் உண்டாகும் சரீரம் நித்யமல்ல. பஞ்ச பூதங்களால் ஆகி மல ஜலம் ரக்த மாம்ஸம் நிறைந்த இந்த உடலில் ஆசை வைக்கலாகாது. ஆசையே துக்கத்துக்கும் காரணம்.
இவ்வுடலில் நான் என்ற எண்ணம் உண்டாவதே சரியல்ல! நான் என்பது ஆத்ம வஸ்து! அது புலங்களுக்கும் உடலுக்கும் மனதிற்கும் மேலானது. மரணம் உடலுக்கே தவிர ஆத்மாவுக்கல்ல. ஆத்மா ஒரு போதும் அழியாத வஸ்து. இல்லற வாழ்க்கை இன்பம் தராது என வைராக்கியமுள்ள ஞானிகள் ஸம்ஸாரத்தில் ஈடுபடுவதில்லை. ஆத்ம ஞானமில்லாதவர்கள் ஸம்ஸாரம் சுகமென எண்ணுவர். இருட்டில் குருடன் கண் தெரியாமல் கஷ்டப்படுவது போல் மாயையால் மூடப்பட்ட அஞ்ஞானிகள் ஜநந மரணம் சோ2க மோஹம் இன்ப துன்பம் இவைகளை அனுபவிப்பர். கிடைக்கத்தகாத அரிய ஆறறிவு பெற்ற மானிட ஜன்மமெடுத்தவர் ச2ரீர அபிமானம் கொண்டு ஞானமின்றி ஜன்மாவை பாழாக்கக்கூடாது.
ஒரு பொருளிடம் பற்று கொண்டால் அதனால் ஆசை கோபம், அக்ஞானம், புத்தி, நாச2ம் முதலிய பற்பல துன்பங்கள் வரிசையாக வரும். ஆதலால் எதிலும் ஆசை கொள்ளாமல் சோ2க மோஹங்களை விட்டு நித்தியனான பகவானை உபாஸிப்போம்- பூஜிப்போம் எனக்கூறி கங்கா தீரஞ் சென்று ஸூர்ய மண்டலத்தில் நாராயணனை ஆவாஹநம் செய்து பூஜித்து துதித்தார் அந்த வேதியர்.

19. தாயின் தோஷம் தனயனுக்கு
முனிவர் மறுபடியும் பகவானை நாடிக் கடுந்தவம் புரிந்தார். பக்தி பரவசனான பரமன் அவரெதிரில் தோன்றி "வேண்டிய வரத்தை கேள்" என்றார்! முனிவர் "ஓ பகவன்! தாங்கள் தந்த தநயனுக்கு பன்னிரண்டே வயதென்று நாரதர் கூறியதால் எங்களுக்கு இன்பமளிக்க வேண்டிய குழந்தை துன்பத்தைத் தருகிறதே! அவன் சிரஞ்சீவியாக இருக்கும் படி அருள்புரிய வேண்டும்" என வேண்டினார். "மஹரிஷே! அவன் நீண்ட ஆயுளுடனிருப்பான்! முற்பிறவியில் அவனது தாய் செய்த பாபத்தால் ஸந்ததி இல்லாதிருந்து உமது தவத்தால் நான் சந்ததியை தந்தேன். அவள் செயலே குழந்தைக்கு பன்னிரண்டாண்டில் ஒரு கண்டமாக வந்தது. இது முதல் குழந்தையுடன் நீங்களும் மாகஸ்நாநம் செய்யுங்கள். கண்டம் அகன்று தீற்காயுஸ் பெறுவான்.

முற்பிறவியில் ஞானச2ர்மா என்னும் உமது மனைவி இவள். நீர் மாகஸ்நாநம் செய்து மனைவியையும் செய்யச்சொன்னீர். அவளதை செய்யவில்லை. அன்றியும் மாக பௌர்ணமியில் பாயஸான்னம் செய்வதின் மகிமையைக் கூறி அதைச் செய்யச்சொன்னீர். அவள் அதையும் செய்யவில்லை. இப்பிறவியிலும் உமக்கு அவளே பத்னியானாள். அவள் பாபத்தால் சந்ததி உண்டாகவில்லை. உமது மாகஸ்நாநத்தாலும் தபஸாலும் நான் உனக்கு ஸந்ததியைத் தந்தேன். இப்போதும் நீங்கள் மூவரும் மாகஸ்நாநம் செய்தால் உங்கள் குழந்தை கண்டம் நீங்கி சிரஞ்சீவியாக இருப்பான். மாக ஸ்நாந மஹிமையை ஒரு சிலரே அறிவர்!” எனக்கூறி மறைந்தார். முனிவரும் சந்தோஷத்துடன் வீடு வந்து சௌள, உபநயனம் முதலியன செய்து வேத சா2ஸ்திரங்களை கற்பித்தார். விடாமல் மூவரும் ஆண்டுதோறும் மாகஸ்நாநம் தானம் பூஜை மாகபுராண ச்2ரவணம் செய்து வந்தனர். அதனால் பதிமூன்றாமாண்டு வர வேண்டிய மிருத்யு அகன்றது. இச்சரிதம் கேட்டவரை அபமிருத்யு அடைய மாட்டார்.


Wednesday, January 13, 2010

மாக புராணம் 17



17.ஸ்ரீ விஷ்ணுவின் ச2தநாம

பல ஜன்மாக்களில் செய்த புண்ணியத்தால்தான் ஹரிகதா ச்2ரவண புண்யம் கிடைக்கும். அதிலும் பலகோடி ஜன்மாக்களில் செய்த புண்ணியத்தால்தான் மாகபுராண ச்2ரவண பக்தி உண்டாகும். ஜந்நோ! உனது பக்தியால் மேலும் மாகமஹிமையை கூறுகிறேன் கேள்.
கங்கா தீரத்தில் வேத சா2ஸ்த்ர நிபுணரும் கர்மாநுஷ்டானபரருமான ஒரு வேதியர் இருந்தார். அவருக்கு ஒரு ஸத்புத்ரன் இல்லையே என்று வருத்தமதிகம். மனைவியிடம் "புத்ரனில்லாதவருக்கு ஸத்கதி இல்லையே! நமக்கோ புத்ர பாக்யமில்லையே" எனக்கூறி வருந்தினார். அவளும் விஷயமறிந்தவளாதலால் "நாத! அதற்கேற்ற தாநதர்மம், பூஜை நாம் செய்திருக்க மாட்டோம்" என்றாள். இதைக் கேட்டவுடன் பகவானது அஷ்டாக்ஷரியை ஜபம் செய்து தவத்தினால் புத்ர பாக்கியம் பெறலாமென காநகம் சென்று கடுந்தவம் புரிந்தார். இரண்டு மாதங்கள் ஆவதற்குள் பகவான் மனமிரங்கி வேதியரெதிரில் ப்ரத்யக்ஷமாகி நின்றார். வேதியர் உள்ளத்திலே நாராயணனை நிறுத்தி இடைவிடாமல் த்யானம் செய்திருந்ததால் அருகில் நிற்கும் பகவானை அவர் பார்க்க கண் திறக்கவில்லை. உடனே அந்த ப்ராம்மணனது ஹ்ருதய கமலத்திலுள்ளதன் ரூபத்தை மறைத்தார். கண்கள் திறந்தன. ச2ங்க சக்ர கதாபாணியான பகவான் நாரதாதி தேவ ரிஷிகளும் தேவ அப்சரஸ்களும் சூழ தர்ச2னம் தந்தார். வரத்தை கேள் என்று பகவான் கூறியதும் அவர் காதில் விழவில்லை. கண் கொள்ளா காட்சியான பகவானைப் பார்த்தவுடன் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து நூற்றெட்டு நாமங்கள் கொண்ட ஸ்துதிகளால் போற்றினார். பகவான் அவர் கோரியபடி புத்ர வரம் கொடுத்துவிட்டு மறைத்தார். க்ரமாக வேதியரது பத்னீ கர்ப்பிணீயானாள். பும்ஸவன சீமந்தாதிகளைக் காலத்திலே சிறப்பாக செய்தார். பத்தாவது மாதம் சுபதினத்திலே ஆண் குழந்தை ஜனித்தது. ஜாதகர்மா முதலியன செய்து அன்புடன் பெற்றோர் தாலாட்டி சீராட்டி வளர்த்தனர்.

