Pages

Wednesday, October 8, 2008

கர்ம வழி பொது - 8



சுலோகம் 49

தக்கமரும் புத்தியோ கத்திற் றனஞ்சயனே
யக்கருமந் தூர வலங்கா- ணெக்கவரும்
புத்திக்கே நிற்கும் புகல்விருப்புப் புல்லியர்கா
ணத்தித்தே செய்யு மவர்.

பக்தித் தொண்டால், பலன் நோக்குக் கருமங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு, பக்தி உணர்வுக்குப் பூரண சரணடையக் கடவையாக. தமது செயல்களின் பலனை அனுபவிக்க விரும்புபவர் கஞ்சர்களேயாவர்கள்.

சுலோகம் 50

இந்நிலையிற் புத்தியுட னேய்ந்தா ரிருமைவினை
தந்நிலையை யிங்கே தவிர்வர்கா -ணன்னிலையான்
மெய்கருதி யோகத்து மேவுதிநீ யோகங்காண்
செய்கருமத் தாகும் சிறப்பு.

பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவன், இந்த வாழ்விலேயே, நல்ல, தீய செயல்களின் விளைவுகளிலிருந்தும் தப்புகின்றான். எனவே எல்லாச் செயல்களின் செயற்கலையான யோகத்திற்காய்ப் பாடுபடுவாயாக, அர்ஜுனா.

ஒரு பணக்காரர் இருக்கிறார். அவரோட வீட்டிலே ஒரு பணிப்பெண் இருக்கிறாள். மாட மாளிகையிலும் கூட கோபுரங்களிலேயும்தான் புழங்குகிறாள். பட்டுத்துணிகளைதான் அந்த வீட்டு குழந்தைகளுக்கு போடுகிறாள். தினசரி விருந்துதான் சமைக்கிறாள். ஏசி கார்லதான் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு விட்டுட்டு வருகிறாள். எதா இருந்தாலும் அவளுக்கு இது நிரந்தரம் இல்லைன்னு தெரியும். ஒரு நாள் இதை எல்லாம் விட்டுட்டு போகணூம்ன்னு தெரியும். எப்ப வேணா எஜமானன் வீட்டுக்கு அனுப்பிடுவான்னு தெரியும். அதுக்கு அவ ரெடியாவே இருப்பா.

இது போலதான் சாதகன் இருக்கணும். எந்த மாதிரி சூழ்நிலையும் நிரந்தரம் இல்லை. ஒருநாள் பகவான் சட்டைய மாத்திக்கடான்னு சொன்னா மாத்திக்க ரெடியாதான் இருக்கணும்.

4 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

"இது போலதான் சாதகன் இருக்கணும். எந்த மாதிரி சூழ்நிலையும் நிரந்தரம் இல்லை. ஒருநாள் பகவான் சட்டைய மாத்திக்கடான்னு சொன்னா மாத்திக்க ரெடியாதான் இருக்கணும்.:".....

ம்ம்ம் மனசு இப்படித்தான் சொல்கிறது...ஆனால் நடைமுறையில் வேறு மாதிரி... சாதகனாவதற்கு கூட ஒரு பயிற்சி வேண்டும் என்பதுதான் உண்மை...

Kavinaya said...

பணிப்பெண் கதை ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்றதுதானே :)

திவாண்ணா said...

@ கிருத்திகா
//சாதகனாவதற்கு கூட ஒரு பயிற்சி வேண்டும் என்பதுதான் உண்மை//

:-))))))))))
பயிற்சி எடுக்க பயிற்சியா? குருவை முதல்ல பிடிப்போம். அப்புறம் எல்லாம் சரியா போகும். அவர் பாத்துப்பார்.

திவாண்ணா said...

@ கவிநயா
:-))
நீங்க கண்டுபிடுச்சுடுவீங்கன்னு எழுதும்போதே நினைச்சேன்!