Pages

Friday, December 12, 2008

பரிட்சை விடைத்தாள்- ௫



ஒரே ஆணி. பரிட்சை எழுத வரலைன்னு சொன்ன கவி அக்கா நேரம் கண்டு பிடிச்சு பரிட்சை எழுதிட்டாங்க. சரியாவே பாய்ண்ட் எல்லாம் பிடிச்சு இருக்காங்க பாருங்க. கடேசில எனக்கு வேலையும் கொடுத்து இருக்காங்க! நாளைக்கு போட வேண்டியதை இப்பவே போடறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


கர்மயோகம் என்பது பற்றில்லாத வாழ்க்கைக்கும் ஞானத்திற்கும் வழி காட்டக் கூடியது. மனிதனாகப் பிறந்துட்டு எதுவுமே செய்யாம சும்மா இருக்க முடியுமா? யோகிகள் கூடஒரு வேளையாவது சாப்பிட வேண்டியிருக்கு. சாதனைகள் செய்ய வேண்டியிருக்கு. இறைவன் கூட கர்மவிதிகளுக்குட்பட்டு காரியங்கள் செய்கிறான். அப்படிஇருக்கும்போது உலகவாழ்வில் ஈடுபட்டவங்களுக்கு, எவ்வளவு கடமைகள், எவ்வளவுவேலைகள்?

கர்மயோகத்துடைய குறிக்கோள் என்ன? ஞான யோகத்துக்கு வழி காட்டுவது. அங்கே போறதுக்கு பற்றில்லாத வாழ்க்கை அவசியம். அந்த பற்று எப்படி விடும்?
விருப்பு வெறுப்பில்லாம நம்ம கர்மாக்களைச் செய்யற போது பற்று விடும். ஆனால்இல்லறத்தில் ஈடு பட்ட எல்லோருமே ஏதோவொரு விருப்பத்திற்காகத்தான் காரியங்கள்செய்யறோம். அப்படி இருக்கும்போது பற்றில்லாம செய்யறது எப்படி? கண்ணன்சொல்கிறான், செயல்களைச் செய்யும்போது அவற்றை உன் விருப்பப்படி செய்துக்கோ. ஆனால் அதனால் ஏற்படும் பலன்களை என்கிட்ட விட்டுருன்னு.

நம்முடைய புலன்களே நமக்கு நண்பர்களும், எதிரிகளும் அப்படிங்கிறதை உணரணும். அவைகளை நம்ம முதலாளியாகி விடாம பார்த்துக்கணும். நம்ம விருப்பு, வெறுப்புகள்புலன்களால ஏற்படுது; அதற்கேற்றாற்போல செயல்களைச் செய்ய நம்முடையமுக்குணங்கள் நம்மைத் தூண்டி விடுது. அதனால, அப்படிச் செய்யும்போது பாவபுண்ணியங்களைச் சேர்ப்பதைத் தவிர்க்க முடியாது. அப்படிச் சேர்ந்துகிட்டே இருந்தாநம்ம கதி? நம்ம கணக்கு பூஜ்யத்துக்கு வர்ற வரை பிறவிகள் எடுத்து உழன்றுகொண்டே இருக்க வேண்டியதுதான்.

அதற்கும் நம்ம கண்ணன் வழி சொல்றான் கேளுங்கநாம செய்யற செயல்களின்பலன்களை இறைவனுக்கே அர்ப்பணம் செய்தால், பாவ புண்ணியக் கணக்குஅவனுக்கு போயிரும்! நமக்கு ஒண்ணும் சேராது. சமபுத்தியும் மன அமைதியும்தான்நமக்குக் கிடைக்கும். அதை நினைச்சாலே எத்தனை ஆனந்தமா இருக்கு. ரொம்பசுலபமாவும் தெரியுது. ஆனா நடைமுறையில ரொம்ப கஷ்டம். முடிஞ்ச வரை முயன்றுகொண்டே இருக்க வேண்டியதுதான்.