நாரத மஹரிஷி அங்கு வந்து விஷ்ணு வரத்தால் பிறந்த சிசுவைக் கண்டு களித்தார். பெற்றோர் அவரை வணங்கி குழந்தையின் ஆயுஸ் கல்வி முதலியவை எப்படி இருக்கிறது என்று கேட்டனர். நாரதர் குழந்தையின் லக்ஷணம் ரேகை முதலியவற்றைப் பார்த்து வருத்தத்துடன் "குழந்தைக்கு பன்னிரண்டு வயதுதான்!” என்று கூறிச் சென்றார். இதைக்கேட்ட தம்பதிகள் துக்கக்கடலில் முழுகிக்கதறினர்.


மாக புராணம் 15


15. பிரும்ம சிவ கலக சா2ந்தி
க்ருத்ஸமதர்: ஒரு சமயம் ரஜோகுணம் மேலிட்டதால் சதுர்முகனும் பரமசிவனும் “நானே உலகத்தின் கர்த்தா! போஷகன் என்று வாதம் செய்தனர்.” இந்த உயர்ந்த மூர்த்திகளே வாதிட்டால் யார் முன் வந்து ஸமாதானம் செய்வது? பற்பல காரணங்களை காட்டி பல நாட்கள் வாதம் செய்தனர். இதைக்கண்ட மஹாவிஷ்ணு தனது விராட்ரூபத்தை இவர்கள் முன்னே தோற்றி வைத்து அங்கிங்கெனதபடி எங்கும் நிறைந்து நின்றார். இதைக்கண்ட பிரும்மனும் சிவனும் நம் வாதம் முடிவதற்கே இந்த ரூபம் தோன்றியது போலிருக்கிறது. இதனது ஆதியையும் முடிவையும் கண்டறிந்து வருபவரே உயர்ந்தவர் என்ற தீர்ப்புக்கு வந்தனர். அதைக்காண வெகு தூரம் வெகு காலம் சென்றனர். அது ஸகல உலக வடிவமாக இருப்பதால் பதிந்நான்கு லோகமும் சென்றனர். அதன் இரு செவிகளிலும் தங்களையும் தங்கள் உலகத்தவரையும் கண்டு ஆச்சரியமடைந்தனர். பல்லாண்டு தேடித் திரிந்து எங்கும் காணாமல் களைத்து தம்மிருப்பிடமே வந்தனர். தங்களுக்கு மேலாக உள்ளவர் இந்த விராட் புருஷர் என எண்ணி ரஜோகுணம் அகல சத்வ குணம் வளர விஷ்ணுவின் அருளால் அவரைத்துதித்தனர். பரம்பராணாம் பரமம் பவித்ரம் -புராண கர்தாரமந்தமாச்2ரயம்| த்வாம் வேதமாஹு: கவய: ஸுபுத்யாநமோஸ்துதே பன்னகவைசி2தேகோ|| அத்தகைய சுலோகங்களால் துதித்தனர். அதில் நதிகளில் நீ கங்கை! மலைகளில் ஹிமயமலை! மிருகங்களில் சிம்மம்! ஸர்ப்பங்களில் அநந்தன்! ரத்னங்களில் வஜ்ரம்! ஜலப்பிறவிகளில் சந்த்ரன்! இப்படி உயர்ந்ததெல்லாம் ஸ்ரீ விஷ்ணுவே என்று உமதருள் இல்லாததால் எங்களுக்கு கர்வமும் வாதமும் எழுந்தது! உங்களது விராட் ஸ்வரூபத்தை தரிசித்ததால் நல்லறிவு உண்டானது. தங்களது அழகான பழைய ரூபத்தை எடுத்துக்கொள்ளுங்கள். என்றனர். பகவான் கூறினார். உங்களுக்கு சா2ந்தி உண்டாகவே இந்த ரூபத்தை எடுத்தேன். மாயையிலிருந்து ஸத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்கள் உண்டாயின. இந்த மூன்று குணங்களில் சிக்காதவர் இல்லை. ஸத்வ குணங்கள் பிரகாசமானது; நோயில்லாதது. ரஜஸ் ஆசை, த்ருஷ்ணை, ஸங்கம் முதலிய ரூபமுள்ளது. தமஸ் அக்ஞானத்தால் தோன்றி மோஹம், நித்திரை, சோம்பல், தவறுதல் முதலிய ஸ்வரூபத்தை அடைந்து ரஜஸ்ஸும் தமஸ்ஸும் நான் பெரியவன்; இதைச் செய்தேன்; அதை செய்யப்போகிறேன் என்ற அகங்காரத்தை உண்டு பண்ணும். ஈச்2வரராயினும் இந்த குணங்களுக்கு உட்பட்டு வாதம் செய்தீர்கள். ஓ பிரும்மனே! உலகெல்லாம் மஹா ப்ரளயத்தை அடைந்த போது என்னிடம் சகல வஸ்துக்களும் சூக்ஷுமமாகி தங்கப்பொடி மெழுகில் ஒட்டுவது போல் லயித்திருக்கின்றன. மறுபடி உலகை படைத்தேன். நான் ஒருவனே பரமார்த்த வஸ்துவானதால் நானே நீயாகவும் உலகமாகவும் ஆனேன். ஆதலால் நமக்குள் பேதமேது? உன்னை கர்மாக்களில் மஹர்ஷிகள் முதலில் பூஜிப்பார்கள் என்று கூறினார். மேலும் சி2வனைப் பார்த்து கூறினார்:
16. ஹரி ஹரனை போற்றுதல்
விஷ்ணு: ஓ ச2ம்போ! நீர் சந்த்ர சூர்ய அக்னி இவைகளைக் கண்ணாக கொண்டு உலகை ரக்ஷிக்கிறீர். நம் இருவரிலும் சிறிது கூட பேதமில்லை. எல்லோராலும் பூஜிக்கத்தக்கவர் நீர். உம்மை உபாஸிப்பவர் மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடைவர். நீரே உலகமாகவும் உள்ள பரப்ரும்மம். பன்னிரண்டு ஆதித்யர்களில் உபேந்திரன் நீர்; வஸுக்களில் பாலகன்; வேதங்களில் ஸாம வேதம்; சந்தஸ்களில் ஸாவித்ரீ; வித்யைகளில் வேதாந்த வித்யை; ச2க்திகளுக்குள் மாயா ச2க்தி; ரஹஸ்யமானவைகளில் ஓங்காரம்; வர்ணங்களில் பிராம்ஹணன்; ஆச்2ரமங்களில் கிருஹஸ்தாச்2ரமம்; எல்லா பிராணிகளின் ஹ்ருதயத்தில் உள்ள புருஷன்; யுகங்களில் க்ருத யுகம்; ஸர்வ மார்கங்களுள் ஸூர்ய மார்கம்; மாயாவிகளில் விஷ்ணு; ஸதிகளில் அருந்ததீ; பக்ஷிகளில் கருடன்; ஸூக்தங்களில் புருஷ் ஸூக்தம்; யஜுர் வேதத்தில் ச2த ருத்ரீயம்; யோகிகளில் அநந்தன். அதிகமாக கூறுவதேன்? நான் எப்படியோ அப்படித்தான் நீர், நம் இருவரில் பேதமில்லை. நான் முன்னம் உமது பெருமையை நாரதருக்குக்கூறினேன். ஆதலால் அவர் உம்மை தரிசிக்க வந்திருக்கிறார். பல்லாண்டு தவம் செய்ததால் ப்ரஸன்னரான உம்மை இதோ துதிக்கிறார் பாருங்கள். பிரும்மா, விஷ்ணு, சி2வன் இந்தப்பெயருள்ளவர் ஒருவரே; அவர்களில் இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று பேதம் பாராட்டுபவர் நரகம் செல்வர் என்று கூறி இருவர் கலகத்தையும் அகற்றினார். ஆதலால் மஹரிஷிகளே! உங்களுக்குள் யார் பெரியவர் என்ற வாதம் கர்வத்தால் உண்டானது. அதை அகற்றி பகவானை த்யானம் செய்து அர்ச்சித்து அவர் கதையை கேளுங்கள்.” என்று சனகாதியர் கூறியதை க்ருத்ஸமதர் ஜந்ஹுவுக்கு உபதேசித்தார்.

