Pages

Friday, May 16, 2008

பாதசேவனம்



இறைவனோட திருவடிகளுக்கு எப்பவுமே ஒரு சிறப்பான இடம் பக்தி வழில உண்டு.
சாதாரணமா நாம துச்சமா மதிக்கிறது பாதங்களைதானே. நடக்கிறோம், கொள்ளறோம், பாதங்கள்லதான் அழுக்கு படுகிறது. வெளியே போய் வந்தா கால்களைதான் கழுவிக்கிறோம். அப்படி சாதாரணமா அசுத்தமா நினைக்கிற பாதம் இறைவவனோடது என்கிறப்ப நாம அதை புனிதமா நினைக்கிறோம். எப்படி பெரியவங்க கால்களை தொட்டு கும்பிடறோமோ அப்படி பகவானோட பாதங்களை தலைல தாங்கவும் பக்தர்கள் தயங்க மாட்டாங்க. அதனாலதான் பெருமாள் கோவில்ல சடாரி சாத்துகிறாங்க. கிரீடம் மாதிரி இருக்கிற அது மேலே பாதங்கள் பொறிச்சு இருக்கும்.

இந்த பாதுகைகளின் பெருமையை பாடி பாடி பரமனோட பாதங்கள்ல தன்ன முழுக்க அர்பணிச்ச வேதாந்த தேசிகர் பாதுகா சஹஸ்ரம்னு புத்தகமே எழுதினார்.

ராமரோட பாதுகைகளைதான் பரதரும் கேட்டு வாங்கிப்போனார். ராமரோட பாதம் பட்டுதான் அகலிகையும் சாபம் நீங்கினாள். இத பாத்து விஸ்வாமித்திரர்,

மை வண்ணத்து அரக்கி போரில்
மழை வண்ணத்து அண்ணலே உன்
கை வண்ணம் அங்கு கண்டேன்
கால் வண்ணம் இங்கு கண்டேன்

அப்படின்னு ஆச்சரியப்பட்டாராம்.

அப்பப்ப நடக்கிற தேவ அசுர யுத்தம் நடந்து மகாபலி தலைமைல அசுரர்கள் ஜெயிச்சுட்டாங்க. தேவர்களோட அம்மா அதிதி சும்மா இருப்பாளா? பயோ விரதம்னு ஒரு விரதம் இருந்து விஷ்ணுகிட்டே வரம் வாங்கினா.
பெருமாளும் ஒரு குள்ளமான பிரம்மசாரியா வாமனரா வடிவெடுத்து பலிகிட்ட வந்தார். பலியும் வரவேத்து "உங்களுக்கு என்ன வேணும்?" ன்னு கேட்டான்.
"ஒண்ணும் வேணாம், என் காலால மூணு அடி மண் போதும்"ன்னார் விஷ்ணு.
"அட! நான் இந்த மூணு உலகத்துக்குமே ராஜா. வெறும் மூணு அடி மண்தானா வேணும்?"ன்னான் பலி. அது போதும்னுட்டார் வாமனர்.

அசுர குருவான சுக்கிராசாரியாருக்கு இது தெரிஞ்சு போச்சு. பலிகிட்ட " இவன் கேக்கிறானேன்னு கொடுக்காதப்பா. அது உனக்கே கெடுதியா முடியும்" ன்னார்.

இந்த சின்ன பையன் என்ன பண்ண முடியும்?

அப்பனே வந்து இருக்கிறது சாதாரண ஆசாமி இல்ல. விஷ்ணு. அவர் எப்பவும் சுரர்களுக்குதானே சாதகம் பண்ணுவார். அதனால சொல்லறேன். வேண்டாம்.

பலி சக்ரவர்த்தி கேக்கலை.
விஷ்ணுவே வந்து கேட்டா நான் என்ன பாக்கியம் பண்ணி இருக்கணும்? அப்படி பாத்தாலும் அது தப்பில்லே.

தண்ணீர் இருக்கிற கமண்டலுவை தூக்கிவிட்டான் பலி.
சுக்கிராசாரியாருக்கு பொறுக்கலை. இவன் ராஜ்யத்தை விஸ்தாரம் பண்ன நான் எவ்வளோ கஷ்ட பட்டு இருப்பேன்? அதை எல்லாம் ஒடு நிமிஷத்துல தொலச்சுடுவான் போல இருக்கேன்னு நினச்சு ஒரு வண்டு ரூபம் எடுத்து போய் கமண்டலு மூக்கில உக்காந்து அத அடைச்சுட்டார்.

