Pages

Tuesday, January 27, 2009

ஈசர்கள், சீவர்கள்.




இப்படி உண்டாகிற சீவர்களுக்கு அந்த ராஜஸ குணமே ஆநந்த கோசம்; சுழுத்தி; காரண சரீரம். வித் என்பது ஞானம். அவித்தை ஞானமல்லாதது, அதாவது அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்திலேயே இருக்கிறதுதானே சீவர்களாகிய நம்மோட இயல்பு? அவித்தை கணக்கில்லாம இருக்கிறது. உண்மை ஒண்ணுதான். பொய் பலவாகவும் இருக்குமில்லையா? அது போல. இப்படி கணக்கில்லாம இருக்கறதால கணக்கில்லாத வகை சீவர்களையும் நாம் பாக்கலாம்.

அடுத்து தாமசம்.
அதுக்கு போகும் முன்னே இந்த ஈஸ்வரனும் சீவர்களும் என்ன ஆகிறார்கள்ன்னு பாக்கலாம்.

இனிப்பிலேயே சர்க்கரை இனிப்பு, மாம்பழத்தின் இனிப்பு, மாவு பண்டங்களோட அசட்டு இனிப்பு ன்னு பலவிதமா இருக்கே! முதலாவது திகட்டிடும். இரண்டாவது நிறையவே சாப்பிடலாம். திகட்டாது. மூணாவது இனிப்பிலே சேத்தியாங்கிற அளவு கம்மியாவே இனிப்பு.

அது போல இந்த சத்துவத்திலேயே இன்னும் அதிக பிரிவா சத்துவம் ராஜசம் தாமசம் ன்னு பிரியும்.
முன்னேயே ஒரு வாக்கியம் பாத்தோம். முக்குணங்கள் இருந்தாலும் ஒவ்வொரு சமயம் ஒவ்வொண்ணு தலைதூக்கும்.
ஈஸ்வரனா இருக்கிற பிரம்மம் ஒண்ணேதான். இருந்தாலும் ஈஸ்வரன் நேரம் செயல்களுக்கு தகுந்தாப்போலே பலதா இருப்பான்.

ராஜசம் அதிகமாகும் போது பிரம்மனா இருந்து படைக்கிறான்.
சத்துவம் அதிகமாகும் போது விஷ்ணுவா இருந்து காக்கும் தொழில் செய்யறான்.
தாமசம் அதிகமாகும் போது ருத்திரனா இருந்து அழிக்கும் தொழில் செய்கிறான்.
[சைவர்கள் சிவனுக்கே 5 தொழில்ன்னு சொல்லி இதை எல்லாமே சேத்துடுவாங்க. அவங்க சிவன் என்கிற பேரிலே பரம்பொருளைத்தான் சொல்கிறாங்க.]

சீவர்களிலேயும் இதே போல பிரிவுகளை பாக்கலாம்.

ராஜசம் அதிகமாகும் போது சீவர்கள் எப்பவும் வேலை செய்கிறவங்களா இருப்பாங்க. உலகமே இவங்களாலதான் இயங்குது!
சத்துவம் அதிகமாகும் போது ஞானத்திலே நாட்டம் இருக்கிறவங்களா இருப்பாங்க. ஆன்மீக பதிவுகள் எழுதுவாங்க; ஆன்மீகம் பார் டம்மீஸ் படிப்பாங்க. :-)
தாமசம் அதிகமாகும் போது சோம்பி திரிஞ்சு மயக்கத்தோட காலம் போக்கறவங்களா இருப்பாங்க.
முன்னம் சொன்னது போல எல்லாருக்குமே ஒரு குணம் அதிகமானாலும் மற்ற 2 குணங்களும் கொஞ்சம் கொஞ்சமாவது இருக்கத்தான் செய்யும்.

{ஈச்வரன் செய்யும் காரியங்களை ஒட்டி பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்றாக பிரிந்து தகுந்த காரியங்களை செய்கிறான். சீவர்கள் செய்யும் காரியங்களை ஒட்டி வேலை செய்கிறவர்கள், ஞான நாட்டம் உள்ளவர்கள், சோம்பேறிகள் என்று 3 ஆக உள்ளார்கள்.}

34
அழுக்கொடு பற்றுஞ்சீவர்க் கதுவேயா நந்தகோசம்
சுழுத்திகா  ரணசரீரஞ் சொன்னதிம் மட்டுமோக
முழுக்குணத் திரண்டால் வந்த மூலவாரோபஞ் சொன்னோம்
வழுத்துசூக் குமவாரோப வழியுநீ  மொழியக்கேளாய்

அழுக்கொடு (அவித்தையுடன்) பற்றும் (அவித்தையில் பொருந்தும்) சீவர்க்கு அதுவே (அந்த அவித்தையே) ஆநந்த கோசம்; சுழுத்தி; காரண சரீரம்.  சொன்னது இம் மட்டும் (இவ்வளவும்) மோக (மயக்கமாக தோன்றிய பிரக்கிருதியின்) முழுக்குணத்து இரண்டால் (சத்துவ, ரஜோ குணங்கள்) வந்த மூல ஆரோபம் (காரண அத்தியாசம்) சொன்னோம். வழுத்து (கூறாத) சூக்கும ஆரோப வழியும் மொழிய நீ கேளாய்.

