Pages

Tuesday, May 6, 2008

கனக தாசர் -மனதின் சக்தி



வழிகள் பலவா இருந்தாலும் தானே வரும் விளைவுகள் இங்கேயும் அங்கேயும் இருக்கலாம். பக்தி ஞானத்தில் கொண்டு விடலாம். கர்ம யோகியோட குண்டலினி எழும்பலாம். ஞானி பக்தி பண்ண ஆரம்பிக்கலாம்.
உதாரணத்துக்கு ஒரு கதையை பாக்கலாம்.

மகாராஷ்ர மாநிலத்தில ஒரு ஆட்டிடையர். பெயர் கனகதாசர். கிருஷ்ணன் மேல ரொம்ப பிரியம். ஆடுகளை மேய விட்டுவிட்டு மனசாலேயே ககினெலே க்ருஷ்ணனுக்கு பூஜை செய்வார். பாட்டு பாடுவார். அவன் சிந்தனையாவே இருப்பார்.

வ்யாஸ ராயர்னு ஒத்தர். அந்த நாட்டு மந்திரி. அரசருக்கு அவர் மேல ரொம்ப மரியாதை. அப்படிப்பட்ட மகான் வ்யாஸ ராயர் ஒரு முறை பல்லக்குல ககினெலே பக்கம் போய்கிட்டு இருந்தார். கூடவே அவரது பரிவாரம். பரிவாரத்தில நிறைய வேத வித்துக்கள், புலவர்கள். போகிற வழியிலே ஒரு துளசிக்காடு வந்தது. மைல் கணக்கா அருமையான துளசி செடிங்க. அதை பார்த்த ராயருக்கு ஒரே சந்தோஷம். உடனே அதை கடவுளுக்கு அர்ப்பணம் செய்ய நினச்சார். மனசாலேயே ஒரு துளசி மாலை கட்டினார். அதை மனசாலேயே ககினெலே கிருஷ்ணனுக்கு போடும் போது.... அட இதென்ன மாலை ஒரு பக்கம் சரியா படியலையே!

வ்யாஸ ராயருக்கு ஆச்சரியமா போச்சு. நாம செய்தது கற்பனைதானே? அதில ஏன் இப்படி? சரின்னு திருப்பி அதேபோல மாலை மனசால கட்டி போட திருப்பியும் அதே போல படியலை. படு ஆச்சரியமான ராயர் பல்லக்கிலிருந்து தலையை வெளியே நீட்டி அறிஞர்களை கூப்பிட்டு விஷயம் சொன்னார். யாருக்காவது ஏன் இப்படின்னு தெரியுதான்னு கேட்டார். எல்லாரும் ஒத்தரை ஒத்தர் பாத்துக்கிட்டாங்க. யாருக்கும் காரணம் தெரியலை. இவ்வளளவு பெரிய அறிஞர் கூட்டத்துக்கே பிடிபடாத இது என்னவா இருக்கும்ன்னு யோசிக்க ஆரம்பிச்சார். பல்லக்கு போய்கிட்டு இருந்தது.

அப்ப கனகதாஸர் அவசர அவசரமா அங்க ஓடி வந்தார். சாமீ! சாமீ! ன்னு கூப்பிட்டார். பரிவாரங்கள் "என்னடா இது? ஒரு ஆட்டிடையன் நம்ம எஜமானரை கூப்பிடறான்" னு பாத்தாங்க. ராயரும் வெளியே எட்டிப்பாத்தார். கனகதாஸர் ,"சாமீ க்ருஷ்ணன் கையிலே மத்து சாத்தியிருக்கு. அது துளசிமாலைய சரியா படியாம தடுக்குது. மாலைய கொஞ்சம் தள்ளி போட்டா சரியாயிடும்" ன்னு சொன்னார். இதை கேட்ட எல்லாருக்கும் ஆச்சரியம். என்னடா இது ராயர் மனசில மாலை செஞ்சு போட்டா இவனுக்கு எப்படி தெரிஞ்சது? ராயரும் ஆச்சரியப்பட்டு கண்ணை மூடிக்கிட்டு இன்னொரு மாலையை மனசால பண்ணி கொஞ்சம் தள்ளிப்போட அது சரியா படிஞ்சது. "ஏனப்பா யாருக்கும் தெரியாத இந்த சமாசாரம் உனக்கு எப்படி தெரிஞ்சது?"ன்னு கேட்டார். "அதுவா சாமீ! நீங்க மாலை போடறப்ப நான் அவனுக்கு பூஜை பண்ணிக்கிட்டு இருந்தேன். அதனால தெரிஞ்சது" ன்னார் கனகதாஸர்.