வாமனர் சிரிச்சுகிட்டே ஒரு தர்ப்பையை எடுத்து கமண்டலு மூக்கில குத்தினார். சுக்கிராசாரியாரோட ஒரு கண்ணு போச்சு.
பிறகு பலி தாரை வார்த்து தர வாமனரும் வாங்கிகிட்டார். "சரி, உன் மூணு அடியை அளந்து எடுத்துக்க"ன்னு பலி சொன்ன உடனே வாமனர் வளர ஆரம்பிச்சார். ஒரு அடியால மண்ணையெல்லாம் அளந்தார். இரண்டாவது அடியால விண்ணையெல்லாம் அளந்தார். "மூணாவது அடியை எங்கே வைக்கட்டும்?” ன்னு பலியை பாத்து கேட்டார்!

"ஸ்வாமி! என் தலை மட்டுமே பாக்கி! அதில வைங்க" ன்னு பலி சொன்னான்.
பகவானும் சிரிச்சுகிட்டே அவன் தலை மேல தன் காலை வைத்து அப்படியே அழுத்தி சுதல லோகத்துக்கு கொண்டு போயிட்டார். அங்கே அவனை ராஜாவாக்கினார். எல்லா மங்களங்களையும் கொடுத்தார்.
அப்படி திருவடி தீட்சை வாங்கினவன் பலி சக்ரவர்த்தி.

எவனுக்கு நான் அருள் பண்ண நினைக்கிறேனோ அவனோட பொருளை எல்லாம் நான் போக்கிவிடுகிறேன். பொருள் இருக்கு என்கிற செருக்கால இல்லையா மனுஷன் கர்வத்தோட உலகத்தையும் என்னையும் அவமதிக்கிறான்?

அப்படின்னு பாகவதத்திலே பகவான் சொல்கிறதா இருக்கு.
அது போல பலியோட சொத்தையெல்லாம் தன்னோடதாக்கி அவன் பணித்தபிறகு அவனுக்கு அவன் அகங்காரத்தையும் அழிச்சு அவனை ரக்ஷிச்சார் பெருமாள்.


19 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

ஹஸ்த தீஷை, நேத்ர தீஷை...வரிசைல பாத தீஷையும் சொல்லப் பட்டிருக்கு.

இறைவனது பாதங்களுக்கு மட்டும் மரியாதை என்று இல்லை. அடியார்க்கு அடியார் அப்படின்னு சிறந்த பக்தர்களுடைய பாதங்களும் வணங்கப்பட வேண்டியதே.

கோவில்ல சடாரியாக வைப்பது பெருமாள் பாதமல்ல, நம்மாழ்வார் பாதங்கள்ன்னு நினைக்கிறேன். தம்பி கே.ஆர்.எஸ் அல்லது அண்ணன் குமரன் கிட்ட கேட்டா சரியா சொல்லுவாங்க.

Geetha Sambasivam said...

அட, காலம்பர கொடுத்த கமெண்டுக்கு என்ன ஆச்சு???

அது நம்மாழ்வார் பாதங்கள் தான், மெளலி சொல்றது சரி.

திவாண்ணா said...

கீதாக்கா wrote:
//மை வண்ணத்து அரக்கி போரில்
மழை வண்ணத்து அண்ணலே உன்
கை வண்ணம் அங்கு கண்டேன்
கால் வண்ணம் இங்கு கண்டேன் //

பாட்டு இன்னாரால் எழுதப்பட்டது, விசுவாமித்திரர் சொன்னதாகனு எழுதி இருக்கலாமோ???

கம்பர்தான் எழுதினார் அப்படி. வேற யார்? எல்லாருக்கும் தெரியும்ன்னு நினைச்சேன்.
தப்புதான். சொல்லி இருக்கலாம்.

திவாண்ணா said...

மௌலி சொல்கிறது சரிதான்.
அடியார்க்கு அடியேன் அப்படின்னுதானே சொல்லறாங்க.
நன்ஸ்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திவா சார்
நலமா?
இந்தியப் பயணத்துக்குப் பிறகு, விட்டுப் போன இடுகைகள் எல்லாம் ஒவ்வொன்னாப் படிச்சிக்கிட்டு வாரேன்! ஆனா திவாவோட பதிவுகள் மட்டும் தான் அட்சய பாத்திரம் கணக்கா வந்துக்கிட்டே இருக்கு! இன்னும் படிச்சி முடியலை! நீங்களே ஒரு வழி சொல்லுங்க! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவில்ல சடாரியாக வைப்பது பெருமாள் பாதமல்ல, நம்மாழ்வார் பாதங்கள்ன்னு நினைக்கிறேன்//

//அது நம்மாழ்வார் பாதங்கள் தான், மெளலி சொல்றது சரி.
//

கீதாம்மா தான் சுப்ரபாதப் பெருமாள் பதிவுக்கே வரமாட்டாங்க! :-)
நீங்க தான் வருவீங்களே மெளலி அண்ணா? அப்பறம் எப்படி மறந்தீங்க?
இந்தாங்க பதிவு!

