Pages

Wednesday, June 25, 2008

அதிதி



அடுத்து மனுஷ்யயக்ஞம். அதாவது மனிதர்களுக்கு உணவளிக்கிறது. யாரும் வராங்களான்னு பால் கறக்கிற அவகாசம் வாசல்ல பாக்கணுமாம். அதிதி யாரும் கிடைத்தால் அத்ருஷ்டம். இல்லையானா இன்னைக்கு பாக்கியம் இல்லையேன்னு வருந்திவிட்டு சாப்பிட போகலாம்.

அந்த காலத்தில மக்கள் என்ன மாதிரி மனசோட இருந்திருக்காங்கன்னு தெரிய வரப்ப ஆச்சரியமா இருக்கு.

அதிதி என்பது யாருன்னா "அலோ! உங்க வீட்ல இன்னிக்கு சாப்பிட வரேன். உருளை கிழங்கு பொடிமாஸ் பண்ணி வைங்க" ன்னு சொல்லிட்டு வரவர் இல்ல. நெடும் தூரம் நடந்து களைத்தவன், அப்படின்னு ஆரம்பிச்சு ஒரு பட்டியலே இருக்குங்க. சுருக்கமா சொன்னா முன்ன பின்ன தெரியாத தகுதியான நபருக்கு உணவிடணும். சாப்பாட்டை பத்தி பிரச்சினையே இல்லைங்கிறது போது பல சமூக பிரச்சினைகள் வராதே.

இன்ன ஜாதியார்தான் அதிதி என்றும் இல்லை. வீட்டு ஆசார அனுஷ்டானங்களை ஒட்டி இலையை வேறு இடத்துல போட்டாலும் போடலாம், போடாம இருக்கக்கூடாது.
அந்தணர்களாக இருந்தா அதிதி பூஜையும் செய்வது உண்டு.

யதிகள் (சன்னியாசிகள்), பிரம்மசாரிகள், பிரவாசிகள் (யாத்திரையில் இருப்பவர்), தரித்திரமாக இருக்கிறார்களோ அவர்கள், இவர்கள் எல்லாம் பிக்ஷை பெற தகுதி உள்ளவர்கள். (அக்னியை பயன்படுத்தக்கூடாத) சன்னியாசிகளுக்கும், பிரம்மசாரிகளுக்கும் அன்னமாகவும், கிருஹஸ்தர்களுக்கு அரிசியாகவும் பிக்ஷை இடவேண்டும்.

அதிதிகள், வீட்டு பெரியவர்கள், சிறுவர்கள், சுவாசினி எனப்படும் திருமணமான பேரிளம் பெண்கள்.கர்ப்பிணிகள்.உடல்நிலை சரியில்லாதவர்கள், வீட்டு வேலைகாரர்கள் இவர்களுக்கு எல்லாம் உணவு போட்டு விட்டுதான் வீட்டு யஜமானன் சாப்பிடணும்.

8 comments:

geethasmbsvm6 said...

//அதிதி என்பது யாருன்னா "அலோ! உங்க வீட்ல இன்னிக்கு சாப்பிட வரேன். உருளை கிழங்கு பொடிமாஸ் பண்ணி வைங்க" ன்னு சொல்லிட்டு வரவர் இல்ல.//

இப்படிச் சொல்லிட்டீங்களே???? :)))))))

ambi said...

//பிரம்மசாரிகளுக்கும் அன்னமாகவும், கிருஹஸ்தர்களுக்கு அரிசியாகவும் பிக்ஷை இடவேண்டும்.
//

ஏன் கிரஹஸ்தர்களுக்கும் அரிசி தானா..? புதசெவி.

ஆக உங்களுக்கு உருளை பொடிமாஸ் பிடிக்கும்னு தெரிஞ்சு போச்சு. :))

ambi said...

அதிதிகளுக்கு எப்படி உணவு பறிமாற வேணும்? என்பதையும் எழுதலாமே.

உதாரணமா பக்கத்து கடையிலிருந்து இட்லி எல்லாம் வாங்கி வர கூடாது. அவங்களே சமைச்சு தான் பறிமாறனும். :))

பறிமாறும் போது ஸ்த்ரீகள் தலையை கட்டி(பின்னி) இருக்கனும்.

நமது இலையில் பறிமாறபடும் உபகரனங்கள் பட கூடாது.

மேலே நீங்க சொல்லுங்க.

Unknown said...

அதிதி தேவோ பவ. உங்க வீட்டுக்கு எப்போ சாப்பாட்டுக்கு வர(நான் ஒரு பிரம்மச்சாரி)

மெளலி (மதுரையம்பதி) said...

வீக் எண்ட்-ல நான் உங்களைப் பார்க்க வந்தா அரிசிதானா?...அட ராமா! :)

திவாண்ணா said...

@மௌலி
மேலே அம்பிக்கும் ஜெய்க்கும் சொன்ன பதிலேதான் உங்களுக்கும்.

geethasmbsvm6 said...

//@மௌலி
மேலே அம்பிக்கும் ஜெய்க்கும் சொன்ன பதிலேதான் உங்களுக்கும்.//

என்ன பதில் சொல்லி இருக்கீங்கனு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்!!!

திவாண்ணா said...

//இப்படிச் சொல்லிட்டீங்களே???? :)))))))//

கவலைப்படாதீங்க!
சொல்லிட்டு வந்தாலும் உணவிடணும். அப்படி வரவங்களுக்கு பேர் "அப்யாகதன்."

@அம்பி
// ஏன் கிரஹஸ்தர்களுக்கும் அரிசி தானா..? //

அது வறுமையில் வாடும் கிருஹஸ்தர்கள்/ உறவினர் ஊரிலேயே இருப்பாங்க இல்லையா, அவங்களுக்கு. வீட்டுல சமைச்சு சாப்பிடணும்னு பொருள். கவலைபடாதீங்க. நீங்க அதிதியாவோ அப்யாகதனாயோ அம்பத்தூர் போனாலும் கடலூர் வந்தாலும் சாப்பாடேதான் கிடைக்கும்.
:-))
//அதிதிகளுக்கு எப்படி உணவு பறிமாற வேணும்? என்பதையும் எழுதலாமே.//

உ.கு இல்லையே? :-))
விஷ் லிஸ்ட்.

//ஆக உங்களுக்கு உருளை பொடிமாஸ் பிடிக்கும்னு தெரிஞ்சு போச்சு. :)) //

அம்பி அது ஒரு காலம்!
இப்பல்லாம் வயத்தை கெடுக்காத சாத்வீக சாப்படு கிடைச்சாலே போதும்னு இருக்கு. :-))

@ ஜெய்சங்கர்
கடலூருக்கு எப்ப வேணா வாங்க. நீங்க பிரம்மசாரியானாலும் காலத்தை ஒட்டி வீட்டிலேயே சாப்பாடு போட்டுடுவேன்.!