Pages

Thursday, May 1, 2008

ஹெவியா போகாம தடுக்க ஒரு ப்ரேக்!


பதிவுகள் கொஞ்சம் ஹெவியா போறதா மௌலி சொல்லி இருந்தார்.
ஒரு பட்டியல் போட்டு அதைப்பத்தி பேசறப்போ கொஞ்சம் தவிர்க்க முடியாம போச்சு. கதை ஏதாவது போடலாம்னா எழுதறது அதுக்கு தோதா இல்லை. சரின்னு ஒரு சின்ன ப்ரேக்.
----------
1. பயிற்சி: அசையாத மனசோட எப்போதும் தொடர்ச்சியாக கடவுளை நினைச்சுக்கிட்டே இருப்பது. அதெப்படி எப்பவுமே நினைக்க முடியும்ன்னா, முடியும். வழியை அப்புறமா பாக்கலாம்.
இப்படி முன்னால எழுதி இருந்தேன் இல்லையா?

அது எப்படின்னு பாக்கலாமா?

இதுக்கு உறுதுணையா இருக்கிறது நாமஜபம். நமக்கு பிடிச்ச இஷ்ட தேவதையோட பெயரை திருப்பி திருப்பி சொல்லறது. அதுலேயே பல விதங்கள் இருக்கலாம். உதாரணமா கண்ணா, மாதவா, கோவிந்தா, இல்லை சிவ சிவ இல்லை கந்தா கந்தா முருகாமுருகா இப்படி. ஒரே கடவுளின் எந்த பெயரை வேண்ணா சொல்லலாம். ஆரம்பத்துல தனியா உக்காந்து இதை மட்டும் சொல்லி பழகணும். பிறகு பல வேலைகளோட கோத்து பழகணும். உதாரணமா சமைக்கும்போது (ரங்கமணிகளுக்கும்தான்) நாம ஜபத்தோடயே சமைக்கலாம். அது உணவுல சேர்ந்து நல்ல பலன் தரும். இல்லை பைக்லே ஆபீஸ் போகும்போது.

இப்படி எல்லாம் சொல்லலாமா? எப்போ வேண்ணா சொல்லலாமா? நான் சுத்தமா இல்லையே? இப்படி எல்லாம் கேள்வி வரும்.

விடை நிச்சயம் சொல்லலாம்; சொல்லணும்.

பிரணவத்தோட சேர்க்காத நாமத்தை யார் எங்கே வேணுமானா சொல்லலாம்.
இப்படியே பழக பழக ஒரு ஆச்சரியமான சமாசாரம் நடக்கும். அந்த பேர் மனசிலே எப்பவுமே ஓடும். நாம் பேசும்போது, நடக்கும்போது, வேலை செய்யும்போது....
இது எப்படி?

மனசை புரிஞ்சுக்க முயற்சி பண்ணலாம். அது ரொம்பவே வினோதமானது.
ஜபம் செய்ய உட்கார்றோம். செய்ய ஆரம்பிக்கிறோம். சில நாள் கவனமா செய்கிறோம். புதுசு இல்லையா? செய்யும்போது கவனம் சிதறி எங்கோ தோசை வடை சினிமான்னு போயிடுது. வருத்தப்படறோம். திருப்பி ஜபம் செய்ய ஆரம்பிக்கிறோம். இப்ப கொஞ்ச நேரம் நிலைச்சு இருக்கு. ஆனாலும் திருப்பியும் எங்கோ போயிடுது. இப்படி ஓடுகிற மனசை திருப்பி திருப்பி ஜபத்துக்கு கொண்டு வரணும். இப்படி சில நாட்கள் போன பிறகு.... ஜபம் செய்கிறோம். மனசு எங்கோ போய்விட்டது. திருப்பி மனசை ஜபத்துக்கு கொண்டு வரப்பாக்கிறோம். அட! இது என்ன? அந்த ஜபம் உள்ளே ஓடிகிட்டுதான் இருக்கு! இப்படி ஜபம் செய்ய, கவனம் சிதற- திருப்பி திருப்பி நடக்குது.

எப்படி இது?