Monday, January 11, 2010

மாக புராணம் 14




14. ஒருவர் வயதால் பெரியவரா ஞானத்தாலா?
நைமிசாரண்யத்திலே புண்யமான கோமதீ தீரத்திலே பல பிரும்ம ரிஷிகளும் ராஜரிஷிகளும் ஒரு சமயம் ஒன்று கூடினர். இவர்களில் யார் சிறந்தவர் என்ற வாதம் தோன்றியது. பிருகு தவத்தினாலும் யோகத்தினாலும் தானே பெரியவர் என்றும், கௌதமரோ நீண்ட காலமாக ஜீவித்து இருக்கும் நான் வயதில் பெரியவன் என்றார். ரோமசர் சகல முனிவர்களுக்கும் குருவானதால் நானே பெரியவன் எனக்கு சமமெவருமில்லை என்றார்.
கார்க்ய முனிவர் எழுந்து எல்லையில்லா கல்விகளை கற்ற நானே பெரியவன் என்றார். மாண்டவ்யர் எழுந்து யான் நீண்ட காலமாக ஸத்கர்மாக்களை அனுஷ்டித்து வருகிறேன். ஆதலின் நானே பெரியவன் என்றார். ஸந்தனர் தான் யோகாப்யாசத்தால் உயர்ந்தவரென்றும் பௌலஸ்த்யர் வேத சா2ஸ்த்ர நிபுணரானதால் பெரியவரென்றும் சௌ2னகர் தான் வேதாந்தியானதால் உயர்ந்தவரென்றும் பரஸ்பரம் வாதம் செய்தார்கள். வாதம் பிடிவாதமாகி கோபத்தில் இறங்கி சண்டையிலும் ஈடுபட்டனர். கிருஷ்ணாஜினத்தை கிழித்தனர். கமண்டுலுவை உடைத்தனர். தண்டத்தை முறித்தனர். தாடியை ஜடையை பிய்த்தனர். விஷ்ணு மாயையால் மோஹமடைந்து தபோதனர்களான ரிஷிகளே இப்படிப் போர் புரிந்தனர். இப்படி அகங்காரத்தால் ஸ்வதர்மத்தை மறந்து போர் புரியும் முநிவர்களை கண்டு இரக்கம் கொண்ட நாரதர் வைகுண்டம் சென்று இச்சண்டை ஓய ஒரு உபாயம் செய்யுங்கள் என மஹாவிஷ்ணுவை வேண்டினார். பக்வான் ஸநக ஸந்தன ஸத்குமார ஸநத்ஸுஜாத என்ற நால்வரையும் அங்கனுப்பினார். விஷ்ணுவின் சபையிலுள்ள ஸநகாதிகள் என்றும் ஐந்து வயதுள்ள குமாரர்களாகவே இருப்பவர்கள். மார்க்கண்டேயரோ என்றும் 16 வயதுள்ளவர். மார்க்கண்டேயர் மஹரிஷிகளை ஸமாதானம் செய்து ஒரு வழியாக சண்டையை நிறுத்தினார். சிறிது நேரம் சென்றபின் ஸநகாதிகள் பகவான் நாமாவைக்கூறிக்கொண்டு அங்கே வந்தனர். அவர்களைக்கண்டவுடன் மார்க்கண்டேயர் எழுந்து நமஸ்காரம் செய்து மதுபர்க்கம் அளித்து அவர்களது பாத ஜலத்தை சி2ரஸ்ஸில் ப்ரோக்ஷித்துக்கொண்டார்.
இதைக்கண்டு ரிஷிகள் ஆச்சரியப்பட்டுக்கொண்டு இருக்கும்போது ஸநகாதிகள் ”ஓ! மார்க்கண்டேயரே நீர் ஏழு கல்பகாலம் ஜீவித்திருக்கும் வ்ருத்தர். நாங்களோ சிறுவர்கள். எங்களுக்கு அர்க்யாதிகளை அளிப்பதுடன் நம்ஸ்காரமும் செய்கிறீர்களே! சிறுவர்க்குப் பெரியவர் நமஸ்காரம் செய்யலாமா?” என்று கேட்க மார்க்கண்டேயர் கூறினார்:
”மஹரிஷிகளே! சிரஞ்சீவியானாலும் இருபத்தொரு கல்பம் ஜீவித்திருந்தாலும் ஒரு நாள் மரிக்கத்தான் வேண்டும். வேத சாஸ்த்ர ஞானம் அநுஷ்டானம் கர்ம பக்தி, பகவத் கதாஸ்2ரவணம் முதலியன இல்லாதவர் எத்தனை காலம் ஜீவித்திருந்தாலும் பெரியவரல்ல! ஒவ்வொரு நாளும் பொத்தல் குடத்தில் உள்ள நீர் போல் ஆயுள் குறைந்து கொண்டே வருகிறது. அத்தகையவர்களது வாழ்வு வீணாகும். க்ஞானம் மனிதர்களுக்காக ஏற்பட்ட உயர்ந்த ரத்தினம். அதை பெறாதவர் மனிதரா? ஸத்கதாச்2ரவணம் பகவன்நாம கீர்த்தனம் க்ஞானம் ஆகிய பாக்யம் பெற்றவர் சிறுவராயினும் நமஸ்கரிக்கத்தக்க வ்ருத்தராவார். ஸத்கதாச்ச்2ரவணம் செய்வதே ஜன்ம லாபம். ஒரு நிமிஷமாவது அரை நிமிஷமாவது கதாச்2ரவணம் செய்தவர் ரிஷிகளில் மிக உயர்ந்தவர். அவரே எல்லாராலும் பூஜிக்கத்தக்கவர். நீங்கள் ஸதா பகவன் நாம ஜபம் செய்து ஹரியிடமே கதை கேட்கிறீர்கள்.
கதாச்2ரவணம் செய்யாத வ்ருத்தரும் சிறியவரேயாவார். கதாச்2ரவணம் செய்யும் சிறுவனும் பெரியவனே. ஐந்து வயதுள்ளவராயினும் ஸத்கதாச்2ரவணம் செய்த நீங்கள் எல்லாரையும் விட வ்ருத்தர்; பூஜிக்கத்தக்கவர்; குருவும் ஆவீர்கள். 1.) க்ஞானத்தால் வ்ருத்தர் 2) தபோவ்ருத்தர் 3) வயோவ்ருத்தர் 4) ஆத்ம விக்ஞான வ்ருத்தர் 5) ஸத்கதாச்ரவண வ்ருத்தர்; இந்த ஐவரும் வ்ருத்தர்களே. பூஜிக்கத்தக்கவர்களே. ஸதா பகவத் கதாமிருதபாநம் செய்பவர் நீங்களே!” என்று மார்க்கண்டேயர் கூற ஸநகாதிகள் ”நீர் சொல்வது உண்மைதான்” என்று கூறினார்கள். நான் பெரியவன் என வாதமிட்டுச் சண்டை போடும் ரிஷிக்கூட்டத்தின் நடுவில் மேலும் அவர்கள் கூறினர்:
விஷ்ணு ச்2ரவணம் செய்பவர், விஷ்ணு பாத ஜலமான கங்கையில் ஸ்நாநம் செய்வோர், கருணாகர! விஷ்ணோ! தாமோதரா! என்று ஸதா பகவன் நாமாவை கூறுபவர், ஹரி பக்தி செய்பவர், அவரது பூஜையில் ஈடுபட்டவர், அவர் திருவுருவை தர்சிப்பவர், ஸதா அவரை த்யானம் செய்பவர் முதலியவர் வாழ்வே ஸபலமான வாழ்வாகும். அவர்களே வ்ருத்தர் என்று கூறினர்.
இதைக்கேட்டு சண்டையிட்டுக்கொண்டிருந்த ரிஷிகள் வெட்கமடைந்தனர். மார்க்கண்டேயரையும் ஸநகாதிகளையும் நமஸ்கரித்து ”மஹர்ஷிகளே உங்களால் நன்கு சிக்ஷிக்கப்பட்டோம். இனி ஹரி கதாச்2ரவணமே சிறந்ததென அதில் ஈடு படுகிறோம்!” என்றனர். அவர்களது வாதத்தை அகற்றி சா2ந்தியை அளித்த மார்க்கண்டேயரும் ஸநகாதிகளும் நாரதருடன் வைகுண்டம் சென்று பகவானிடம் நடந்ததை தெரிவித்து நமஸ்கரித்தனர்.


