Pages

Friday, June 27, 2008

உணவு உண்ணல்


சரி சாப்பிட உக்காரலாமா?

உணவு உண்ணல்

அட, இது எப்படி கர்மால சேத்தி?

எப்படி கர்மால சேத்தின்னு யோசனை செய்யறீங்களா?
உண்பது பிராண அக்னி ஹோத்திரம்ன்னு சொல்கிறாங்க.

கை கால்கள் வாய் இவற்றை சுத்தம் செய்துகிட்டுதான் சாப்பிட உக்காரணும்.சாதாரணமாக இரண்டு வேளை சாப்பாடு சாஸ்திர சம்மதம்.
சந்தோஷமா சாப்பிடணும். கோபத்தோடயோ சண்டை போட்டுக்கிட்டோ சாப்பிட உக்காரக்கூடாது.

மற்றவர்களுக்கு உணவிட்ட பின்னே ஆசமனம் செய்து / நீர் அருந்தி விட்டு ஏகாந்தமாக அமரணும்; குறிப்பா அதிகமா சாப்பிடுகிறவர்கள். கால்கள் பூமியில் படுகிற மாதிரி உக்கரணும். மேல் துணி இருக்கணும்.
உட்காருகிற ஆசனம் மண்ணாலோ, பலாசத்தாலோ, இரும்பாலோ செய்ததா இருக்ககூடாது. பிளவு பட்டு இருக்கக்கூடாது.
தட்டு போடுகிற இடத்தை சுத்தம் செய்யணும்.

தட்டு தங்கம் (ஆஹா! அப்படி கொடுத்து வெச்சவங்க யாரும் உண்டா?!) வெள்ளி, வெண்கலம் (கிருஹஸ்தர்கள் மட்டும்) ஆகியவற்றில் இருக்கலாம். வாழை இலை மிக உசிதமானது. புரச இலை தாமரை இலை இவற்றை கிருஹஸ்தர் தவிர மத்தவங்க உபயோகிக்கலாம். (இந்த தையல் இலை என்கிறது புரச இலைகளால தைத்ததுதான்.)
இரும்பு (stainless steel), மண் பாத்திரம் (ceramic plate), உடைந்த பாத்திரம் இதெல்லாம் தவிர்க்கணும்.

அன்னம் பரிமாரிய பின் நீரால அதை பிரதக்ஷிணம் செய்து சற்று தெளிக்கணும். பரிசேஷணம் குல ஆசாரம். அதற்கு தனித்தனியாகவே நீரை எடுக்கணும். ஒரு உள்ளங்கை நீர் எடுத்து 3 சுத்து சுத்தி ப்ரோக்ஷணம் செய்வது கூடாது.
மற்றவர் நீர் ஊற்ற உள்ளங்கையில் கொஞ்சம் நீர் வாங்கிக்கொண்டு பருக வேண்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக நெய் கலந்த அன்னத்தை பல் படாம 5 பிராணன்களுக்கு ஆஹுதியாக விழுங்க வேண்டும்.
திரும்பியும் கொஞ்சம் நீர் வாங்கிக்கொண்டு பருக வேண்டும்.

அப்பாடா இப்ப சாப்பிடலாமா?


கொஞ்சம் இருங்க, கொஞ்சம் அன்னத்தை எடுத்து தர்மராஜனுக்கு, சித்ரகுப்தனுக்கு, பிரேதங்களுக்கு என்று பலி வைக்க வேண்டும்.
அன்னத்தை வணங்கிய பின்னே சாப்பிட ஆரம்பிக்கலாம். சாப்பிடுகிறபோது அன்னத்தை இறைக்ககூடாது; திட்டக்கூடாது. “அன்னம் ந நிந்த்யாத்" என்பது உபநிஷத் வாக்கியம்.

