Pages

Friday, October 31, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 6



தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:।
பரஸ்பரம் பாவயந்த: ஷ்ரேய: பரமவாப்ஸ்யத॥ 3.11 ॥

வேள்வியுடன் மானிடரை வேதாப் படைத்துமுனங்
கேள்வி யவர்க்குரைத்தான் கேண்மையுட-னூழ்விணையா
மித்தாலே துய்பய னுற்றிடுமி னுங்களுக்கிங்
கெத்தாலு மின் பளிக்கு மீது.

வேள்வியுடன் மானிடரை வேதாப் படைத்து முனம் கேள்வி அவர்க்கு உரைத்தான் கேண்மையுடன் ஊழ்விணையாம் இத்தாலே துய் பயன் உற்றிடும் உங்களுக்கு இங்கு எத்தாலும் இன்பளிக்கும் ஈது.

(இந்த வேள்வியினால் தேவதைகளை வளரச் செய்யுங்கள். அந்த தேவதைகள் உங்களை வளரச் செய்யட்டும், தன்னலம் கருதாத தன்மையுடன் ஒருவர் மற்றொருவரை வளரச் செய்த நீங்கள் மேலான நன்மையை அடைவீர்களாக.)

தேவதைகளுக்கு நாம் பூஜை செய்து உணவளிக்கிறோம். அவை மூலம் பகவான் நமக்கு வேண்டியதை தரான்.

இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா:।
தைர்தத்தாந ப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ:॥ 3.12 ॥

அன்னபெரு வேள்வியா லாங்கிறைஞ்சப் பட்டமார்
மன்ன பெரியவன மற்றளிப்ப - ரின்னே
யவர்தந்த போக மவர்க்களியா துண்பான்
கவர்கின்றான் கள்வனே காண்.

அன்ன பெரு வேள்வியால் ஆங்கு இறைஞ்சப் பட்டமார் மன்ன பெரியவன மற்று அளிப்பர். இன்னே அவர் தந்த போகம் அவர்க்கு அளியாது உண்பான் கவர்கின்றான். கள்வனே காண்.

(வேள்வியினால் வளர்ச்சியடைந்த தேவதைகள் உங்களுக்குக் கேட்காமலேயே விரும்பிய போகங்களை நிச்சயமாகக் கொடுப்பார்கள். இவ்விதம் அவர்களால் கொடுக்கப்பட்ட போகங்களை அவர்களுக்கு அர்ப்பணம் செய்யாமல் எவனொருவன் அனுபவிக்கிறானோ அவன் திருடனே.)

பார்க்கனும்னாலும் அக்னி உதவியாலதான் முடியும். மூச்சு விட்டாலும் வாயுவாலதான். தண்ணி குடிச்சாலும் அது வருணனாலதான். காலை வைத்து நடந்தாலும் அது பூமியாலதான். அன்னம் பூமியாலதான். மழை வேண்டும்னாலும் மேகங்களாலதான். இப்படி இந்த தேவைதைகளோட உதவி இல்லாம உலகத்திலே எந்த காரியமும் நடவாது.

இத்தனை உபகாரத்தை வாங்கிகிட்டு ஒரு நன்றிக்கடனா ஒரு சின்ன பூஜையை செய்யாட்டா என்ன பிரயோசனம்? ஆனா நாம் செய்கிற இந்த சின்ன கர்மாவாலதான் அவங்க ஜீவிச்சு இருக்க முடியும் என்கிறது இல்லை. அதுக்கு பகவான் இருக்கான்; பாத்துப்பான். கோவில்லே நாம ஒரு தீபம் போடறதாலேதான் ஈஸ்வரன்/ பெருமாள் நல்லா இருக்காரா? நாம் பூமாலை வாங்கி கொண்டு போய் போடறதாலேதான் நல்ல இருக்காரா? அப்படி ஒண்ணுமில்லே.

அந்த அந்த கோவில்கள்லே சரியா நடத்துகிற கர்மாக்கள் அந்த இடத்திலே நல்லா தெய்வ இருப்பை உண்டாக்கி அங்கே வர மனிதர்களுக்கு பயனாகும். இதிலே கோவில்ல இருக்கிற பகவானுக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை.

