Pages

Monday, October 27, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -3



கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்।
இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே॥ 3.6 ॥


கரும கரணங்கள் காட்டித்தன் னெஞ்சில்
வருமப்பொருணினைந்து மன்னிப் - பெருமைவினைக்
கைம்மையினாற் பாவிக்குங் கள்ளக் கருத்துடையான்
பொய்ம்மையினா னென்றே புகல்.

கரும கரணங்கள் காட்டித் தன் நெஞ்சில்
வருமப் பொருள் நினைந்து மன்னிப் - பெருமை வினைக்
கைம்மையினால் பாவிக்குங் கள்ளக் கருத்துடையான்
பொய்ம்மையினான் என்றே புகல்.

(அறிவிலியான எவன் புலன்கள் அனத்தையும் வலுவில் - வெளித்தோற்றத்தில் அடக்கி விட்டு மனதினால் அந்தப் புலன்நுகர் பொருட்கள நினத்துக் கொண்டிருக்கிறானோ, அவன் பொய் நடத்தையுள்ளவன் - ஆஷாடபூதி எனக் கூறப்படுகிறான்.)

வாசனைகள மறையாமல் சம்சாரத்தை விட்டு விட்டு போனாலும் அது சன்னியாசம் ஆகாதே. துர் வாசனைகள் இவனை ஏமாத்தி வேறு மாதிரி திரும்பி வந்துடும். இது பொய் ஒழுக்கம் ஆகும். இந்திரியங்களால த்யாகம் பண்ணாலும் மனசால பண்ணலையே. இவனைவிட "ஆமாம் ஐயா, என்ன வேதாந்தம் கேட்டாலும் வைராக்கியம் வரலையே! இந்த கடமைகள் என்னை விட்டு போகாது போல இருக்கேன்" னு உண்மைய சொல்கிறவன் மேல்.

யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதே அர்ஜுந।
கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விஷிஷ்யதே॥ 3.7 ॥


நெஞ்சாற் புலனடக்கி நேர்கரும யோகத்தை
யெஞ்சா துழல்கரும விந்தியத்தாற் -றுஞ்சாது
தான்றொடங்கி நன்றியலுந்தன் மையுடன் றொத்தற்றான்
வான்றொடர்ந்த வண்புகழான் மற்று.

நெஞ்சால் புலன் அடக்கி நேர் கரும யோகத்தை
எஞ்சாது உழல் கருமவிந்தியத்தால் -துஞ்சாது
தான் தொடங்கி நன்றியலும் தன்மையுடன் தொத்து அற்றான்வான்
தொடர்ந்த வண் புகழான் மற்று.

(ஆனால் அர்ஜுன! எவனொருவன் மனதினால் புலன்களை வசப்படுத்திப் பற்றில்லாதவனாக எல்லாப் புலன்களாலும் கர்மயோகத்தைக் கடைப்பிடிக்கிறானோ அவனே சிறந்தவன்.)

நமக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கு. அதை பயன்படுத்திக்கொண்டே நாம் ஆன்மீகத்திலே முன்னேற பார்க்கணும். ஒருத்தருக்கு கணக்கு ரொம்ப நல்லா வரலாம். இன்னொருத்தர் "கணக்கு, பிணக்கு, ஆமணக்கு" ன்னு சொல்லாம். இப்படி பிடித்த சமாசாரங்களும் திறமை இருக்கிற சமாசாரங்களும் ஆளுக்கு ஆள் வேறு படும்.

"மனசால யார் ஒருவன் புலன்களை நியமித்து" என்பதையும் கவனிக்கணும். அவை இழுக்கிற விஷயத்திலே நாம் போறது இல்லை. அப்படி செய்தா அது பற்றுல கொண்டுவிடும். இப்படி பற்று இல்லாம போனால் அது ஞான யோகத்துக்கு தகுதியை தரும். புலன்களை அடக்காம, மனசு பரிபக்குவம் இல்லாமல் சன்னியாசம் வாங்கிறதைவிட குடும்பத்தில இருந்து கொண்டே கர்மாவை செய்யலாம்.

இந்த பதிவுகளிலே சன்னியாசத்தை குறித்து சொல்கிற எதுவும் உள்நோக்கிலோ யாரையும் குறிப்பாக மனசில வைச்சுக்கொண்டோ சொல்லவில்லை. பொதுவாக நூல்களிலே சொல்லி இருக்கிறதையும், பெரியவர்கள் உபன்யாஸம் செய்ததையும், பல நாட்களாக கேள்விப்பட்ட தகவல்கள் அடிப்படையிலும்தான் எழுதி வருகிறேன்.
~~~~~~~~~
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

7 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

ஆஹா, என்னதிது, நீங்களும் டிஸ்கி எல்லாம் போட்டு எழுதறீங்க :)

திவாண்ணா said...

சிலர் தவறா புரிஞ்சு கொண்டு மனசு கஷ்டப்பட்டதா தெரிஞ்சது.....

Kavinaya said...

ஸ்ரீகாழியூரர் சொன்னது நினைவு வருது. மனசை அடக்கும் அங்குசமும் அவனிடம்தான் இருக்கு. எல்லாவற்றுக்கும் அவனைப் பற்றிக் கொள்வதே சாலச் சிறந்தது. தீபாவளி நல்வாழ்த்துகள்.

திவாண்ணா said...

கவி அக்கா! ஆமாம் அவனையே பிடிச்சுகிறது ரொம்ப நல்லது. விடாப்பிடியா பிடிச்சுக்கணுமே. நம்ம முயற்சியையும் பண்ணி அதே அவன்கிட்ட பாத்துக்கப்பான்னு சொல்லாம் போல இருக்கு.

sury siva said...

// இந்த பதிவுகளிலே சன்னியாசத்தை குறித்து சொல்கிற எதுவும் உள்நோக்கிலோ யாரையும் குறிப்பாக மனசில வைச்சுக்கொண்டோ சொல்லவில்லை //


நல்லது.

நோக்குக:
http://arthamullavalaipathivugal.blogspot.com

சுப்பு ரத்தினம்

Geetha Sambasivam said...

//ஆமாம் ஐயா, என்ன வேதாந்தம் கேட்டாலும் வைராக்கியம் வரலையே! இந்த கடமைகள் என்னை விட்டு போகாது போல இருக்கேன்" னு உண்மைய சொல்கிறவன் மேல்//

வைராக்கியம் வரணும், எங்கே??? மேலே சொல்லி இருக்கிறது தான் நிஜம்! வேறே என்ன சொல்றது??? அது புரிஞ்சாத் தான் எங்கேயோ போயிடுவோமே! :(((((

திவாண்ணா said...

சூரி சார், படித்துவிட்டேன் புரிதலுக்கு நன்றி. உங்க மின்னஞ்சல் முகவரி கிடைத்தால் நல்லது...