மௌனமாகவே சாப்பிடணும். பேசிக்கொண்டே சாப்பிடுகிறவன் வாழ் நாளை ம்ருத்யு கொண்டு போகிறானாம். ஆனால் கிருஹஸ்தன் அவன் கூட சாப்பிடறவங்க இருந்தா, அவங்களை உபசரிப்பதற்காக பேசலாமாம். "அடியே, பக்கத்து இலைக்கு இன்னும் கொஞ்சம் பாயஸம்" என்பது போல சொல்லாம்! போடுகிற பதார்த்தங்களை வேண்டாம் என்றோ, போதும் என்றோ சொல்ல பேசலாம்.


18 comments:

Kavinaya said...

அழகா விளக்கறீங்க. இதெல்லாம் படிக்கும்போது ஏன் நாம நல்ல விஷயங்களெல்லாம் மறந்துட்டோம்கிற ஏக்கம் ஏற்படுது.

திவாண்ணா said...

வாங்க கவி! நல்வரவு!
இந்த விஷயங்கள்ல நம்பிக்கை இல்லாம போச்சோன்னு தோணுது.இல்லாட்டா அதிதி உபசாரம் என்கிற அழகான பண்பை மறந்து இருப்போமா? எப்படி மனிதர்கள் தைரியமா காசி யாத்திரை எல்லம் அந்த காலத்துல செஞ்சாங்கன்னு ஆச்சரியப்பட்டதுண்டு. இந்த பண்புகள் வளர்ந்து இருந்த காலம்... பிரச்சினையே இருந்து இருக்காது!அது இப்பதான் தெரியுது.

sury siva said...

அன்னம் ச பிரும்மா, அஹம் ச பிரும்மா, போக்தா ச பிரும்மா
என்ற சொல்படியே அன்னத்தை பிரும்மனாக நினைக்கவேண்டும்
என்பதால் அன்னம் ந நிந்த்யாத் என்ற உங்களது மேற்கோள்
மிகவும் தெளிவாக இருக்கிறது.

அதிதிகள் உபாசனை செய்கையில் பல ஊர்களில் பலவிதமான்
சம்பிரதாயங்கள் காணப்படுகின்றன். இதற்கான விவரங்கள் அளிப்பதுடன்
அதற்குப்பின்னால் உள்ள rationale ம் தங்கள் வாயிலாக‌
அறிந்து கொள்ள ஆவல்.

இந்த போஜனம் செய்விக்கும்போது, காலையில், மாலையில், இரவில்
எந்த திசையைப் பார்த்து அதிதிகள் அமரவேண்டும், வாழை இலையை நுனி
எப்பக்கம் இருக்கவேண்டும், தீர்த்த பாத்திரம் எந்தப்பக்கம் இருக்க‌
வேண்டும், எந்த திசையில் உள்ள இலையிலிருந்து, எந்தப்பக்கத்திலிருந்து பரிமாற ஆரம்பிக்கவேண்டும்,
முதலில் என்ன பரிமாற வேண்டும்,இலையில் எந்த இடத்தில் முதலில்
எதை பரிமாற வேண்டும், எதுவரை பரிமாறிய பிறகு தான்
பரிசேஷணம் செய்யவேண்டும், சற்று நெய் ஏன் ஊற்றியபின்,
தீர்த்தம் உள்ளங்கையில் ( அதுவும் எப்படி ) வாங்கிக் கொள்கிறார்கள்,
என்பதுடன், ஸ்மார்த்த ஸம்பிரதாயம், வைஷ்ணவ சம்பிரதாயத்தில்
வடகலை, தென்கலை சம்பிரதாயங்களில் ஏன் பரிமாறுவதில் கூட‌
வித்தியாசம் இருக்கிறது ? ( தென்கலையில் சாதத்தை தான் முதலில்
வெறும் இலையில் போடுகிறார்கள். ) ஸ்மார்த்தர்கள் வீட்டில் வெறும்
இலையில் அன்னத்தை வைத்தால் அபராதம். சாப்பிடும்போது பேசக்கூடாது
என்பதால், உப்பு குறைவாக இருக்குமோ என்ற பயத்தில், சிறிது உப்பை
இலையில் வைக்கிறார்களே ! அது இலையில் எந்த இடத்தில் வைக்க‌
வேண்டும் !
சாப்பிட்டு முடிக்கும்போது, யார் முதலில் எழுந்திருக்கவேண்டும்? அப்படி
தப்பிப் போய் ஒருவன் எழுந்துவிட்டால் என்ன பிராயச்சித்தம் ?
ஏன் ! அதற்கு முன்னால், அதிதி, மோர் (தயிர்) சாதம் சாப்பிட்ட பின்பும்
சாதத்தைக் கொண்டுவரவேண்டும், அதிதிகள் வேண்டாம் எனச்
சொல்லவேண்டும் என்கிறார்கள். கடைசியில் அதிதிகள் என்ன‌
சொல்லி சாப்பாடை முடிக்கவேண்டும் ?

சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்போது, தீட்டு சமாசாரம் ஒன்று
காதில் பட்டுவிட்டால், மேற்கொண்டு சாப்பிடலாமா ?

போஜனத்துக்குப் பிறகு சொல்லவேண்டிய மந்திரங்கள் என்ன ?
தாம்பூலத்துடன் தக்ஷிணையும் தரவேண்டும் என்கிறார்களே !
எத்தனை என்று ஒரு வரை இருக்கிறதா ? சிலர் (முக்கியமாக‌
எங்களை மாதிரி தஞ்சாவூர் ஜில்லாக்காரர்கள் ) துளசியுடன் சேர்த்துத்
தான் தக்ஷிணை கொடுக்கவேண்டும் என்கிறார்களே ?
இதையெல்லாம் கொஞ்சம் விளக்கமாக‌ச் சொன்னால்
நன்றியுள்ளவனாக இருப்பேன்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

anyway
yatha sowharyam thushadhwam
enru thaan naan en athithikalidam sollukiren.
athithikal kitte vambu pannakoodathu illaya.

சுப்பு ரத்தினம்.

sury siva said...

முக்கியமாக, ஒன்று எழுத மறந்துவிட்டேன்.

என்றைக்குமே ஒரு விருந்தினரோடு கூடவாவது தான் சாப்பிடவேண்டும்.
அதாவது, குடும்பத்தைச் சாராத ஒருவரோடு. என்று சொல்கிறார்கள்.

மேலும் அதிதி என்று சொல்வதே திதிகளில் ( ஸ்ரார்த்தம் போன்ற
பித்ரு கார்ய திதிகளிலும் சதுர்த்தி, ஷஷ்டி, துவாதசி போன்ற திதிகளிலும்)
நாம் எதிர்பார்க்காத வரும் நபரைத்தான் என்கிறார்கள்.
சாப்பிடும்போது வாசலில் பவதி பிக்ஷாம் தேஹி என்று சொல்லியோ
சொல்லாமலோ ஒருவன் வந்துவிட்டால் அவனை ஆச்ரயித்து
கால் அலம்பி, அமரச்செய்து போஜனம் செய்விக்கவேண்டுமாம்.
அதிதி தேவோ பவ என்று இதற்குத்தான் அர்த்தம் என்கிறார்கள்.

சில வீடுகளில் அதிதிக்கு ஒரு வாழை இலைக்குமேல் இன்னொரு
வாழை இலையும் முன் பாகத்தில் போடுகிறார்கள். இதன்
தாத்பர்யம் என்ன ?

பித்ருக்கள் தினத்தன்று கோவில் பிரசாதம், தேவர்களுக்கு பூஜை செய்த பிரசாதம்
பொதுவாக சாப்பிடுவதில்லையே ? ஏன் ?

ஒன்றுமில்லை. இதெல்லாம் நான் சொன்னால் எந்த புஸ்தகத்தில் போட்டு
இருக்குன்னு இந்தக்காலத்துப் பேர் கேட்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு அதாரிட்டி வேணும் என்கிறார்கள். யாரேனும் புஸ்தகம்
போட்டு இருந்தாலும் சொல்லவும்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

geethasmbsvm6 said...