மனசில பல லேயர்கள் இருக்கு. அதுல ஒவ்வொரு லேயரிலேயும் ஒன்னொண்ணு நடக்கும். ஜபம் ஓடற லேயர் ஒண்ணு. சாதாரணமான நினைவுகள் அலையறது ஒண்ணு.
எப்ப எல்லா லேயர்லேயும் ஒரே விஷயம் ஓடுதோ அப்ப முழு கான்சன்ட்ரேஷன் வந்தாச்சு.
பாண்டிச்சேரி போயிட்டு என் நண்பனும் நானும் மோட்டார் சைக்கிள்ல திரும்பி வந்து கொண்டு இருந்தோம். அப்ப அவன் ஒரு ஆம்புலன்ஸ் ஐ காட்டி,”இதுல ஆம்புலன்ஸ் ன்னு "தலை கீழா" தெரியறா மாதிரி எழுதி இருக்கு இல்லையா? ஏன்னு தெரியுமா?” ன்னு கேட்டான்.
இது தலை கீழா இல்லையேன்னேன். சரி, சரி, வித்தியாசமா இருக்கில்ல? ஏன் ன்னு கேட்டான்.
அதுக்கு நான் விடை இப்ப தெரியலை. நான் கடலூர் பாலம் தாண்டறத்துக்குள்ளே சொல்லறேன்னு சொன்னேன். பிறகு பலவிதமான விஷயங்களை பேசிகிட்டே வந்தோம். திடீன்னு நான் டேய் உன் கேள்விக்கு ஆன்சர் இதுதான். ஆம்புலன்ஸ் ன்னு முன்னால போற வண்டிகளோட ரியர் வியூ கண்ணாடில சரியா தெரியணும். அதனால அதுக்கு தக்க படி எழுதி இருக்கு ன்னு சொன்னேன்.

உனக்கு விடை தெரிஞ்சது ஆச்சரியம்தான் ன்னு யாரோ முணு முணுக்கிறாங்க. அது சரிதான். இருந்தாலும் ஆச்சரியமான விஷயம் நாங்க அப்ப பாலத்தை கடந்துகிட்டு இருந்தோம் என்கிறதுதான்.

இந்த மாதிரி எப்படி நடக்கிறது? பல விஷயங்களை பேசிகிட்டு வந்தாலும் மனசு கேள்விக்கான பதிலை தேடி பிடிச்சு விட்டது. பிறகு காத்திருந்தது. நானோ அதை சீண்டவே இல்லை. பாலம் வருகிறதுன்னு அதுக்கு தெரிஞ்சதும் அதுவே ஒரு எண்ணத்தை வெளியே கிளப்பி விட்டது. விடை வெளியே வந்து விட்டது.
என்னத்துக்கு சொன்னேன்? மனசில பல லேயர்கள் இருக்கு. அவை வேலை செஞ்சுகிட்டே இருக்கும். அவை கவனத்துல இல்லைங்கிறதால் இல்லாம போகாது. திடீர்ன்னு மேலே வரும்.

அது போல நாம் ஜபம் பழக பழக அது உள்ளே ஓடிகிட்டே இருக்கும். நான் காலை ஆஸ்பத்திரி போகும் போது ஒரு ஜபம் செய்ய பழக்கி இருக்கேன். அது நான் காலை பைக் ஓட்ட ஆரம்பிச்சதும் ஆரம்பிச்சு போய் சேருகிறவரை தானா ஓடும். அதே போல மாலை வேற ஜபம்.

இதுல என்ன பிரச்சினை?

1. தனியா ஜபம் செய்யறது விட்டு போச்சுனா இதுவும் மௌனமாவே காணாம போயிடும். சில மாசங்கள் கழிச்சு திடீர்ன்னு முழிச்சுப்போம். ஜபம் எங்கேடான்னு பாத்தா காணாம போயிருக்கும். அது அப்பதான் தெரியும்.
2. எந்த செயலோட இணைச்சு இருக்கோமோ அந்த செயல் ஏதோ ஒரு காரணத்துக்காக நின்னு போச்சுனா இதுவும் நின்னுடும்.
இந்த ரெண்டு விஷயங்களிலேயும் கவனமா இருந்தா இந்த ஜபம் நல்ல பலன் தரும்.

சீக்கிரமே உஜாலாக்கு மாறிடலாமா?
பி.கு
உங்க மனசுல இருக்கிற லேயர் எத்தனை? பாத்து இருக்கீங்களா?

