Pages

Friday, October 24, 2008

கண்ணன் காட்டிய கர்ம யோகம் -2


ந கர்மணாமநாரம்பாந்நைஷ்கர்ம்யம் புருஷோ அஷ்நுதே।
ந ச ஸம்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி॥ 3.4 ॥

இட்டத்தாற்கன்மத் திழியார் வினையொழியார்
விட்டத்தாற் பேறதனை மேலடையார்- தொட்டொன்றைச்
செய்யா ரிறைப்பொ ழுதுநில்லார் செறிந்தியல்வர்
மெய்யார் குணத்தெவரு மிக்கு

இட்டத்தால் கன்மத்து இழியார் வினை ஒழியார்.
விட்டத்தால் பேறதனை மேல் அடையார்- தொட்டு ஒன்றைச்
செய்யார் இறைப் பொழுது நில்லார் செறிந்து இயல்வர்
மெய்யார் குணத்து எவரு மிக்கு

(மனிதன் கர்மங்களைச் செய்ய ஆரம்பிக்காமல் இருப்பதாலேயே நிஷ்கர்ம நிலையோ - கர்மயோக நிஷ்டையோ அடைவதில்ல. கர்மங்களைச் செய்யாமல் துறப்பதாலேயே ஸித்தியை அதாவது ஸாங்க்யயோக நிஷ்டையையும் பெறுவதில்லை.)

யாராவது "அட, ஏன்டா கர்ம யோகம் கஷ்டப்பட்டு செய்யணும்? கர்ம யோகம் செஞ்சு சித்த சுத்தி வந்துதான், ஞான யோகம் செஞ்சுதான் நாம யார்ன்னு புரிஞ்சுக்கணுமா? அப்ப நேரடியா ஞான யோகம் செய்யலாமே" ன்னு நினைச்சா,

கர்மாவை செய்யாமலே யாரும் அதிலிருந்து விடுபட முடியாது. அதெப்படி? அப்படின்னா கர்மாவை செஞ்சுண்டே விட முடியுமா என்ன? ஒரேயடியா விட்டாதானே அதை விடலாம்? அப்படியில்லை.

உடம்பு சரியில்லை. வைத்தியர்கிட்டே போறோம். மருந்து ஒண்ணு கொடுத்து "விடாம சாப்பிடு" என்கிறார். மருந்து சாப்பிட்டு கொண்டே இருக்கணும் என்கிறது அவரோட உத்தேசம் இல்லை. மருந்து சாப்பிட்டு கொண்டே இருந்தா அப்புறம் ஆரோக்கியம் வந்த பிறகு "போதும், மருந்து சாப்பிடாதே" ன்னு சொல்வார் வைத்தியர்.

ஆக அப்படிப்பட்ட காலம் வர வரை வேலைசெய்து கொண்டே இருக்கணும். கர்மாவை பலனை எதிர்பாக்காம செஞ்சு செஞ்சு அதில பலன் என்ன கிடைச்சாலும் சரின்னு ஏத்துண்டு போகிற மனப்பக்குவம் வந்தச்சுன்னா ஞான யோகத்துக்கு போகலாம். "கர்மண்யேவாதிகாரஸ்தே" ன்னு சொன்னவன் "சர்வ கர்மாண் பரித்யஜ்ய" என்று சொல்லும் நிலை வரட்டும்.

கர்மாக்களை விட்டு விட்டதாலேயே சித்தின்னும் இல்லை. பொறுப்பில்லாம தன் கர்மாக்களை விட்டுட்டு பயந்து ஓடறவன் ஞானியோ சித்தனோ ஆகிவிட முடியாது. வைணவப் பெரியார்களை பாத்தா குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்று அவர்களுக்கு தேவையானதெல்லாம் செய்து முடித்து அப்புறமா சன்னியாசம் வாங்கிகொள்வர். ப்ரம்மசர்யத்திலேந்து நேரடியா சன்னியாசம் போகிறது ஒரு விதத்தில் நல்லது - முன்னேற்றம் சீக்கிரமா இருக்கும்னாலும்- அனுபவிக்காம விட்டதை பத்தி அப்பப்ப நினைவு வந்து மனசு கலைய வாய்ப்பு இருக்கவே இருக்கு. குறிப்பா இந்த கலி யுகத்திலே. சன்னியாசின்னு ஆரம்பிச்சு ஏதோ ஒரு மடம் போல அமைப்புன்னு போய் அங்கே விரும்பத்தகாத விஷயங்கள் எல்லாம் நடக்க ஆரம்பிக்கிறதை பாத்து கொண்டுதானே இருக்கோம்?