PG:


{ஸ்படிகம் அடுத்த வண்ணம் ஆவது போல அவித்தை. அவித்யா காரியங்களில் பொருந்துதலால் அது சீவனின் இயல்பும் ஆனதால் "அழுக்கொடுபற்றும்”. சுழுத்தி சுகத்தையும் ஜாக்ரத் ஸ்வப்ன அவஸ்தைகளில் பிரியம், மோதம், பிரமோதம் முதலான சகத்தை  அனுபவிப்பதால் "ஆனந்த மய கோசம்”. ஜக்ரத் ஸ்வப்ன அவத்தை  அடங்கியிருத்தலால் "சுழுத்தி". சீவன் தோன்றினதற்கும் ஸ்தூல சூட்சும சரீரம் உண்டாவதற்கும் மூலம் ஆகையால் "காரண சரீரம்".}

தாத்பர்யம்: சித்தின் நிழல்பொருந்திய சத்துவ ராசத குணம் மாயை, அவித்தை  எனப்படும். அந்த பிரதி பிம்பங்களின் பெயர்கள் முறையே  ஈசன், சீவன். அவர்களுக்கு அந்த மாயை, அவித்தையே காரண சரீரம்; சுழுத்தி அவத்தை; ஆநந்த மய கோசம். அந்த காரண சரீரங்களை  அபிமானித்ததால் அவற்றின் பெயர் அந்தர்யாமி, பிராஞ்ஞன். இவர்களுக்கு முறையே சிருட்டி முதலான, ஜாக்ரத் முதலான தொழில்களில் பற்று அற்று இருப்பதும், வைப்பதும் இயல்பு. இவை  அனைத்தும் காரண அத்தியாசம் எனப்படும்.


5 comments:

Kavinaya said...

//உண்மை ஒண்ணுதான். பொய் பலவாகவும் இருக்குமில்லையா? அது போல. இப்படி கணக்கில்லாம இருக்கறதால கணக்கில்லாத வகை சீவர்களையும் நாம் பாக்கலாம்//

:) இது நல்லாருக்கு.

//சத்துவம் அதிகமாகும் போது ஞானத்திலே நாட்டம் இருக்கிறவங்களா இருப்பாங்க. ஆன்மீக பதிவுகள் எழுதுவாங்க; ஆன்மீகம் பார் டம்மீஸ் படிப்பாங்க. :-)//

ஹா ஹா :)

பட்டாம்பூச்சி விருதுக்கு வாழ்த்துகள் :)

திவாண்ணா said...

//ஹா ஹா :)//
;-))

// பட்டாம்பூச்சி விருதுக்கு வாழ்த்துகள் :)//

அட பட்டாம்பூச்சி உங்களுக்கு தெரியுமா? யார் ஆரம்பிச்சது? கிருத்திகா அக்கா பதிவ பாத்தா அதுக்கு முன் பதிவு சுட்டிதான் இருக்கு! அப்படியே பின்னால பிடிச்சுகிட்டே போகணுமா? :-)
பட்டாம் பூச்சிய பிடிக்கிறது கஷ்டம்தான்!

Kavinaya said...

//பட்டாம்பூச்சி உங்களுக்கு தெரியுமா?//

பட்டாம்பூச்சியை யாருக்குதான் தெரியாது? :)

ஆனா விருது வேற விஷயம் :) ரெண்டு மூணு பேரு வாங்கறதை பாத்திருக்கேன். அம்புட்டுதான் :)

மெளலி (மதுரையம்பதி) said...

இந்த பதிவுனை ஒட்டிய பதிவு நாளை பஞ்ச கிருத்ய பராயணாவாக, இட இருக்கிறேன். நீங்கள் இங்கே சொல்லியிருக்கும் 5 தொழிகளும் அம்பிகை செய்வதாக...

திவாண்ணா said...

ஆஹா மௌலி! வாழ்க!
தூண்டின கவிஅக்காவுக்கு சமர்ப்பிச்சுடலாம்!