Saturday, January 9, 2010

மாகபுராணம் 13




13. மாக புராணம் பேய் பிறவி அகற்றிற்று.

ஆவலுடன் கேட்கும் ஜன்ஹுவுக்கு க்ருத்ஸமஸ்தர் கூறுகிறார். மாகஸ்நாநமும் புராணமும் பேய் பிறவியையும் அகற்றி திவ்ய சரீரமுமளிக்கும். பம்பா தீரத்தில் ஓர் வைச்யன் அபரிமிதமான செல்வமுள்ளவனாக இருந்தான். பம்பா நகரம் என ஒரு சிறந்த பட்டணத்தை அமைத்து ஸகல அரசர்களும் மெச்சும்படி போக பாக்கியங்களை அனுபவித்து வந்தான். பொருளுக்குத் தாநம், போகம், நாச2ம் என்று மூன்று வகை செலவு ஏற்பட்டது. வைச்யன் போகத்தையே கருதி தான தர்மத்தில் சிறிதும் பொருளை ஈடுபடுத்தவில்லை. ஆதலால் லக்ஷ்மி அவனை விட்டகல, மூதேவி அவனைத் தழுவினாள். பரம ஏழையானான். ஏழ்மையால் பற்பல பாபங்களை செய்தான். ஆயுள் முடிய, உடல் இடியால் அழிய, ஆவி கிளம்பிற்று. பாபிகளுக்கேற்ற பேய் உடல் பெற்றான். பல உயிர்களை மாய்த்தான். பம்பா தீரத்திலே ஆலமரத்திலே அமர்ந்திருந்தான்.

வஸிஷ்ட முனிவர் தன் சிஷ்யர்களுடன் பம்பையில் மாக ஸ்நாநம் செய்து மாகபுராணம் கூறிவந்தார். "மாக மாசத்தில் ஸூர்யோதய காலத்தில் ஸ்நாநம் செய்தால் முன் செய்த ஸஞ்சித பாபமும், ஆகாமி எனும் புதிய பாபமுமகலும். சிறிய பாபங்களும் பெரிய பாபங்களுமகலும். மாகஸ்நாநம் மறவாமல் செய்ய வேண்டும்" என மாகபுராணத்தை விஸ்தாரமாக கூறினார். அங்கு ஆலமரத்திலிருந்து வைச்ய பேய் பயங்கர உருவுடன் விழுந்தது. அதிலிருந்து ஒரு திவ்ய புருஷன் தோன்றி தனது சரிதத்தைத் கூறி வஸிஷ்டரை பணிந்து வைகுண்டஞ் சென்றது.
வஸிஷ்டர் அதைக்கண்டு ஆச்சர்யமடைந்து கூறினார்: "அந்த பேய் விழுந்தவுடன் தர்ப்பத்தின் நுனியால் நீரை தோய்த்து ஸ்நாநம் செய்வித்தேன். சிறிது நேரம் புராணம் கேட்டது. அதனால் அந்த பாக்கியத்தை பாருங்கள்! ஒரு நிமிஷம் கதாஸ்2ரவணம் செய்ததும் சிறிது ஸ்நாநம் செய்வித்ததுமே இந்த பாப சரீரத்தைப் போக்கி திவ்ய சரீரத்தை தந்ததென்றால் முப்பது நாளும் முறைப்படி ஸ்நாநம் செய்வோர் பெருமை, அவர் பெறும் பாக்கியம் பற்றி கூறவும் வேண்டுமோ? பகவத் கதையை விட்டு வீண் கதை பேசுவோர் முகத்திலும் ஸத்கதை கேளாதவர் முகத்தில் விழித்தாலும் பாபம். பக்தியுடன் கதை கேட்போரும், பக்தியுடன் கதை சொல்பவரும், பக்தியுடன் ஒரு சுலோகமாவது கேட்பவரும், வலைப்பூவில் எழுதுபவரும், படிப்பவரும் பகவத் ஸ்வரூபத்தை அடைவர்.”



विशोका वा ज्योतिष्मति ।।36।।
 விஶோகா வா ஜ்யோதிஷ்மதி || 36||

துக்கம் ரஜோ குணத்தின் பரிணாமம். அந்த துக்கம் விலகிய அதிக சாத்விக பிரகாசம் உள்ளதாக இருக்கிற பிரவ்ருத்தி மனதை நிலை பெறச்செய்கிறது.

  वीतरागविषयं वा चित्तम् ।।37।।
 வீதராக³விஷயம்° வா சித்தம் || 37||

விலகிய ஆசையை உடையவர்களின் சித்தத்தை விஷயமாக உடைய சித்தம் நிலை பெறுகிறது.
அதாவது யாருடைய சித்தம் ஆசையை விட்டுவிட்டதோ, அவர்களை இடைவிடாமல் த்யானிக்கிற சித்தம் நிலைபெறும். வியாசர், சுகர் முதலானோர் அப்படிப்பட்ட சித்தத்தை உடையவர்கள்.

Friday, January 8, 2010

விசார சங்க்ரஹம் 12



17.ஹ்ருதயத்தில் ஆன்மாவே ப்ரஹ்மமாகப் பிரகாசிக்கிறதென்பதெப்படி?

தீப ஜ்வாலையினுள்ளே யுள்ள காலியிடத்திலிருக்கும் பூதாகாசமானது அந்த ஜ்வாலையினுள்ளும் புறம்பும் அபேதமாய் நிறைந்து எல்லையற்று விளங்குதல் போன்று ஹ்ருதயத்தில் ஆன்ம ஜோதியினுள்ளே யுள்ள ஞானாகாசமும் அவ்வான்ம ஜோதியினுள்ளும் புறம்பும் அபேதமாய் நிறைந்து எல்லையற்று விளங்குகிறது. இதுவே ப்ரஹ்மமென்பதாம்.

--
ஹ்ருதயத்தில் ஆன்மாவே ப்ரஹ்மமாகப் பிரகாசிக்கிறது என்பது எப்படி?

தீபம் ஒண்ணு எரியுது. அதன் ஜ்வாலைக்கு உள்ளே இருக்கிற காலியிடத்தில இருக்கிறது என்ன? ஆகாசம் -ஸ்பேஸ். அது அந்த ஜ்வாலைக்கு உள்ளேயும் இருக்கு. வெளியேவும் வித்தியாசம் பாக்காம நிறைஞ்சு எல்லையற்று இருக்கு. அதப் போல ஹ்ருதயத்தில ஆன்ம ஜோதியினுள்ளே உள்ள ஞானாகாசமும் அந்த ஆன்ம ஜோதியினுள்ளும் புறம்பும் அபேதமாய் நிறைஞ்சு எல்லையில்லாம இருக்கிறது. இதுவே ப்ரஹ்மமென்பதாம்.


