Pages

Wednesday, August 13, 2008

உபாகர்மா/ சந்தேகவிளக்கங்கள்

வருகிற சனிக்கிழமை யஜுர் வேத உபகர்மா வருகிறது.
அதை ஒட்டி சில வார்த்தைகள் சொல்ல தோன்றியது.

முக்கால்வாசி பேர் இந்த கர்மா எதுக்குன்னு கேட்டா "பூணூல் மாத்திக்க" என்று சொல்கிறார்கள்.
அதற்குத்தான் நிறையவே சந்தர்பங்கள் இருக்கே? பூணூல் மாத்திக்க உபாகர்மா வரை காத்திருக்க வேணாமே? எப்போ அது அழுக்கானாலும், நைந்து போனாலும், தீட்டு ஆனாலும் மாத்தத்தானே வேணும்?

அப்ப இந்த கர்மா எதுக்கு?

வேத அத்தியயனம் செய்தவர்கள் இந்த நாளில் திருப்பியும் வேத ஆரம்பம் செய்யணும். அதுதான் இதன் விசேஷம்.

திருப்பியும்?
ஆமாம். திருப்பியும்தான்.

சாதாரணமாக இந்த நாளில் வேத அத்தியயனம் ஆரம்பித்து தை மாதம் உத்சர்ஜனம் - முறைப்படி விட்டு விட வேண்டும். பிறகு காவியம், இலக்கணம் போல மற்ற பாடங்களை படிக்கணும். அடுத்த உபாகர்மா போது திருப்பி ஆரம்பிக்கணும்.

சரி, நான்தான் வேதமே கத்துக்கலையே/ முடிச்சாச்சே என்றால் -
சந்தியா உபாசனையில் வேத மந்திரங்களே வருகின்றன. அது இருந்தால் வேதம் அத்தியயனம் செய்பவனாகவே பொருள்.
வேத அத்தியயனம் வாழ்நாள் பூராவும் செய்ய வேண்டியது. பிரம்ம யக்ஞமாகவாவது சொல்ல வேண்டியது இல்லையா? அதனால் இந்த நாளில் குரு முகமாக அதை புதுப்பித்து கொள்ள வேண்டும்.

நிறைய பேர் வாத்தியாரிடம் பூணூல் வாங்கி வைத்து வீட்டிலேயே போட்டுக்கொள்கிறார்கள். அது சரி, ஆனால் வேத ஆரம்பம் விட்டு போகிறதே? வியாஸ பூஜை செய்து, காண்ட ரிஷிகளுக்கு தர்ப்பணம், ஹோமம் செய்து அதை செய்ய வேண்டுமே! அதை கவனிக்க வேண்டும். சிரத்தை உள்ளவர்கள் முன் ஏற்பாடு செய்து கொண்டு இதை சரியாக செய்வார்களாக.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஜீவா ஒரு கேள்வியை எழுப்பினார்கள். ஜோடி பூணூல் எப்ப மூணாகும்?
பலரும் பல விதமாக சொல்லி கேள்விப்பட்டதால் சாஸ்திரத்தை பாத்துவிட்டு பதில் எழுதலாம் என்று தாமதித்தேன்.

சாதாரணமாக ஒரு ஜோடி பூணூல்தான். பிரம்மசாரி ஒன்று, கிருஹஸ்தன் 2 (ஒரு ஜோடி) வானபிரஸ்தன் 1 என்கிறார் பிருகு.
தேவலர் பிரம்மசாரி ஒன்று, ஸ்நாதகன் 2 (ஒரு ஜோடி) என்கிறார். மேல் வஸ்திரம் இல்லாவிடில் மூன்றாவது என்கிறார்.
ஸ்ம்ருதிசாரத்தில் ஒரு வேதம் கற்றவனுக்கு ஒன்று. அதற்கு மேல் எவ்வளவு வேதம் கற்கிறானோ அவ்வளவு போட்டுக்கொள்ளலாம் என்கிறார்.

