Pages

Friday, December 5, 2008

பரிட்சை விடைத்தாள்-2



கீதா அக்கா முந்திகிட்டு முதல் விடைத்தாளை அனுப்பினாங்களா! இப்ப ஜீவா ரெண்டாவது. கீதா அக்கா நான் எழுதற ஞான வழிக்கு முன்னுரை போல எழுதி இருந்தாங்க. ஜீவா டு தெ பாய்ன்ட் கர்ம யோகத்தில அவரோட புரிதலை எழுதறாரு. போனசா ரெண்டு வெண்பா வேற!என்சாய்!

~~~~~~~~~~~~~~~~~~~~
கண்ணன் என்னதான் சொல்லறாரு கர்ம யோகம் என்று?
ஏதோ நமக்குப் புரிந்தது இது:

செயலா, துறவா? செயல்களைத் துறந்து, தியானித்து,
சச்சிதானந்த சொரூபத்தினைக் காண விழைவது ஞான வழி.

செயல்களைத் துறவாமல், ஞானத்திற்கு தயார் செய்து கொள்வது கர்ம வழி.
(தயார் செய்தாப் போதும், ஞானம், பச்சக்குன்னு வந்து பற்றிக்கும்!)
செயல்களை செய்யும்போதோ, நம் விருப்பு வெறுப்புகளென்னும் வண்ணக் கண்ணாடிகளால்,
இவ்வுலகத்தை பார்க்க நேரிடுகிறது. இவ்விருப்பு, வெறுப்புகள் தான்
ஞானத்தினை அடைவதில் பெரும் தடைக் கற்கள் என்பதனால், அவை விலக்க வேண்டியவை.

விருப்பு, வெறுப்புகளில் இருந்து விடுபடுவது எப்படி?
செயலில் எப்படிப்பட்ட பலன் ஏற்படினும், அதை ஒரே மனநிலையுடன் எதிர்கொள்வதால்.
இந்த சமச்சீரான மனநிலைக்குப் பக்குவப்படுத்துவது தான் கர்ம யோகம்.

கர்ம யோகம்:
செயலைச் செய். ஆனால், எப்படிப்பட்ட பலன் ஏற்பட்டாலும், அதை இறைவனின் பிரசாதமாக
நன்றியுடன் ஏற்றுக்கொள்வது கர்மயோகம்.
மனதை அமைதியுறச் செய்து, ஞானத்தை ஏற்றுக் கொள்வதற்கு, அது தயார் செய்திடும்.

செய்ய வேண்டிய செயலை துறப்பதால் துறிவியாக முடியாது. துறவு என்னும் நிலை தானாகக்
கனிய வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம், செய்வன திருந்தச் செய்ய, அதுவே யாகம்.

எல்லாம், இயற்கையால், முக்குணங்களின் தூண்டுதலால், நடப்பவை.
ஆகவே, தன்னால் நடந்தது என்ற ஆணவத்தினை அழித்தொழி.

எல்லாமும் என்னால் எனவே அகந்தையே
இல்லாமல் சும்மா இருக்கவே - எல்லாம்
உலகினில் தானாய் நடந்திட கர்மமும்
செய்வாய் மனமே நிதம்.

இராஜச குணத்தால், தூண்டப்படும் ஆசையானது, சித்தம், மனம், புத்தி
- இவைதனை மூடி மறைத்து, உயர் ஞானம் வந்தடையும் வழி தனை மறிக்கும்.

உடலை விட, புலன்களும், புலன்களை விட மனமும், மனத்தை விட புத்தியும்,
புத்தியை விட ஆன்மாவும் உயர்ந்தது. ஆகவே அந்த ஆன்மாவை அறிவதே குறிக்கோள்.

அந்த உயரிய குறிக்கோளை அடைய, ஆசையை ஒழித்து, பலன்களில் மேல் பற்று வைக்காமல்,
பிரசாதமாக பலன்களை ஏற்று, பகவானைப் போற்று.

பிரசாதம் என்றே பலனை நினைத்தால்
வருமோ இடரும்? கருமம் புரிகையில்,
நானெனத் தெரிவதை நீக்கி சரணமலர்
தானடை சிக்கெனத் தான்.


14 comments:

Geetha Sambasivam said...

//செயல்களைத் துறவாமல், ஞானத்திற்கு தயார் செய்து கொள்வது கர்ம வழி.
(தயார் செய்தாப் போதும், ஞானம், பச்சக்குன்னு வந்து பற்றிக்கும்!//

தயார் செய்துக்கறது தானே முக்கியமா வேண்டும்?? அதுக்குத் தான் செய்யும் கர்மாவைத் தன்னோடு (இங்கே ஆன்மாவைக் குறிக்குது, ஆன்மா தான் உடல்னு நினைக்காமல்,) ஒட்டாமல், தாமரை இலைத் தண்ணீர் போல, பழுத்து மரத்திலிருந்து உதிரத் தயார் நிலையிலிருக்கும் இலை போல மனதை வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் நமக்கு விதித்த கர்மாவைச் செய்யவும் வேண்டும். குழப்பறேனோ?? ஆனால் என்னாலே புரிஞ்சுக்க முடியுது. :)))))))

திவாண்ணா said...