Thursday, January 7, 2010

மாக புராணம் 12




12 ஓணானாக ஆகிய திவ்யஸ்த்ரீ
க்ருத்ஸமதர்: தேவர்களைப்பார்த்து அந்த பெண் கூறினாள்: "நான் காச்2மீர தேசத்தில் ஸுஸீலர் என்றோர் வேதியரின் பெண். என்னை சிறந்த வரன் தேடி அளித்தார். நான்காவது நாளே என் பதி இறந்துவிட்டார். இந்த துக்கம் பொறுக்காமல் என்னைப் பந்துக்களிடம் விட்டுவிட்டு கானகம் சென்றனர் பெற்றோர். பந்துக்களிருந்தும் நான் பிச்சை எடுத்துச் சாப்பிடும்படியான நிலை நேர்ந்தது. பழைய அன்னமே கிடத்தது. வயிறு வளர்ப்பதே பெரும் பாடாகி ஸத்கதாசிரவணம், ஸ்நாநம், தாநம், பூஜை, ஏகாதசி உபவாஸம் முதலிய நற்காரியங்களில் ஒன்றையும் செய்யவில்லை. எவரேனும் நல்லதை கூறினால் அது எனக்குப்பிடிக்காது. பிக்ஷை எடுத்து பொருளையும் சேர்த்தேன். பதி இழந்த ஸ்த்ரீக்கள் செய்யத்தகாத பல காரியங்களையும் செய்தேன். செய்ய வேண்டிய கர்மம் ஒன்றும் செய்யவில்லை.
எனது உடலை வளர்த்து அலங்கரித்தவுடன் புருஷ போகத்தில் ஆசையுண்டானது. ஒரு வைச்2யன் அழகும் யௌவனமும் வாய்ந்தவன். இரவில் வந்து எனது ஆசையை பூர்த்தி செய்தான். ஒருவருடன் நிற்காமல் பலருக்கு உடலை அளித்துக் களித்தேன். ஸத்ஸங்கமும் ஸத் கதையும் எனக்குப் பிடிக்காதது மாத்ரமல்ல. அவைகளையும் அவற்றை செய்தோரையும் நிந்தித்தேன். இவ்வாறு என் ஆயுள் முடிந்தது. யம லோகத்தில் உக்ரமான பல யாதனைகளை அனுபவித்தேன். புலியாகவும் குரங்காகவும் நூறு பிறவி, விதவையாகவும் நாயாகவும் பேயாகவும் காக்கையாகவும் புழுவாகவும் ஓணாயாகவும் பன்றியாகவும் பூனையாகவும் எலியாகவும் பல பிறவிகளைப்பெற்று இச்சமயமுள்ள ஓணானுருவிலே உங்கள் தர்சனம் கிடைத்தது. பால விதவையாக இருக்கும் போது ஒரு பிறவியில், வழி நடந்து களைப்பாக ஒரு ஏழைக்கு ஐந்து நாளாகிப் புளித்து புஜிக்க முடியாத அன்னத்தை அளித்தேன். அந்தப் புண்ய பலனே உங்கள் தர்ச2னம், பாப சரீர மோசனம்" என்று தேவரை வணங்கி வைகுண்டம் சென்றாள். நல்லுணவு அளித்தோர் பெருமையை கூறவும் வேண்டுமா?

தேவர்கள் மாகஸ்நாந மஹிமையை உணர்ந்து தேவேந்த்ரனை தேடிப்பிடித்து மாக மாஸம் முப்பது நாளும் ஸ்நாநம் செய்வித்தனர். அதனால் அவரது முகம் முன் போலாக அனைவரும் ஸ்வர்க்கம் சென்றனர்.

Wednesday, January 6, 2010

மாக புராணம் 11



11.தேவர் ஓணானை கொண்டு பரீக்ஷித்தது.
பகவான்: "ஆதலால் தேவேந்திரனுக்கு மாக ஸ்நாநம் செய்வித்து கழுதை முகத்தை அகற்றுங்கள். மேலும் அதன் பெருமையை கேளுங்கள். ப்ரயாக க்ஷேத்திரத்தில் மாகஸ்நாநம் செய்வது மிக உத்தமம். கங்கையும் யமுனையும் கூடுமிடத்திலே சரஸ்வதி அந்தர்வாஹினியாகச் செல்கிறாள். மாகமாஸம் அச்வத்தம், விஷ்ணு, வேதம், பிராம்ஹணன், ராமமந்திரம், லக்ஷ்மீ, கங்கா, மேரு ஆகியவை அந்தந்த இனத்திற்குள் மிக உயர்ந்தது. பிரயாகை, கங்கா, நர்மதா, பச்சிம வாஹினியான காவேரீ, தாம்ரபரணி, கோகர்ணம், பிரபாஸம் முதலிய இருபத்து நான்கு கோடி புண்ணிய தீர்த்தங்களில் பத்தாண்டுகள் ஸ்நாநம் செய்தவருக்கு எவ்வளவு புண்ணியம் வருமோ அவ்வளவு புண்ணியத்தை ஒரு மாஸம் செய்யும் மாகஸ்நாநம் அளிக்கும். மாகமாஸத்தில் தீர்த்தங்கரையில் என்னை ஸாளக்ராமத்தில் சி2லையில் சிறந்த கந்த புஷ்பங்களால் பூஜிப்பவர் எனது லோகத்தை அடைந்து மறுபடி பிறக்க மாட்டார்.

நெல்லி மரத்தின் கீழே துளஸீ, மிருத்திகை, அல்லது கோமயத்தை உடலில் பூசிக்கொண்டு மாகஸ்நாநம் செய்வரது எல்லா பாபங்களும் உடனே நசிக்கும். மாக ஸ்நாநம் செய்யாதவர் யமயாதனையை அனுபவிப்பர். பெண்களுக்கு மாக ஸ்நாநம் ஒரு வரப்பிரசாதம். இரு முறை பூஜிக்கும் விதவையின் பாபமும் அகலும். பக்தியுடன் மாகஸ்நாநம் செய்து காயத்ரீ ஜபம் செய்வது விசே2ஷ புண்ணியத்தை தரும்.

காயத்ரிக்கு சமமான மந்திரம் இல்லை. ஸர்வ பாபங்களையும் போக்கி ஸர்வ லோகங்களையும் அளிக்க வல்லது காயத்ரீ. எனக்கும் பிரும்மாவுக்கும் சிவனுக்கும் ஸகல தேவர்களுக்கும் முக்கியமாக ஸூர்யனுக்கும் இருப்பிடம் காயத்ரீ. மாகமாஸம் முப்பது நாளும் ஸ்நாநம் செய்து காயத்ரீ ஜபம் செய்பவர் எல்லா யக்ஞங்களையும் செய்த பலன் பெறுவர். பிரும்ம யக்ஞம் செய்பவர் பிரம்ம லோகம் செல்வர். மாகஸ்நாநம், ஸத்கதா ச்2ரவணம், தீப தானம் இவை பிரும்ம ஞானம் தருபவை. துளஸீமாலை தரித்து துளசீ தளத்தால் ஸாளக்ராம பூஜை செய்வோர்க்கு யம பயமில்லை.

புராணம் சொல்பவர் வேதங்கற்று ஆசாரமுள்ளவராக இருத்தல் வேண்டும். கம்பீரமான வாக்கு, அழகான ஸ்ரீராகம், சா2ஸ்த்ரார்த்தம் இவைகளில்லாத புராணம் கேட்கத்தக்கதல்ல. அந்த குணம் நிறைந்தவர் கூறும் மாகபுராணத்தை பக்தியோடு ஒரு மாதம் கேட்பவர் எனது ஸாரூப்ய முக்தியை பெறுவர். ஸாளக்ராம தீர்த்தம் அருந்துவோர்க்கு ஸர்வ பாபங்களும் அகன்று ஹரி பக்தி உண்டாகும். பத்மாத்ரி குஹையில் உள்ள இந்திரனை அழைத்து வந்து துங்கபத்ரா நதியில் மாக ஸ்நாநம் செய்வியுங்கள். முன் போல திவ்ய முகத்துடன் வருவான்!” என்று கூறி விஷ்ணு மறைந்தார்.