{அதாவது ஒருவனுக்கு அவனுடைய சாகை = கிளையை தவிர மற்ற கிளைகளை கற்க அதிகாரம் தன் கிளையை கற்று பூர்த்தி செய்தால்தான் கிடைக்கிறது. உதாரணமாக யஜுர் வேதி தன் வேதத்தை முற்றும் கற்றுவிட்டு அப்புறமாக ரிக் /ஸாம/ அதர்வண வேதங்களை கற்கலாம். நேரடியாக அவற்றை கற்க ஆரம்பிக்ககூடாது. ஒரு கிளை வேதம் கற்று முடிக்கவே 7 வருஷம் ஆகும். முன் காலத்தில் 2 (த்விவேதி), 3 (த்ரிவேதி), 4 (சதுர்வேதி) கற்றவர்கள் உண்டு. சதுர்வேதிமங்கலம் என்று ஒரு ஊரை கேள்வி பட்டு இருப்போமே? அந்த கிராமத்தில் நான்கும் கற்றவர் அதிகம் இருந்ததால்தான் அந்த பெயர்.}

பரத்வாஜரும் கர்மாக்களில் இரண்டு உபவீதம்; மேல் வஸ்திரம் இல்லாவிட்டால் கூடுதலாக இன்னும் ஒன்று என்கிறார்.

சாதாரணமாக உபவீதம் போலவே மேல் வஸ்திரத்தை போட்டுக்கொள்ள வேண்டும். அறியாமையில் எப்படியோ சில இடங்களில், ஆசாரங்களில் மேல் வஸ்திரத்தை இடுப்பில் கட்டுவது வந்து விட்டது. அப்படி இல்லாவிட்டால் மரியாதை குறைவு என்றே நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நாங்கள் பெரிய பேர் வாங்கிய க்ஷேத்திரம் ஒன்றுக்கு போயிருந்தபோது அங்கே தன்வந்திரி ஸந்நிதியில் நான் போட்டிருந்த உத்தரீயத்தை கழட்டி இடுப்பில் சுத்திக்கொள்ள சொன்னார்கள். என்ன செய்வது? இடுப்பில் கட்டிக்கொண்டு சீக்கிரம் வெளியே வந்துவிட்டேன். இந்த மாதிரி தர்ம சங்கடம் ஏற்படாமல் இருக்க 3 வது பூணூல் போட்டுக்கொள்ளலாம். அப்போது மேல் வஸ்திரத்தை நீக்கினாலும் தோஷம் வராது.

ஆக 3 வது என்பது by choice.

9 comments:

ambi said...

ம்ம், சரியான நேரத்தில் இடப்பட்ட பதிவு.

தங்கமணி ஏரியாவுல ஹோமம் எல்லாம் செய்ய முடியுமா?னு தெரியலை.

மெளலி (மதுரையம்பதி) said...

//அது சரி, ஆனால் வேத ஆரம்பம் விட்டு போகிறதே? வியாஸ பூஜை செய்து, காண்ட ரிஷிகளுக்கு தர்ப்பணம், ஹோமம் செய்து அதை செய்ய வேண்டுமே! அதை கவனிக்க வேண்டும். சிரத்தை உள்ளவர்கள் முன் ஏற்பாடு செய்து கொண்டு இதை சரியாக செய்வார்களாக.//

அக்கம் பக்கத்தில் ஒரு குழுவாக சேர்ந்து ஒரு ஆச்சார்யார் வைத்துச் செய்வது வழக்கம்....

ரிஷிதர்பணம் எல்லாம் பண்ணிடலாம், பண்ணிட்டுத்தான் வேதவியாச பூஜை/வேதாரம்பம் பண்ண குழுவிற்கு செல்வோம்...

வியாச பூஜை/ஹோமம் நானே பண்ணலாமா?...பிறகு ஆச்சார்ய தட்சணை தத்தம் பண்ணி குடுப்பது இதற்கு சரிவருமா?...ஏன்னா வேதாரம்பம் ஆச்சார்யான் இல்லாம பண்ணுவது சரியல்லவே?...

மெளலி (மதுரையம்பதி) said...