:-)))))))
ம்ம்ம்ம்ம்... ஜீவா என்ன சொல்றார்ன்னு பாக்கலாம்! :)

jeevagv said...

:-)
கீதாம்மா, அப்படியே, அப்படியே!

பக்தி, கர்மம், ஞானம் - இவை மூன்றும் - 'ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா, இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் நிலையேதம்மா' ன்னு சொல்லலாமோ!

Geetha Sambasivam said...

//கீதா அக்கா நான் எழுதற ஞான வழிக்கு முன்னுரை போல எழுதி இருந்தாங்க. ஜீவா டு தெ பாய்ன்ட் //

அட, அப்போ நான் பாயிண்டுக்கே வரலையா?? நான் ஃபெயில் ஆயிட்டேனா? :((((((((((((((((((((((((((((((((((((((((((((((((

Geetha Sambasivam said...

மூன்றாவது முறையா இந்தப் பின்னூட்டத்தைக் கொடுக்கிறேன், போகுதா??? :(((((

திவாண்ணா said...

//பக்தி, கர்மம், ஞானம் - இவை மூன்றும் - 'ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா, இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் நிலையேதம்மா' ன்னு சொல்லலாமோ!//

ஆகாகா! பிரமாதம்!

திவாண்ணா said...

//அட, அப்போ நான் பாயிண்டுக்கே வரலையா?? நான் ஃபெயில் ஆயிட்டேனா? :((((((((((((((((((((((((((((((((((((((((((((((((//

அப்ப்டி ஒண்ணும் இல்லை. வேற வேற ஸ்டைல்ன்னு சொன்னேன்.
அடுத்த பதிவுகள்ள பாக்கலாம் -கர்ம வழி ஞானத்திலேதான் கொண்டு விடுதுன்னு!

KARMA said...

நண்பருக்கு,

தாங்கள் எழுதிய கீழ்கண்ட பகுதியை படித்தேன். அதில் உங்களுக்கு ஒரு கேள்வி.

//கண்ணன் என்ன சொல்கிறான்? நீ செய்கிறது உனக்கு கொடுத்த வேலையா? அத செய்ய ஒழுங்கா முயற்சி செஞ்சயா? அப்படி செஞ்சும் முழுக்க முடியலையா? பரவாயில்லை. நல்லா முயற்சி பண்ணே. உனக்கு நல்ல மார்க் போட்டுடறேன்.

நீ செய்தது உனக்கு கொடுத்த வேலை இல்லையா? ரொம்ப நல்லாதான் பண்ணாயா? இருந்தாலும் உனக்கு கொடுத்த வேலை இது இல்லியே? ஏன் செஞ்சாய்? உனக்கு குறைவான மார்க்தான்.

அதனால நமக்கு விதிக்கப்பட்டதை செய்யாம மத்த வேலைகளை செய்கிறது சரியில்லைதான்.//

எனக்கு விதிக்கப்பட்ட வேலை எது? அதை நான் எப்படி தெரிந்துகொள்வது?

பெற்றோர் படிக்கவைத்ததால் (டாக்டரோ/ இஞ்சினியரோ) படிக்கிறோம். பொருளாதாரம், மற்றும் சமூக அங்கீகாரம் காரணங்களுக்காக எதோ ஒரு வேலையில் சேருகிறோம்.

இதில் "விதிக்கப்பட்டது" என்று சொல்வது என்ன பொருளில் வருகிறது?

Explanation with an example will be helpful.

மிக்க நன்றி.

அன்புடன்
கர்மா.

திவாண்ணா said...

கர்மா, நல்வரவு!
//எனக்கு விதிக்கப்பட்ட வேலை எது? அதை நான் எப்படி தெரிந்துகொள்வது?//

பெரியவர்கள் இதை தர்ம சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டதாகவே பொருள் செய்து இருக்கிறார்கள். ஆகவே அதை படிக்கலாம் அல்லது படித்தவர்களுடன் ஆலோசிக்கலாம்.

// பெற்றோர் படிக்கவைத்ததால் (டாக்டரோ/ இஞ்சினியரோ) படிக்கிறோம். பொருளாதாரம், மற்றும் சமூக அங்கீகாரம் காரணங்களுக்காக எதோ ஒரு வேலையில் சேருகிறோம்.

இதில் "விதிக்கப்பட்டது" என்று சொல்வது என்ன பொருளில் வருகிறது?//

உங்களுடைய கேள்வி நியாயமானதே.
இதன் பதில் சுலபமானது இல்லை.
என் வேலையை என் பெற்றோர்கள் தேர்ந்தெடுத்துவிட்டனர், இதில் நான் செய்வதற்கு என்ன இருக்கிறது என்றால்...

சிலர் சுயமாக சிந்திக்க ஆரம்பித்த பின் தன் பாதையை மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். எல்லாரும் அப்படி செய்ய வேண்டும் என்று சொல்ல வரவில்லை. அப்படியும் நடக்கிறது.
