Pages

Friday, July 10, 2009

நான் செய்வதற்கு நான் பொறுப்பில்லை!



பிரகாசமான ரெண்டு கண்கள்! ஆனா பார்வை எங்கே போகிறதுன்னு விஷயம் இருக்கு இல்லையா? எங்கேயோ பராக்கு பாத்துண்டு போனா ஏதாவது படுகுழி வழில வந்தா விழத்தான் விழுவாங்க.
அதனால எல்லாத்திலேயும் மெய்ப்பொருளையே பாக்கிற உள் முக பார்வை இருக்கிறவங்களுக்கு நித்தியமான பிரம்மானந்த பதவி கிடைக்கும். சுவர்கத்தை விரும்பிக்கொண்டு இருக்கிறவங்க (ஆசைகள் நிறைய இருக்கிறவங்க ) என்ன படிச்சா என்ன, இந்த பிறவிக்கடலிலே விழுந்துகொண்டுதான் இருப்பாங்க. முக்தி அடைய மாட்டாங்க!


53.
விடை:
அழிவி லாததற் பதந்தனை மைந்தனே யகமுகத் தவர் சேர்வர்
வழிந டப்பவர் பராமுக மாயினான் மலர்ந்தகண் ணிருந்தாலும்
குழியில் வீழ்வர்கா ணப்படி வெளி முகங்கொண்டுகா மிகளானோர்
பழித ரும்பிற விக்கட லழுந்துவர் பரகதி யடையாரே

அழிவிலாத தத் பதந்தனை மைந்தனே, அக முகத்தவர் சேர்வர். வழி நடப்பவர் பராமுக மாயினான் மலர்ந்த (திறந்த) கண் இருந்தாலும் குழியில் வீழ்வர் காண். அப்படி வெளி முகம் கொண்டு காமிகளானோர் பழி தரும் பிறவிக் கடலழுந்துவர் பரகதியடையாரே.
--
வழியில் செல்பவர் கண்கள் திறந்து இருந்தாலும் பார்க்காது சென்றால் குழியில் விழுவார்கள் அல்லவா? அதுபோல வெளிமுகப்பார்வை கொண்ட சுவர்க காமிகள் கருவி நூல்கள் பல கற்றாலும் பிறவிக்கடலில் அழுந்துவார்களே அன்றி முத்தியடையார். எல்லாவற்றிலும் மெய்ப்பொருளை காணும் அகமுக பார்வை உடையவர் நித்திய பிரம்மாநந்த பதவி அடைவர்.

பல சமயங்களிலே சிலர் ஒரு வாதத்தை முன் வைக்கிறாங்க.
நீதான் எல்லாம் அவன் செயல்ன்னு சொல்கிறாயே! அப்ப நான் செய்கிறது எதுவுமே நான் செய்கிறது இல்லையே! நல்லதோ, கெட்டதோ எல்லாம் அவன் செய்விக்கிறது. நான் நினைச்சாலும் எதுவும் செய்ய எனக்கு சுதந்திரம் இல்லையே! அப்ப நான் என்ன செஞ்சாலும் என் மேலே குற்றம் சொல்லக்கூடாது.
மேலோட்டமா பாத்தா நல்ல ஆர்குமெண்ட் தான்.
அப்படி இல்லை.


54.
சீவச் செயலிவை சிவச்செயலிவை எனத் தெளியும் நிமித்தம் வினவுதலுக்கு விடை:

சிறந்த நன்மையுந் தீமையு மீசனார் செய்விக்குஞ் செயலன்றோ
பிறந்த சீவர்க ளென்செய்வா ரவர்கண் மேற்பிழைசொலும் வழியேதோ
துறந்த தேசிக மூர்த்தியே யென்றிடிற் சுருதிநூற் பொருண் மார்க்கம்
மறந்த மூடர்கள் வசனிக்கும் பிராந்திகாண் மைந்தனே யதுகேளாய்

சிறந்த நன்மையும் தீமையும் ஈசனார் செய்விக்கும் செயலன்றோ? பிறந்த சீவர்கள் என் செய்வார்? அவர் கண் மேற் பிழை சொலும் வழி ஏதோ? துறந்த தேசிக மூர்த்தியே என்றிடில், சுருதி நூற் (வேதநூல்)[இன்] பொருள், மார்க்கம் (வழி) மறந்த மூடர்கள் வசனிக்கும் (சொல்லும்) பிராந்தி (மயக்கம்) காண். மைந்தனே அது கேளாய்.


2 comments:

Geetha Sambasivam said...

//எதுவும் செய்ய எனக்கு சுதந்திரம் இல்லையே! அப்ப நான் என்ன செஞ்சாலும் என் மேலே குற்றம் சொல்லக்கூடாது.
மேலோட்டமா பாத்தா நல்ல ஆர்குமெண்ட் தான்.
அப்படி இல்லை.//

காத்திருக்கேன்.

இந்தப்பதிவு புரிஞ்சுக்கவும் முடிஞ்சது. நன்னிங்கோ! :D

கபீரன்பன் said...

//நான் செய்வதற்கு நான் பொறுப்பில்லை! //

பலனைப் பற்றி குறை சொல்லாத அல்லது மனதில் எழாத வரையில் சரிதான் :)))