//தேவலர் பிரம்மசாரி ஒன்று, ஸ்நாதகன் 2 (ஒரு ஜோடி) என்கிறார். மேல் வஸ்திரம் இல்லாவிடில் மூன்றாவது என்கிறார்.//

இது தான் எனக்கும் 3ஆம் ஜோடி போடும் போது சொல்லப்பட்டது.. :)

//சதுர்வேதிமங்கலம் என்று ஒரு ஊரை கேள்வி பட்டு இருப்போமே?//

சதுர் வேதங்களும் கற்றவர்கள் இருக்கும் இடம் சரி...சதுர் வேதங்களும் ஒருவரே கற்றதால் என்பது சரியா? :)

வடக்கே பலர் இன்னும் இப்படி டைட்டில்லுடன் இருக்காங்க...அது அங்கு பரம்பரையில் வரும் சர் நேம் ஆயிடுத்து...வேதங்களை கற்றதை வைத்து எண்ணிக்கையால் வருவதாக இல்லை :(

Raghav said...

விளக்கத்துக்கு மிகவும் நன்றி திவா ஐயா. நானும் பூணூல் மாத்திக்கிறதுக்கு மட்டும் தான்னு நினைச்சிருந்தேன். இப்போ புரியுது.

க்கோவில்களிம் பெருமாள் எதிரில் நாம் தோளில் வஸ்திரத்துடன் ஸேவிக்கக் கூடாது என்று தான் கேள்விப்பட்டுள்ளேன். அர்ச்சகர் ஒருவரே, அதுவும் ஆராதனையின் போதும் சடாரி சாதிக்கும் போதும் தோளில் வஸ்திரம் போட்டிருப்பார். இவற்றிற்கு விளக்கம் தர வேண்டுகிறேன்.

jeevagv said...

முழுநீள விளக்கத்திற்கு மிக்க நன்றி திவா சார். இப்போதான் இவ்வளவு இருக்குன்னு தெரியுது.
'இரண்டுக்குமேல் வேண்டாம்' - இதுக்கு சரியாத்தான் இருக்கும் போல!

மேல் வஸ்திரத்தை இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டியத்தில்லை என்பது ஆறுதல்!

திவாண்ணா said...

Blogger ambi said...

ம்ம், சரியான நேரத்தில் இடப்பட்ட பதிவு.