சடாரி மேல் இருப்பது இறைவனின் பாதமே!
சடாரி தான் நம்மாழ்வார்!
அவர் இறைவனின் பாதங்களைத் தாங்கிக் கொண்டு வந்து நம் தலைகளில் சூட்டி வழிகாட்டுகிறார்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திவா சார்
கால் வண்ணம் பற்றி அழகா எடுத்துச் சொல்லி இருக்கீங்க!

ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோர் ஸ்மரணம் - பாத சேவனம் என்று பக்தி நிலைகளிலும் பாதங்கள் தான் சொல்லப்பட்டிருக்கு!

வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் பத்து குறட்பாக்களில் திருவடி பற்றியே தான் சொல்கிறார்!
தாள் சேர்ந்தார்க்கு அல்லால்,
நற்றால் தொழாஅர் எனின்,
மாணடி சேர்ந்தார்,
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு...
ன்னு இப்படி எங்கு பார்த்தாலும் திருவடிகள் தான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாமனாவதாரம் தான் உத்தம அவதாரம். அதைத் திருவடி பற்றிச் சொல்ல சரியாகக் கையாண்டு இருக்கீங்க திவா சார்!

இராமனனின் பாதுகைகள் அயோத்திக்கே சென்று விட்டன...சம்காரம் கனக்கச்சிதமாய் நடக்கிறது!
வாமனாவதாரத்தில் தான் சம்காரம் என்பதே இல்லை! எதனால்? திருவடியால் தான்!

இறைவனைக் காட்டிலும் இறைவன் திருவடிக்கு ஏற்றம் உண்டு!
அதனால் தான் பல்லாண்டு பாடும் பெரியாழ்வார், மணிவண்ணா உனக்குத் திருக்காப்பு என்று சொல்லாமல், உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு என்கிறார்!

நாம் தான் இறைவனின் பாதங்களை நெற்றியில் திருமண்காப்பாய் அணிகிறோம்!
ஆனால் இறைவனே நெற்றியில் அணிகிறானே! அது யார் பாதங்கள்? சொல்லுங்க பார்ப்போம்! :-)

துளசி கோபால் said...

இதுக்குத்தான் தானம் யாராவது கொடுக்கும்போது அல்லது நல்லது ஒண்ணு செய்யும்போது வேணாமுன்னு தடை செய்யப்படாது.

இப்பப்பாரு ஒரு கண்ணே போச்சு(-:


யார் பாதமுன்னு சீக்கிரம் சொல்லுங்கப்பா....
நம்ம வீட்டில் ஒரு குட்டிச் சடாரி இருக்கு பெருமாள் முன்னாலே.

மெளலி (மதுரையம்பதி) said...

//நீங்க தான் வருவீங்களே மெளலி அண்ணா? அப்பறம் எப்படி மறந்தீங்க?
இந்தாங்க பதிவு!

சடாரி மேல் இருப்பது இறைவனின் பாதமே!
சடாரி தான் நம்மாழ்வார்!
அவர் இறைவனின் பாதங்களைத் தாங்கிக் கொண்டு வந்து நம் தலைகளில் சூட்டி வழிகாட்டுகிறார்!//

இது என்னோட பூர்வ ஜென்ம தொடர்பு :(..சரியாக நினைவு இருப்பதில்லை....

திவாண்ணா said...

வாங்க கே ஆர்எஸ்! வேலை பளூ அதிகமா போய் உங்களோட பேச முடியலை!
உங்க வலை பக்கத்துக்குபோய் பாத்தேன். மௌலி அப்ப தீர்த்தத்தை பத்தியே யோசிச்சுட்டு இருந்திருக்கார். அதான் மறந்து போயிட்டார்.

இந்த பதிவை முன்னால பாத்து இருந்தா நிறைய G3 பண்ணிஇருக்கலாம் போலஇருக்கு! :-))

கால் வண்ணம் கை வண்ணம் எல்லாம் அம்பியின் கை வண்ணமா அங்கே இருக்கு!

கடேசில வழக்கம் போல ஒரு புதிரும் போட்டு இருக்கீங்க! எனக்கு தெரியாது. அம்பேல்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//யார் பாதமுன்னு சீக்கிரம் சொல்லுங்கப்பா....
நம்ம வீட்டில் ஒரு குட்டிச் சடாரி இருக்கு பெருமாள் முன்னாலே//

டீச்சர்
சடாரி மேல் இருப்பது இறைவனின் பாதமே!

