Pages

Friday, January 30, 2009

அந்தக்கரணம், ஞான இந்திரியங்கள்.



தன் மாத்திரைகளுக்கு காரணமான சத் ரஜஸ் தமஸ் முதலான 3 குணங்களும் இத் தன்மாத்திரைகள் ஐந்திலும் தொடர்ந்து கூடி நிற்கும்.
அதாவது சத்வம் ரஜஸ் தமஸ் சேர்ந்து இருந்து வித்தியாசப்படுத்தும். அதோட இல்லாம 5 தன் மாத்திரைகளும் தனியாகவும் கூட்டாகவும் இருந்து வெவ்வேறு விதமா வெளிப்படும்.
தனியா நிக்கிறதை வியக்தி ன்னும் கூட்டு போட்டு இருக்கிறதை சமஷ்டி ன்னும் சொல்வாங்க.
அதாவது வியக்தி தனி மரம் போல; சமஷ்டி தோப்பு போல.

சரியா?
சத்வ குணத்திலே 5 தன்மாத்திரைகளும் கூடி இருந்து அந்தக்கரணம் உருவாகும்.
சத்வ குணத்திலே 5 தன்மாத்திரைகளும் பிரிந்து இருந்து ஞான இந்திரியங்கள் - புலன்கள் உருவாகும்.

அந்தக்கரணம் பத்தி http://anmikam4dumbme.blogspot.com/2008/12/blog-post_14.html இலே பாத்தோம். இது ஒண்ணே ஆனாலும் செய்கிற வேலையின் தன்மை படி ஐந்தா இருக்குன்னு பாத்தோம். அதான் சமஷ்டி சமாசாரம்!

ஞான இந்திரியங்கள் அஞ்சு.
காதின் கேட்டல் ஆகாய சத்வ குணம்.
தோலின் தொடுணர்ச்சி வாயுவின் சத்வ குணம்.
கண்களோட பார்த்தல் அக்னியின் சத்வ குணம்.
நாக்கோட ருசித்தல் நீரோட சத்வ குணம்.
மூக்கின் நுகர்தல் மண்ணின் சத்வ குணம்.

இந்த அந்தக்கரணங்களும் ஞான இந்திரியங்களும் சத்வ குணத்திலேந்து வந்ததாலே ஞானத்துக்கு சாதனமா - ஞானம் அடைய உதவுகிற கருவிகளா- ஆகும்.

37.
தன் மாத்திரையின் சத்துவ குணத்தில் அந்தக்கரண ஞானேந்திரிய உற்பத்தி:
ஆதிமுக் குணமிப் பூத மடங்கலுந் தொடர்ந்து நிற்கும்
கோதில்வெண் குணத்தி லைந்து கூறுணர் கருவியாகும்
ஓதிய பின்னை யைந்து முளம்புத்தி யிரண்டா ஞான
சாதன மாமிவ் வேழுஞ் சற்குணப் பிரிவி னாலே

ஆதிமுக்குணம் (தன் மாத்திரைகளுக்கு காரணமான சத் ரஜஸ் தமஸ் முதலான 3 குணங்களும்) இப்பூத மடங்கலும் (இத் தன்மாத்திரைகள் ஐந்திலும்) தொடர்ந்து (கூடி) நிற்கும். கோதில் (குற்றமில்லாத) வெண் குணத்தில் (சத்துவத்தில்) ஐந்து கூறு உணர் கருவியாகும். (ஞானேந்திரியங்கள்). ஓதிய (சொல்லப்பட்ட) பின்னை ஐந்தும் உளம் புத்தி இரண்டாம் (மனம் புத்தி எனும் இரு பரிணாமம் உடைய அந்தக்கரணமாம்). இவ்வேழும் சற்குணப் பிரிவினாலே (சத்துவ குண அம்சமானதால்) ஞான சாதனமாம் (ஞானேந்திரியங்கள், அறி கருவிகள்).



6 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

முழுதாகப் புரிந்தது என்று சொல்ல முடியவில்லை. நான் போகவேண்டிய தூரம் அதிகம் என்பதை உணர வைக்கும் பதிவு :)

திவாண்ணா said...

கவலை வேணாம். இன்னும் சில பதிவுகள்லேதான் டெக்னிகல் சமாசாரம். அப்புறம் சுலபம்.

Geetha Sambasivam said...

இதிலே உடனே புரிஞ்சது, ஞாயிறன்று பதிவு போட்டிருக்கிறது தான், மத்தது ஒரு மூன்று முறை படிக்க வேண்டி இருக்கு. கொஞ்சம் குழப்பமாவே இருக்கு!

குமரன் (Kumaran) said...

தன்மாத்திரைகள் என்றால் என்ன என்று நினைவில் நிறுத்திக் கொண்டு பின் படித்தால் புரிந்ததைப் போல் இருக்கிறது.

முக்கியமாக மனத்தில் நின்றவை:

வியக்தி, சமஷ்டி
சத்வ குணம் + பஞ்ச தன்மாத்திரைகள் சமஷ்டியாக நிற்க = அந்தகரணம்
சதவ குணம் + பஞ்ச தன்மாத்திரைகள் வியக்தியாக தனித்தனியே நிற்க = பஞ்ச ஞானேந்திரியங்கள்

சரி தானா?

பஞ்ச கோசங்கள் நினைவில் நின்றதைப் போல் இவையும் நிற்குமா என்று பார்க்கவேண்டும்.

குமரன் (Kumaran) said...

ஐம்புலன்களும் மனமும் சேர்ந்தே ஒரு உயிரை வெளியே கிளப்புகிறது என்றும் ஐம்புலக்கயவர்கள் என்றும் படித்ததெல்லாம் நினைவில் நிற்க, இந்த இடுகையில் அவையே அந்த உயிரை உள்ளே நிலைக் கொள்ளச் செய்யும் கருவிகளாகவும் ஆகும் என்பதைப் படிக்கும் போது பிரகிருதியான அன்னையே மாயையாகவும் இருக்கிறாள்; அருள்பவளாகவும் இருக்கிறாள் என்று படித்தது நினைவிற்கு வருகிறது. அவளாலேயே சம்சாரம்; அவளாலேயே மோக்ஷம்.

திவாண்ணா said...

//முக்கியமாக மனத்தில் நின்றவை:
.....
சரி தானா? //

ஆமாம் குமரன் சரியாவே புரிஞ்சு கொண்டு இருக்கீங்க!

//பிரகிருதியான அன்னையே மாயையாகவும் இருக்கிறாள்; அருள்பவளாகவும் இருக்கிறாள் என்று படித்தது நினைவிற்கு வருகிறது. அவளாலேயே சம்சாரம்; அவளாலேயே மோக்ஷம்//

அருமையா சொன்னீங்க! அதே அதே!