9 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

//பதிவுகள் கொஞ்சம் ஹெவியா போறதா மௌலி சொல்லி இருந்தார்.//

அச்சோ திவாண்ணா, நான் போன பதிவை மட்டுந்தான் சொன்னேன்...மன்னிச்சுக்கோங்க, நான் 'பதிவுகள்' அப்படின்னு எல்லாத்தையும் சேர்த்துச் சொல்லலை...

சரி இன்னுமே இந்த பதிவின் மிச்சத்தை படிச்சுட்டு வரேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

அனுபவம் மிக அழகா வெளியில வந்திருக்கு... :-).

//உங்க மனசுல இருக்கிற லேயர் எத்தனை? பாத்து இருக்கீங்களா?//

இல்லையே!!!

திவாண்ணா said...

மௌலி நானும் அப்படிதான் நினைச்சேன். நீங்களும் சொன்னவுடன் மாத்தனும்னு தோணிச்சு. அவ்ளோதான்.
நீங்க பதிவு ன்னுதான் சொன்னீங்க. சரிதான்.

மனசு லேயர்- ம்ம்ம் பாத்து சொல்லுங்க!
சைபராவும் இருக்கலாம் தியானத்துல.
:-)

Geetha Sambasivam said...

//இப்படியே பழக பழக ஒரு ஆச்சரியமான சமாசாரம் நடக்கும். அந்த பேர் மனசிலே எப்பவுமே ஓடும். நாம் பேசும்போது, நடக்கும்போது, வேலை செய்யும்போது....
இது எப்படி?//
அனுபவத்தாலே அறியலாம் என்பது உண்மை! :)

Geetha Sambasivam said...

//ஆம்புலன்ஸ் ன்னு முன்னால போற வண்டிகளோட ரியர் வியூ கண்ணாடில சரியா தெரியணும். அதனால அதுக்கு தக்க படி எழுதி இருக்கு ன்னு சொன்னேன்.

உனக்கு விடை தெரிஞ்சது ஆச்சரியம்தான் ன்னு யாரோ முணு முணுக்கிறாங்க. அது சரிதான். இருந்தாலும் ஆச்சரியமான விஷயம் நாங்க அப்ப பாலத்தை கடந்துகிட்டு இருந்தோம் என்கிறதுதான்.//

முணுமுணுத்தது நான் தான்!


//பதிவுகள் கொஞ்சம் ஹெவியா போறதா மௌலி சொல்லி இருந்தார்.//

மெளலி சொன்னார்ங்கறதுக்காக ஆம்புலன்ஸ் பத்தின அரதப் பழசான உவமை எல்லாம் எழுதணுமா என்னனு முணுமுணுத்தேன்.

பி.கு. இந்த ஒரு பதிவுக்கு மட்டுமே இம்மாதிரியான பின்னூட்டங்கள் அனுமதி! :))))))

திவாண்ணா said...

//மெளலி சொன்னார்ங்கறதுக்காக ஆம்புலன்ஸ் பத்தின அரதப் பழசான உவமை எல்லாம் எழுதணுமா என்னனு முணுமுணுத்தேன். //

நெனச்சேன்! :P
பழசா இருந்தா என்ன?
மேலும் அது உவமை இல்லை. நடந்த நிகழ்வுல ஒரு பாடம் தெரியுது.

ambi said...

//சமைக்கும்போது (ரங்கமணிகளுக்கும்தான்) நாம ஜபத்தோடயே சமைக்கலாம்.//

மத்தவங்களுக்கு எப்படியோ, எனக்கு நல்லாவே புரிஞ்சது இந்த பதிவு. :))

ambi said...

//ஆம்புலன்ஸ் பத்தின அரதப் பழசான உவமை எல்லாம் எழுதணுமா என்னனு முணுமுணுத்தேன்.
//

@geetha madam, என்ன இருந்தாலும் உங்கள மாதிரி கைலை யாத்ரையில் காப்பி கேட்ட கதைய எல்லாம் எழுத முடியுமா? :P

திவாண்ணா said...

// பி.கு. இந்த ஒரு பதிவுக்கு மட்டுமே இம்மாதிரியான பின்னூட்டங்கள் அனுமதி! :))))))//
அம்பி இதை தனக்கு சொன்னதா எடுத்துக்கிட்டார் போல இருக்கு.
அம்பி தட் வாஸ் fஆர் மி! ப்ளீஸ்!