Pages

Monday, June 16, 2008

அக்னி உபாசனை.



அடுத்து அக்னி உபாசனை. சூரியன் மறைமுகமா உதவறான். அக்னியோட உதவி நேரடியானது.

பல விதமா இருக்கிற அக்னி உபாசனைல எல்லா கிருஹஸ்தர்களும் செய்ய வேண்டியது ஔபாசனம்.

திருமணத்துக்கு பின் ஒரு கர்மா மூலம் அக்னியை எற்படுத்திக்கொண்டு, அந்த அக்னியை அணையாமல் பாதுகாத்து வைத்துக்கொண்டு தினமும் காலையும் மாலையும் கொஞ்சம் களஞ்சு உலர்த்தின அரிசியால் ரெண்டு ஹோமம். காலை சூரியனையும் மாலை அக்னியையும் உத்தேசிச்சு. அதிகபட்சம் 15 நிமிஷம் ஆகும். என்ன, வீட்டு சொந்தக்காரர் ஒத்துக்கணும். வீட்ட காலி பண்ணா வெள்ளை அடிச்சு தரேன்னு சொல்லிப்பாக்கலாம்.

புகை வருமே, அது உடம்புக்கு கெடுதல்ன்னு நினைக்க வேண்டாம். சாஸ்திரங்கள் எது நல்லது செய்யும் எது கெட்டது செய்யும்னு தெளிவாகலே சொல்லி இருக்கு. சொல்லப்பட்ட பொருட்களை கொண்டு செய்கிற ஹோமங்களால உண்டாகிற புகை நல்லதே செய்யும்.

அந்தணர்களுக்கு வேத மந்திரங்களோட ஹோமம் என்றால் இதே மற்றவங்களுக்கும் உண்டு. வேதம் கற்றுக்கொள்ளாததால நமஹ என்றே ஹோமம்.
சாதாரணமாக பெண்களுக்கு ஹோமங்கள் செய்ய அதிகாரம் இல்லைன்னு சொல்கிறாங்க இல்லியா?

ஆனால் ஔபாஸனம் செய்ய அதிகாரம் இருக்கு. கணவன் வீட்டிலேயே இல்லைனாலும் இவங்களே 7 வேளை வரை மந்திரமில்லாமல் செய்யலாம்.
அக்னிக்கு முதல் உரிமை பெண்களுக்குதான். ஐயா வீட்டிலேயே 3 நாள் இல்லைனாலும் அக்னி இருப்பார். ஆனால் இல்லத்தரசி ஊரை விட்டோ, ஆற்றை தாண்டியோ போய் விட்டால் அக்னி இருக்க மாட்டேன்னு கிளம்பிடுவார். அப்புறம் திருப்பி உத்பத்தி செய்யணும்.

பெண்களை நசுக்கறாங்க ன்னு ஒரு புகார் இருக்கு இல்லையா? அதை விட ஏமாத்து வேலை இருக்க முடியாது. ரங்கமணிகளுக்கு பத்னி இல்லாமல் ஒரு சிலது தவிர வேறு எந்த கர்மாவும் செய்ய அதிகாரம் இல்லை.

ஒரு சிறுவன். குருகுலத்துல சேர்ந்தான். குரு இவனை தன்னோட அக்னிகளை பாதுகாக்க சொல்லி வேலை கொடுத்தார். இவனும் அதை விடாம குரு பக்தியோட செய்து வந்தான். மத்தவங்களுக்கு பாடம் எடுத்தாரே ஒழிய இவனுக்கு பாடமே எடுக்கலை. சிறுவனும் அதைப்பத்தி யோசனை எல்லாம் செய்யாம அக்னிகளை பாதுகாக்கிறதுலேயே இருந்துட்டான். சில பல வருஷங்கள் ஆச்சு. கூட சேர்ந்த மத்த பசங்க வேத பாடம் முடிச்சு போயாச்சு. இவன் இன்னும் அதே காரியம் செய்யறான்.

