Pages

Tuesday, November 18, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 18


இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ।
தயோர்ந வஷமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்திநௌ॥ 3.34 ॥

இந்தியங் களின்விடயத் தென்றும் இயல்விருப்பும்
புந்திவிழை யாவெறுப்பும் புக்குளவால்-சிந்தித்
தவைக்குவசம் ஆகாமல் ஆர்ந்திடுக அன்னாரும்
தவிர்க்கரிய சத்துருவென்றாய்ந்து.

இந்தியங்களின் விடயத்து என்றும் இயல் விருப்பும் புந்தி விழையா வெறுப்பும் புக்கு உளவால் சிந்தித்து அவைக்கு வசம் ஆகாமல் ஆர்ந்திடுக அன்னாரும் தவிர்க்கரிய சத்துரு என்று ஆய்ந்து.

(ஒவ்வொரு புலனுக்குரிய நுகர்ச்சிப் பொருளிலும் விருப்பு-வெறுப்புகள் மறைந்து இருக்கின்றன. மனிதன் அவ்விரண்டின் பிடியிலும் அகப்படக் கூடாது. ஏனெனில் அவ்விரண்டும்தான் இவனுடய மேன்மைப் பாதையில் இடையூறு விளைவிக்கும் பெரும் எதிரிகள்.)

ராகத்வேஷங்கள் (விருப்பு வெறுப்புகள்) உள்ளேயே இருக்கிற எதிரிகள்.

ரொம்ப காலமா கூடவே இருக்கிறதை எல்லாம் சட்டுன்னு விட முடியாது. வேதங்களிலேயும் சாஸ்திரங்கள்லேயும் சொல்லப்பட்ட படி உடனடியா திருந்த முடியாது. அனாதி காலமா வாசனைகள் பின்னாலேயே போய் கொண்டு இருக்கிறதால அது கஷ்டம். கொஞ்சம் கொஞ்சமாதானே திருத்திக்க முடியும். இந்த புலன்கள்தான் விருப்பு வெறுப்புக்கு காரணமா ரொம்ப நாளா ஆட்டி வைச்சு கொண்டு இருக்கு. இதுக்கு அடிமைப்பட்டோம்னா பற்று இருக்கிற செயல்களை துவக்கும். அதோட பலன், அதை அனுபவிக்கிறது, மேலே பற்று என்று ஆரம்பிச்சுடும். பற்று வச்சது கிடைச்சதுன்னா காமம் மேலிடும். கிடைக்கலேனா கோபம் - குரோதம் வரும். இது ஞான வழில இருக்கிற பிரச்சினைகள்.


5 comments:

Geetha Sambasivam said...

உள்ளேன் ஐயா,

திவாண்ணா said...

மார்க்ட்!

Kavinaya said...

நல்லாச் சொன்னீங்க. அந்த மாயச் சுழற்சியில தானே மாட்டிக்கிட்டு முழிக்கறோம்(றேன்) :'((

திவாண்ணா said...

:-))
அடுத்த பதிவிலேயே தீர்வும் சொல்கிறான் கண்ணன்.

உடல் நிலை பரவாயில்லை. நான் மைக்ரேன் ஆசாமி. நிறையவே கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதுன்னாலும் அப்பப்ப வந்து என் கர்மாவை தீத்துட்டு போவார்!

jeevagv said...

விருப்பும் வெறுப்பும் விரிக்கும் வலையில்
பொறுப்புடன் வீழாமல் நிற்க - பொறுமையுடன்
ஆட்கொள்; அவைக்கு அரசனாய் உந்தனேவல்
கேட்கும் புலன்கள் பணிந்து.