ஒரே ஒரு சமித்தையோ ஒரே ஒரு ஸ்பூன் நெய்யையோ எவ்வளவு தேவதைகளை உத்தேசிச்சு ஹோமம் செய்கிறோம்? அதனால் அளவு என்கிறது அவ்வளவு முக்கியமில்லை. அந்த உத்தேசமேதான் தேவதைகளுக்கு சந்தோஷத்தை கொடுக்கிறதாம் - அப்படின்னு வித்யாரண்யர் சொல்கிறாராம். தேவதைகளை உத்தேசித்து செய்கிற இந்த த்ரவ்ய த்யாகமே நமக்கு தர்மம்.

தேவர்கள் கொடுக்கிறதை அவர்களுக்கும் பயனாகிறதா செய்யணும். ஹோமம் யாகம்ன்னு செய்ய முடியலைனாலும் உலக உபகாரமா அன்னதானம் மாதிரி செய்யணும். குறைந்த பட்சம் நாம் சாப்பிடும் போது அவனுக்கு அந்த உணவை அர்ப்பணம் செய்துவிட்டு சாப்பிடணும். யார் இப்படி நன்றி இல்லாம இருக்கானோ அவன் திருடன் அப்படின்னு கண்ணன் சொல்றான்.

6 comments:

Geetha Sambasivam said...

"உண்ணும் உணவு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை,"
அனைத்தும் கண்ணனே என்று உணரவேண்டும். தினமும் ஒரு பிடி உணவையாவது அவன் முன்னே காட்டிவிட்டு நீ அளித்த பிச்சை என்ற உணர்வோடு உண்ண வேண்டும்.

Kavinaya said...

அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதை எப்பவும் நினைவில் கொள்ளணும்கிறீங்க. (கிருத்திகா அவர்கள் சொன்ன 'பொம்மலாட்டம்' என்ற வார்த்தை நினைவில் வந்து ஆடுது :)

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேனய்யா...

திவாண்ணா said...

கீதா அக்கா, சரிதான். அதாவது கொஞ்சமாவது ந்ன்றி உணர்ச்சி வேண்டும்.

@ கவிநயா
நீங்க சொல்கிறது சரிதான் ஆனாலும் இங்கே அதை சொல்ல வரலை. நமக்கு வேண்டியதை கொடுக்கிறவர்களுக்கு கொஞ்சம் நன்றி காட்டணும், அதான்.

மௌலி,
பரவில்லையே, கல்யாணத்துக்கு போய் வந்து சுறு சுறுப்பா படீக்கீறீங்களா?

குமரன் (Kumaran) said...

திவா ஐயா, இந்த இடத்துல தேவர்களுக்காகச் செய்யப்படும் வேள்விகள், தேவ யக்ஞமான தேவ பூஜைகளை மட்டும் சொல்லவில்லை கண்ணன். எல்லோருக்கும் பயன்படும் படியான வாழ்க்கை வாழ்வதே யக்ஞம் என்று பல பெரியவர்கள் சொன்ன உரைகளில் படித்திருக்கிறேன். அவை இங்கே நினைவிற்கு வந்தன.

திவாண்ணா said...

வாங்க குமரன். மெதுவா ஆரம்பிச்சாலும் சீக்கிரமே பிடிச்சுட்டீங்க.
இந்த இடத்திலே எளிய, நேர் பொருள் சொல்லி இருக்கிறபடிதான்.
ஆனா சில அருமையான நூல்களோட உயர்வே ஒவ்வொத்தருக்கும் பலவிதமா அர்த்தம் கொடுக்கிறதோட பொருத்தமாகவும் இருக்கும் என்கிறது. ஏன் ஒத்தரே மீண்டும் படிக்கிறப்ப வேற அர்த்தம் கண்டுபிடிக்கலாம். :-))
ஆக நீங்க சொல்கிற மாதிரியும் பொருள் கொள்ளலாம்.