Pages

Wednesday, March 11, 2009

பிஜி பாய்ன்ட்ஸ்!


[மாற்றங்கள் இல்லை. தொடர்ச்சிக்காக]
அப்பாடா! இதுக்கு மேலே பிஜி பாய்ன்ட் தான். வேணான்னா விட்டுடலாம்.
5 ஸ்தூல பூதங்கள் - நாம பாக்கக்கூடிய ஆகாயம், வாயு, அக்னி, நீர், நிலம் - லேந்து 25 தத்துவங்கள் வந்தன. எப்படி? ஒவ்வொண்ணும் மத்த நாலோடேயும் சம்பந்தப்பட்டதால.
ஆகாயத்தில் ஆகாயம் ன்னு ஆரம்பிச்சு இப்படியே அஞ்சும் முடிச்சு அடுத்து வாயுவில் ஆகாயம்ன்னு ஆரம்பிச்சு.... பெர்முடேஷன் காம்பினேஷன் புரியுது இல்லையா?

50% இருக்கிற ஆகாயம். இதில உண்டானாது மோகம்.
50% இருக்கிற ஆகாயம். இதோட 12.5% வாயு கூடி உண்டானது வெட்கம்.
50% இருக்கிற ஆகாயம். இதோட 12.5% அக்னி கூடி உண்டானது பயம்.
50% இருக்கிற ஆகாயம். இதோட 12.5% நீர் கூடி உண்டானது த்வேஷம்.
50% இருக்கிற ஆகாயம். இதோட 12.5% நிலம் கூடி உண்டானது ஆசை.

இதே போல மீதி பாக்கலாமா?
வாயு + ஆகாயம் = தத்தல்
வாயு = ஓடல்
வாயு + அக்னி = இருத்தல்
வாயு + நீர் = நடத்தல்
வாயு + நிலம் = கிடத்தல்

அக்னி + ஆகாயம் = சங்கமம்
அக்னி + வாயு = ஆலஸ்யம்
அக்னி = நித்திரை
அக்னி + நீர் = தாகம்
அக்னி + நிலம் =பசி

நீர் + ஆகாயம் = சுக்கிலம்
நீர் + வாயு = ரத்தம்
நீர் + அக்னி = வியர்வை
நீர் = சிறுநீர்
நீர் + நிலம் = உமிழ்நீர்

நிலம் + ஆகாயம் = உரோமம்
நிலம் + வாயு = நரம்பு
நிலம் + அக்னி = தோல்
நிலம் + நீர் = மாமிசம்
நிலம் எலும்பு

அப்பாடா! இதெல்லாம் எங்கேயிருந்து உரை ஆசிரியர் குப்புசாமி முதலியார் பிடிச்சாரோ தெரியலை.

இப்ப அவஸ்தைகள் மூணுன்னு நமக்கு தெரியும். ஜாக்ரத், ஸ்வப்னம், சுசுப்தி.
நனவு, கனா, சுழுத்தின்னு தமிழ்ல.

இது வரை நாம படிச்சதை இதுக்கு தொடர்பு படுத்தி பாக்கலாமா?
ஸ்தூல உடம்பிலே ஜாக்ரத் இருக்கும். சூக்கும உடம்பிலே ஸ்வப்னம். காரண உடம்பிலே சுசுப்தி.

பஞ்ச கோசங்களை கொஞ்சம் ரிவைஸ் பண்ணலாம்.

அன்ன மயம் - சுக்கில/ சுரோணிதங்களால ஆன இந்த – என்ன புரியலையா? விந்து, கரு முட்டையால ஆன- தோல், ரத்தம், மாமிசம், நரம்பு, எலும்பு, மூளை, சுக்கிலம் என்கிற ஏழு தாதுக்களால ஆக்கப்பட்டு அன்னத்தால வளர்ந்து, கடைசியிலே பூமியில் அழிகிற இந்த பருப்பொருளான உடம்பே அன்ன மய கோசம்.

கர்ம இந்திரியங்களோடு கூடின ப்ராணன்களே ப்ராணமய கோசம்.
ஞான இந்திரியங்களோடு கூடின மனமே மனோ மய கோசம்.
ஞான இந்திரியங்களோடு கூடின புத்தியே விஞ்ஞான மய கோசம்.

காரண தேகமே (அஞ்ஞானம்) ஆனந்த மய கோசம்.


5 comments:

Geetha Sambasivam said...

இது கொஞ்சம் பரவாயில்லை, புரியறாப்போல் ஒரு பிரமையே வந்திருக்கு! :))))))

திவாண்ணா said...

ஓ மாயை நீங்குது! :-))

கபீரன்பன் said...