மனசோட சக்தி இந்த அளவு இருக்க முடியும்.

10 comments:

ambi said...

இது வரை கேள்விபடாத ஒரு அருமையான கதைக்கு நன்னி. :))

மானஸ சஞ்சரரே! என்ற பாட்டு இங்கு பொருந்துமா?


//ஞானி பக்தி பண்ன ஆரம்பிக்கலாம்.
//

இதையும் டீச்சர் பாத்துட்டு இருப்பாங்க தானே! :))

மெளலி (மதுரையம்பதி) said...

திவாண்ணா,

கனகதாஸர், வியாசராயர் எல்லாம் கர்னாடகா இல்லையோ?...இல்ல இவங்க வேறயா?.

Geetha Sambasivam said...

//"ஏனப்பா யாருக்கும் தெரியாத இந்த சமாசாரம் உனக்கு எப்படி தெரிஞ்சது?"ன்னு கேட்டார். "அதுவா சாமீ! நீங்க மாலை போடறப்ப நான் அவனுக்கு பூஜை பண்ணிக்கிட்டு இருந்தேன். அதனால தெரிஞ்சது" ன்னார் கனகதாஸர்.

மனசோட சக்தி இந்த அளவு இருக்க முடியும்.//

நூற்றுக்கு நூறு உண்மை , இதை நான் பலமுறை உணர்ந்துள்ளேன்.

திவாண்ணா said...

@ அம்பி
//மானஸ சஞ்சரரே! என்ற பாட்டு இங்கு பொருந்துமா?//

ஹிஹி பாட்டெல்லாம் எனக்கு தெரியாது! ரொம்ப தூரம். :-))

// இதையும் டீச்சர் பாத்துட்டு இருப்பாங்க தானே! :))//

உஷ்ஷ்ஷ்ஷ்.. அதுக்குள்ள மாத்திடலாம்!

@ மௌலி
கர்னாடகாவேதான்.

@
கீதாக்கா
ஆஹா! ஒரு உதாரணமாவது கொடுங்களேன்!
அனுபவத்துக்கு முன்னால எந்த தியரியும் இரண்டாம் பட்சம்தான்!

திவாண்ணா said...
This comment has been removed by the author.
துளசி கோபால் said...

ஹைய்யோ...........துளசி மனம்/மணம் அள்ளிக்கிட்டுப்போகுது.

மனக்கண்ணில் நெடுநெடுன்னு உசரமா ஏடுகொண்டலவாடு நான் எங்கே போனாலும் நிக்கிறானே.

டீச்சர் 'பார்க்கலை'ன்னு வச்சுக்குங்க:-)

திவாண்ணா said...

வாங்க டீச்சர்!
"லஞ்சம்" அனுப்பினேனே வந்துதா?
:-))
அத நல்லா பாத்துக்குங்க!

jeevagv said...

ஆகா, மனதிற்கு தானாக சக்தி இல்லயே - மனதில் மாயவன் நிறைவதால் அல்லவா சக்தி!

திவாண்ணா said...

வாங்க ஜீவா!
உண்மைதான்.
அது வேற ப்ளேன்!

சிற்சக்தி இல்லாமல் ஒண்ணுமே இல்லை. நிச்சயமான உண்மை. இல்லத்துல கைவைல்லியம் படிக்கிறீங்களோ? அதில் இது பத்தி எழுதி இருக்கேன்.

துளசி கோபால் said...

திவா,
லஞ்சம் கிடைத்தது.

ஆனா ஹாஃப்தா மாதிரி வாராவாரம் கொடுக்கணும்.ஆமா:-)))