Pages

Monday, October 5, 2009

இந்த துரீயமே துரியாதீதம்....


இந்த துரீயமே துரியாதீதம் எனப்பட்டது.
(இப்படியும் சிலர் சொல்கிறாங்க.)

152.
இத்துரிய பூமியே துரியாதீதம் ஆகும்.
முற்புவிமூன் றினுமுலகந் தோன்றுதலாற் சாக்கிரமா மூன்றற் கப்பால்
சொற்பனமா மதுவுமெள்ள நழுவுமைந்தாம் பூமியே சுழுத்தி யாகும்
அற்புதமாஞ் சுகாநுபவ மிகுமாறாம் புவிதுரிய மதற்கப் பாலோர்
கற்பனையி லாதவிட மதீதமென்று மௌனமாக் காட்டும் வேதம்.

(சுபேச்சை முதலான) முற்புவி மூன்றினும் உலகம் தோன்றுதலால் சாக்கிரமாம். மூன்றற்கு அப்பால் [4 வது ஆன சத்துவாபத்தி] சொற்பனமாம் (பிரபஞ்சம் மித்தையாக தோன்றும் கனவு) அதுவும் மெள்ள நழுவும் ஐந்தாம் (அசம்சத்தி) பூமியே சுழுத்தியாகும். அற்புதமாம் சுகாநுபவ மிகும் ஆறாம் புவி [பதார்த்தாபாவனை] துரியம் ஆகும். அதற்கப்பாலோர் (துரியம் எனும் 7 ஆம் பூமி) கற்பனையிலாத இடம் அதீதம் என்று மௌனமாய் காட்டும் வேதம்.
--
சுபேச்சை, தநுமானசி, சத்துவா பத்தி ஆகிய   முதல் 3 பூமிகளில் உலகம் தோன்றுகிறது. நாம சாதாரணமா பாக்கிற இந்த உலகம் தெரியுது. அதனால் அவை சாக்கிரம் ன்னு சொல்லாம்.


நான்காவது சத்துவாபத்தியில் பிரபஞ்சம் மாயை ன்னு தோன்றுகிறது. ஆனா அது என்ன என்கிற தெளிவு இருக்காது. அதனால் அது  கனவு.

5 வது ஆன அப்பியாசத்தில் எல்லாம் பிரம்ம சொரூபமாக தோன்றுகிறது. உலகம் நழுவுகிறது. அதனால் அது சுழுத்தி.

ஆறாவதில் ஆனந்தம் உதிக்கும். இது துரியம்.

இதற்கு அடுத்து ஒன்றும் தோன்றாத நிலையே துரியாதீதம் எனப்பட்டது. அதாவது துரியத்துக்கு அப்பாற்பட்டது.

153.
துரியநிலந் தனைத்துரியா தீதமெனின் மயக்கமென்று கருதி மேலோர்
அரியதொரு விதேகமுத்தி யதீதமென் பாரதுகணக்கி லாறாம் பூமி
மருவுசுழுத் தியிற்காட்சி சுழுத்தி யென்பா ரென்பதுநீ மனதிற்கொள்வாய்
பெருமைதரு ஞானபூ மியின்விகற்ப மின்னமுண்டு பேசக் கேளாய்.

துரிய நிலந்தனைத் துரியாதீதம் எனில் மயக்கம் என்று கருதி மேலோர், அரியதொரு விதேக முத்தி அதீதம் என்பார். அதுகணக்கில் ஆறாம் பூமி. மருவு சுழுத்தியில் காட்சி சுழுத்தி என்பார் என்பது நீ மனதில் கொள்வாய். பெருமை தரு ஞான பூமியின் விகற்பம் இன்னமுண்டு. பேசக் கேளாய்.
--
சீவன் முத்தர் தேகத்துடன் கூடி இருக்க அவர் நிலை துரியாதீதம் ன்னு சொன்னா ஸ்தூல திருஷ்டி இருக்கிறவங்களுக்கு  குழப்பம் வரும் என கருதிய முன்னோர், முதல் மூன்று சாக்கிரம் எனவும் நான்காவது சத்துவாபத்தி கனவு எனவும், ஐந்தும் ஆறும் சேர்த்து காட்சி சுழுத்தி எனவும், ஏழாம் பூமி துரியம் எனவும் கூறினர். இந்த ஞான பூமிகளின் விசேடங்கள் இன்னும் உண்டு.
அதாவது ஒரு சீவன் முத்தர் இருக்கார். அவருக்கு ஞானம் வந்துட்டாலும் கர்மாவை கழிக்க இந்த உலகத்தோட தொடர்பு இருக்கு. இவரோட நிலை எப்படி துரியாதீதம் ஆகும்ன்னு சிலர் குழம்பலாம். இதுக்காக இந்த ஞான நிலைகளை கொஞ்சம் ரீக்ளாஸிபை பண்ணி துரியாதீதம் என்கிற வார்த்தையை எடுத்துட்டாங்க சிலர். வேற இடத்தில படிக்கும்போது குழப்பம் வரக்கூடாதேன்னு இதை குறிப்பிடுறார் ஆசிரியர்.


2 comments:

Geetha Sambasivam said...

//இதுக்காக இந்த ஞான நிலைகளை கொஞ்சம் ரீக்ளாஸிபை பண்ணி துரியாதீதம் என்கிற வார்த்தையை எடுத்துட்டாங்க சிலர். வேற இடத்தில படிக்கும்போது குழப்பம் வரக்கூடாதேன்னு இதை குறிப்பிடுறார் ஆசிரியர்.//

இல்லாட்டாலும் குழப்பமாத் தான் இருக்கு. ஞான நிலை புரியுது. துரியம் வரையிலும் ஓகே. அப்புறமா துரியாதீதம் தான் குழப்பம்! ஒண்ணுமே தெரியலை?/தோணலை?! :((((((

திவாண்ணா said...

துரியாதீதம் என்கிறது கடேசி- அல்டிமேட் பிரம்ம நிலை. அங்கே வேறேயா தோன்றுவதுக்கு ஒண்ணுமில்லை. சரியா?