Pages

Monday, December 1, 2008

நெரூர் - 8



ம்ம்ம்ம்... மக்களுக்கு ஒரு திடீர் அதிர்ச்சி கொடுக்கணும்னு இந்த நெரூர் அப்டேட். புதுசா ஒண்ணும் எழுதலை. சில செய்திகள். சில படங்கள்.
நேரா ஆல்பத்தையும் பாக்கலாம்.
http://picasaweb.google.co.in/agnihot3/Nerur#

From nerur

காவேரில நான் போனப்ப இன்னும் தண்ணி நிறையவே ஓடிகிட்டு இருந்தது. அதுக்கு போற வழில ஒரு சுற்றுலாத்துறை வளாகம் இருக்கு. இதைப்பத்தி முன்னே எழுதலைன்னு நினைக்கிறேன். கொஞ்சம் இட வசதி. குழந்தைகள் விளையாட இடம். வேற ஒண்ணும் பெரிசா இல்லை. இங்கே குழந்தைகள் விளையாடிட்டு காவிரிலே குளிச்சுட்டு வரத்துக்குள்ளே நீங்க அதிஷ்டானத்தில தியானத்தை முடிச்சுக்கலாம். பசங்களுக்கு அது கஷ்டமா இருக்கும் இல்லையா? இருந்தாலும் கொஞ்ச நேரம் தியானம் செய்ய பழக்கலாம்.

From nerur

மனசு சாதாரணமா நிலை நிக்காது. ஏதாவது எண்ணம் ஓடிகிட்டே இருக்கணும். இந்த சித்தத்தை நிறுத்துவது இங்கே செய்ய முடியுது. எண்ணங்கள் ஏதும் இல்லாம ஒலிகளை கேட்டு அதுக்கு முக்கியத்துவம் தராம உடனே மறந்து.... வித்தியாசமான அனுபவம்!

From nerur

புதுசா கட்டின கோவில் கோபுரத்திலே தன்வந்திரி! அவர் எங்க இங்கே வந்தார்ன்னு புரியலை!

From nerur
பச்சை பசேல் சூழ்நிலை!

From nerur
கோவில் வளாகத்திலே ஒரு பைரவர். இந்த பைரவர் கொஞ்ச நாளாக அதிஷ்டானத்து வாசலில் குடியிருக்கிறார். யாரும் குடித்துவிட்டு வந்தாலோ, கைலி கட்டிக்கொண்டு வந்தாலோ விரட்டிவிடுவாராம்! மற்றபடி யாரும் தொந்திரவு தர மாட்டார். வளாகத்தில் இருந்தாலும் அங்கே அசுத்தப்படுத்த மாட்டார். கோவிலுக்குள் போக மாட்டார். தயிர் சாதம் மட்டும் சாப்பிடுவார்!

From nerur

இதுதான் பிரம்மேந்திரர் யந்திரம் எழுதி பிரதிஷ்டை செய்த தான் தோன்றி மலை கோவில். பெருமாள் செம உசரம்! வளந்துகிட்டே போறார்ன்னு ஆணி அடிச்சு வெச்சு இருக்காங்களாம். போன நாள் சனிக்கிழமை. கூட்டம் தாளலை!


7 comments:

Kavinaya said...

எனக்கொண்ணும் அதிர்ச்சியாவே இல்லயே :)

//இந்த சித்தத்தை நிறுத்துவது இங்கே செய்ய முடியுது.//

அப்படியா. படமெல்லாம் பார்த்தா போகணும்னு எண்ணம்(ஆசை?) வருது... ம்... பார்க்கலாம். படங்களுக்கு நன்றி.

Geetha Sambasivam said...

காலை வேளையில் நல்ல தரிசனம் நன்றி

திவாண்ணா said...

// எனக்கொண்ணும் அதிர்ச்சியாவே இல்லயே :)//
ம்ம்ம்ம் வித்தியாசமான நபர் போல இருக்கு! ;)

// அப்படியா. படமெல்லாம் பார்த்தா போகணும்னு எண்ணம்(ஆசை?) வருது... ம்... பார்க்கலாம். படங்களுக்கு நன்றி.//
என்னிக்காவது ஒரு நாள் நிச்சயம் போவ்விங்கன்னு தோணுது!

திவாண்ணா said...

//காலை வேளையில் நல்ல தரிசனம் நன்றி//
ஆனைக்குட்டி தரிசனம் நல்லாவே இருக்கு! தீனி போடறீங்களா இல்லையா? இன்னும் வளரவே இல்லையே!

Geetha Sambasivam said...

//ஆனைக்குட்டி தரிசனம் நல்லாவே இருக்கு! தீனி போடறீங்களா இல்லையா? இன்னும் வளரவே இல்லையே!//

ஹிஹிஹி, நானே இன்னும் வளரலை,:))))))) ஆனைக்குட்டி குட்டியாத் தான் இருக்கும். அதான் எனக்குப் பிடிக்கும்! :P :P:P:P

துளசி கோபால் said...

படங்கள் மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியைத் தந்தன.
அதிலும் நம்ம 'பைரவர்' சூப்பர்!!!!

திவாண்ணா said...

வாங்க துளசி அக்கா! நெனச்சேன் பிடிக்கும்னு!
டீச்சர்ன்னா பரிட்சை எழுதக்கூடாதா?
:-))