Pages

Wednesday, June 18, 2008

பூஜை ஏன் இப்படி?

பூஜையை நம்ப பெரியவங்க வகுத்து வெச்சு இருக்கிறதுலேயும் ஒரு முறை இருக்கு.

ஒரு பெரியவர் - நமக்கு தெரிஞ்சவர் நம்ம வீட்டுக்கு வரார்।
அப்ப என்ன செய்வோம்?
வாங்க வாங்கன்னு கூப்பிடுவோம்।
பழைய வீடுகள்ல உள்ளே அழைச்சு போய் உட்கார வைப்பாங்க।கை கால் கழுவ, குடிக்க தண்ணீர் கொடுப்பாங்க।
நடந்த களைப்பு போக தண்ணீர் குடிச்ச பின்னே குளிக்க ஏற்பாடு। உடம்புக்கு தகுந்தாப்பலே கிணத்து தண்ணி இல்லைனா உடம்பு வலிக்கு இதமா வென்னீர்। அப்புறம் உடம்பு துடைச்சு உடுத்திக்க துணி। பிறகு அவர் மனசுக்கு பிடிச்ச மாதிரி கொஞ்சம் பேசறோம்। அப்புறமா சாப்பாடு। முடிஞ்சு வெத்திலை பாக்கு।சாப்பிட்டதற்கு தக்ஷிணை;। பெரியவராச்சா! நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் வாங்கிக்கிறோம்। அவர் கிளம்ப வண்டி தயார் செய்து கொடுக்கிறோம்।

இதே போல பூஜையை யோசிச்சு பாருங்க.

இறைவனை தியானம் செய்து அழைத்து ஆவாஹனம்ஆசனம் கொடுத்தல்; பாதங்கள்ல நீர் வார்க்கிறது। கைகள்ல நீர் வார்த்தல்। அப்புறம் ஆசமனம்- அதாவது தண்ணீர் கொடுத்தல்। நீராட்டல்; ஆசமனம்; உபவீதம் என்கிற பூணூல் அணிவித்தல்; உடை அணிவித்தல்। நகைகள் பூட்டுதல்। பூக்களால அர்ச்சனை; தூபம் என்கிற வத்தி யால் புகை காட்டுதல்; நெய் விளக்கு காட்டுதல்; செய்து இருக்கிற உணவை நிவேதனம் செய்தல்; வெற்றிலை பாக்கு சமர்ப்பணம்;
சூடம் காட்டுதல்; மந்திரங்களாலும் துதித்தல்; ஸ்வர்ண புஷ்பம் என்று தங்க புஷ்பத்தை சமர்ப்பித்தல்; சுத்தி வந்து நமஸ்காரம்; கண்ணாடி காட்டி, யானை/ ரதம் ஏதாவது ஒண்ணுல ஏத்திவிட்டு பிறகு செய்த பூஜை பலன் எல்லாத்தையும் இறைவனுக்கே சமர்ப்பிக்கிறோம்। இப்படி செய்கிறதை ஷோடோபசார பூஜை என்கிறாங்க.

ஏன் இப்படி எல்லாம் செய்கிறோம்?

இது நமக்காக। பின்னே, எல்லாம் இருக்கிற - எல்லாமாயும் இருக்கிற இறைவனுக்கு நாம் தரக்கூடியது என்ன இருக்கு? அவனுக்கு என்ன வேண்டும்? அவன்கிட்டேதான் எல்லாம் இருக்கே?
அவனுக்கு என்ன வேணும்ன்னு நமக்கு தெரியாது।
அவன் எப்படி இருக்கிறான்னு கூட தெரியாது। நமக்கு புரியணுமேன்னு அவனையும் நம்ம மாதிரி ஒரு உருவம் கொடுத்து வெச்சு இருக்கோம்। நமக்கு என்ன எல்லாம் வேணுமோ அதெல்லாம் அவனுக்கும் வேணும்ன்னு நினைச்சு கொடுக்கிறோம்।
இதெல்லாம் நம்மோட லிமிடேஷன்। அவனோடது இல்லை.

