Pages

Tuesday, September 8, 2009

ஒத்தர் அனுபவம் வேறு ஒத்தர் மனசில உதிக்கிறதில்லை...




126.
உதவும் புவியினி லொருவன் னநுபவ மொருவன் மனதினி லுதியாதே
மதியுங் கெடுகிற துயில்கொண் டாநந்த மயனன் றோசுக முறுகின்றான்
இதுவிஞ் ஞான மயனாஞ் சிந்தையி னினைவாய் வந்திட லழகன்றே
சுதைவிண் ணோர்புகழ் குருவே நீரிது சொல்வீர் சகலமும் வல்லீரே

(எல்லா விருப்பங்களையும் அடைய கருமம், உபாசனை, ஞானத்தை அனுஷ்டிக்க) உதவும் புவியினில் ஒருவன் அநுபவம் [வேறு] ஒருவன் மனதினில் உதியாதே. மதியும் கெடுகிற (மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம் நசிந்த) துயில் கொண்டு ஆநந்த மயன் அன்றோ சுகமுறுகின்றான். இது விஞ்ஞான மயனாம் சிந்தையில் நினைவாய் வந்திடல் அழகு அன்றே. சுதை (அமிர்த பானம் செய்யும்) விண்ணோர் புகழ் குருவே, நீரிது சொல்வீர், சகலமும் வல்லீரே.
--
சீடனுக்கு சந்தேகம். உலகில ஒத்தர் அனுபவம் வேறு ஒத்தர் மனசில உதிக்கிறதில்லை. ஆழ் தூக்கமான சுசுப்தில மனமும் புத்தியும் இல்லை. ஆகையால ஆனந்த மய கோசமே சுகம் அனுபவிக்கிறது. தூங்கி எழுந்த பின்னே இந்த சுகத்தை மனம், புத்தியோட சம்பந்தப்பட்ட விஞ்ஞானமய கோசம் எப்படி அனுபவிக்கும்?

3 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

மனசுல மட்டுமில்லை, அனுவவத்திலேயும் தான்! இது வரைக்கும் சொன்னதுல, மனசே ஆன்மான்கிற மாதிரித் தான் வருது. ஆனால்,மனம் என்பது ஆன்மாவின் விரிவு, அல்லது ஒரு கருவி என்று எனக்குப் படுகிறது.

ஒருத்தரோட அனுபவம் இன்னொருத்தருக்கு அப்படியே பொருந்தி வராது, பொருந்தவும் செய்யாதுன்னு தான் ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லியிருக்காங்க. ஏற்கெனெவே அந்த மேற்கோளை, வேறொரு பதிவிலோ, இழையிலோ முழுக்கச் சொல்லி இருக்கேன்.

ஏன்னா, எந்த இரு ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கறதில்லை, ஒரே மாதிரிச் சிந்திக்கவோ, செயல்படறதோ இல்லை. அவரவர் செஞ்சதுக்கு ஏத்தமாதிரி அனுபவங்கள் வரும், அந்த அனுபவங்களே, தெரிஞ்சோ தெரியாமலேயோ,அடுத்த அனுபவத்துக்குத் தயார் செய்யும்.

த்வைதமோ, அத்வைதமோ எதுவானாலும் சரி, இன்னொருத்தர் சொல்வதில் இல்லை, நம்முடைய சொந்த அனுபவங்களாகும் வரைக்கும், ஒரு கற்பனையாகவும், மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஆதர்சமாகவும் மட்டும் தான் நிற்கும்.இருப்பது ஒண்ணே ஒண்ணு தான்றதோ, இல்ல ரெண்டுன்றதோ, இல்ல இல்ல, அது அப்படியும் இருக்கும், இப்படியும் இருக்கும்ன்றதிலயோ, சொந்த அனுபவம் தான் உண்மையைக் காண முடியும்!

திவாண்ணா said...

மனம் ஆன்மா அப்புறம் வருது, இன்னும் ஒரு சில பதிவுக்கு பின்.

அன்னை சொன்ன அனுபவம் பற்றிய விஷயங்கள் அருமை.
ஆன்மீகமே அனுபவ அடிப்படைதான், நம்பிக்கை அடிப்படை இல்லை என்கிறார் சுப்பையா வாத்தியார். அவரோட ஒத்துப்போகிறேன். அப்புறம்தானே த்வைதமா அத்வைதமா......

Geetha Sambasivam said...

சிஷ்யன் கேட்ட கேள்விக்குப் பதிலை எதிர்பார்க்கும்