Pages

Friday, July 11, 2008

மேலும் விளக்கங்கள்



விளக்கங்களை பின்னூட்டத்திலே வைக்கதான் நினச்சேன்.
ஆனா இது கொஞ்சம் பெரிசா போனதாலே பதிவாக்கிட்டேன்.

கீதா அக்கா கேட்டாங்க:

//மன்வாதி 14
யுகாதிகள் 4
பூர்வேத்யு, அன்வஷ்டகா, அஷ்கா. 12//

யுகாதி:

வைகாசி, வளர்பிறை மூன்றாம் நாள் (த்ருதீயை), - கிருத யுகம் ஆரம்பித்தது.
கார்த்திகை- வளர்பிறை ஒன்பதாம் நாள் (நவமீ) -த்ரேதா யுகம் ஆரம்பித்தது.
பாத்ரபத (புரட்டாசி ) தேய்பிறை பதிமூன்றாம் நாள் (த்ரயோதசீ) - த்வாபர யுகம் ஆரம்பித்தது.
மாக (மாசி) பௌர்ணமி - கலி யுகம் ஆரம்பித்தது.

{சரியா சொல்ல போனா சந்திரனை அடிப்படையா கொண்ட மாதங்களில் கணக்கு. அதாவது தெலுங்கு வருஷ மாத கணக்கு}

இவை யுகாதி.

மன்வாதி = மந்வந்தரங்கள் ஆரம்பித்த தினங்கள்.

[சுக்ல -வளர்பிறை; க்ருஷ்ண – தேய் பிறை. தெரியும்தானே?]
ஆச்வயுஜ (ஐப்பசி) சுக்ல 9
கார்த்திக சுக்ல 12
சைத்ர (சித்திரை) சுக்ல 3
பாத்ரபத (புரட்டாசி) சுக்ல 3
பால்குன (பங்குனி) பௌர்ணமீ
புஷ்ய (தை) சுக்ல 11
ஆஷாட (ஆடி) சுக்ல 10
மாக (மாசி) சுக்ல 7
சிராவண (ஆவணி) க்ருஷ்ண 8
ஆஷாட (ஆடி) பௌர்ணமீ
கார்த்திக பௌர்ணமீ
பால்குன (பங்குனி) பௌர்ணமீ
சைத்ர (சித்திரை) பௌர்ணமீ
ஜ்யேஷ்ட (ஆனி) பௌர்ணமீ

இதெல்லாம் மன்வாதிகள்.

இந்த யுகாதி மன்வாதிகளில் செய்கிற சிராத்தங்கள் 2000 வருஷங்கள் பித்ருக்களை திருப்தி செய்த பலன் தருமாம்.

//பூர்வேத்யு, அன்வஷ்டகா, அஷ்கா. 12. இது கொஞ்சம் இல்லை, நல்லாவே புரியலை, ஆனால் தேய் பிறை அஷ்டமி, முன் திதி, பின் திதியில் செய்யறவங்களைப் பார்த்ததுண்டு. காரணம் தெரியாது. அப்போ ரொம்பச் சின்ன வயசுங்கறதாலே இதெல்லாம் சொல்ல மாட்டாங்க. //

அதுவேதான்.

<<( இதெல்லாம் ஹேமந்த சிசிர ருதுக்கள்ல வருகிற க்ருஷ்ணபக்ஷ அஷ்டமிகள், அதன் முன் திதி, பின் திதி. )>>

இப்படி சொல்லி இருக்கேன்.
ஆ, புரியுது.
க்ருஷ்ணபக்ஷம்ன்னு சொல்கிறதுக்கு பதில் தேய்பிறைன்னு சொல்லி இருக்கலாம். இதுதானே சொல்ல வந்தீங்க? அப்புறம் மாசங்களும் மார்கழி, தை, மாசி, பங்குனி ன்னு சொல்லி இருக்கலாம். ரைட்!

//மஹாலய பக்ஷம் 15//
இது ஓகே, நல்லாவே தெரியும்,

:-)

//வ்யதீபாதம் 12
வைத்ருதி 12//

இது புரியலை! //

இதை விளக்குவது கொஞ்சம் கஷ்டம். (ஏன்னா தெரியாதுன்னு அர்த்தம்! :-)
பஞ்சாங்கத்தை பாத்தால் இதை குறிச்சு இருப்பாங்க.
7-7-2008 அன்னிக்கு வ்யதீ. சிரா ன்னு போட்டு இருக்கும். அது வ்யதீபாத சிராத்தம்.17-7-2008 வை.சிரா. இது வைத்ருதி சிராத்த நாள். திருப்பி 2-8-2008 வ்யதீபாதம்.ள்
--
சேர்ப்பு:
சூரிய கதி (நகர்வு) சந்திர கதி இரண்டையும் ஸ்பிரிங்க் ஈக்வினாக்ஸ் லேந்து கணக்கிட்டு இரண்டின் லாங்ஜிட்யூடையும் கூட்டி கூட்டுத்தொகை 180 டிகிரியா இல்லை 360 டிகிரியா என்பதை பொருத்து வ்யதீபாதம், வைத்ருதி இரண்டும் கணக்கு போடறாங்க.
அப்பாடா! ரொம்பவே தெளிவாயிடுச்சு!
:-)))))))


10 comments:

ambi said...