10 comments:

ambi said...

//நமக்கு என்ன எல்லாம் வேணுமோ அதெல்லாம் அவனுக்கும் வேணும்ன்னு நினைச்சு கொடுக்கிறோம்।
//

ப்ரசாத வகைகளும் அப்படி தானா? :))

விட்டு போன பதிவுகளை இப்ப தான் படிச்சேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

மிக எளிமையா சொல்லிட்டீங்க....

ஏன் ஷோடச பூஜை?...

ஆமாம், 'சர்வம் க்ருஷ்ணார்பணம்' அப்படின்னுட்டு போகாம ஏன் இதெல்லாம்?

Kavinaya said...

//இது நமக்காக। பின்னே, எல்லாம் இருக்கிற - எல்லாமாயும் இருக்கிற இறைவனுக்கு நாம் தரக்கூடியது என்ன இருக்கு?//

//இது நம்மோட லிமிடேஷன்। //

ஆஹா. பூஜை பத்தி ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.

திவாண்ணா said...

ஆமாம் அம்பி! அப்படியேதான். உதாரணமா நமக்கு கேசரி.. சரி சரி அத உடுங்க! ஏதோ ஒண்ணு பிடிக்கும். அதை தயார் பண்ணி பகவானுக்கு நிவேதனம் செய்து சாப்பிட வேண்டியதுதான்.
இந்த நிவேதனம் - எதானாலும் இறைவன் முதல்ல- இதுதான் முக்கியம்.
நிவேதனம் பத்தி ஒரு தப்பான அபிப்பிராயம் இருக்கு.
பகவானுக்கு சாப்பாடு போடறதா நினைக்கிறாங்க. அப்ப்டி நினைச்சு ஏன் இவ்வளவு நாளா நீங்க சாப்பாடு போட்டாலும் ஒரு பருக்கையாவது சாப்பிட்டாரா ன்னு சிலர் கேலி பண்ணுவாங்க. அதுக்கு பதில் தெரியாம முழிக்க வேண்டாம். நிவேதனம் ன்னா காட்டுதல் ன்னுதான் பொருள். அதனாலேயே தேவதைகள் திருப்தி அடைகிறதா தாத்பர்யம்.

விடாம படிக்கிறதுக்கு நன்ஸ்! சரியா தூங்கி நாலு நாள் ஆகி இருக்குமே?

திவாண்ணா said...

// ஏன் ஷோடச பூஜை?...//
கல்பம் அப்படி. 16 உபசாரங்கள் சுருக்கமான பூஜை.

// ஆமாம், 'சர்வம் க்ருஷ்ணார்பணம்' அப்படின்னுட்டு போகாம ஏன் இதெல்லாம்? //

அதுல திருப்தி வராதே!
நேரம் இருந்தா பகவானோட நாம் ஒன்றி போக நேரம் எடுத்து பூஜை செய்யணும். ஒரு மணி பூஜை செய்தா ஒரு நிமிஷம் ஒன்றுவோமோ என்னமோ! அதுவே பெரிசு.
நேரமே இல்லாத விவசாயி நீங்க சொன்ன "சர்வம் க்ருஷ்ணார்பணம்" சொல்லி சிறந்த பக்தன்ன்னு பேர் வாங்குன கதை தெரியும்தானே?

திவாண்ணா said...

கவிநயா, நல்வரவு. முதல் முறையா? இல்லை ஒளிஞ்சுகிட்டு படிக்கிறீங்களா? :-))
நன்ஸ்!

geethasmbsvm6 said...

வருகைப்பதிவு மட்டும்.

jeevagv said...

ஒப்புமை நன்றாக இருந்தது!
கடைசி வரிகள் அருமை!

அரையாய் நிறை said...

manam virumbum villakangal...nandrikal pala ungaluku

திவாண்ணா said...

நன்றி பொல்லா வினயன்!