Pages

Wednesday, October 1, 2008

கர்ம வழி-பொது 3


இப்படி எல்லாம் கேட்டபிறகு நமக்கு தோணலாம். அட, பலன்ல உரிமை கிடையாதுன்னா வேலை பண்ணுவானேன்? இது பெரிய பிரச்சினையப்பா. பேசாம சும்மா கிடந்துடலாம். ஏன் வம்பு!

அதுக்காகதான் பகவான் சொல்கிறான்:
"உனக்கு செயலின்மையில் சம்பந்தம் ஏற்படக்கூடாது.”
உண்மைல செயலின்மையும் ஒரு செயல்தான். செய்ய வேண்டிய செயல்களை செய்யாவிட்டாலும் குற்றம்தானே? commision by omision என்பாங்களே அது போல.

இதுக்கு முன்னேயும் பின்னேயும் சொல்லி இருக்கிறதை கொஞ்சம் பாத்தா கர்மா பத்தி இப்போதைய கான்டெக்ஸ்ட் இன்னும் புரியும்.

சுலோகம் 2: 39
சாங்கியத்தின் தன்மையின்மேற் புந்தித் தகவுரைதே
னீங்குகனம யோகத் தியல்பிவிதன் - பாங்கியம்மக்
கேளாயிப் புத்தியினைக் கிட்டவினைக் கட்டினைநீ
மூளாம னிற்றி முயன்று.

ஸாங்க்ய தத்துவத்தின் ஆய்வறிவை உனக்கு இதுகாறும் விளக்கினேன். பலன் விளைவுகளுக்காயன்றி ஒருவன் செயல்படும் யோகத்தைப் பற்றிய அறிவை இப்போது கேள். ப்ருதாவின் மகனே, இவ்வாறான அறிவோடு செயல்பட்டால், செயல்களின் விளைவெனும் விலங்கினின்றும் நீ விடுதலை பெறுவாய்.

**இதுக்கு முன்னாலே கொஞ்சம் ஆராய்சி அறிவைப்பத்தி சொன்னார். அறிவு கிடச்ச பிறகு செயல்கள் எப்படி இருக்கணும்னு சொல்லப்போகிறார்.

சுலோகம் 40
போகமிகு செல்வத்துப் பூண்டதன் னெஞ்சழித்தார்க்
கேக வகையுற்ற வெழிற்புந்தி - யோக
மமைவுறா துள்ளத்தி லாதலால் வேதச்
சமைவுதான் கேளாய் தரித்து.

இம்முயற்சியில் குறைவோ இழப்போ இல்லை. இவ்வழியில் சிறிது முன்னேற்றமும், மிகப் பயங்கரமான பயத்திலிருந்து ஒருவனைக் காக்கும்.

** இந்த உலக விஷயத்துக்கும் நல்லது. பரமார்த்திகமாயும் நல்லது. ஏதோ கொஞ்சம் வேலை செய்தாலும் அதுக்கான பலன் கிடைக்கும். “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்" இல்லையா? அப்படி வேலை செய்வதால் உலக ரீதியாகவாவது கொஞ்சம் பலன் கிடைச்சுடும். ராஜ யோகத்தைப்பத்தி இப்படி நினைச்சுகூட பாக்க முடியாது. சரியான வழிகாட்டி இல்லாம கொஞ்சம் தப்பா போனாலும் மோசமா பின் விளைவுகள் இருக்கும். ஞான யோகத்தைப்பத்தி கேக்கவே வேண்டாம். குழம்பிப்போய் இருக்கிற நம்பிக்கை/அறிவும் போயிடும்.

சுலோகம் 41
முக்குணத்தோர் பண்புரைக்கு மூண்டுமறை நீமன்னா
வக்குணத்து மன்னே லவாநெஞ்சா - யிக்குணத்தாற்
சாருதுய ரற்றெனேஉஞ் சத்துவத்தி னப்புறத்தி
லாருமியோ கக்கேகம மற்று.

இவ்வழியிலுள்ளோர் உறுதியான நோக்கமுடையோர். அவர்களது இலட்சியம் ஒன்றே. குருக்களின் செல்வனே, உறுதியற்றவரது அறிவோ பல கிளைகளை உடையதாக ஆகின்றது.

வழில உறுதியா இருக்கிறவங்கதான் ஆத்ம தரிசனம் மட்டுமே இலக்குன்னு இருப்பாங்க. மத்தவங்க வழிகள்ல இப்படி போலாமா அப்படி போலாமான்னு குழம்பிபோய் திசை திரும்பி போயிடலாம்.

கர்ம யோகம் ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ள மாறி சன்னியாசம்தான் உயர்ந்ததுன்னு சன்னியாசம் நோக்கி போய்; கொஞ்ச நாள்லே அட,சேவை பண்ணலாம் அதுதான் நல்லதுன்னு மாறி; பிறகு -அட, இதுவும் லௌகீகம்தானே- தியானம் பண்ணு, அட, இது கஷ்டம், நாம சங்கீர்த்தனம் செய்யலாம், இப்படி மாத்தி மாத்தி செஞ்சா?

அவரவர் குணத்தை பாத்து இதாண்டா உனக்கு, இதே செய்ன்னு ஒண்ணை கொடுத்துட்டா மனசு நிலைப்பட்டு ஒரே வழில போகும். அப்ப இதுல இருக்கிற லாபமோ நஷ்டமோ ஒரு வழி கிடைச்சுதுன்னு அதிலேயே நம்பி திடமா போய் இலக்கை அடைவான்.

இப்படி தேர்ந்தெடுக்கிற வழில திடமா இருக்கணும்.

2 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

//அவரவர் குணத்தை பாத்து இதாண்டா உனக்கு, இதே செய்ன்னு ஒண்ணை கொடுத்துட்டா மனசு நிலைப்பட்டு ஒரே வழில போகும். அப்ப இதுல இருக்கிற லாபமோ நஷ்டமோ ஒரு வழி கிடைச்சுதுன்னு அதிலேயே நம்பி திடமா போய் இலக்கை அடைவான்.

இப்படி தேர்ந்தெடுக்கிற வழில திடமா இருக்கணும்.//

இது!!!...மிகவும் அவசியமானது.

Kavinaya said...

//கர்ம யோகம் ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ள மாறி சன்னியாசம்தான் உயர்ந்ததுன்னு சன்னியாசம் நோக்கி போய்; கொஞ்ச நாள்லே அட,சேவை பண்ணலாம் அதுதான் நல்லதுன்னு மாறி; பிறகு -அட, இதுவும் லௌகீகம்தானே- தியானம் பண்ணு, அட, இது கஷ்டம், நாம சங்கீர்த்தனம் செய்யலாம், இப்படி மாத்தி மாத்தி செஞ்சா?//

ஆமா.. அப்படியாக நிறைய வாய்ப்பிருக்கு. தேர்ந்தெடுத்த வழியில் திடமா இருக்கணும்னு அழகா சொன்னீங்க.