Pages

Wednesday, March 11, 2009

ஈசனும் சீவனும்


[மாற்றங்கள் இல்லை. தொடர்ச்சிக்காக]
இனிமே சுலபம்தான். கிடு கிடுன்னு போகலாம்.

தமஸிலே கூட்டு (சமஷ்டி) தனி (வியஷ்டி) யார்?
தமஸின் சமஷ்டி விராட் புருஷன்; வியஷ்டி விஸ்வஜன்.

42.
தூலதேகத்தில் சீவேஸ்வரருக்கு அபிமான நாமாதிகள்:
தூலமே மருவுஞ்சீவன் சொல்லிய விசுவனாகும்
தூலமே மருவுமீசன் சொலும்விராட் புருடனாகும்
தூலமே யன்னகோசந் துன்னுஞ்சாக் கிரவவத்தை
தூலகற் பனையீதென்று தொகுத்தது மனதிற்கொள்வாய்

[முன்] சொல்லிய தூலமே (ஸ்தூலதேகத்தில்) மருவும் (பொருந்தும்) சீவன் விசுவனாகும். தூலமே மருவும் ஈசன் சொலும் விராட் புருடனாகும். [அன்ன வீரியத்தால் உண்டாகி அன்னத்தால் விருத்தியாவதால்] தூலமே அன்னகோசம்; துன்னுஞ் சாக்கிர அவத்தை; தூல கற்பனை (தூலப் பிரபஞ்சத்தின் அத்தியாசம்) ஈது என்று தொகுத்தது (சுருக்கமாக கூறியதை) மனதில் கொள்வாய்.

அட, அப்ப ஈசனும் சீவனும் ஒண்ணா?
இருப்பு ஒண்ணுதான். ஆனா உபாதியால வேற வேற. உபாதி? போட்டு இருக்கிற வேஷம்ன்னு சொல்லமோ என்னவோ! Role.
யார் சில விஷயங்கள் தோன்ற காரணமோ அவர் காரண உபாதி. அது ஈசன்.
யார் தோன்றினாரோ அவர் காரிய உபாதி. அது சீவன்.

43.
சீரிய வீசனார்க்குஞ் சீவர்க்கு முபாதியொன்றேல்
ஆரிய குருவேபேத மறிவதெப்படி யென்றக்கால்
காரிய வுபாதிசீவன் காரணவுபாதி யீசன்
வீரியமிகு சமட்டி வியட்டியாற் பேதமாமே

சீரிய (சிறந்த) ஈசனார்க்கும் சீவர்க்கும் உபாதியொன்றேல் (உபாதி ஒன்றாக இருக்குமானால்) ஆரிய குருவே, பேதம் அறிவது எப்படி என்றக்கால் (என கேட்பாயானால்) [ஸ்தூல சூட்சும] காரிய உபாதி [உடையவன்] சீவன்; [ஸ்தூல சூட்சும] காரண உபாதி [உடையவன்] ஈசன். வீரிய மிகு சமட்டி வியட்டியால் பேதமாமே.


2 comments:

Geetha Sambasivam said...

இது என்ன ஒரேயடியா நாலு நாள் பதிவும் போட்டாச்சு?? அப்போ நாலு நாள் லீவு எடுத்துருக்கீங்களா என்ன?? சரியாப் போச்சு போங்க!

திவாண்ணா said...

பழசுதான். தொடர்ச்சியா படிச்சுகிட்டு வரவங்க வசதிக்காக. இல்லைனா பின்னாலே போய் திருப்பி இங்கே வரணும்.
திருத்தின மீள் பதிவோட இன்னிக்கு முடிச்சு இருக்கேன்.