ஒரு நாள் குரு வெளியே போயிருந்த போது சிறுவன் வழக்கம் போல அக்னிகளை பாதுகாத்து வெச்சுட்டு அக்னிசாலையை விட்டு வெளியே போனான். அப்ப அக்னிகள் மூணும் ஒண்ணுக்கொண்ணு பேசிக்கிட்டாங்க. "இந்த பையன் பாவம், இன்னும் இங்கேயே இருக்கான். இவளவு நாளா நம்மை பாதுகாத்து பணிவிடை செஞ்சான். நாம என்ன செய்யலாம்?” அவங்களுக்குள்ளே பேசி ஒரு முடிவுக்கு வந்தாங்க. பையனை கூப்பிட்டாங்க. அவனும் பவ்யமா வந்தான். சும்மா அப்படியே பையனுக்கு வேதம் போதிச்சு பிரம்ம வித்யை வர அனுகிரஹம் செஞ்சிட்டாங்க. பூரணமான வேத அறிவு பையனுக்கு அப்படியே வந்து சேர்ந்தது.

வெளியே போன குரு திரும்பி வந்தார். பையனோட முகத்தில பிரம்ஹ தேஜஸை பாத்த உடனேயே அவருக்கு ஏதோ புரிஞ்சது. பையனை "என்னப்பா ஆச்சு நான் இல்லாதப்ப" ன்னு கேட்டார். அவன் அடக்கமா, “ தெரியலை குருவே, அக்னிகள் தமக்குள்ளே ஏதோ பேசிக்கிட்டாங்க" ன்னு பதில் சொன்னான்.

அக்னி உபாசனையால பிரம்ஹ வித்யை கிடைச்சிட்டதுன்னு குருவும் உணர்ந்துகிட்டு அவனை ஆசீர்வாதம் பண்ணி அனுப்பினார்.

15 comments:

Geetha Sambasivam said...

//அக்னிக்கு முதல் உரிமை பெண்களுக்குதான். ஐயா வீட்டிலேயே 3 நாள் இல்லைனாலும் அக்னி இருப்பார். ஆனால் இல்லத்தரசி ஊரை விட்டோ, ஆற்றை தாண்டியோ போய் விட்டால் அக்னி இருக்க மாட்டேன்னு கிளம்பிடுவார். அப்புறம் திருப்பி உத்பத்தி செய்யணும்.//

உண்மை, அதிலும் சாமவேதத்தைக் கடைப்பிடிக்கிறவர்களுக்குக் கையிலேயே அக்னின்னு சொல்வதுண்டு. அவங்களுக்குப் பெண்கள் இல்லைனால் எந்தக் காரியம் செய்தாலும் ஹோமம் இல்லை. ஹோமம் இல்லாமல் தான் செய்யவேண்டும், மனைவி இருந்தும், வெளியூர் போயிருந்தாலோ, அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்து, கலந்து கொள்ள முடியாத நிலை என்றாலோ, அக்னி வளர்க்காமலே செய்யவேண்டும்.

திவாண்ணா said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..!
ரிக் வேதிகளை சொல்கிறீங்களோ?
அப்படித்தான் கேள்வி பட்டு இருக்கேன். வெரிபை செய்ய முடியுமா?

Geetha Sambasivam said...

//ரிக் வேதிகளை சொல்கிறீங்களோ?
அப்படித்தான் கேள்வி பட்டு இருக்கேன். வெரிபை செய்ய முடியுமா//

//உண்மை, அதிலும் சாமவேதத்தைக் கடைப்பிடிக்கிறவர்களுக்குக் கையிலேயே அக்னின்னு சொல்வதுண்டு. அவங்களுக்குப் பெண்கள் இல்லைனால் எந்தக் காரியம் செய்தாலும் ஹோமம் இல்லை. ஹோமம் இல்லாமல் தான் செய்யவேண்டும், //

சாமவேதிகள்னு தெளிவாச் சொல்லி இருக்கேனே????? ரிக்வேதிகளுக்கு இப்படி இருக்கிறதாத் தெரியலை, எங்க மாமா வீட்டிலே பார்த்திருக்கேன், அவங்க ரிக்வேதிதான். அங்கே இப்படி இல்லை. எனக்குத் தெரிஞ்சு சாமவேதிகளுக்குத் தான் மனைவி இல்லைனா ஹோமமே கிடையாது.

