Pages

Friday, June 20, 2008

வேலை



பிறகு ஜீவனத்துக்கு பொருள் சேக்க போகணும்.

அப்பாடா இதுக்கெல்லாம் நேரமே கொடுக்க மாட்டீங்களோன்னு நினைச்சேன்!.....

அப்படி இல்லைங்க சாஸ்திரங்களும் கல்பங்களும் ரொம்பவே ப்ராக்டிகலானவை. நமக்கு ஏற்படக்கூடிய பல கஷ்டங்கள அப்பவே தெரிஞ்சு வழி முறைகள் வகுத்து கொடுத்து இருக்காங்க.

தர்மத்துக்கு விரோதம் இல்லாம பொருள் சம்பாதிக்கணும்.
வாங்கிற காசுக்கு வேலை கட்டாயம் செய்யணும்.
குல ஆசாரப்படி வேலைன்னு முன்னே சொல்லி இருக்காங்க.
பொதுவா கல்வி ஊட்டுதல் பிராமணர்களுக்கு. வியாபாரம் வைசியர்களுக்கு. தோள் வலிமையை ஒட்டிய வேலைகள் க்ஷத்திரியர்களுக்கு. உடல் உழைப்பு வேலை சூத்திரர்களுக்கு. கணக்கில இல்லாத பல வேலைகள் இப்ப வந்துட்டதாலே அங்கே எல்லாம் பூந்து பாக்க வேண்டாம்.

சேர்க்கிற பொருளை நிர்வாகம் செய்யறது தனியா பாக்கலாம். 1/6 ராஜாவுக்கு; அதாவது tax. இப்ப இருக்கிறா இருப்பில யாருக்கும் அரசாங்கங்கள் மேல நம்பிக்கை இல்லை. அதனால எப்படி குறைச்சலா வரி கொடுக்கலாம்ன்னு பாக்கிறோம். 1/6 தர்ம காரியங்களுக்கு. மீதி நமக்கு. இப்படி சேர்க்கிற பொருளை செலவு செய்கிறவனுடைய பொருள் பாபம் இல்லாதது என்கிறாங்க. இவங்ககிட்டே இருந்து யாரும் தைரியமா தானம் வாங்கிக்கலாம்.

இப்படி இல்லாவிட்டா அந்த பொருள் ஏதோ ஒரு வழில தண்டமாதான் போகும். அல்லது கர்ம வினை மூட்டைல சேந்துகிட்டே போகும்.

பொருள் சம்பாதித்துவிட்டு வந்து மதிய உணவுக்கு முன்னால சில கர்மாக்கள்.


6 comments:

jeevagv said...

அடுத்தது இன்பம்?

திவாண்ணா said...

//அடுத்தது இன்பம்?//

வாழ்க்கையே இன்பம்தானே ஜீவா, இறையருள் கூடினால்! உங்க ப்ளாக் ஏனோ திறக்கலை! திருப்பியும் பாக்கிறேன்.

ambi said...

//இப்ப இருக்கிறா இருப்பில யாருக்கும் அரசாங்கங்கள் மேல நம்பிக்கை இல்லை.//

நம்பிக்கை இருக்கோ இல்லையோ என் கடன் வரி செலுத்தி கிடப்பதே!னு 30% இல்ல கட்டிட்டு இருக்கோம். :))

வரி பிடிச்சது போக தான், சம்பளமே தராங்க. என்ன கொடுமை இது ப.சிதம்பரம்? :p

திவாண்ணா said...

@அம்பி,
யார் கேப்பீங்கன்னு யோசனை பண்ணிகிட்டு இருந்தேன்!
மொத்த சம்பளம் வரி - இதை மட்டும் கணக்கு பண்ணி பாருங்க.
வரி விலக்கு பிடித்தம் எல்லாம் விட்டுட்டு பாருங்க. அப்பவும் அதிகமா இருந்தா கொடுமைன்னு சொல்லி சிதம்பரத்துக்கு கடிதேசி போட வேண்டியதுதான்.
அது சரி அப்புறம் அந்த தர்மத்துக்கான 1/6.....?

jeevagv said...

வந்து பாருங்க ஐயா,
நீங்க வந்து சொல்ல விஷயம் இருக்கு!

திவாண்ணா said...

முன்னயே பாத்துட்டேன். அதுல சில விஷயங்கள் சொல்லணும். கொஞ்சம் ஆராய்ஞ்சு நிச்சயப்படுத்திக்கொண்டு எழுதறேன்.