Pages

Wednesday, October 28, 2009

நன்றி! மீண்டும் வருக!



இத்துடன் ஆன்மிகம் பத்தி நான் எழுத நினைச்சது எல்லாம் எழுதி முடிச்சாச்சு.
அடுத்து பெரிசா எழுத ஒண்ணும் இப்போதைக்கு இல்லை.
ஞான வழி கொஞ்சம் புரியறது கஷ்டம்தான். திருப்பி திருப்பி படிச்சு கேட்டு புரிஞ்சு கொள்ள வேண்டிய விஷயம் அது. அதனால புரியலைன்னா ஒண்ணும் தப்பா எடுத்துக்க வேணாம்.உற்சாகம் இழக்க வேணாம். வேறு யாரும் இன்னு சுலபமாக புரிய வைப்பாங்களோ என்னவோ!
ராஜ யோகம் குரு மூலமாகவே செய்ய வேண்டியது என்பதால அதைப்பத்தி ஒண்ணும் எழுதலை. மத்த மூணு வழிகளிலே நமக்கு எது தோது பட்டு வருமோ அதையே தேர்ந்தெடுத்துக்கலாம். எதா இருந்தாலும் போய் சேருகிற இடம் ஒண்ணேதான்!

இனி வாரம் ஒரு முறையோ இரு முறைகளோ பதிவுகள் வர வாய்ப்பு இருக்கு. எப்படி நடக்குமோ தெரியலை.பார்க்கலாம். வாழ்த்துக்கள்!
இது வரை அயராம படிச்சு உற்சாகப்படுத்தி வந்தவங்களுக்கு என் நமஸ்காரங்கள்!
வரட்டா?

10 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

ஞானம் என்பது வெறுமனே அறிந்துகொள்வதில் இல்லை. அதனால் அதை எழுத்தில் புரிய வைப்பதும் கடினமே. கடினமான ஒன்றைக் கூட, இவ்வளவு எளிமையான முறையில் தொடர்ச்சிவிட்டுப்போகாமல், புரிந்துகொள்ளத் தடுமாறும் கேள்விகளில் அயர்ந்துபோகாமல் எழுதிய முயற்சிக்கு என்னுடைய ஹ்ருதயபூர்வமான வந்தனங்கள்.

திவாண்ணா said...

நன்றி கிருஷ்ண மூர்த்தி. நீங்க சொல்லுவது நூறுக்கு நூறு உண்மை. அனுபவிக்க வேண்டிய விஷயத்தை சொல்லி புரிய வைக்கிறது ரொம்ப கஷ்டம்ன்னு அனுபவப்பட்டு புரிஞ்சுகிட்டேன். பின்னூட்டங்கள் இட்டு அவ்வப்போது உற்சாகப்படுத்தியதுக்கு நன்னி!

yrskbalu said...

ji,

thanks for kind contribution to spritual seekers.

if you give all in one pdf file -it will be helpfull.

pl dont stop writing.

you can write bramasutra or upanised.

pl spread your vedentha knowledge to others. may be somebody needed.
we dont know. so let us continue your work .
this is my requestion

திவாண்ணா said...

பாலு சார். இதுவரை வந்தது எல்லாமே பக்கப்பலகத்திலே கடந்த பதிவுகள் ன்னு தொடுப்பு இருக்கு பாருங்க. இப்ப ஞானம்-2 உம் சேத்தாச்சு.

பிரம்ம சூத்திரம் படிச்சதில்லை. தெரியாத ஒண்ணை எழுத மாட்டேன். அடுத்து காயத்திரி குறித்து சிலது ஏற்கெனெவே வேற இடத்திலே எழுதியதை போட உத்தேசம். பார்க்கலாம்.

நிகழ்காலத்தில்... said...

திவா..

தொடர்ந்து எழுதுங்கள்..

அன்பு வேண்டுகோள்..

Geetha Sambasivam said...

கொஞ்ச நாளைக்கு ஓய்வு??? ஓகே! வாங்க திரும்பப் புத்துணர்ச்சியோடு. வாழ்த்துகள்.

முதல்முறை படிச்சதைவிட இரண்டாம் முறை இங்கே படிச்சதில் சில விஷயங்கள் கொஞ்சம் அதிகமாய்த் தெரிஞ்சது. இல்லைனா அவை எனக்கு இப்போப் புரிஞ்சுக்க முடிஞ்சுதோ?? என்றாலும் இது திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும். இல்லைனா கஷ்டம் தான்!

Geetha Sambasivam said...

//இத்துடன் ஆன்மிகம் பத்தி நான் எழுத நினைச்சது எல்லாம் எழுதி முடிச்சாச்சு.
அடுத்து பெரிசா எழுத ஒண்ணும் இப்போதைக்கு இல்லை.
ஞான வழி கொஞ்சம் புரியறது கஷ்டம்தான்.//

இது மட்டும் ரொம்பவே நல்லாப் புரியறது! :))))

திவாண்ணா said...

நிகழ்காலத்தில்... ஆதரவுக்கு நன்றீ! எழுதுவேன். எப்போ எவ்வளவுன்னு தெரியலை.பார்க்கலாம்.
#@ கீதா அக்கா.
ம்ம்ம் முன்னலேயே ஸ்னீக் ப்ரிவ்யூ இல்லம் குழுவிலே இருந்ததை சொல்லறீங்களா. ஆமாம் புரிய 2-3 தடவையாவது படிக்க வேண்டிய விஷயம். முடிந்த வரை எளிமையா சொல்லப்பாத்தேன். திருப்பி படியுங்க. வலது பக்கம் எல்லாத்தையும் பிடிஎஃf ஆ தரவிறக்க தொடுப்பு கொடுத்து இருக்கேன்.
நமஸ்காரம்.

Kavinaya said...

சிந்திக்க வைத்த பதிவுகளுடன், உங்களோட வந்த அனுபவமும் அருமை. மிக்க நன்றி. மேலும் நிறைய எழுதுங்க!

திவாண்ணா said...

backlog வெச்சுகிட்டு இருந்து ஒழுங்கா படிச்சு முடிச்சு இருக்காப் போல இருக்கு. விக்கிரமாதியன் மாதிரி தளராமல் படிச்சதுக்கு நன்னி!