Pages

Monday, January 5, 2009

மேலும் பக்தி



பக்தி என்பது என்ன? அன்புதான். அம்மாவுக்கு குழந்தையிடம் இருப்பது வாத்ஸல்யம். புருஷனிடம் இருப்பது காதல். இப்படி பலவிதமா இருக்கிற அன்பிலே பகவானிடம் உள்ள அன்பே பக்தி. கண்ணுக்கு அழகாக இருக்கிற கடவுள் விக்கிரஹம் அதன் மேல அன்பை காட்ட உதவுது. அரங்கன் கண்ணை கண்டு மயங்கினவர் உண்டல்லவா? (பூரி ஜகன்நாத் போய் அங்கே தரிசனம் செய்த பிறகு இந்த வடக்கத்தியர்களுக்குத்தான் உண்மையிலேயே நல்ல பக்தி என்று நினைத்துக்கொண்டேன். பொதுவா வட இந்திய மூர்த்திகளுக்கு அழகான உருவம் அமைவது துர்லபமே. அந்த சிற்பக்கலை எல்லாம் தென் இந்தியாவில்தான். அல்லது முகலாய படையெடுப்பில் எல்லாம் போய்விட்டதோ என்னவோ? இப்போது இல்லை. ஆனால் அவர்களுக்கு பக்தியில் ஒண்ணும் குறைச்சலில்லை.)

அதே போல அவனுக்கு சாத்துகிற சந்தனத்தின் வாசனை - இப்படி புலன்களுக்கு எல்லாம் இடம் கொடுத்து அவற்றை பகவான் பால் திருப்பி விடுகிறதே இந்த பக்திதான். இது கொஞ்சம் சுலபமா முடிவதில ஆச்சரியம் இல்லை.

ஆனா இன்னும் பண்பட்ட பிறகு ஒரு குணமும் இல்லாத வஸ்து மேலே அன்பு வைன்னா... எதுகிட்டே நல்ல வடிவம், அழகு, குணம், லீலை எல்லாம் இருக்கோ அந்த அதுகிட்டே சுபாவமா ஒரு அன்பு உருவாக முடியும். இதை சாதிக்க முடியலைன்னா எல்லா சாதனையும் அகங்காரத்திலே போய் முட்டி நின்னு போயிடும். நான் அல்லவோ புலன்களை கட்டிப்போட்டேன்; மனசை கட்டிப்போட்டேன்; சமநிலை பெற்றேன்! இதனால மோக்ஷ நிலை தள்ளிப்போகும்.

ஒரே பரமாத்மாதான் இத்தனை உருவங்களோட வந்திருக்கு. பலதா காட்டறதாலதான் இந்த உலகம் யூனிவெர்ஸ்- பிரபஞ்சம்- எல்லாம் மாய வினோதமா காட்சி கொடுக்குது. இந்த விஷயங்கள் அத்தனைகிட்டேயும் காட்டுகிற அன்பு பகவான்கிட்ட காட்டுகிற அன்புதான். பொதுவா ஆசைபட்டு மத்ததுகிட்டே இருந்து ஒண்ணை வாங்கிக்கொண்டு லாபம் அடைவோம். இங்கேயோ நம்மை மத்ததுகிட்டே கொடுத்து லாபம் அடைகிறோம். அது அன்பு. இதுவே அன்புக்கும் ஆசைக்கும் வேறுபாடு. ஆசையால வாங்கி லாபம். அன்பால கொடுத்து லாபம். மத்ததுகிட்டே நமக்கு கொடுக்க ஒண்ணும் இல்லைன்னா அது மேலே பற்று உண்டாகாது. தண்ணி கொடுக்காத கிணறு மேலே பற்று இல்லை. தூர்த்துடுவோம். பழமோ நிழலோ தராத மரம் மேலே பற்று இல்லை. வெட்டிவிடுவோம். இதெல்லாம் இருக்கும்போது அவற்றின் மேலே பற்று இருக்கும். அது ஆசை; அன்புன்னு நாம தப்பா நினைத்து கொண்டு இருக்கலாம்.

