Pages

Monday, May 5, 2008

அஹிம்சை



அஹிம்சை.

மத்தவங்களுக்கு துன்பம் செய்யாம இருக்கிறதும் மத்தவங்க நமக்கு செய்கிற துன்பத்தை பொறுத்து மன்னிக்கிறதும் அஹிம்சை.
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்
அப்படின்னு வள்ளுவர் சொல்கிறார்.
பெறும் ஜீவ காருண்யம் அஹிம்சை இல்லை. சாந்தியும் சகிப்புத்தனமையும் இருக்கணும்.

துறவி ஒத்தர் குளிக்கப்போனார் ஆறுல முங்கி குளிச்சு வெளியே வரப்ப ஆத்து தண்ணில சிக்கி தத்தளிக்கிற தேள் ஒண்ணை பாத்தார். பாவமே ன்னு அதை வெளியே எடுத்து விட போனார். தேள் கண்டதா இவர் உதவி செய்யறார்னு? அதோட இயல்பு கைல கொட்டிடுச்சு. கை தானா உதற தேள் திருப்பியும் தண்ணில விழுந்து தத்தளிச்சது. துறவி திருப்பியும் அதை வெளியே எடுத்து விடப்போக அதே கதை ஆச்சு.

ஆனா துறவி அதை வெளியே எடுத்து விடற முயற்சியை கைவிடலை. சில பல தடவை கொட்டினப்பறம் ஒரு வழியா வெளியே எடுத்து விட்டார். இதெல்லாம் கரைலேந்து பாத்துக்கிட்டு இருந்த ஒத்தர் துறவிய கேட்டார்:
ஏன் சாமி அது கொட்டினப்பவே சும்மா விட வேண்டியதுதானே. திருப்பியும் திருப்பியும் ஏன் அதுக்கு உதவி செய்ய போய் கொட்டு பட்டீங்க?
துறவி சிரிச்சுக்கிட்டே சொன்னார். கஷ்டப்படறவங்களுக்கு உதவி செய்யறது இயல்புதானே?
அதுக்குன்னு அது கொட்ட கொட்ட நீங்க ஏன் அதை எடுத்து விட போகணும்?
அது எங்கேயாவது அதோட இயல்பை விட்டுதா? ஆறு
அறிவு இருக்கிற நாம ஏன் விடணும்?


நமக்கு ஒத்தர் கெட்டது செஞ்சு விடறார். கோபமா வருது. அதுக்கு அவரை தண்டிக்கலாம்தான். ஆனா கஷ்டப்பட்டு அடக்கிக்கிறோம். இது அஹிம்சைதானா? அதாவது வர்ர கோபத்தோட கஷ்டப்பட்டு பொறுக்கிறது அஹிம்சை இல்லை. பொறுக்கிற நேரத்தில மனசு சாந்தமா இருக்கிற அளவு முன்னேறனும். அஹிம்சாவாதி எப்பவும் நினைக்கறது சொல்கிறது செய்கிறது ஒண்ணாவே இருக்கும்.
இந்த தூய்மை ஆன்மீகத்தில் மிக முக்கியம்.

ஆன்மீக சாதனையில் தேவையான உயர்ந்த குணங்களை பட்டியல் போடலாமா?
அஹிம்ஸா ப்ரதமம் புண்யம் புண்யம் இந்திரிய நிக்ரஹ:
ஸர்வ பூத தயா புண்யம் க்ஷமா புண்யம் விசேஷத:
ஞானம் புண்யம் தப: புண்யம் த்யானம் புண்யம் ததைவ ச
ஸத்வம் அஷ்டவிதம் புண்யம் விஷ்ணோ: ப்ரீதிகரம் பவேத்

அஹிம்ஸை முதலில் சொன்னதை கவனிக்கணும்.
இந்திரிய நிக்ரஹம் என்கிற புலனடக்கம் அடுத்து. சர்வ பூத தயை என்கிற உயிர் கருணை. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடின வள்ளலார் போல.
அடக்கம் அமரருள் உய்க்கும் என்றபடி க்ஷமா என்ற பொறுமை.
இந்த ஜடமான உடல் நானில்லை. அதை உள்ளிருந்து இயக்குகிற இயங்கு சக்தியான ஆத்மாதான் நான் என்கிற ஞானம்.
மனசை அடக்கி புலன்களை ஜெயித்து செய்கிற தவம்.
மனசை ஒரு நிலை படுத்தி சித்த சுத்தி பயிற்சி பண்ணி உபாசனா மூர்த்தியை லயிக்கப்பண்ணும் த்யானம்.

கடைசியாக சத்வம் என்கிற உயர்ந்த சீலம்.


4 comments:

ambi said...

உள்ளேன் ஐயா.
(வேற என்ன எழுதறதுனு தெரியலை.)

மெளலி (மதுரையம்பதி) said...

//அஷ்டவிதம் புண்யம் விஷ்ணோ ப்ரீதிகரம் பவேத்//

என்னது இந்த எட்டும் விஷ்ணுக்கு ப்ரீதியா?.... :).

Geetha Sambasivam said...

//அதாவது வர்ர கோபத்தோட கஷ்டப்பட்டு பொறுக்கிறது அஹிம்சை இல்லை. பொறுக்கிற நேரத்தில மனசு சாந்தமா இருக்கிற அளவு முன்னேறனும். அஹிம்சாவாதி எப்பவும் நினைக்கறது சொல்கிறது செய்கிறது ஒண்ணாவே இருக்கும்.
இந்த தூய்மை ஆன்மீகத்தில் மிக முக்கியம்.//

கஷ்டப் பட்டு பொறுத்துக்கிறதே பெரிய விஷயமா இருக்கும்போது, சாந்தமா வேறே இருக்கணுமா? ம்ஹும்! ரொம்பவே கஷ்டம் இல்லை?? ஆனால் அப்படி இருக்கிறவங்களும் இருக்காங்களே? அதான் ஆச்சரியம்! இது பயிற்சியினால் வரதா? தானாய் வரதா? பயிற்சி என்றால் எப்படிப்பட்ட பயிற்சி சிறந்தது?????

திவாண்ணா said...

@ நன்ஸ் அம்பி!
@ மௌலி
ஆமாம் சாமி! அப்படித்தான்.
@ கீதாக்கா
சாந்தமா இருந்தாதானே மனசு முன்னேறி இருக்குன்னு சொல்லாம். அது இல்லாத பொறுமையும் பாராட்டக்கூடியதுதான். இருந்தாலும் அது பலராலும் சாத்தியம்தான். ஸ்பெஷல் ஒண்ணும் இல்லையே?

எந்த வழியானாலும் அதுல போகப் போக பல விஷயங்கள் சிரம சாத்தியம்தான்.

எப்படி வருமா?
ஆன்மீக முன்னேறத்துல பல விஷயங்கள் தானா வரும். அதுக்கு வழிகள் பாகுபாடு கிடையாது.
இதுக்கு நல்ல பதிவு ஒண்ணு இன்னிக்கு போடறேன்.! ஐடியாக்கு தாங்க்ஸ்!