ஞான யோகம் போகணும்ன்னு ஆசை இருந்தா மட்டும் போதாது. அத செய்ய யோக்யதை- சக்தியும் வேணுமே?

ந ஹி கஷ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்।
கார்யதே ஹ்யவஷ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை:॥ 3.5 ॥


[வெண்பா முன்னதில் பின் பாகம் இதை சொல்லிவிட்டது]

(ஸந்தேஹமின்றி எந்த ஒருவனும் எக்காலத்திலும் ஒரு கணம்கூடச் செயல் புரியாமல் இருப்பதில்ல. ஏனெனில் மனித ஸமுதாயம் அனைத்தும் ப்ரக்ருதியிலிருந்து உண்டான குணங்களால் தன்வசமிழந்து வேறு வழியின்றிச் செயல் செய்யத் தூண்டப்படுகிறன.)

சும்மா இருக்கிறது என்கிறது சுலபமில்லை. பிறந்த குழந்தை கூட கை காலை உதைக்கிறதே? அதுக்கு என்ன தெரியும்? நாம் எல்லாருமே அறியாமலே பல விஷயங்களை செய்து கொண்டு இருக்கிறோம். இதயம் துடிக்கிறதுலேந்து, மூச்சு விடுகிறது போல பலது.

ஒரு கதை. ஒரு கோவில். புதுசா ஒரு மணியக்காரர் வந்தார். எல்லா விஷயங்களையும் ஒரு அலசல் செய்யணும்ன்னு பார்த்தார். கோவில்ல நடக்கிர ஒவ்வொரு காரியத்தையும் கவனித்தார்.

சுவாமிக்கு நைவேத்தியம் செஞ்ச பிறகு பிரசாத உருண்டை வினியோகத்தை பாத்தார். ஏதோ ஒரு நியமத்தில அதை எல்லாம் வினியோகிச்சாங்க. சும்மா கோவில் தூண்ல சாஞ்சு கொண்டு இருந்த ஒத்தனுக்கும் கொடுத்ததை பாத்தார். அப்புறமா அர்ச்சகரை கூப்பிட்டு "யார் அது? ஏன் கொடுத்தீங்க?" ன்னு கேட்டர். "அவர் ஒரு சாது. ரொம்ப நாளா கொடுத்து வரோம்'" ன்னு சொன்னாங்க. எதுக்கு தண்டமா இப்படி கொடுக்கிறீங்க, நிறுத்துங்கன்னு உத்திரவு போட்டார்.

அடுத்த நாள் சாதுவுக்கு உருண்டை கிடைக்கலே. என்ன விஷயம்ன்னு விசாரிச்சார். மணியக்காரர் "ஏன் சும்மா உக்காந்து இருக்கிறவனுக்கு பிரசாதம்? கொடுக்காதேன்னு உத்திரவு போட்டுட்டார்" ன்னு பதில் கிடைச்சது. "அப்படியா? அந்த மணியக்காரரை கூப்பிடு" ன்னார். மணியக்காரரும் வந்தார். "ஏம்பா, நீதான் சும்மா இருக்கிறவனுக்கு பிரசாதம் கொடுக்காதேன்னு சொன்னாயா?” ன்னு கேட்டர்.” ஆமாம், அதுக்கு என்ன இப்போ?” "சரி, இங்க வா. இந்த தூண் பக்கத்திலே கொஞ்ச நேரம் அசையாம சும்மா உக்காரு" ன்னார். மணியக்காரரும் உக்காந்தார். நாலு ஐஞ்சு நிமிஷம் ஆச்சு. அவருக்கு இருப்பு கொள்ளலே. அசைய ஆரம்பிச்சார். "அட அசையறியே? நான் சும்மாதானே உக்கார சொன்னேன்?” திருப்பி முயற்சி பண்ண மணியக்காரருக்கு இது கஷ்டம்ன்னு புரிஞ்சு போச்சு. அர்ச்சகரை பாத்து "இனிமே இவருக்கு 2 உருண்டை கொடுங்க" ன்னு உத்திரவு போட்டார்.