தேவர்கள் பகவானை பணிந்து திரும்பிய போது அவர்களைப் பார்த்து இடி போல் பயங்கரமான ஒரு சப்தம் செய்தது ஒரு ப்ராணி. அவ்விடத்தில் தேடிச்செல்ல மலை போல் விகார ரூபத்துடன் ஒரு ஓணான் அங்கு பள்ளத்தில் இருந்தது. அது அஸுரனோ என அஞ்சினர். ஆயினும் அதை பலமான கொடிகளைக் கொண்டு கட்டி மேலே இழுக்க முயற்சித்தனர். அது அசையாததைக் கண்டு "இது ஓர் பாப ஜன்மா போல இருக்கிறது. எல்லா பாபமும் மாகஸ்நாநத்தால் அகலுமென அச்சுதன் கூறினாரே! இதற்கு மாகஸ்நாநம் செய்வித்து அந்த பாபம் அகலுகிறதா எனப்பரீக்ஷிப்போம்" என நினைத்தனர். தற்செயலாக மறு நாளே மாகமாஸம் பிறந்தது. அன்று அவர்களும் விதிப்படி மாகஸநாநம்செய்து அந்த ஜலத்தைக் கொண்டு வந்து அதற்கு (ஓணானுக்கு) ஸ்நாநம் செய்வித்தனர். உடனே அது அந்த கோர உடலைவிட்டு திவ்ய ஸ்த்ரீயாக தோன்றிற்று. அதைக்கண்டு அனைவரும் ஆச்சரிய மடைந்தனர்.



விசாரசங்கிரஹம் - 11



16.அகங்காரம் ஜீவன் ஆன்மா ப்ரஹ்மம் ஆகிய இவற்றுக்கு தாதான்மிய முண்டாவதெவ்வாறு?

திருஷ்டாந்தம்                                 -       தாஷ்டாந்தம்
அயப் பிண்டம்                                 -      அகங்காரம்
தப்தாய பிண்டம்                             -     ஆன்ம ஸ்வபாவத்தோடு அத்தியாசமாய்த் தோன்றுகிற ஜீவன்
தப்தாய பிண்டத்திலுள்ள அக்னி    -       தேகந்தோறும் விளங்கும் ஜீவனிலுள்ள சிற்பிரகாசம் அதாவது   கூடஸ்த ப்ரஹ்மம்
ஏகமாயுள்ள அக்னி ஜ்வாலை            -ஏகமாயுள்ள வ்யாபக ப்ரஹ்மம்

மேற்காட்டிய திருஷ்டாந்தத்தால் அகங்கார ஜீவ சாக்ஷி சர்வசாக்ஷிகளுடைய தாதான்மியம் விளங்கும்.
தட்டான் மெழுகுருண்டையில் கணக்கற்ற நாநாலோகங்களின் அணுக்களடங்கி ஒரே மெழுகாக காணப்படுவது போன்று சுழுத்தியில் எல்லா ஜீவர்களுடைய ஸ்தூல சூக்கும தேகங்களும் ஒரே யிருட்டாகிய அவித்தை அதாவது சமஷ்டி மாயையில் அடங்கி ஆத்மாவில் லயித்து ஒன்று பட்டிருத்தலால் எங்கும் ஒரே இருட்டைக் காண்கிறார்கள். இந்த சுழுத்தியாகிய இருட்டிலிருந்து சூக்கும தேகம் அதாவது அகங்காரமும் அதிலிருந்து ஸ்தூல தேகமும் உண்டாகிறது. அகங்காரம் உண்டாகிற பொழுதே தப்பதாய பிண்டம் போன்று ஆன்ம ஸ்வபாவத்தோடும் அத்யாசமாய்த் தோன்றுகிறது. இங்ஙனம் சிற்பிரகாசத்தோடு தாதான்மியமாகக்கூடியிருக்கும் மனமாகிய அகங்கார ரூபனான ஜீவனையன்றி ஜீவ சாக்ஷி யாகிய ஆன்மாவும் ஆன்மாவை யன்றி சர்வ சாக்ஷியாகிய ப்ரஹ்மமும் இன்றாம். தப்பதாயப்பிண்டமானது கொல்லனாலெவ்வாறடிப் பட்டு விகாரமுற்றாலும் எப்படி அதிலுள்ள அக்னி மாத்திரம் அவற்றால் யாதொரு சலனமும் அடைவதில்லையோ அப்படியே ஜீவன் எவ்வளவு வ்யவஹாரங்களி லுழன்று சுக துக்கங்களை யனுபவித்தாலும் அதிலுள்ள ஆன்ம ஜோதி மாத்திரம் அவற்றால் யாதொரு சலனமுமின்றி ஆகாசம் போல் வ்யாபகமாயும் ஞான மாத்திரமாயும் ஏகமாயும் விளங்கும் ப்ரஹ்ம சொரூபமாகவே ஹ்ருதயத்தில் பிரகாசிக்கிறது.
--
மேற்காட்டிய திருஷ்டாந்தத்தால் அகங்கார ஜீவ சாக்ஷி சர்வசாக்ஷிகளுடைய தாதான்மியம் விளங்கும்.

தட்டான் வேலை செய்யறப்ப பாத்தா கைவசம் ஒரு மெழுகுருண்டை வெச்சு இருப்பார். என்னதான் சேதாரம்ன்னு கணக்கு காட்டினாலும் ஒரு சின்ன துகள் கூட சேதாரமாகாது. ராவறதை எல்லாம் இந்த மெழுகுருண்டையில ஒத்தி ஒத்தி சேத்துடுவார். இந்த மெழுகுருண்டையில தங்கம் இருக்கலாம்; வெள்ளி இருக்கலாம்; வேற எதும் கூட இருக்கலாம். ஆனாலும் கணக்கற்ற பல வித லோகங்களின் அணுக்களடங்கி ஒரே மெழுகு உருண்டையா காணப்படுவது போல;

சுழுத்தியில எல்லா ஜீவர்களுடைய ஸ்தூல, சூக்கும, தேகங்களும் ஒரே இருட்டாகிய அவித்தை அதாவது சமஷ்டி மாயையில் அடங்கி ஆத்மாவில் லயித்து ஒண்ணா இருக்கிறதால் எங்கும் ஒரே இருட்டைக் காண்கிறாங்க.

கொல்லன் உலையில நெருப்பு திகுதிகுன்னு எரியும். அதில போட்ட இரும்புத்துண்டு [அயப்பிண்டம்] நல்லா பழுக்க காஞ்சு அதுவும் திகுதிகுன்னு காணும். [தப்தாய பிண்டம்.] கொல்லன் இதை சம்மட்டியால அடி அடின்னு அடிச்சு உருவை மாத்துவான். கட்டியா இருந்த இரும்பு இப்ப தட்டையா - லாடமா ஆயிடுத்து. அடிச்ச அடியிலே இரும்புத்துண்டுக்குத்தான் பாதிப்பே தவிர அதிலிருந்த சூடுக்கு பாதிப்பு உண்டா? அந்த சூடு தானாதான் தணியும்.

இந்த சுழுத்தியாகிய இருட்டிலிருந்து சூக்கும தேகம் அதாவது அகங்காரமும் (நான் என்பதும்) அதிலிருந்து ஸ்தூல தேகமும் உண்டாகிறது. அகங்காரம் உண்டாகிற பொழுதே தப்பதாய பிண்டம் போல ஆன்ம ஸ்வபாவத்தோடும் அத்யாசமாயும் (இல்லாததை இருப்பதாக பார்க்கிறது) தோணும். இப்படி சித் பிரகாசத்தோடு தாதான்மியமா கூடியிருப்பது மனமாகிய அகங்கார ரூபனான ஜீவன். (சூரியனும் சூர்ய கிரணங்களும் ஒண்ணா? வேற வேறயா? இப்படி பிரிக்க முடியுமா முடியாதா ந்னு இருக்கிறது தாதான்மியம்.) இந்த ஜீவன் இல்லாம ஜீவ சாக்ஷியாகிய ஆன்மா இல்லை. இந்த ஆன்மா இல்லாம சர்வ சாக்ஷியாகிய ப்ரஹ்மமும் இல்லை.
சூடாக்கிய இரும்பு துண்டு கொல்லனால எப்படி அடிப் பட்டு விகாரமா ஆனாலும் எப்படி அதிலுள்ள அக்னி மாத்திரம் அவற்றால் எந்த ஒரு சலனமும் அடைவது இல்லையோ அப்படியே ஜீவன் எவ்வளவு வ்யவஹாரங்களில் உழன்று சுக துக்கங்களை அனுபவிச்சாலும் அதிலுள்ள ஆன்ம ஜோதி மாத்திரம் அவற்றால் எந்த ஒரு சலனமும் இல்லாம ஆகாசம் போல் எங்கும் ஊடுருவியும், ஞானமாயும் ஒண்ணாவும் விளங்கும் ப்ரஹ்ம சொரூபமாகவே ஹ்ருதயத்தில பிரகாசிக்கும்.


