Pages

Thursday, December 25, 2008

சமாதானம்



அடுத்து நாம பாக்கப்போறது சமாதானம். இதுவும் ஏறக்குறைய சிரத்தை போலத்தான். அதாவது அசிரத்தையாலயும் சந்தேகத்தாலயும் வருகிறதை எதிர்த்து போராடி ஜெயிக்கிறது. அவநம்பிக்கை இருக்கிற வரை சிரத்தை. அப்புறம் சமாதானம்.
சந்தேகம் தெளிஞ்சு போச்சுன்னா சமாதானம் ஆகிடுவோம்!

ஒத்தரோட சித்தத்தை முழுக்க முழுக்க ஒரே இடத்தில கொண்டு சேத்து வைக்கிறது சமாதானம். சம ஆதானம். சமிதாதானம் ன்னா சமித்தை அக்னியில் கொண்டு சேத்து வைக்கிறது. அது போல சமத்தில சித்தத்தை கொண்டு வைக்கிறது சமாதானம். சமம் - எதிலேயும் ஏற்ற இறக்கம் இல்லாத நிலை. இப்படியும் சொல்லலாம்.

ஆனா இங்கே சொல்ல வருவது பிரம்மத்தில் கொண்டு சித்தத்தை நிலையா வைக்கிறதுதான்.

ஸம்யக் ஆஸ்தாபனம் புத்தே: சுத்தே ப்ரம்ஹணி ஸர்வதா| தத் ஸமாதானம் இத்யுக்தம்
வி.சூ 26/27

ஸம்யக் - சரியாக, பூர்ணமாக. ஆஸ்தாபனம்= நிலை நாட்டுவது. ஸர்வதா -எப்போதும்
சுத்தமான ப்ரம்மத்தில் பூர்ணமாகவும் சரியாகவும் எக்காலமும் நிலைநாட்டுவதாக எது உண்டோ அதுவே ஸமாதானம் என்று சொல்லப்படுகிறது.

ப்ரம்மம் ஒண்ணுதான் மாயை கலப்பு இல்லாதது. எல்லா லோகங்களுக்கு அதுவே ஆதாரம். அது ஒரு சீவனுக்கு ஆதாரமான போது அதை ஆத்மா அல்லது ஜீவாத்மா என்கிறோம். ஈஸ்வரன் கூட மாயையுடன் கூடியவன்தான். மாயையான லோகத்தை நிர்வாகம் பண்ணுகிற அவனுக்கும் மாயை சம்பந்தம் இருக்கு.

அதனாலதான் சுத்த ப்ரம்மம் ன்னு இங்கே சொன்னது. இந்த குணமில்லாத ப்ரம்மத்தில சித்தத்தை நிலை வைக்கிறது சமாதானம். சாதனா ஆரம்பத்திலே அவரவர் சௌகரியத்துக்கு தகுந்தபடி ஈஸ்வரனை மூர்த்தியாக – உருவத்தோட கூடி- உபாசனை பண்ணோம்தான். அதுல சித்தம் நிற்க பழகினோம்தான். ஆனா அது முதல் கட்டம். இப்ப செய்ய வேண்டியது நிர்குண ப்ரமத்தில சித்தம் நிலைக்க வைக்கிறது.

ஆனா இவ்வளோ நாள் உருவத்தோட பூஜை எல்லாம் பண்ண நினைப்பு போயிடுமா? போகாது. இருந்தாலும் மாயையிலிருந்து ஞானத்துக்கு போக அறிவை கொடுத்த அனுகிரஹம் பண்ணற சொரூபம் அதுன்னு நினைச்சு அவனே நிர்குணத்தில சேக்கிற வழியை காட்டறானே, ஆதனால் இன்னும் அவனோட நாம ரூபத்த பிடிச்சுகிட்டு தொங்கக்கூடாதுன்னு தெளிவடைஞ்சு ஆத்ம தத்துவத்தில சித்தத்தை திருப்பணும்.

நாம் சித்தம், சித்தம்ன்னு பேச்றோம். ஆனா சங்கரர் புத்தின்னு இல்லே சொல்கிறார்? அது வேற நிலைதானே ஒழிய வேற வஸ்து இல்லையே. முன்னேயே பாத்துட்டோம், இல்லை? அலையாம இருக்கணும்ன்னு புத்திங்கிறார். ஸ்திரமா இருக்கிறது அதுதானே? வேற இடத்திலே அவரே சித்தம் என்கிறார். (1)

இங்கே புத்திதான் வேலை செய்யணும். உணர்ச்சியால இழுபடாம சரியா விசாரிச்சு உண்மை பொய் எல்லாத்தையும் உள்ளப்படி பாக்கிற புத்தியை அதோட வேலைலேந்து விடுவிச்சு ப்ரம்மத்து பக்கம் திருப்பினாதான் சமாதானம் வரும்.

1. சித்தைகாக்ரியம் து ஸல்லக்ஷ்யே ஸமாதனமிது ஸ்ம்ருதம் - அபரோக்ஷ அனுபூதி.

4 comments:

Geetha Sambasivam said...

//ஆனா இவ்வளோ நாள் உருவத்தோட பூஜை எல்லாம் பண்ண நினைப்பு போயிடுமா? போகாது.//

பிள்ளையாரை எப்படி விடறது? அப்புறம் அவருக்கு ரொம்ப வருத்தமாயிடும்! எனக்கும்! :(((((((( அவரையே பிரம்மம்னு நினைச்சுக்கிறேன்.

திவாண்ணா said...

//பிள்ளையாரை எப்படி விடறது? அப்புறம் அவருக்கு ரொம்ப வருத்தமாயிடும்! எனக்கும்! :(((((((( அவரையே பிரம்மம்னு நினைச்சுக்கிறேன்.//

தாராளமா!

Kavinaya said...

//சாதனா ஆரம்பத்திலே அவரவர் சௌகரியத்துக்கு தகுந்தபடி ஈஸ்வரனை மூர்த்தியாக – உருவத்தோட கூடி- //

நான் இப்பதான் இங்கேயே (ஆரம்பத்துல) வந்திருக்கேன்... :(

திவாண்ணா said...

சாதனை செய்யணும்ன்னு தோணுகிறதே பெரிய விஷயம். ஆமா அதெப்படி நான் எழுதற விஷயத்தை கரெக்ட்டா ஒரு பதிவு முன்னால கேக்கறீங்க? நேத்துதான் ஷெடூல் பண்ணேன். அடுத்த பதிவுல பாருங்க.
amazing!:-))