//அடியே, பக்கத்து இலைக்கு இன்னும் கொஞ்சம் பாயஸம்" என்பது போல சொல்லாம்! போடுகிற பதார்த்தங்களை வேண்டாம் என்றோ, போதும்//

பால் பாயாசம்??? நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய மு.ப. போட்ட வெல்லப் பாயாசம்??? எதுனு புரியலையே??? :P

போகட்டும், எங்க பெரியப்பா, சாப்பிடும்போது பேச மாட்டார், வேணுமா, வேணாமா என்பது கூட சைகை தான்,தலை ஆட்டல் தான்!!! சாப்பிட்டு எழுந்திருக்கும்போது, தினமுமே, வீட்டில் சாப்பிட்டாலுமே, "அன்னதாதா சுகீ பவ!" என்று வாழ்த்த மட்டுமே வாய் திறப்பார்.

geethasmbsvm6 said...

//தட்டு தங்கம் (ஆஹா! அப்படி கொடுத்து வெச்சவங்க யாரும் உண்டா?!) வெள்ளி, வெண்கலம் (கிருஹஸ்தர்கள் மட்டும்) ஆகியவற்றில் இருக்கலாம். வாழை இலை மிக உசிதமானது.//

ஹிஹிஹி, மீண்டும் பெரியப்பா, ஆனால் இவர் எல்லாருக்கும் மூத்தவர், எங்க அப்பாவுக்கும் இவருக்கும் 22 வயசு வித்தியாசம், இந்தப் பெரியப்பா தங்கத் தட்டில் சாப்பிட்டதாய் அப்பா, பெரியம்மா, பெரியப்பா எல்லாருமே சொல்லிக் கேட்டிருக்கேன், நாங்க பார்க்கும்போது வாழை இலையில் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்,

இளம்பச்சை நிற வாழை இலையில் வெள்ளை வெளேர் என சாதத்தைப் போட்டு, மஞ்சள் கலரில் பருப்பையும் போட்டு, நெய்யும் ஊற்றிச் சாப்பிட்டால் அந்தச் சுவையே தனிதான்.:))))))))

paattiennasolkiral said...

geethasmbsvm6 said

//இளம்பச்சை நிற வாழை இலையில் வெள்ளை வெளேர் என சாதத்தைப் போட்டு, மஞ்சள் கலரில் பருப்பையும் போட்டு, நெய்யும் ஊற்றிச் சாப்பிட்டால் அந்தச் சுவையே தனிதான்.:))))))))//

கல்யாணம் ஆகிவந்த புதிதில் என் மாமியார் செய்த பருப்புஞ்சாதம்
எனக்கும் பழக்கமாகிப் போய் எனது மூத்த மகனுக்கும் அதுதான்
பிடிக்கும் என்று கடந்த 40 வருடமாக இருக்கிறது.

சுடற சாதத்தை வெண்ணையாப் பிசைஞ்சு ( ஆத்திலேயே இடிச்ச )நல்ல மஞ்சள் தூள்
போட்டு, (ஆள் காட்டி விரல்லே தொட்டா ஒட்டிக்கிற அளவு உப்பு இட்டு ) வெண்ணை வாங்கி காய்ச்சின நெய்யில் சற்று விட்டு, சின்னச் சின்ன உருண்டையாப் பண்ணி, மடிலே வச்சுகின்டு, தன்னோட பேரனுக்கு
ஊட்டுவார் பாருங்கோ எங்க மாமியார் ! இரண்டு உருண்டை தட்டிலே பாக்கி
இருக்கும் அதை எங்கிட்ட தந்து விடுவார். அத வாயிலே போட்டுப் பார்ப்பேன்
பாருங்கோ ! அமிருதம் என்றால் அது தான் அமிருதம்.

மீனாட்சி பாட்டி.
தஞ்சை.

திவாண்ணா said...

