Pages

Friday, June 19, 2009

அகண்ட மாகர்த்தன்



23.
அகண்ட மாகர்த்தனாக சீவன் முத்தர் கர்த்தத்வம் வராதபடி பிராரர்த்த போகம் புசித்தல் 3 வகை.

தேகந்தன லனாகியகர்த் தனாகிச் சீவனின்றிப் பிரமமாய்த் தெளிந்தமுத்தன்
போகத்தை யுண்பனென்றாக் கருத்தாவாமே பூரணமாம கர்த்தனுக்குப் போகமுண்டோ
சோகத்தை யறுத்தருளுங் குருவேயிந்தத் துகளறுக்க வேண்டுமென்று சொன்னாயாகில்
மாகர்த்தன் மாபோகி மாத்தியாகி வகை மூன்றா யவரிருக்கு மகிமை கேளாய்.

தேகந்தன் அலன் (தேகம் தான் இல்லை என) ஆகி அகர்த்தனாகிச் சீவன் இன்றிப் பிரமமாய்த் தெளிந்த முத்தன் போகத்தை உண்பன் என்றால் கருத்தாவாமே (செயல் செய்பவனாகுமே) பூரணமாம் அகர்த்தனுக்குப் போகமுண்டோ? சோகத்தை அறுத்தருளும் குருவே இந்தத் துகளறுக்க (சந்தேகத்தை நீக்க) வேண்டுமென்று சொன்னாயாகில், மாகர்த்தன் மாபோகி மாத்தியாகி வகை மூன்றாய் அவர் இருக்கும் மகிமை கேளாய்.

இன்னும் சமாதானம் ஆகலை. அதெப்படி? தேகம் நானில்லை ன்னு ஆகி எதுவும் செய்யாதவன் சீவன் அல்லன் பூரணன்னு ஆன அப்புறம், எதுவும் செய்யாதவனுக்கு விஷய அனுபவம் - கர்ம பலம் அனுபவிக்கிறது - இருக்கும் ன்னு கேட்க நினைக்கிறாய்.

சீவன் முக்தன் உடம்பு சம்பந்தமான அபிமானம் இல்லாதவன். அதாவது தனக்கு ஸ்தூல சூக்கும காரண தேகங்களின் சம்பந்தம் இருக்கிறதாகவோ தான் இந்த ஜாதியை சேர்ந்தவன் ன்னோ உணர்வு இல்லாதவன்.

அவன் தொழிலற்றவன். அதாவது நான் இதை செய்யறேன் ன்னு உணர்வு இல்லாதவன். தான் சீவன் இல்லை பிரம்மம் ன்னு தெரிஞ்சு எப்பவும் பிரமத்தை சாக்ஷாத்கரிச்ச நிலையில நிக்கிறவன். அப்படிப்பட்டவன் போகங்களை அனுபவிக்கிறான்னா போக்தாவாகவும் தொழில் செய்யறான்னா கர்த்தாவாகவும் ஆயிடுவானே? பரிபூரண பிரம்மத்துக்கு பிராரப்த போகம் ஏது?

இப்படி கேக்க நினைக்கிறாய். அப்படின்னா சீவன் முத்தர் மாகர்த்தன் மாபோகி மாத்தியாகி ன்னு இருக்கிற சமாசாரம் கேளு.


1 comment:

yrskbalu said...

last 2 slogas and coming sloga area

important for who are searching in real guru.

2. pl call me balu. i am younger than you. i must respect your age.