 அன்பு உண்மையா இருந்தா ஒரு பிரதிபலனும் இல்லாம அதன் மேலே பற்று இருக்கணும். அதுக்கு கொடுக்கணும். எல்லாம் இருக்கிற பகவானுக்கு நாம் என்னதான் கொடுக்கமுடியும்? நம்மையேதான் கொடுக்கணும். இப்படி இருக்கிற நிலையிலே அந்தகரணம் உசந்த நிலையிலே இருக்கும். மனசாவோ புத்தியாவோ இருக்காது. இப்படி அன்பு சுரக்கிற அந்தக்கரணத்தை ஹ்ருதயம் ன்னு சொல்கிறதும் உண்டு.

சாதனையால மனசும் புத்தியும் இயங்காம போயாச்சுன்னா இந்த ஹ்ருதயமே அந்தக்கரணத்தோட நிரந்தர நிலையா போயிடும்.

இந்த ஹ்ருதயம் மனிதனோட உடல்ல இருக்கறது இல்லை. ஸுஷும்னா நாடில இருக்கிற அநாஹத சக்கரமும் இல்லை. இது உண்மையாவே ஆத்மாவுடைய இடம்.

என்ன குழப்பம்? ஆத்மா எல்லா இடத்திலேயும் பரவி இருக்கிறது இல்லையோ?

ஆமாம். அத்வைத பாவனை வந்தாச்சுன்னா அப்படித்தான். ஆனா நாம் இருக்கிறதோ த்வைத பாவனைதான். அதாவது நாம் வேற: இந்த உலகம் வெவ்வேற; கடவுள் வேற; இப்படித்தான் சாதாரணமா இருக்கோம். எல்லாத்தையும் ஒண்ணா பாக்க இன்னும் தெரிஞ்சு கொள்ளலே! இந்த நிலையில இருந்துகிட்டுதான் அத்வைத பாவனையை கொண்டு வர முயற்சி பண்ணுவோம். அப்போ வெளியே இருந்து உள்ளே பார்வையை இழுத்து நிலை நாட்ட ஏதோ ஒரு புள்ளி வேணுமே? அதனால்தான் உருவம், குணம்ன்னு கற்பனை இல்லாவிட்டாலும் பரமாத்மாவுக்கு ஒரு இடத்தை மனிதனோட உடம்பிலே கொடுத்து இருக்கு!


5 comments:

ஜீவி said...

//ஒரே பரமாத்மாதான் இத்தனை உருவங்களோட வந்திருக்கு. பலதா காட்டறதாலதான் இந்த உலகம் யூனிவெர்ஸ்- பிரபஞ்சம்- எல்லாம் மாய வினோதமா காட்சி கொடுக்குது. இந்த விஷயங்கள் அத்தனைகிட்டேயும் காட்டுகிற அன்பு பகவான்கிட்ட காட்டுகிற அன்புதான். பொதுவா ஆசைபட்டு மத்ததுகிட்டே இருந்து ஒண்ணை வாங்கிக்கொண்டு லாபம் அடைவோம். இங்கேயோ நம்மை மத்ததுகிட்டே கொடுத்து லாபம் அடைகிறோம். அது அன்பு. இதுவே அன்புக்கும் ஆசைக்கும் வேறுபாடு. ஆசையால வாங்கி லாபம். அன்பால கொடுத்து லாபம்.//

ரொம்ப அழகாச் சொல்லியிருக்கீங்க..
தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேனய்யா..

Geetha Sambasivam said...

வந்தாச்சு, அரியர்ஸ் எல்லாமும் படிச்சாச்சு!

திவாண்ணா said...

@ஜீவி
நல்வரவு ஜீவி! பாராட்டுக்கு நன்றி!

@மௌலி
மார்க்ட் ப்ரெசென்ட்

@கீ அக்கா
அட அரியர்ஸ் எல்லாமே க்ளியர் பண்ணியாச்சா? நல்லது.

Kavinaya said...

//அன்பு உண்மையா இருந்தா ஒரு பிரதிபலனும் இல்லாம அதன் மேலே பற்று இருக்கணும்.//

ஆமாம். அழகா சொன்னீங்க.

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"

என்ற குறளும் நினைவு வந்தது. நன்றி.