நானும் சும்மானாச்சுக்கும் இது தெரியலை, அது தெரியலைன்னு பின்னூட்டம் போட்ருக்கனும். நான் கேட்ட கேள்விக்கு பின்னூட்டத்திலேயே பதிலே இல்லை. :(

ஹலோ கீதா மேடம், சரியா ஒரு மாசம் கழிச்சு நான் இந்த பதிவுலேருந்து டெஸ்ட் வைப்பேன். அப்ப இருக்கு உங்களுக்கு! (அப்படின்னு திவா சார் மனசுல நினைக்கிறார்)

Geetha Sambasivam said...

//ஹலோ கீதா மேடம், சரியா ஒரு மாசம் கழிச்சு நான் இந்த பதிவுலேருந்து டெஸ்ட் வைப்பேன். அப்ப இருக்கு உங்களுக்கு! (அப்படின்னு திவா சார் மனசுல நினைக்கிறார்)//

@அம்பி, இப்போவே பாஸாயிட்டேன், உங்க கேள்விக்கு போன பதிவிலே கேட்டதுக்கு பதில் சொல்லி இருக்கேனே? போய்ப் பாருங்க! :P

திவாண்ணா said...
This comment has been removed by the author.
திவாண்ணா said...

:-))
அம்பி இப்படி பயங்கரமான ஒரு கேள்வி கேட்டுட்டு பதில காணோம்னா என்ன பண்ணறது?

கயால யார் வேணா யாருக்கும் பிண்டம் போடலாம். தனக்கு தானே ஆத்ம பிண்டம்னு போடலாம். ஆனா இது சிராத்தத்துக்கு பதிலான்னு சொல்ல தெரியலே.
லாஜிகலா வர கெள்வி அப்ப பிள்ளை/ தாயாதி இல்லாதவங்க கதி என்னன்னு கேட்டா விசாரிச்சு சொல்லணும் இல்லையா?

அதனால கொஞ்சம் வாய்தா வாங்கிக்கறேன்.

ஆமா இப்பதானே குழந்தை பிறந்தது? அப்புறம் என்ன யோசனை?
இவன் எங்கே பண்ணப் போறான்னு நினைப்பா?
:-)

மெளலி (மதுரையம்பதி) said...

நல்லாவே விளக்கிட்டீங்க திவாண்ணா..

மெளலி (மதுரையம்பதி) said...

//வ்யதீபாதம் 12
வைத்ருதி 12//

அப்பறமா வந்து எனக்கு தெரிஞ்சத சொல்றேன் :))

geethasmbsvm6 said...

//பொருத்து வ்யதீபாதம், வைத்ருதி இரண்டும் கணக்கு போடறாங்க.
அப்பாடா! ரொம்பவே தெளிவாயிடுச்சு!
:-)))))))//

rombave theliva irukku! :P :P

ambi said...

//இவன் எங்கே பண்ணப் போறான்னு நினைப்பா?
//

:)))


என்ன மறுபடியும் உங்க வீட்டு பக்கத்துல குழாய் போடறாங்களா? :p

திவாண்ணா said...

அம்பி, தண்ணீ வராத குழாய் போட்டு 4 வருஷம் ஆச்சு.
இப்ப வடிநீர் வாய்க்கால் தோண்டறாங்க.
இதோட 4 வது தரம் கேபிளை வெட்டி இருக்காங்க. இன்னும் எவ்வளோ இருக்கோ!
பேசாம பெர்மெனண்டா ஒரு பதிவு போட்டுடலாம்னு இருக்கேன். - "கேபிளை வெட்டி விட்டதால் இணையம் இல்லை. மன்னிக்க!" இணையம் கிடக்கலேன்னா தானா பப்ளிஷ் ஆயிடும்.
:-))
கொஞ்சம் வேலை இன்னும் இருக்கு.
மாலை பதிவு போட்டுடுவேன். மத்த கேள்விகளுக்கு வந்து பதில் சொல்றேன்.

திவாண்ணா said...

//அப்பறமா வந்து எனக்கு தெரிஞ்சத சொல்றேன்//
இன்னும் காத்துகிட்டு இருக்கேன்.