Pages

Friday, August 15, 2008

யக்ஞங்கள்



அடுத்து அவரவர் வாழ்க்கையை ஒட்டி ஏதோ ஒரு வேலையில் ஈடுபடுவோம். அங்கேயும் கர்ம யோகம் வருகிறது. அதை அப்புறமா பாக்கலாம். இப்ப நித்திய கர்மாவைதானே பாத்துக்கொண்டு இருக்கிறோம்! அதிலேயும் 40 சம்ஸ்காரங்களை பாக்கிறோம்.
இந்த வரிசையில் அடுத்து ஒருவர் வாழ்க்கையிலே வருவது நாம் முன்னேயே பாத்த பஞ்ச மஹா யக்ஞங்கள். நினைவு இருக்கு இல்லியா? தேவ – பித்ரு- பூத- மனுஷ்ய- ப்ரும்ம யக்ஞங்கள். மொத்தம் 19 ஆயிடுத்து.

இதற்கு மேலே மற்ற யக்ஞங்கள்:

ஏன் யக்ஞங்கள் செய்யணும்?
யக்ஞங்கள் செய்யறதாலே ஏற்படுகிற பலன்களை பாத்தா விடை கிடைச்சுடும் இல்லியா?

வேதத்திலேயே என்ன கிடைக்கும்னு சொல்லி இருக்குன்னு பாக்கலாம். எங்கே யக்ஞங்கள் நடை பெறுகின்றனவோ அங்கே உண்மையான பிரார்த்தனையாலும், மந்திர சாமர்த்தியத்தாலும் பின் வருபவை ஏற்படும்.

1. ப்ராம்ஹணன் வம்சத்தில் வேத சாஸ்திரம், அதனுடைய அனுஷ்டானம் (பின் பற்றல்) இவற்றில் ஆர்வம் உள்ளவன் பிறப்பான்.
2. அரச குலத்தில் வீரனும், அம்பு விடுவதில் சாமத்தியம் உள்ளவனும், பல் சூரர்களை காப்பாற்றி தன்னையும் காப்பாற்றி கொள்ளகூடிய ராஜ குமாரன் பிறப்பான்.
3. நன்கு பால் கறக்கும் பசுக்கள்.
4. பாரம் சுமக்கும் காளை.
5. நன்கு ஓடக்கூடிய குதிரை.
6. வலிமை, அழகு மிகுந்த உடலை உடைய ஸ்த்ரீ.
7. ரதத்தில் இருந்து சத்ருக்களை ஜெயிக்ககூடிய வீரன்.
8. இளம் வயதில் நல்ல படிப்பும் புத்தியும் உடைய யுவன்.
9. எல்லா விஷயங்களிலும் வீரனான புத்திரன்.
10. விரும்பும்போது நல்ல மழை.
11. நல்ல பழங்களை உடைய பயிர்கள்.
12. கிடைக்காதவை கை கூடுவதும், கிடைத்ததை நன்றாக அனுபவிப்பதுமான யோக க்ஷேமம்.

முன் காலத்தில் ராஜாக்கள் அச்வ மேதம் செய்யும் போது சொல்லப்பட்ட மந்திரங்கள். இக்காலத்தில் சிராத்தத்தில் அந்தணர்களை இப்படி வேண்டுவதும் அவர்களும் அப்படி ஆகட்டும் என்று சொல்வதாகவும் இருக்கிறது. கேட்பவர்களுக்கும் சொல்கிறவர்களுக்கும் இதன் பொருள் தெரியுமா என்பது சந்தேகமே.

மேலே பாக யக்ஞங்கள் 7.

அஷ்டகா, ஸ்தாலீபாகம், பார்வணம், ஆக்ரஹாயணீ, சைத்ரீ, ஆச்வயுஜீ.

சரூ சமைத்து யக்ஞங்கள் செய்கிறதாலே பாக யக்ஞங்கள். நள பாகம், பீம பாகம்... சரி.
அடுத்த பதிவில் இவற்றை பார்க்கலாம்.

9 comments:

geethasmbsvm6 said...

உள்ளேன் ஐயா!! :))))))

திவாண்ணா said...

ஒத்தர் பிரசென்ட்.
மத்தவங்க எங்கேப்பா? ஓ இன்னிக்கு லீவா? சரி சரி.
:-))

மெளலி (மதுரையம்பதி) said...

nanum ullan ayya chollikaren..:))

Geetha Sambasivam said...

//இக்காலத்தில் சிராத்தத்தில் அந்தணர்களை இப்படி வேண்டுவதும் அவர்களும் அப்படி ஆகட்டும் என்று சொல்வதாகவும் இருக்கிறது. கேட்பவர்களுக்கும் சொல்கிறவர்களுக்கும் இதன் பொருள் தெரியுமா என்பது சந்தேகமே.//

ada????????? appadiyaa? appo athellaam srartha manthiram illai????

திவாண்ணா said...

mauli marked present.
:-)

கீ அக்கா, சிராத்த (note spelling. no r)மந்திரம்ன்னு ஒண்ணும் தனியா இல்லை. எல்லாம் வேத மந்திரங்கள்தான். ச்ரௌத மந்திரங்கள்ன்னு தனியா உண்டு.

Geetha Sambasivam said...

grrrrrrrrr typing mistake illai, r eppadiyo vanthirukku, ippo than parkiren. akave no santhosham! :P

ambi said...

கேட்பவர்களுக்கும் சொல்கிறவர்களுக்கும் இதன் பொருள் தெரியுமா என்பது சந்தேகமே.

Good qstn. :)

//r eppadiyo vanthirukku, ippo than parkiren. //

@geetha paati, எப்படியோ எப்படி r வரும்..? ஏதேனும் பூத கணம் உங்க பக்கத்துல உக்காந்து டைப் பண்ணீயதோ? :p

(ஹிஹி, வசமா சிக்கி இருக்கீங்க இன்னிக்கு.) :)))

மெளலி (மதுரையம்பதி) said...

//ஏதேனும் பூத கணம் உங்க பக்கத்துல உக்காந்து டைப் பண்ணீயதோ//

அம்பி ஆட்டை-கடிச்சு, மாட்டை கடிச்சுன்னு சொல்ற மாதிரி நீங்க கீதாம்மாவை கிண்டலடிச்சது போக, சாம்பு மாமாவையும் விடல்லை போல? :))

திவாண்ணா said...

ம்ம்ம்ம் சரி சரி. கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமா? :-))
சிரார்த்தம் ன்னு எழுதி நிறைய பேர் தப்பு பண்ணறதால அதை சுட்டி காட்டினேன்.