// பால் பாயாசம்??? நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய மு.ப. போட்ட வெல்லப் பாயாசம்??? எதுனு புரியலையே??? :P//


சௌகரியம் போலதான்!

// போகட்டும், எங்க பெரியப்பா, சாப்பிடும்போது பேச மாட்டார், வேணுமா, வேணாமா என்பது கூட சைகை தான்,தலை ஆட்டல் தான்!!! சாப்பிட்டு எழுந்திருக்கும்போது, தினமுமே, வீட்டில் சாப்பிட்டாலுமே, "அன்னதாதா சுகீ பவ!" என்று வாழ்த்த மட்டுமே வாய் திறப்பார்.//

பெரியவர்களைப்பாத்து கத்துக் கொள்ள வேண்டியது நிறையவே இருக்கு!

திவாண்ணா said...

//இந்தப் பெரியப்பா தங்கத் தட்டில் சாப்பிட்டதாய் அப்பா, பெரியம்மா, பெரியப்பா எல்லாருமே சொல்லிக் கேட்டிருக்கேன்,//

பரவாயில்லையே! நான் கேள்வி பட்டது கூட கிடையாது.

திவாண்ணா said...

கீ அக்கா, மீ பாட்டி,

இந்த மாதிரி எல்லாம் ஜொள்ளு விட வெச்சா கூடவே ஒரு பாட்டில் ஜெயுசில் அனுப்பணும், தெரியுமா?

திவாண்ணா said...

சூரி சார் 20- 20 மாதிரி ஒரேயடியா போட்டு தாக்கிட்டார்.
பதில் சொல்ல முயற்சி செய்கிறேன்.
கொஞ்சம் நேரமாகும்.
இத்தனையும் பதிவில் போட்டா எல்லாரும் ஓடிப்போயிடுவாங்க. :-))
இந்த இடமே நல்லது.

திவாண்ணா said...

மேலும் அதிதி என்று சொல்வதே திதிகளில் ( ஸ்ரார்த்தம் போன்ற
பித்ரு கார்ய திதிகளிலும் சதுர்த்தி, ஷஷ்டி, துவாதசி போன்ற திதிகளிலும்)
...
அதிதி தேவோ பவ என்று இதற்குத்தான் அர்த்தம் என்கிறார்கள்.
==
அதிதி பூஜை நித்திய கர்மா. குறிப்பிட்ட திதிகளுக்கும் இதற்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும்?
---

சில வீடுகளில் அதிதிக்கு ஒரு வாழை இலைக்குமேல் இன்னொரு
வாழை இலையும் முன் பாகத்தில் போடுகிறார்கள். இதன்
தாத்பர்யம் என்ன ?
--
அந்த காலத்தில் 5 இலைகள் போட்டு பறிமாறுவார்கள். அன்னத்திற்கு ஒன்று காய்கறிக்கு ஒன்று பக்ஷணங்களுக்கு ஒன்று என்று விபாகம் உண்டு. இப்போது ஒரு இலை சாப்பாடே நம்மால் சாப்பிட்டு ஜீரணம் செய்ய முடியவில்லை!
==

பித்ருக்கள் தினத்தன்று கோவில் பிரசாதம், தேவர்களுக்கு பூஜை செய்த பிரசாதம்
பொதுவாக சாப்பிடுவதில்லையே ? ஏன் ?
--
சிரார்த்த உணவுக்கு பின் அடுத்த நாள் வரை உணவு ஏதும் உட்கொள்ளக்கூடாது என்பதால் இருக்கலாம்.
சிரார்த்தம் முடிந்த பின் தேவ பூஜை செய்தே தான் உண்வு கொள்ளலாகும்.
==

ஒன்றுமில்லை. இதெல்லாம் நான் சொன்னால் எந்த புஸ்தகத்தில் போட்டு
இருக்குன்னு இந்தக்காலத்துப் பேர் கேட்கிறார்கள்.
--
வைத்திய நாத தீக்ஷிதீயத்தில் ஆஹ்ணிக காண்டத்தில் இரண்டாம் பாகத்தில் இருப்பதாக சொல்லுங்கள். அதை ரெபர் பண்ணிதான் எழுதுகிறேன்.
===========
அவர்களுக்கு ஒரு அதாரிட்டி வேணும் என்கிறார்கள். யாரேனும் புஸ்தகம்
போட்டு இருந்தாலும் சொல்லவும்.