மெளலி (மதுரையம்பதி) said...

எனக்கு தெரிந்தவரையில், சில கர்மாக்கள் பெண்கள் (அந்த தினத்தில்/நேரத்தில்) இல்லை என்றாலும் கர்த்தா செய்தே ஆகவேண்டும் என்று வேதம் கூறியிருக்கிறது.

இதனால் தான் அஸ்வமேதம் செய்யும் ராமனும், சீதை காட்டில் இருந்ததால் ப்ரதிமை/கூர்ச்சம் வச்சுண்டு பண்ணினார் இல்லையா?

மெளலி (மதுரையம்பதி) said...

அதென்ன மூன்று அக்னிகள் (எனக்காக இல்லைன்னாலும் இங்கு வரும் மற்ற நண்பர்களுக்காக) என்று விளக்குவீரா திவாண்ணா...

மெளலி (மதுரையம்பதி) said...

அப்படியே ஸ்ரீவத்ஸ கோத்தரத்துக்காரங்க ஹோமங்களில் செய்யும் அதிகப்படியான ஆஹுதி பத்தியும் சொல்லிடுங்க திவாண்ணா :))

மெளலி (மதுரையம்பதி) said...

ஆமாம் ரிக்வேதிகளுக்குத்தான் ஹோம கார்யம் அதிகமுன்னு கேள்விப்பட்ட நினைவு....

திவாண்ணா said...

நன்றி கீதா அக்கா , மௌலி.

அதாவது மனைவியே இல்லை -இறந்து விட்டார்கள், திருமணம் ஆகவில்லை என்றால் ஹோமங்களுக்கு அதிகாரம் இல்லை.
இருந்தாலும் சிரார்த்தம் போன்ற சில கர்மாக்கள் இருக்கிறதல்லவா? அவை உண்டு.
அக்னி வேறுபடும். மனைவி உள்ள கிருஹஸ்தன் ஔபாஸன அக்னியிலும் மனைவியை இழந்த விதுரன் விதுராக்னியிலும் ஹோமம் செய்வர்.

காம்ய ஹோமங்கள் மனைவி இருப்பவரே செய்வது உசிதமானது.

பல கர்மாக்கள் மனைவி இருக்கிறார் ஆனால் வீட்டு விலக்கு எனில் அப்போதும் செய்ய கூடியவைதான்.

3 அக்னிகள் அக்னி ஹோத்திரம் என்ற கர்மா செய்பவர் ஆராதிப்பது. கார்ஹபத்யம், தக்ஷினாக்னி, ஆஹவனீயம் என 3. சுமார் 40 நிமிஷம் ஆகும். பாலை விதிப்படி காய்ச்சி ஹோமம்.
இதைப்பற்றி க்ருஷ்ண யஜுர் வேதம் விசாரிக்கும்போது பிரத்யட்சமாக அக்னி இல்லையா? ப்ராம்ஹணன் வலது கையில் ஹோமம் செய்துவிடலாம், அதில் எப்போதும் அக்னி இருக்கிறார் என்கிறது.

ராமர் எப்படி அச்வமேதம் செய்தார் என்பது சர்ச்சைக்கு உரிய கேள்வி. க்ஷத்ரிய ராஜா ஆயிற்றே சீதையை தவிர மனைவிகள் இருந்தனர் என்று ஒரு வாதம். வசிட்டர் தங்க ப்ரதிமையில் சீதையை ப்ராண ப்ரதிஷ்டை செய்தார் என்று ஒரு வாதம். ஏக பத்னி விரதனாக ராமரை பார்ப்பவர்கள் முந்தினதை ஏற்க மாட்டார்கள்.