Monday, January 4, 2010

விசார சங்கிரஹம் 10



15. கரணேந்திரியாதிகள் அறியுந் தர்மத்தை யுடையனவாக விருந்தும் அவை திருசிய பதார்த்தங்களெனப்படுவதேன்?

திருஷ்யம் அல்லது அறிபடுபொருள் - திருக்கு அல்லது அறிபொருள்
கடம்                                             -  பார்ப்பவன்
தேக கடாதிகள்                              -  கண்
கண்                                              - கண்ணிந்திரியம்
கண்ணிந்திரியம்                             -  மனம்
மனம்                                           - ஜீவன்
ஜீவன்                                          - அறிவு

மேற்கண்டபடி அறிவாகிய நாமே எல்லா பதார்த்தங்களையும் அறிவதால் நாமே திரிக்கெனப்படுவோம். கடாந்தமாயுள்ள பதார்த்தங்கள் யாவும் நம்மால் அறியப்படுவதால் திருசியங்களாம். மேற்காட்டியுள்ள அறிவறியாமை யடுக்குகளிற் கூறப்படும் திருக்கு திரிசியங்களிலும் ஒன்று மற்றொன்றுக்குத் திருக்காக விருப்பினும் அது வேறொன்றுக்கு திருசியமாகலான் அவை யாவும் உண்மையில் திருக்காகா. நாம் எல்லாவற்றையும் அறிவதால் திருக்கென்றும் ஒன்றாலும் அறியப்படாததால் திருசியமன்று என்று சொல்லப்பட்டாலும் திருசியங்களை பற்றியே நாம் திருக்கென்று வழங்கப்படுகிறோமே யன்றி உண்மையில் திருசியமென்பது நமக்கன்னிய மின்மையால் நாம் அவ்விரண்டுக்கும் அதீதமான பொருளாவோம். ஏனையவ எல்லாம் திருக்கு திருசியங்களுக்கு உட்பட்டனவே.

கண், தோல் முதலியவனைத்தும் அறிகிறவையா இருக்கிறப்ப ஏன் அதை எல்லாமே அறியப்படும் பொருளா சொல்கிறாங்க?

அவை எல்லாமே ஒண்ணை அறிஞ்சாலும் அதை அறிய இன்னும் ஒண்ணு வேண்டியிருக்கு.
பட்டியலை பாத்தா ஒண்ணு மத்ததை பாத்தாலும் அதை ஒண்ணு பார்க்குது. ஒத்தன் ஒரு குடத்தை பார்க்கிறதா வெச்சுப்போம். குடத்தை கண் பாக்குது. ம்ம்ம்ம்... ஆனா அதால மட்டுமே "பாக்க" முடியாது. நம் சித்தாந்தங்கள்படி கண் என்கிற உறுப்புக்கு ஒரு சக்தி பாயணும். அப்பத்தான் அது பார்க்கும். (இந்த சக்தியை இந்திரியம் என்கிறாங்க.) அப்படின்னாலும் மனசு அதில ஈடுபடணும். மனசு எங்கோ இருக்க நடந்து போகிறோம். எதிரே ஒத்தர் மேலே முட்டிக்கிறோம், இல்லையா? இந்த மனசு என்ன செய்யுதுன்னு ஜீவாத்மா பாக்கும். இந்த ஜீவனையோ சித் ஆன அறிவு பாக்கும். ஆக கடைசிலே எல்லாத்தையும் பாக்கிறதா இருக்கிறது இந்த பேரறிவுதான். இந்த நிலையிலே பார்க்கிறதும், பார்க்கப்படுவதும் நாமே - அறிவே. அதனால இந்த சமாசாரத்தில நாம அகப்பட மாட்டோம். மத்த எல்லாமே பார்க்கிறதுன்னாலும் எல்லாமே பார்க்கப்படுவதும்தான்.


Saturday, January 2, 2010

மாகபுராணம் -10



10. விச்வாமித்ரரின் மர்கட ரூபம் அகன்றது.
தேவரனைவரும் மஹாவிஷ்ணுவைப் பல பத்யங்களால் பக்தி பரவசர்களாக துதித்தனர். "ப்ரபோ! வெகுநாட்களாக தேவேந்திரன் எங்களைவிட்டு மறைந்துவிட்டார். அதை அறிந்த அஸுரர் எங்களை ஹிம்ஸிக்கின்றனர். இந்த்ரனை எங்களுக்கு அளியுங்கள். அல்லது புது இந்த்ரனையாவது படைத்து ரக்‌ஷியுங்கள் என்றனர். "தேவர்களே! மித்ரவிந்தரது மனைவியிடம் ஆசை கொண்ட இந்தரன் அவரது சாபத்தால் கழுதை முகத்துடன் இருக்கிறான். வெளியில் வர வெட்கப்பட்டுக்கொண்டு கோகர்ணத்துக்கு மேற்கில் இருபத்தாறு யோசனை தூரத்தில் உள்ள பத்மாத்ரியின் குகையில் தங்கி இருக்கிறான்.
எனக்கு ச2க்தி இருந்தாலும் ப்ராம்ஹண சாபத்தை அகற்ற முடியாது. வேறெந்த கர்மாவாலும் அந்த சாபமகலாது. துங்கபத்ரா நதியில் மாக ஸ்நாநம் செய்து சக்ரனுக்கு ஸ்நாநம் செய்வியுங்கள். சா2பமகலும். முன் போல் முகம் பெற்று தேவ ராஜ்யத்தை ஆள்வான்!” என்றார் பகவான். பகவானது சொல்லில் நம்பிக்கை கொண்டாலும் தேவர் மறு முறையும் அவர் திருவாக்கால் மாக மஹிமையை கேட்க அவா கொண்டு "பகவன்! இந்த்ரன் உள்ள நிலையில் எப்படி விதி வழுவாது மாக ஸ்நாநம் புரிய முடியும்?” என்று கேட்க, "நீங்கள் அவனுக்காக ஸ்நாநம் செய்தாலும் அந்த புண்யத்தால் சா2பமகலும். குரங்கு முகத்துடன் இருந்த விச்2வாமித்ரரை நாரதர்தான் மாகஸ்நாநம் செய்து பழைய முகமுள்ளவராகச் செய்தார். அதைக்கேளுங்கள். பகவான் விச்2வாமித்ர முனி ஒரு சமயம் பூமியை ப்ரதக்‌ஷிணம் செய்துக்கொண்டு கங்காதீரம் வந்தார். அங்கு ஒரு கந்தர்வஸ்த்ரீ தன்னந்தனியே மஹாரண்யத்தில் இருக்கக்கண்டார். அழகிய அவள் ரூபத்தில் மயங்கி, உன்னை ரக்‌ஷிக்கிறேன். நீ அஞ்சாதே! என்று கூறி அவளை ஆலிங்கனம் செய்து பலாத்காரமாக ரமித்தார்.
([அவளது கதை:]
அவளை அவளது பதி ”மாகஸ்நாநம் செய்ய கந்தர்வர் அனைவரும் செல்கின்றனர். நீயும் வா” என்றழைத்தார். கர்மாவிற்கேற்றபடி புத்தி தோன்றும். ”எனக்கு ஸ்நாநம் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். வேண்டியவர் ஸ்நாநம் பண்ணுங்கள்” என்று கூறினாள். அவளை நிர்பந்தம் செய்து பதி அழைத்து வந்தார். ஆனால் கூட்டத்தில் மறைந்து ஸ்நாநம் செய்யாமல் வநத்திலே புகுந்து ஒளிந்தாள். கந்தர்வர் அனைவரும் மாகஸ்நாநம் செய்து கந்தர்வ லோகம் சென்றனர். ஸ்நாநம் செய்த கோஷ்டியுடன் சேர விரும்பினாலும் வழி தெரியாததாலும் ஆகாய மார்க்கமாக செல்லும் சக்தியை இழந்ததாலும் கோரமான கங்காதர வனத்தில் தங்கியிருந்தாள்.)
கந்தர்வன் அவளைத்தேடி பூலோகம் வந்து அந்த அரண்யத்தில் மனைவியையும் விச்2வாமித்ரரையும் கண்டு கோபங்கொண்டு முநிவரை குரங்கு முகமுள்ளவராகவும், மனைவியை கல்லாகும்படியும் சபித்து சென்றான். கானகத்தில் குரங்கு முகத்துடன் சஞ்சரிக்கும் விச்2வாமித்ரரைக் கண்டு நாரதர் இரக்கம் கொண்டார். அந்த மாதம் தெய்வச்செயலால் மாக மாதமாக இருந்ததால் அவரை அழைத்துகொண்டு நாரதர் முறைப்படி அருகிலுள்ள ஒரு தடாகத்தில் ஸ்நாநம் செய்தார். அடுத்த க்ஷணத்தில் அவர் (விச்2வாமித்ரர்) முன் போலாக இருவரும் ஆங்குள்ள சிலையில் (கல்லில்) அமர்ந்து ஜபம் செய்தனர். அந்தக்கல்லும் உடனே கந்தர்வ ஸ்த்ரீயாகி, (அவள்) வெட்கத்துடன் இருவரையும் வணங்கி தன்னிருப்பிடம் சென்றாள்.