சடாரியின் மகுடப் பகுதி மட்டும் தான் நம்மாழ்வார்


அவர் இறைவனின் பாதங்களைத் தாங்கிக் கொண்டு குருவாய் வந்து நம் தலைகளில் சூட்டி வழிகாட்டுகிறார்!

Geetha Sambasivam said...

//கீதாம்மா தான் சுப்ரபாதப் பெருமாள் பதிவுக்கே வரமாட்டாங்க! :-)
நீங்க தான் வருவீங்களே மெளலி அண்ணா? அப்பறம் எப்படி மறந்தீங்க?
இந்தாங்க பதிவு!//

பதிவு போடறப்போ எல்லாம் சொல்றாப்பல ஒரு எண்ணம், எங்கேயாவது சிண்டு முடியவேண்டும்னா அப்போ தான் கீதாம்மா நினைப்பே வரும் இந்தத் தொண்டரடிப் பொடிக்கு. எல்லாம் நேரம்! அங்கே வந்து படிப்போம், பின்னூட்டம் போடற அளவுக்கு ஒண்ணும் தெரியாதுங்கறதாலே, மெளனம், மெளனம், அவ்வளவு தான், மேற்சொன்ன பதிவு படிச்சிருக்கேன். இறைவன் கண்ணில் ஒத்திக் கொண்ட பாதங்கள் யாரோடது சொல்லட்டுமா? வேண்டாமா? அவரை உதைச்சாலும் கண்ணில் தான் ஒத்திப்பார்! :))))) ஏனெனில் ஸ்ரீவத்சன் ஆச்சே?

Unknown said...

இது என்ன ஒரே வைணவமாக இருக்கிறது. சைவம் கதை எங்க

திவாண்ணா said...

வாங்க ஜெய்சங்கர்!
ம்ம்ம்ம்
அப்படிக்கூட ஆகியிருக்கோ?
என்னை பொறுத்த வரை சிவ விஷ்ணு பேதம் கிடையாது. அப்பப்ப தோன்றுகிறதை எழுதுகிறேன். இருந்தாலும் நீங்க சொல்கிற மாதிரி ஒரு தலையா போயிருக்கலாம். கொஞ்சம் கவனம் வைத்துக்கொள்கிறேன்.

ம்ம்ம் யாராச்சும் "இவ்வளளோ நாள் இப்படி ஒரு கேள்வி வந்துதா? கேஆர் எஸ் எங்கே போறாரோ அங்கே வைணவ வாசனையும் கூட போகுதுன்னு" சொன்னா நம்பாதீங்க! ராசி!
:-))

Geetha Sambasivam said...

//ம்ம்ம் யாராச்சும் "இவ்வளளோ நாள் இப்படி ஒரு கேள்வி வந்துதா? கேஆர் எஸ் எங்கே போறாரோ அங்கே வைணவ வாசனையும் கூட போகுதுன்னு" சொன்னா நம்பாதீங்க! ராசி!
:-))///
ரிப்பீஈட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏ

ambi said...

ராமர் தினமும் பாதுகை அணிந்து நந்தவனம் வழியா அரசவைக்கு போவாராம். உள்ளே நுழையும் போது பாதுகைகளை வெளியே விட்டு விட்டு போவது வழக்கம்.

ஒரு நாள், அடடா! நம்மை கல்லும் முள்ளும் குத்தாம பாத்துக்கறது இந்த பாதுகை தானே!னு கடைகண்ணால் பாத்தாராம்.
அடிச்சது பம்பர் குலுக்கல்!

பதினாலு வருஷம் அயோத்தியை ஆண்டதாம் பாதுகைகள்.

ஏ ராமா! உன் கடைகண்ணால் பாத்ததுக்கே இந்த உத்தம நிலைன்னா, இந்த ஏழை மீதும் கொஞ்சம் தயை காட்டுவாயோ?னு நாத பிரம்மம் ஏனுக்கோ ராமா!னு பாடி இருக்கார். (ராகம், தாளம் எல்லாம் மறந்து போச்சு, சும்மா அடிச்சு விட்டாலும் இங்க யாரும் கண்டுக்க மாட்டாங்கனு தெரியும், இருந்தாலும், வேணாம். :))

ambi said...

//கால் வண்ணம் கை வண்ணம் எல்லாம் அம்பியின் கை வண்ணமா அங்கே இருக்கு!
//

சரி, என்னோட பழைய ஊழல் எல்லாம் கிளறனுமா? :p

ambi said...

நின் தயவில்லையா?னு சிந்து பைரவி படத்துல கூட ஒரு பாட்டு வரும். :))