சம்க்ஷேப தர்ம சாஸ்திரம் - ஆனால் அவ்வளவு விரிவாக இல்லை.

திவாண்ணா said...

சூரி சாரின் கேள்விகளுக்கு விடுபட்டு போனவை அனேகமாக அடுத்த பதிவுகளில் வந்து விடும். இல்லாவிட்டால் மீண்டும் இங்கே பதிப்பேன்.

paattiennasolkiral said...

// இந்த மாதிரி எல்லாம் ஜொள்ளு விட வெச்சா கூடவே
ஒரு பாட்டில் ஜெயுசில் அனுப்பணும்,//

ஜொள்ளுன்னா என்ன ? புரியல்லையே !
ஜெயுசில் நா என்ன ? அதுவும் தெரியல்லையே ?
ஒரு வேளை ஜெலுஸில்லைத்தான் ஜெயூசில் அப்படின்னு
மிஸ் ஸ்பெல் பண்றேளோ ?

பருப்புஞ்சாதம் குழந்தைகளுக்கு ரொம்ப முக்கியம்.
அந்தக் காலத்துலே எடுத்த உடனே சாம்பார் சாதம்னு
கிடையாது. எடுத்த உடனே பருப்புஞ்சாதம் தான். இப்ப‌
பேருக்கு தான் பருப்புன்னு அரை ஸ்பூன் வலது கை ஓரமா
கண்ணுக்கு கூட தெரியாம வைக்கறா !

பருப்புஞ்சாதம் நல்ல ப்ரோடின் சத்து . நீங்க கேட்டதில்லையா ?
குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி . இப்பவும் ப்ரோடின் சத்து
குறைஞ்சுடுச்சுன்னா என்ன காரணம் ? சாம்பார்லே கூட‌
பருப்பு கிடையாது. ஏதோ சாப்பிடறோம்.

இந்த விலைவாசிலே பருப்பு சாதம் கூட ஒரு ராஜா வீட்டிலே
தான் பண்ண முடியும்னா ஆகிவிட்டது ! என்ன பண்றது !
நிஜத்தை நான் சொன்னா
ஏதோ ஜொள்ளாம் ( என்ன அதுன்னு தெரியல்ல )

மீனாட்சி பாட்டி. ( வயது 67 )
தஞ்சை.

திவாண்ணா said...

ஹிஹி அதேதான் பாட்டி, தட்டச்சறப்ப தப்பா விழுந்துடிச்சி!
அந்த காலத்து உணவு பழக்கம் ரொம்பவே ஆரோக்யம்; சரிதான்.
திவா 54

geethasmbsvm6 said...

//சிரார்த்த உணவுக்கு பின் அடுத்த நாள் வரை உணவு ஏதும் உட்கொள்ளக்கூடாது என்பதால் இருக்கலாம்.
சிரார்த்தம் முடிந்த பின் தேவ பூஜை செய்தே தான் உண்வு கொள்ளலாகும்.//

இது கடைப்பிடிக்கின்றோம், எங்க குடும்பங்களில் இன்றும்.
==

geethasmbsvm6 said...

//ஹிஹி அதேதான் பாட்டி, தட்டச்சறப்ப தப்பா விழுந்துடிச்சி!//

தட்டச்சறப்ப "எப்பவுமே"னு சேர்த்திருக்கணும்!! :P

அந்த காலத்து உணவு பழக்கம் ரொம்பவே ஆரோக்யம்; சரிதான்.
//திவா 54//

நம்பிட்டோம்ல!!!!!! :P

திவாண்ணா said...

geethasmbsvm6 said.....
GRRRRRRRRR