அருமையான ஆராய்ச்சி

50% நீர் + 12.5% அக்னி = வியர்வை
12.5% நீர் + 50% அக்னி = தாகம்

உடலுழைப்பு துவங்கும் போது அக்னி அம்சம் (calorie burning) குறைவாக இருப்பதால் நீர் வியர்வையாக வெளியேற்றப் படுகிறது.நேரம் செல்லச் செல்ல அக்னி அதிகமாகி நீர் குறையும் போது தாகம் எடுக்க ஆரம்பிக்கிறது. !!
பௌதிக ரீதியாக மிகச் சரி.
குப்புசாமி முதலியாருக்கும் தங்களுக்கும் மிக்க நன்றி

ஆனால் உணர்ச்சிகளின் விளக்கத்தில் ஒன்று புரியவில்லை.
50% ஆகாயம்+ 12.5 % அக்னி சேர்ந்து பயம் என்ற உணர்ச்சியாக உள்ளது. பயம் அதிகரிப்பது என்பது 12.5% 20% ஆகவோ 30% ஆகவோ கூடிப்போய் பிற உணர்ச்சிகள் மட்டுப்படுகின்றன.
இதுவும் புரிகிறது.

இப்போது தைரியம் என்கிற உணர்ச்சி எந்த காம்பினேஷனால் உருப் பெறுகிறது ?

கபீரன்பன் said...

நேற்று ஏதோ காரணமாக கலர் தியரியைப் பற்றி படிக்கும் பொழுது திடீரென்று மேற்கண்ட பின்னூட்டத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு விடை கிடைத்தது போல் தோன்றியது.

வர்ணங்களை மூன்று அடிப்படை (RYB)சிவப்பு,மஞ்சள்,நீலம் என்று வைத்துக்கொண்டு பிற வர்ணங்கள் இவற்றின் சேர்க்கையால் வருவன என்று விளக்கப்படுகிறது. உதாரணம் நீலம்+மஞ்சள் = பச்சை.

இம்மூன்று வர்ணங்களும் வெவ்வேறு விகிதங்களில் ஒன்றோடொன்று சேரும் பொழுது அளவற்ற வர்ணங்கள் காட்சியளிக்கின்றன.

அது போல ஆகாயத்தத்துவத்தோடு பிற தத்துவங்கள் வெவ்வேறு விகிதங்களில் சேரும் போது உணர்ச்சிகள் வெளிப்பாடும் வெவ்வேறாக பரிணமிக்கிறது. தைரியம் என்பது மோகம்+ஆசை +த்வேஷம் அதிகமாகி வெட்கமும் பயமும் குறைந்து போவதால் வருவதாக வைத்துக்கொள்ளலாம்.

இதை சதவீதக்கணக்கில் சொல்வதனால் (ஒப்புக்குத்தான்) ஆகாயம் 60+வாயு 0+அக்னி 0+நீர் 35 +நிலம் 5 என்று வருமோ என்னவோ! கருணை என்பது ஆ:70+வா:5+அ:0 +நீ:0 +நி:25. துக்கம்,ஏமாற்றம் போன்றவையும் இப்படியே.

நமது உடலில் இருப்பதாக சொல்லப்படும் நாடிகளுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்னவோ,as mixing centres of the different principles.

பஞ்ச தத்துவங்களால் ஆன உடலை நம் முன்னோர்கள் அவற்றை வைத்தே அறிந்து கொள்ள செய்த முயற்சி அற்புதம்.

திவாண்ணா said...

கபீரன்பரே,
//அப்பாடா! இதெல்லாம் எங்கேயிருந்து உரை ஆசிரியர் குப்புசாமி முதலியார் பிடிச்சாரோ தெரியலை.//

இப்படி எழுதி இருக்கேன் இல்லையா? இது பற்றி கொஞ்சம் மட்டும் யோசித்தது உண்டு. ஒண்ணும் புரியலை. இன்னும் அதிக கவனம் கொடுக்கலாம் போல இருக்கு. அவர் ஏதோ சாஸ்திர புத்தகத்தில் இல்லாமல் எழுதி இருக்கமாட்டார்.
விசாரித்து பார்கிறேன்.

நீங்கள் இதை விசாரிப்பது குறித்து மகிழ்ச்சி! சிந்தித்த அளவில் சரியாகத்தான் தோன்றுகிறது.
:-)

//இம்மூன்று வர்ணங்களும் வெவ்வேறு விகிதங்களில் ஒன்றோடொன்று சேரும் பொழுது அளவற்ற வர்ணங்கள் காட்சியளிக்கின்றன.//

ஆமாம். வெறும் hue saturation brightness ன்னு மூணு பாராமீட்டரிலேயே எத்தனை வண்னங்களை காட்ட முடிகிறது!