இதுல ஒரே ஒரு (முக்கியமான) கேள்வி, நமக்கு விதிக்கப்பட்ட கர்மாக்கள் என்னன்னுஎப்படித் தெரிஞ்சிக்கிறது? அதுக்கு திவா தனிப் பதிவு போடறதாச் சொல்லியிருக்கார்

எளிமையான உதாரணங்களுடன் கண்ணன் காட்டிய வழியை அருமையாக விளக்கியதிவா அவர்களுக்கு நன்றிகள் பல.

--கவிநயா


9 comments:

ambi said...

பூவுலகில் போட்டி, பரீட்சையே இருக்க கூடாதுன்னு பகவத் கீதையில கண்ணன் சொல்லி இருக்கார்.

அதுனால் எதுக்கு பரீட்சை எல்லாம்?

ஹிஹி, சமாதானமா போய்டுவோமே. :))

திவாண்ணா said...

அதானே!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

Kavinaya said...

//சரியாவே பாய்ண்ட் எல்லாம் பிடிச்சு இருக்காங்க பாருங்க.//

அப்படின்னா நானும் பாஸ், நீங்களும் பாஸ்னு வெச்சுக்கலாமா? :)

திவாண்ணா said...

யெஸ்! எல்லாரும் பாஸ் பாஸ்
:-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

யக்கா
கலக்கல்...
ஆனா இப்போ டேஞ்சரான கேள்வி! உங்களுக்கு இல்லை! நம்ம மார்க்கை எல்லாம் தன் மார்க்கா போட்டுக் கொள்ளும் இந்த திவா வாத்தியாருக்கு! :)

//நாம செய்யற செயல்களின்பலன்களை இறைவனுக்கே அர்ப்பணம் செய்தால், பாவ புண்ணியக் கணக்குஅவனுக்கு போயிரும்! நமக்கு ஒண்ணும் சேராது//

புண்ணிய பலன்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்றா மாதிரி, பாவம் பண்ணிட்டு, அதையும் இறைவனுக்கே அர்ப்பணம் பண்ணிடனுமா?

எப்படிப் பண்ணனும் சொன்னீங்கன்னா, அம்பி மாதிரி ஆளுங்களுக்கு வசதியாப் போவும்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதுனால் எதுக்கு பரீட்சை எல்லாம்?
ஹிஹி, சமாதானமா போய்டுவோமே. :))//

அம்பி அலியாஸ் அர்ஜூனா!
பரீட்சையும் கர்ம யோகத்துள் ஒன்று! அதை நீ எழுதியே ஆகணும்!
ஆனா அதன் பலனைத் திவா சாருக்கு அர்ப்பணித்து விடு! அதான் இந்தத் தொடர் பதிவின் தாத்பர்யம்! :)

திவாண்ணா said...

//புண்ணிய பலன்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்றா மாதிரி, பாவம் பண்ணிட்டு, அதையும் இறைவனுக்கே அர்ப்பணம் பண்ணிடனுமா?//

அர்ப்பண மனப்பக்குவம் வந்த பிறகும் உங்களால பாவம் செய்ய முடியுமானால், செஞ்சாலும் அதை பகவானுக்கு கொடுக்க முடியுமானால் நிச்சயம் கொடுக்கலாம். அதை அவன் மனமுவந்து ஏத்துப்பான். இதில என்ன சந்தேகம்? போற்றுவார் போற்றலும்.... ன்னு சொன்ன மாதிரி.
:-))

// எப்படிப் பண்ணனும் சொன்னீங்கன்னா, அம்பி மாதிரி ஆளுங்களுக்கு வசதியாப் போவும்! :))//
ஏன் உங்களுக்கு வசதி அதிகமா இருக்கோ? :-))

திவாண்ணா said...

//ஆனா அதன் பலனைத் திவா சாருக்கு அர்ப்பணித்து விடு! அதான் இந்தத் தொடர் பதிவின் தாத்பர்யம்! :)//

நாராயணா! பலனை கண்ணபிரானுக்கே அர்ப்பணி ண்ணு எவ்வளோ தரம் சொல்லறது! அப்பவும் புரிஞ்சுக்கலையா?
:-))))))))))))))))

Kavinaya said...

நன்றி கண்ணா :)