தங்கமணி ஏரியாவுல ஹோமம் எல்லாம் செய்ய முடியுமா?னு தெரியலை.

~~~ முடியும்னுதான் நினைக்கிறேண் அம்பி.

August 13, 2008 3:28 PM

Blogger மதுரையம்பதி said...

அக்கம் பக்கத்தில் ஒரு குழுவாக சேர்ந்து ஒரு ஆச்சார்யார் வைத்துச் செய்வது வழக்கம்....

=== ஆமாம்.

ரிஷிதர்பணம் எல்லாம் பண்ணிடலாம், பண்ணிட்டுத்தான் வேதவியாச பூஜை/வேதாரம்பம் பண்ண குழுவிற்கு செல்வோம்...

வியாச பூஜை/ஹோமம் நானே பண்ணலாமா?...பிறகு ஆச்சார்ய தட்சணை தத்தம் பண்ணி குடுப்பது இதற்கு சரிவருமா?...ஏன்னா வேதாரம்பம் ஆச்சார்யான் இல்லாம பண்ணுவது சரியல்லவே?...

==சரியில்லைதான். வேறு வழி இல்லாத பட்சத்திலே அவனையே/ அவளையே குருவாய் நினைத்து செய்துடுங்க. செய்யாம இருக்கறதை விட இது மேல்

August 13, 2008 7:52 PM

Blogger மதுரையம்பதி said...

//தேவலர் பிரம்மசாரி ஒன்று, ஸ்நாதகன் 2 (ஒரு ஜோடி) என்கிறார். மேல் வஸ்திரம் இல்லாவிடில் மூன்றாவது என்கிறார்.//

இது தான் எனக்கும் 3ஆம் ஜோடி போடும் போது சொல்லப்பட்டது.. :)

:-))

//சதுர்வேதிமங்கலம் என்று ஒரு ஊரை கேள்வி பட்டு இருப்போமே?//

சதுர் வேதங்களும் கற்றவர்கள் இருக்கும் இடம் சரி...சதுர் வேதங்களும் ஒருவரே கற்றதால் என்பது சரியா? :)

சதுர்வேதி மங்கலம்ன்னுதானே இருக்கு? சதுர்வேத மங்கலம்ன்னு இல்லையே?” அப்ப்டின்னு யோசிச்சேன்.
சரியா தெரியலை. பெரியவா ஏதோ சொல்லி இருக்கிற ஞாபகம். பாக்கணும்.
--
வடக்கே பலர் இன்னும் இப்படி டைட்டில்லுடன் இருக்காங்க...அது அங்கு பரம்பரையில் வரும் சர் நேம் ஆயிடுத்து...வேதங்களை கற்றதை வைத்து எண்ணிக்கையால் வருவதாக இல்லை :(

== ஆமாம். நம்ம ரொம்ப டிஜக்ட் ஆகக்கூகூடாதுன்னா அவங்களை நினைச்சுக்கலாம்! அப்படி இருக்காங்க. காசி போன போது தெரிஞ்சது.

August 13, 2008 7:56 PM

Blogger Raghav said...

விளக்கத்துக்கு மிகவும் நன்றி திவா ஐயா. நானும் பூணூல் மாத்திக்கிறதுக்கு மட்டும் தான்னு நினைச்சிருந்தேன். இப்போ புரியுது.

க்கோவில்களிம் பெருமாள் எதிரில் நாம் தோளில் வஸ்திரத்துடன் ஸேவிக்கக் கூடாது என்று தான் கேள்விப்பட்டுள்ளேன். அர்ச்சகர் ஒருவரே, அதுவும் ஆராதனையின் போதும் சடாரி சாதிக்கும் போதும் தோளில் வஸ்திரம் போட்டிருப்பார். இவற்றிற்கு விளக்கம் தர வேண்டுகிறேன்.

August 13, 2008 8:00 PM

==
வாங்க ராகவ். நல்வரவு.
அவங்க செய்கிற பல செயல்களுக்கு விளக்கம் தெரியலை. நான் பார்த்த வரை இடுப்பிலதான் அவங்க கட்டறாங்க.

Blogger ஜீவா (Jeeva Venkataraman) said...

முழுநீள விளக்கத்திற்கு மிக்க நன்றி திவா சார். இப்போதான் இவ்வளவு இருக்குன்னு தெரியுது.

'இரண்டுக்குமேல் வேண்டாம்' - இதுக்கு சரியாத்தான் இருக்கும் போல!

மேல் வஸ்திரத்தை இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டியத்தில்லை என்பது ஆறுதல்!
== ஜீவா எப்பவுமே சீரியஸான ஆசாமி இல்லைன்னு இப்பதான் தெரியுது.
:-))
என்ன செய்யறது மத்தவங்க முத்திரை குத்திடறாங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இரண்டுக்கு மேல் எப்போதும் வேணாம்! = இப்படித் தெளீவாச் சொன்னாத் தானே புரியுது! :)))

திவா சார்,
முப்புரி நூல் என்கிறார்களே!
"முப்புரி" என்று பாடல்கள் பலவற்றிலும் வருகிறது! முப்புரி=மூன்று என்பது???

திவாண்ணா said...

அடடா! கருடன் விசிட் செய்வது என் பாக்கியம்.
முப்புரி- மூன்று இழைகள். கொஞ்சம் குழப்பமா இதைப்பத்தி சொல்லி இருக்கேன் இங்கே http://anmikam4dumbme.blogspot.com/2008/07/blog-post_31.html

அதாவது ப்ராசஸ் முடிந்த பின் 3 முறுக்கிய நூல்கள் இருக்கும். மூன்றையும் ஒண்ணா சேத்து முடிச்சு போட்டு இருக்கும். அதனால முப்புரி.
ஆனா நீங்க வேற எதோ ஆன்மீக விளக்கம் வெச்சு இருக்கீங்கன்னு தோணுது. நீங்களே சொல்லிடுங்களேன்!
:-))

திவாண்ணா said...

@மௌலி
சதுர் வேதி மங்கலம் என்பது 4 வேதங்களும் பயின்ற வேத விற்பனர்களுக்கு தானமாக அரசர்களால கொடுக்கப்பட்ட கிராமம் என்று தெரியவருகிறது.