யாருக்கு பரம்பரையில் (ப்ரவரம்) 5 ரிஷிகளுக்கு மேல் இருக்கிறார்களோ அவர்கள் ஹோமத்தில் சாதாரணமாக 4 முறை ஹோம திரவியம் எடுப்பதை ஐந்தாக எடுக்க வேண்டும் என்பது சாஸ்திரம்.

geethasmbsvm6 said...

//இருந்தாலும் சிரார்த்தம் போன்ற சில கர்மாக்கள் இருக்கிறதல்லவா? அவை உண்டு//

இது தான் சாமவேதிகளுக்கு மனைவி இல்லைனால், அதாவது இருந்தும் பங்கெடுக்க முடியாத நிலையில் இருந்தால், ஹோமம் இல்லாமலேயே செய்யப் படும். செய்கின்றோம்.

geethasmbsvm6 said...

//பல கர்மாக்கள் மனைவி இருக்கிறார் ஆனால் வீட்டு விலக்கு எனில் அப்போதும் செய்ய கூடியவைதான்.//

செய்தாலும் சாமவேதிகளுக்கு மாறுபட்டே வருகிறதுனு நினைக்கிறேன்.

geethasmbsvm6 said...

//3 அக்னிகள் அக்னி ஹோத்திரம் என்ற கர்மா செய்பவர் ஆராதிப்பது. கார்ஹபத்யம், தக்ஷினாக்னி, ஆஹவனீயம் என 3. //

கேள்விப் பட்டுள்ளேன், பொதுவாகவே பிராமணர் வீட்டில் அக்னி அணையக் கூடாது என்றும் சொல்லுவதுண்டு, சின்ன வயசில் தெருக்காரர்கள் எங்க வீட்டிலே வந்து அக்னியை வாங்கிக் கொண்டு போயும் பார்த்துள்ளேன், அது ஒரு கனாக் காலம்!!!!!!!! எல்லாமே மாறியாச்சு. இப்போ காஸ் அடுப்பை அணைக்கலைனா அவ்வளவு தான்! :))))))

geethasmbsvm6 said...

//எனக்கு தெரிந்தவரையில், சில கர்மாக்கள் பெண்கள் (அந்த தினத்தில்/நேரத்தில்) இல்லை என்றாலும் கர்த்தா செய்தே ஆகவேண்டும் என்று வேதம் கூறியிருக்கிறது. //

மதுரையம்பதி, கர்த்தா செய்யவேண்டிய கர்மாவைச் செய்தே ஆகவேண்டும் என்றாலும், சாமவேதிகள் மனைவி இல்லைனா அக்னி இல்லாமலேயே செய்யவேண்டும்.

geethasmbsvm6 said...

//ஆமாம் ரிக்வேதிகளுக்குத்தான் ஹோம கார்யம் அதிகமுன்னு கேள்விப்பட்ட நினைவு....//

ஆமாம், அவங்களுக்கு எல்லா ஹோம காரியங்களிலும் மந்திரங்களும் மிக மிக அதிகம், நேரமும் ஆகும்.

geethasmbsvm6 said...

இந்த சத்யகாமன் தான் ஸ்வேதகேதுவா? அவர் வேறே இவர் வேறேயா?? சாந்தோக்ய உபநிஷதத்தில் வரும் ஸ்வேதகேது வேறே தானே?? இப்போ பாகவதத்தில் குரு சாந்தீபனியின் சீடராக வரும் ஸ்வேதகேதுவுக்கும் அவருக்கும் சம்பந்தம் எதுவும் இல்லைனு நினைக்கிறேன். அது சரியா???

திவாண்ணா said...

இது உபநிஷத்திலே வர கதை. சாந்தீபனி ஸ்வேதகேதுவா இருக்க வாய்ப்பில்லை.