Pages

Tuesday, July 14, 2009

சீவச்செயலை ஈஸ்வர செயலாகக் கூறுபவர்க்கு.....



முண்டகோபனிஷத்திலே ஒரு அருமையான உதாரணம் வருது. ஒரு அரச மரத்திலே ரெண்டு பறவைகள். கீழ் கிளையில இருக்கிற ஒரு பறவை கிளைக்கு கிளை தாவி அங்க இருக்கிற பழங்களை எல்லாம் விரும்பி சாப்பிடும். மேல் கிளையில இருக்கிற மற்ற பறவை சாந்தமா சும்மா உக்காந்து இருக்கும். வேணும் வேணும் ன்னு ஆலாய் பறக்கிற பறவைதான் சீவன். அசங்காமல் இருக்கிறது ஈசன். சீவன் அஞ்ஞானத்தால சுக துக்கங்களை அனுபவிக்கிறான். சுத்த சத்வ மாயையான ஈசன் இப்படி சுக துக்கங்களால பாதிக்கப்படுகிறதில்லை.

யார் ஜீவனோட செயல்களை கண்டு பிடிச்சுக்கொண்டு அதை சரி செய்ய நினைக்கிறங்களோ அவங்க தன் அகங்காரம், கோபம், தாபங்களை ஒழிச்சு முக்தி அடைய வாய்ப்பு இருக்கு. யார் செய்கிறதை எல்லாம் செய்ஞ்சுகிட்டு எல்லாமே ஈசன் செயல்ன்னு சொல்லிகிட்டு பழியை அவர் மேலே போட்டுட்டு இருக்காங்களோ அவங்க தன்னை கொஞ்சம் கூட மாத்திக்கப்போறதில்லை. (இங்கே முழு சரணாகதி பத்தி பேசலை. விதண்டாவாதம் செய்கிறவங்களைப்பத்திதான் பேசறோம். முன்னே கூட இதே பதிவுகளிலே இதைப்பத்தி பேசி இருக்கோம்!)

59.
சீவச்செயலை ஈஸ்வர செயலாகக் கூறுபவர்க்கு சனன துன்பமும் சீவச்செயலாவே கூறுபவர்க்கு முத்தியின் பலமும் பயனாம்:

இந்தச் சீவனால் வருமரு பகையெலா மிவன்செய லென்னாமல்
அந்தத் தேவனால் வருமென்ற மூடர்க ளதோகெதி யடைவார்கள்
இந்தச் சீவனால் வருமறு பகையெலா மிவன் செயலல்லாமல்
அந்தத்தேவனா லன்றெனும் விவேகிகளமலவீ டடைவாரே

இந்தச் சீவனால் வரும் (நேரிடும்) அரு பகையெலாம் (இங்கு ஆசை, கோபம் முதலானவை) இவன் (சீவனின்) செயல் என்னாமல், அந்தத் தேவனால் வரும் என்ற மூடர்கள் அதோ கெதி அடைவார்கள். இந்தச் சீவனால் வரும் அறு பகையெலாம் (செயல்களெல்லாம்) இவன் செயல் அல்லாமல் அந்தத் தேவனால் அன்று எனும் விவேகிகள் அமல (குற்றமற்ற) வீடு (மோக்ஷம்) அடைவாரே.
---
காம குரோதம் முதலான தீய குணங்களை தன்னுடைய செயல்கள் அல்ல என நினைப்பவன் மேலும் மேலும் அவற்றை செய்து பெரும்பாவம் தேடிக்கொள்வான். அவை தன்னுடையன என்று அறிபவன் அவற்றால் ஏற்படும் தீய பலன்களுக்கு அஞ்சி அக்குணங்களை ஒழிக்க முயன்று ஞானத்தை பெற்று முத்தி அடைவான்.



No comments: