Pages

Wednesday, September 17, 2008

12 ஆம் நாள் விதி:



12 ஆம் நாள் விதி:ஸபிண்டீகரணம். இறந்தவர் பிரேதத்வம் நீங்கி பித்ரு ஆவதற்கு இது செய்யப்படுகிறது.
12 ஆம் நாளும் செய்யலாம். அல்லது 4 ஆம் மாதம், 6 ஆம் மாதம், 11 ஆம் மாதம் அல்லது வருட முடிவிலும் செய்யலாம்.
ஒரே மகனாக இருந்தாலும், சுயமாக அக்னி ஆராதனை செய்பவனாக இருந்தாலும் 12 ஆம் நாள் செய்வதே உசிதம். சரீரம் ஸ்திரம் இல்லை என்பதால் இப்படி.
இந்த சபிண்டீகரணம் செய்யாமல் வேறு எந்த சுப காரியமும் செய்யலாகாது.
இன்னும் பல கௌண காலம் சொல்லி இருக்கிறது.
பிரம்மசாரி, ஸன்யாசி, போல சிலருக்கு நாராயண பலிதான். ஆகவே சபிண்டீகரணம் இல்லை.
இரண்டு சிராத்தங்களை ஆரம்பித்து ஒன்றை பார்வண ரீதியிலும் ஒன்றை ஏகோத்திஷ்ட ரீதியில் பிரேத வர்ண சிராத்தமும் செய்வர். இந்த 2 உம் சேர்ந்தே சபிண்டீகரணம்.
முதலில் விச்வேதேவர், பிறகு பித்ருக்கள் கடைசியில் பிரேதம் அதாவது பித்ரு (தகப்பனார்) வரணம் செய்து காரியம்.
விஷ்ணுவும் பார்வண ரீதி சிராத்தத்தில் உண்டு.
ஹோமம் செய்து மீதியுள்ள அன்னத்தையும் எள்ளை கலந்து 7 பிண்டங்களாக பிடித்து உச்சிஷ்ட சன்னதியில் அக்னிக்கு தெற்கே போன பதிவில் சொல்லிய படி பிண்டமிடுவர்.

அந்தணர் அனுமதி பெற்று பிரேத அர்க்கியம் கொடுத்து மௌனமாக நீட்டமாக பிண்டம் பிடித்து மூன்றாக்கி அவற்றை பிதா முதலியவர் எதிரில் வைத்து;
பிரேதம் வைதரணி நதியை கடக்க வைதரணீ கோ தானம் செய்து;
(பார்க்க கருட புராணம்: யம லோகம் செல்லும் வழியில் வைதரணி நதி குறுக்கிடும் அதை தாண்ட வேண்டும். அது துர் நாற்றமும், அதிக வேகமும், கருத்த தண்ணீர் ரத்தம் உள்ளதாயும், எலும்பு மயிர் இவற்றுடன் கூடிய அலைகளுடனும் இருக்கும்.)
பிரேத பிண்டங்களை பிதா முதலியவர் பிண்டங்களுடன் ஒன்றாக சேர்ப்பர். அதன் மீது எள்ளும் நீரும் இறைப்பர்.

இதை மூத்த மகனே செய்ய வேண்டும். மற்றவர் அல்ல.

சோத கும்பம்:
அந்தணர் வரணம் இல்லாமல் மூன்று புருஷர்களை உத்தேசித்து நீர் கடத்துடன் செய்யும் சிராத்தம். செய்பவருக்கும் சாப்பிடுபவருக்கும் ஒரு நியமமும் இல்லை. இதை 12 ஆம் நாள் சபிண்டீகரணம் செய்த பின் ஆரம்பித்து தினசரி வருஷ சிராத்தம் முடிய செய்வர்.
தினசரி முடியாதவர்கள் சேர்த்து அமாவாஸை அல்லது மாசிகம் போது செய்வர்.

ஆசௌசம் 12 நாள் வரையிலும் கூட உண்டு. ஸபிண்டீ செய்யும் முன் தேவ பூஜை, வேறு பித்ரு காரியம், ஹோமம், தானம், ஜபம் இவற்றை செய்யலாகாது.

2 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

//செய்பவருக்கும் சாப்பிடுபவருக்கும் ஒரு நியமமும் இல்லை.//

ஆமாம்...ஏதும் இல்லை. ஹிரண்ய ரூப சிராத்தம் தான்...ஆனா ஊட்டா உண்டு. அதே போல சிராத்த சமையலும் சோதகுமத்துக்கு இல்லை. மிளகாய்/தக்காளி போன்றவை சேர்க்கப்படுகிறது.

ஆமாம், அக்னி ரூபமாக செய்யும் சிராத்தத்தில் யார் சாப்பிடலாம்?, என்ன தகுதி வேண்டும்...சாப்பிட்டால் எத்தனை ஆவர்த்தி காயத்ரி பண்ணனும்...இதெல்லாம் எழுதின மாதிரி நினைவில்லையே?...பின்னர் வருமோ?.

Geetha Sambasivam said...

சபிண்டியில், 12-ம் நாள் வெள்ளி, செவ்வாய் அன்று இறந்தவரின் சபிண்டி வந்தால் கர்மா பிள்ளையால் செய்யப் படவில்லை என்றால் ஒரு நாள் தள்ளி, மறுநாள் வைக்கிற வழக்கம் இருக்கு. சாஸ்திரிகளே சொல்லுகின்றார், அப்படித் தான் செய்யணும், புத்திரன் செய்யும் கர்மா என்றால் தான் 12-ம் நாள் செவ்வாய், வெள்ளி என்றால் பரவாயில்லை என்று. அதுக்கு என்ன காரணம்?????