உதாரணம் கேட்டீர்கள். என் மகன் 12 ஆம் வகுப்பு மாநில 4 ஆம் இடத்தில் தேறியபின்னும் வேத வழியில் நாட்டம் ஏற்பட்டு அதையே தேர்ந்தெடுத்தான். அதற்கு எங்கள் (பெற்றோர்) புரிதல் உறுதுணையாக இருந்தது.
எல்லாருக்கும் அப்படி கொடுத்து வைக்காதுதான்.
சுய தர்மத்தை கடைப்பிடிப்பது என்பது கஷ்டமான பாதைதான். அதுவும் இந்த காலத்தில். சந்தேகமே இல்லை. ஆனால் கஷ்டப்படாமல் ஏதாவது நல்லது கிடைக்குமா?

நாமேதான் நமது வழியை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். காலம் கடந்து விட்டாலும் யோசித்து குறிப்பிட்ட காலத்தில் என் கடமை எது என்று நிர்ணயம் செய்ய வேண்டும். இதை முன் பதிவு ஒன்றில் பின்னூட்டத்தில் எழுதி இருக்கிறேன். மேலும் சில விஷயங்களை கர்ம வழியின் இறுதி பதிவில் எழுத இருக்கிறேன்.
வருகைக்கு நன்றி!

திவாண்ணா said...

கீதா அக்கா, மூணாவதா கொடுத்த கமென்ட் சமர்த்தாக மாடரேஷன்ல இருந்தது. எனக்கு வர வேண்டிய அஞ்சலா வரலை. :-((

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேனய்யா...

மிக எளிமையாக சொல்லிவிட்டார் ஜீவா..அருமை.

கபீரன்பன் said...

//பிரசாதம் என்றே பலனை நினைத்தால்
வருமோ இடரும்? கருமம் புரிகையில்,
நானெனத் தெரிவதை நீக்கி சரணமலர்
தானடை சிக்கெனத் தான் //

அருமை.
கோவில் பூஜைக்கு பூவை வாங்கும் போது வாடாமல் இருக்கும் நல்ல பூ வாங்கி அர்ச்சனைத் தட்டோடு கொடுக்கிறோம். அர்ச்சனை முடிந்து தட்டு திரும்ப வருகிறது. அதில் உள்ளது வாடி நசுங்கிப்போன வேறொரு மாலையின் சில மலர்கள். அதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பக்தியுடன் கண்ணில் ஒத்திக்கொண்டு வாங்கிக் கொள்கிறோம். ஏனெனில் இப்போது அது பிரசாதம். நாம் சமர்பிப்பது நல்லதாக இருக்கவேண்டும் என்பது நம் கடமை. அவனிடமிருந்து திரும்பி வரும் எதுவும் பிரசாதமே.

(ஒரு பிரசங்கத்தில் இரவிசங்கர் அவர்கள் சொன்னது)

KARMA said...

திவா,

கருத்துக்கு மிக்க நன்றி.

//பெரியவர்கள் இதை தர்ம சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டதாகவே பொருள் செய்து இருக்கிறார்கள். ஆகவே அதை படிக்கலாம் அல்லது படித்தவர்களுடன் ஆலோசிக்கலாம்.//

இது பிறப்பு அடிப்படையில் தொழில் அமைவதைப்போல் தோன்றுகிறது. இன்னும் சற்று ஆழ்ந்து விளக்கினால் நல்லது. மற்றவர்களும் இது பற்றி புரிதல் இருந்தால் தாங்கள் கருத்தை கூறினால் பலனுடையதாயிருக்கும்.

//என் மகன் 12 ஆம் வகுப்பு மாநில 4 ஆம் இடத்தில் தேறியபின்னும் வேத வழியில் நாட்டம் ஏற்பட்டு அதையே தேர்ந்தெடுத்தான்.//

மிக்க மகிழ்ச்சி. இப்படி ஒன்று நடந்திருப்பது ஆச்சரியமே. ஏனென்றால் பொருள்முதல் ஆகிவிட்ட இந்த காலத்தில் வாழ்க்கைக்கு தேவயான பொருள் ஈட்டுவது, அதற்கு தகுந்தாற்போல் கல்வியை தேர்தெடுப்பது என்பது மிக இன்றியமையாததாகிவிட்டது.

மிகத்தீர்மானமான துணிச்சலான முடிவு, பாராட்டுக்க்கள். உங்களுக்கும், மகனுக்கும் தாங்கள் அடைய நினைக்கும் பாதையில் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.

அன்புடன்
கர்மா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பிரசாதமாக பலன்களை ஏற்று, பகவானைப் போற்று//

பிரசாதம் நிறைய கொடுக்கலீன்னா கோயில்ல இப்பல்லாம் பட்டரையே அடிக்க வராங்க ஜீவா! :))))

Jokes Apart
//பிரசாதமாக பலன்களை ஏற்று//

கவனிச்சீங்களா?
அதான் பிரசாத "பல" சித்திரஸ்து அப்படின்னு சொல்வது வழக்கம்!
பிரசாதமாக "பலன்கள்" சித்திரஸ்து!