அது மாதிரி யாராலேயும் ஒரு வேலையும் செய்யாம இருக்க முடியாது.

8 comments:

Geetha Sambasivam said...

//அது மாதிரி யாராலேயும் ஒரு வேலையும் செய்யாம இருக்க முடியாது.//

atheee!!!!!

Kavinaya said...

ஒருத்தருக்கு ஆன்மீக நிலையில உயர்வு ஏற்பட ஏற்பட, அவர் செய்ய வேண்டிய செயல்கள் / கர்மங்கள் தானாகவே குறைஞ்சுகிட்டே வருமாம் - இதை யார் சொல்லியிருப்பான்னு நீங்களே கண்டுபிடிச்சிடுவீங்கதானே :)

சும்மா இருக்கிற கதை நல்ல கதை :) நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

ஆமாம், சும்மாயிருக்கறது அம்புட்டு சுலபமில்லையே...சரிதான் :)

ambi said...

//இனிமே இவருக்கு 2 உருண்டை கொடுங்க" ன்னு உத்திரவு போட்டார்//

:)))


சும்மா இருத்தல் என்பது மனசுக்குத் தான். உலக விஷயங்களில் லயிக்காது இறை சிந்தனையில் லயித்து இரு! என்பதை சும்மா இரு!னு பெரியவங்க சொல்வாங்க.

ஞான பூமியில் எப்பவோ படிச்ச நியாபகம்.


ஒரு விஷ் லிஸ்ட்:

வினாயகர் அகவல் ஏறக்குறைய மனப்பாடம் ஆகி விட்டது. சில பதங்களுக்கு அர்த்தம் என்ன?னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கு.

இவ்ளோவுக்கும் அது தூய தமிழில் தான் இருக்கு. :)

முடிஞ்சா கர்ம யோகத்தின் நடுவே ஒரு கமர்ஷியல் ப்ரேக் விட்டு வி-அகவல் விளக்கம் தர இயலுமா?

திவாண்ணா said...

கீ அக்கா டாக்டர் சொல்கிறதுக்கு எதிரா செயல்படறத்துக்கு எஸ்க்யூஸ் தேடறாங்க போல இருக்கே! :P

கவி அக்கா ஷெர்லாக்ஸ் ஹோம்ஸ் ஆவே ஆயிட்டேன். :-)

மௌலி, அப்படி இருந்து பாத்தீங்களா? :-))

அம்பி,
எனக்கு அவ்வளோ ஞானம் போதாது. இதை படிச்சு பாருங்களேன்.
http://aaththigam.blogspot.com/search/label/vinayakar%20agaval

Kavinaya said...

அட, நீங்க வேற. நான் சொன்னா அது ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொன்னதாத்தான் இருக்கும். ஏன்னா எனக்கு வேற ஒண்ணும் தெரியாது :( அதான் கண்டு பிடிச்சிருவீங்கன்னு சொன்னேன்.

ambi said...

wow, thx for the link, it's soo detail :)

sury siva said...

//முன்னேற்றம் சீக்கிரமா இருக்கும்னாலும்- அனுபவிக்காம விட்டதை பத்தி அப்பப்ப நினைவு வந்து மனசு கலைய வாய்ப்பு இருக்கவே இருக்கு//
// குறிப்பா இந்த கலி யுகத்திலே. சன்னியாசின்னு ஆரம்பிச்சு ஏதோ ஒரு மடம் போல அமைப்புன்னு போய் அங்கே விரும்பத்தகாத விஷயங்கள் எல்லாம் நடக்க ஆரம்பிக்கிறதை பாத்து கொண்டுதானே இருக்கோம்?//

ஏதோ ஒரு நிகழ்வை மனதில் கொண்டு எல்லாம் இதுபோலத்தான் இருக்கும் என்று நினைப்பது
சரி எனத் தோன்றவில்லை.

இது ஒரு புறம் இருக்கட்டும். சத் விஷயங்களைப்பற்றிப் பேசும்போது மனசு ஏன் அஸத் விஷயங்களை
அலசுகிறது ? அஸத் விஷயங்களைப்பற்றிய சிந்தனையும் இருக்கும்வரை கர்மா தொடரும் என்பதில்
சந்தேகம் உண்டோ?

சுப்பு ரத்தினம்.