Friday, January 1, 2010

மாக புராணம் 9



9. ச2க்ரனது கழுதை முகம் அகன்றது.
க்ருத்ஸமதர் எனும் முனிவர் கங்கையில் மாக ஸ்நாநம் செய்து கொண்டு இருந்தபோது ஜந்ஹு முனிவர் மாகத்தின் பெருமையை கூறும்படி வேண்டினார். க்ருத்ஸமதர் துங்கபத்ரா தீரத்தில் மித்ரவிந்தன் என்றோர் முனிவர் இருந்தார். அவரது மனைவி தேவஸ்த்ரீயோ இவள் என எண்ணும்படி ஸர்வ அவயவ ஸுந்தரியாக இருந்தாள். இருவருமாக இல்லறத்தை ஒழுங்காக செய்து வந்தனர். அரக்கர் மீது படையெடுத்து வந்த தேவேந்திரன் அந்த ரிஷி பத்னி ரூபத்தில் மோஹம் கொண்டான். அஸுரர்களை ஒழித்து வெற்றியுடன் தேவஸேனை ஸ்வர்க்க லோகத்திற்குக் கிளம்பிற்று.

இந்திரன் சேனைகளை எல்லாம் அனுப்பிவிட்டு மறுநாள் தான் வருவதாக கூறி அந்த ஆச்ரமத்தில் தங்கினான். மித்ரவந்தர் வேதம் கற்பிக்க ஆச்2ரமத்தை விட்டு வெளியில் சென்றார். அச்சமயம் அமராதிபன் உள்ளே புகுந்து ரிஷிபத்னியை பலவந்தமாக புணர்ந்து ரமித்தான். திடீரென மினிவர் வர இந்திரன் இருளில் மறைந்து வெளிக்கிளம்பினான். முனிவர் "நீ யார்?” என்று கேட்ட போது தான் செய்த தகாத கார்யத்தால் வெட்கி தலை குனிந்து "இந்த்ரன்!” என்று தழ தழத்த குரலில் கூறினான்.

ஞானக்கண்ணால் நடந்ததை அறிந்த முனிவர் ”இந்த்ர! நீயே இப்படிச்செய்வது அடாத கார்யம். ஸாதுக்கள் முகத்தில் எப்படி விழிப்பது? இந்த க்‌ஷணமே கழுதை முகத்தை பெறுவாய் என்று சபித்தார். தனது ஆச்2ரமத்தை விட்டு கங்காதீரம் சென்று யோகாக்னியால் உயிரை விட்டார். இந்த்ரன் கேவலமான முகத்தோடு பயங்கரமான கத்தலுடன் ஸ்வர்கம் செல்ல மனமின்றி பத்மாத்ரியின் குகையில் பதுங்கி வசித்தான். வெகு நாட்கள் இந்த்ரன் ஸ்வர்கம் வராமல் இருப்பதை கண்ட அசுரர் இதே தக்க சமயமென தேவர் மீது படையெடுத்துக் கடும் போர் செய்தனர். [தேவர்கள்] தலைவனைத் தேடி திரிந்தும் அகப்படாததால், தங்களான வரை ராக்‌ஷசருடன் போரிட்டனர். அஸுர சேனை ஓங்க தேவ சேனை அடி பட்டு புறங்காட்டி தோல்வியுற்றது. ஸ்வர்கத்தைக் காக்க சில வீரர்களை அங்கு நிறுத்திவிட்டு மற்ற தேவர்கள் எல்லாம் மானிட லோகம் சென்றனர். ஓர் நதியில் எண்ணிறந்த முனிவர் மாக ஸ்நாநம் செய்வதைக் கண்டு அங்கு சென்று அவர்களை கூட்டமாக ஸ்நாநம் செய்யும் காரணத்தை விசாரித்தனர். அவர்கள் மாக ஸ்நாநத்தின் மஹிமையை வர்ணித்தனர். தேவர்களே! மாக ஸ்நாநம், தாநம், ஜபம், புராண ச்2ரவணம் இவைகளை பக்தியுடன் செய்கின்றவர்கள் தன்யர் ஆவர். இச்சமயம் கோதானம் விருஷோத்ஸர்ஜநம், திலாதானம், பாயஸதாநம், கம்பள தானம், வஸ்த்ர தானம் இவைகளை அளிப்பவர் பல்லாண்டு வைகுண்டம் சென்று வஸிப்பர். கோதானம் செய்வோர் கைலாஸம் செல்வர். விருஷோத்ஸர்ஜநம் வைகுண்டத்தை தரும். திலதானம் ஸ்வர்க்க சுகத்தைத் தரும். ஆபூபம் முதலிய பக்‌ஷ்யங்கள் ஸூர்யலோகத்தை தரும். அன்ன தானம் செய்வோர் ஸ்வர்க்கம் செல்வர். பாயஸதானம் செய்வோர் துருவஸ்தானம் செல்வர். கம்பள தானம் அக்னி லோகத்தை அளிக்கும். வஸ்த்ர தானம் செய்வோர் பிரும்மலோகம் செல்வர்.

முப்பது நாளும் இங்ஙனம் பக்தியுடன் ஸ்நாந தாநம் செய்வோர் முற்குறித்த லோகங்களில் சென்று பேரானந்தம் பெறுவர். குளிரின் பயத்தினாலோ, விஷயம் அறியாமையினாலோ, கிழத்தன்மையாலோ, வியாதியினாலோ மாகஸ்நாநம் செய்யாதவர் நீச ஜாதியில் பிறப்பர். மாகஸ்நாநம் செய்யும் சண்டாளனும் சிறந்தவன். அதை செய்யாத ப்ராம்ஹணன் சண்டாளனை விடத்தாழ்ந்தவன். இந்த ஸ்நாந மஹிமையை அறிந்தால் கூட நற்கதி உண்டு. இப்படி மஹ ரிஷிகள் கூறியதைக்கேட்டு தேவர்கள் அனைவரும் விதிப்படி பக்தியுடன் ஸ்நாநம் செய்தனர். முடிவில் சங்க சக்ர கதாபாணியும், பீதாம்பர தாரியும், கருத்த மேகம் போன்ற திரு மேனியுடையவனுமான மஹா விஷ்ணு தர்சனம் தந்தார்.