Pages

Tuesday, May 13, 2008

உள்ளுதல்



ஸ்மரணம் என்பது நினைக்கிறது, உள்ளுதல். பகவானைப்பத்தி கேட்டதையும் பாடினதையும் இடைவிடாம நினைக்கனும். அவனோட சிறப்பு, புகழ், அழகு, வீரம், அருள், கொடை இப்படி எல்லா குணங்களையும் சிந்திக்கணும். அப்படி நினைக்க நினைக்க அவன் சிறப்புகள்ல மனசு தோய தோய நம்ம மனசில இருக்கிற அழுக்கெல்லாம் போயிடும். தெளிவா ஆயிடுவோம்.

எதை இடைவிடாம நினைக்கிறோமோ அதுவாகவே ஆயிடுவோம் ன்னு பெரியவங்க சொல்லறாங்க. யார் காமத்தையும் ஆட்டம் போடறதையும் நினைக்கிறோமோ அவங்க அதுலேயே அழுந்தி மிருகமா போவாங்க. யார் பகவானைப்பத்தி அவனோட நல்ல குணங்களையே நினைக்கிறாங்களோ அவங்களுக்கு அந்த நல்ல குணங்கள் வந்து சேரும்.

திபெத்ல ஒரு துறவி இருந்தார். அவர்கிட்டே ஒரு இளைஞன் வந்து சேந்தான். உபதேசம் பண்ணனும்னு கேட்டுக்கிட்டான். "சரி, இங்கியே கொஞ்ச நாள் இரு. உனக்கு எது பொருத்தம்னு பாத்து செய்யறேன்" னு சொன்னார். பிறகு அவனை கவனிச்சதுல அவனுக்கு புத்தியும் அதிகமில்ல. உடம்பாலேயும் ஒண்ணும் பெரிசா செய்ய முடியாதுன்னு கண்டுபிடிச்சார். என்ன தத்துவம் சொன்னாலும் ஒண்ணும் புரியலை. என்னடா செய்யறதுன்னு யோசிச்சார். "அப்பனே, உனக்கு எதை ரொம்ப பிடிக்கும்?" ன்னு கேட்டார். "சாமி. நான் வளக்கிற யாக் எருமையைதான் ரொம்ப பிடிக்கும்" அப்படின்னான். "நல்லதுபா. நீ அதையே நினைச்சுகிட்டே இருக்க முடியுமா?" ன்னு கேட்டார்.
" ஓ செய்யலாமே.”
"சரி, அப்படியே பண்ணு"

இத கேட்டுக்கிட்டு இருந்த மத்த சிஷ்யங்களுக்கு சிரிப்பு தாங்கல.
சில நாட்கள் போச்சு. இந்த சீடன் சாப்பாட்டுக்கு நாலு நாளா வரக்காணோம். சாதாரணமா சாதனைல இருக்கிறவங்கள யாரும் தொந்திரவு செய்ய மாட்டாங்க. அதனால தகவல் குருவுக்கு போச்சு. குரு சிஷ்யன் இருந்த இடத்துக்கு போனார்.
"அப்பனே, இருக்கியா?” ன்னு கூப்டார்.
" குருவே, இருக்கேன்" ன்னு குரல் வந்தது.
"வெளியே வரலியா ?”
"வர ஆசைதான் குருவே, பசிக்குது.”
" பின்ன வாயேன்!”
" வாசல் சின்னது. கொம்பு இடிக்குது. வர முடிலை" ன்னான் சிஷ்யன்.
இந்த அளவு ஒன்றி போகாட்டாலும் ஸ்மரணம் அடித்தடுத்த நிலைகள்ல கொண்டு விடும்.

8 comments:

துளசி கோபால் said...

//அவனுக்கு புத்தியும் அதிகமில்ல. உடம்பாலேயும் ஒண்ணும் பெரிசா செய்ய முடியாதுன்னு ...//

இவந்தான் உண்மையான யோகி.

அஞ்சு நிமிசம் மனசு ஒன்றமாட்டேங்குதே நமக்குன்னு இருக்கு(-:

Geetha Sambasivam said...

மனசைக் கட்டுப்படுத்த மட்டும் தெரிஞ்சா??? அப்புறம் இந்த உலகமே மாறி விடுமே? கடல் அலைகளோட வேகம் கூட மட்டுத் தான் மன அலைகளோட வேகத்தைப் பார்க்கும்போது! :(

திவாண்ணா said...

@ துளசி அக்கா,

//இவந்தான் உண்மையான யோகி.//
உண்மைதான்!
@கீதாக்கா
//மனசைக் கட்டுப்படுத்த மட்டும் தெரிஞ்சா??? அப்புறம் இந்த உலகமே மாறி விடுமே?//

கவலைப்படாதீங்க! எல்லாரும்மனசை கட்டுப்படுத்த தெரிஞ்சுக்க மாட்டாங்க.

வாயு வேகம் மனோ வேகம்ன்னு நிறையபடிச்சு இருப்போமே!

ambi said...

எளிமையான கதையோட நல்ல விளக்கம்.

எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய்! இல்லையா?

jeevagv said...

கதை நல்லா இருந்தது!

திவாண்ணா said...

அம்பி, அதுவேதான்.
ஜீவா நன்றி!

மெளலி (மதுரையம்பதி) said...

போன பதிவுலதான் ஸ்மரணம் பத்தி கேட்டேன், அதுக்கு பதிலா? :)

சூப்பரு.........

திவாண்ணா said...

:-))
பதில்ன்னு இல்லை மௌலி. வரிசையில் வருது அவ்வளவுதான்.