Pages

Wednesday, June 11, 2008

மாற்றங்கள்



ஆக மொத்தம் 40......

இப்ப நமக்கே தெரியும் இதெல்லாம் என்ன நிலைலே இருக்குன்னு। முதலாவது சும்மா குஷிக்காக ஜாம் ஜாம்னு நடக்குது. கடைசி வேற வழியில்லாம ஏதோ நடக்குது. விவாஹம் எப்படியோ நடக்குது. பலர் ஜாத கர்மா முதல் எல்லாத்தையும் கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்ன செய்கிறங்க. :-(

வாழ்க்கையில ஏராளமான விஷயங்கள் கெட்டுப்போய்கிட்டே இருக்கிறது மாதிரி பலதும் காணாமப்போச்சு। சாஸ்திரோக்த (சாஸ்திர உக்த = சாஸ்திரங்கள் சொன்ன) படி எவ்வளவு நடக்கிறது என்று பாக்கவே பயமாயிருக்கு.

க்ஷத்திரியர்கள் சண்டைகள் போட்டு அதிலேயே காலம் கழிந்து ஆசாரங்களை விட்டாங்க. வைச்யர்கள் திரைக்கடலோடியும் திரவியம் தேடு ன்னு ஓடிஒடியே ஆசாரங்களை விட்டாங்க. சூத்திரர்கள் விதிக்கப்பட்ட பல ஆசாரங்களை tradition என்பதாலேயே பின்பற்றி வந்தவங்க. அவங்களும் மாறிகிட்டே இருக்காங்க.

அந்தணர்களை பத்தி பெரிய யோசனையா இருக்கு। வேதங்களும் சாஸ்திரங்களும் சொல்கிற படி பாத்தா எவ்வளவு பேர் க்வாலிஃபை ஆவாங்க என்பது தெரியலை। என்னையும் சேத்துதான் சொல்கிறேன்। ப்ராமணத்துவம் பிறப்பில் மட்டும் இல்லையேப்பா। நடத்தையும்தானே. சொத்து சேத்து வைச்சுக்காதே ன்னு ஆரம்பிச்சு சொல்ல ஆரம்பிச்சா "சரி, நான் ப்ராமணன் இல்லன்னு ஒத்துக்கிறேன். நீங்க உங்க வேலைய பாருங்க. நான் என் வேலையை பாக்கிறேன்!” என்று சொல்லிடுவாங்கன்னு நினைக்கிறேன்.

மாறுதல்தான் வாழ்கையின் இயல்பு என்றாலும் இந்த மாதிரி அடிப்படையானவை மாறி இருக்கக்கூடாது.
அதனால நான் பெரியவனா நீ பெரியவனா என்கிற சர்ச்சை இல்லாம நம்மால எவ்வளவு முடியும்னு பாத்துக்கிட்டு போகலாம்.


1 comment:

மெளலி (மதுரையம்பதி) said...

//மாறுதல்தான் வாழ்கையின் இயல்பு என்றாலும் இந்த மாதிரி அடிப்படையானவை மாறி இருக்கக்கூடாது.
அதனால நான் பெரியவனா நீ பெரியவனா என்கிற சர்ச்சை இல்லாம நம்மால எவ்வளவு முடியும்னு பாத்துக்கிட்டு போகலாம்.//

முத்தாய்ப்பா சொல்லியிருக்கீங்க.. :))

அந்தணன் என்று இன்னைக்கு சொல்லிக்கும் தகுதி இருப்பவர்கள் வெகு சிலரே...இன்னும் சிலர் அந்தணராக தகுதி பெரும் தேர்வுக்கு ஆயத்தம் செய்பவர்கள்....மிச்சம் இருப்பவர் எனக்கு முடியாது அப்படின்னு இதுக்கும் ப்ராக்ஸி தேடுறதுலயும், இதெல்லாம் ஏதும் வேண்டாமுன்னு விடறதிலும் அடங்கிடறாங்க :(