Pages

Wednesday, July 29, 2009

தியானம்...



ஞான சாதனமா பலர் பயன் படுத்துவது தியானம்.
தியானம் என்கிறதென்ன?
எண்ணங்களை ஒரே விஷயத்தை சுற்றி சுழல விடுகிறது.

ஒரு தேவதை உபாசனை செய்யப்போறோம். அந்த தேவதைக்கு இவ்வளவு முகம், இவ்வளவு கைகள், இதிலே இன்ன இன்ன ஆயுதங்கள் .... இப்படி பல விஷயங்களை கற்பனை பண்ணி அதை சுத்தியே எண்ணங்களை ஓட விடுகிறது தியானம்.

"காதல்ல மாட்டிக்கிட்ட பசங்க வேற ஒண்ணுமே தோணாம காதலியையே நினைச்சுகிட்டு இருக்கிறாப்போல" ன்னு சொன்னா இன்னும் சுலபமா புரியுமோ என்னவோ. :-)

பிரம்மத்தை தியானிக்கறது முக்தியை கொடுக்கும்னு சொல்லலாமா? - தியானமே பொய். பொய்யால விளைகிறதும் பொய்யாத்தானே இருக்கும்? அப்ப தியானத்தால வருகிற மோக்ஷமும் பொய்யாத்தான் இருக்கணும்.

பொய்தான். மத்தவங்க இப்படி இருக்கும் அப்படி இருக்கும்ன்னு சொல்லி அதை தியானம் செய்கிறது பொய்தான். ஆனா இது ஒரு துவக்க நிலைதான். ஆனையை பார்க்கவே பார்க்காத ஆசாமிகிட்ட, ஆனை இப்படி இருக்கும் ன்னு விவரிக்க, பின் ஒரு நாள் வீதியிலே ஆனையை பாக்கிறப்ப "ஹா! இதான் ஆனை!" ன்னு தெரிஞ்சுக்கிறான் இல்லியா?! அது போல குரு உபதேசம் கேட்டு ஒரு கற்பனை பண்ணி அதையே தியானம் பண்ணி பின்னால அது அனுபவப்படும் போது "அட! இதான்"னு புரியும். முதல்ல தியானம் பண்ணது பொய்யானாலும் அனுபவப்பட்டது உண்மையே.

82.
உறுதியாக்கல்.
வகுத்த கர்மங்கள் செய்யவுந் தவிரவு மற்றொன்றாக் கவும்கூடும்
மிகுந்த ஞானமப் படியன்று தியானமும் விவேகஞா னமும்வேறே
செகத்தி லொன்றையொன் றாவிவன் பாவிக்குந் தியானம்கற் பிதயோகம்
முகத்த மாக்கண்ட ஞானமே வாஸ்தவ மோகமாய் மயங்காதே

(சாத்திரத்தில்) வகுத்த கர்மங்கள் (இச்சைபடி) செய்யவும் தவிரவும் (செய்யாதிருக்கவும்) மற்றொன்றாக்கவும் கூடும். மிகுந்த (மேலான) ஞானம் அப்படியன்று. [ஆகலின்] தியானமும் விவேக ஞானமும் வேறே. செகத்தில் ஒன்றை ஒன்றாய் இவன் பாவிக்கும் தியானம் கற்பித யோகம். முகத்தமாக்கண்ட (மறைவிலாது) ஞானமே வாஸ்தவம். மோகமாய் மயங்காதே.
--
திரிவித (மனம், சொல், உடல் ஆகிய மூன்று) கரணங்களால் ஒரு கர்மத்தை பிரியப்பட்டால் செய்யலாம்; பிரியப்படவில்லை என்றால் செய்யாது தவிர்க்கலாம்; மாற்றி செய்யவும் செய்யலாம். இது கருமம். அப்படி இல்லாது இருப்பது ஞானம். மனதால் செய்யும் பிரமத்தியானம் பொய். மன விசாரத்தால் பிரமத்தை அறியும் ஞானமே மெய். இரண்டுமே மனதின் காரியங்கள்தான்.


83.
கண்ட றிந்தது ஞானங்கேட் டதுதனைக் கருதுபா வனை யோகம்
கண்ட பேர்சொலக் கேட்டது மறந்து போங் கண்டது மறவாதே
கண்ட வஸ்துமெய் தியானவஸ் துக்கள்பொய் கறுவியஞ் ஞானத்தைக்
கண்ட வக்கணங் கொல்வது ஞானமே கருமமன் றறிவாயே

கண்டு அறிந்தது ஞானம். கேட்டதுதனைக் கருது(தல்) பாவனை யோகம். கண்ட பேர் சொலக் கேட்டது மறந்து போம். கண்டது மறவாதே. கண்ட வஸ்து மெய். தியான வஸ்துக்கள் பொய். கறுவி அஞ்ஞானத்தைக் கண்ட அக்கணம் கொல்வது ஞானமே, கருமம் அன்று அறிவாயே.
--
தியானத்திலே ஒருவர் ஏதாவது சொல்லக்கேட்டு அவ்விதமா கற்பனை செய்து கொள்ளறோம். இது மறக்கக்கூடியது. இது பொய். தானே நேரடியாக அனுபவித்தது மறக்காது. இதுவே மெய் ஆகும். அஞ்ஞானத்தை பார்க்கும் அந்த கணத்திலேயே அதை அழிப்பது ஞானமே, கர்மங்கள் இல்லை.



4 comments:

Geetha Sambasivam said...

அப்பாடினு இருக்கு, நல்லாவே புரியறது, க்ளிக்கியாச்சு!

திவாண்ணா said...

ஹிஹி! தான்கீஸ்!

Kavinaya said...

புரியறாப்லதான் இருக்குன்னு சொல்ல நீங்க சாய்ஸ் குடுக்கல. அதனால க்ளிக்கலை :)

திவாண்ணா said...

ஏன் கவி அக்கா? இது புரியுதுக்கும் குண்ட்ஸா க்கும் நடுவிலா?