Pages

Tuesday, April 15, 2008

-பக்தி யோகத்துல இறங்கறவங்க எப்படி இருக்கனும்?


-பக்தி யோகத்துல இறங்கறவங்க எப்படி இருக்கனும்னு ஏதாவது உண்டா?

உண்டே? இப்ப சொல்லப்போறதை செய்ய செய்ய பக்தி வழி பலப்படும்.

1. பயிற்சி: அசையாத மனசோட எப்போதும் தொடர்ச்சியாக கடவுளை நினைச்சுக்கிட்டே இருப்பது. அதெப்படி எப்பவுமே நினைக்க முடியும்ன்னா, முடியும். வழியை அப்புறமா பாக்கலாம்.
2. விவேகம்: சரி தவறு என்கிற பாகுபாடு தெரியணும். அதில் சரியானதையே எப்பவும் தேர்ந்தெடுக்க முடியனும்.
3. விமோகம்: மோகம் நமக்கு தெரிஞ்சதுதானே. அது உலக விஷயங்கள்ல. கடவுள்கிட்ட வைக்கிறது நல்ல மோகம். அதாவது விமோகம்.
4. சத்தியம்: வாய்மை. ஆன்மீகத்தில எந்த வழியா போனாலும் கடை பிடிக்க வேண்டியது. உண்மையே நினைத்து உண்மையே பேசி மனச்சாட்சி சொல்கிறதை கேட்டு நடப்பது.
5. அர்ஜவம்: நேர்மை
6. கிரியை: எல்லா சீவ ராசிகளுக்கு நல்லதே செய்வது. ஏன்னா எல்லா சீவராசிகளிடமும் கடவுள் இருக்கிறார் இல்லையா?
7. கல்யாணம்: திருமணம் இல்லைங்க! இதுவும் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்து வேற விதமா பயன்படுகிற பல வார்த்தைங்கள்ல ஒன்னு! கல்யாணம் என்கிறது மற்றவர்களிடம் அன்பு பாராட்டி அவர்கள் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது. கடவுளிடம் வேண்டிக்கிறப்ப எல்லாரும் நல்லா இருக்கணும், உலகம் அமைதியா நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிறது.
8. தயை: கருணை. அன்பே சிவம். கடவுள் அன்பு, மன்னிக்கும் தன்மை, பரிவு கொண்டவன். அவனை புரிந்து கொள்ள , அடைய முய்ற்சி பண்ணுகிற நாமும் அவனை மாதிரி இருக்க பழக வேண்டும்.
9. அஹிம்சை: மனதாலும் செயலாலும் மற்ற சீவ ராசிகளுக்கு துன்பம் விளைவிக்காம இருப்பது.
10. தானம்: கஷ்டப்படுகிற ஏழை எளிய மக்களுக்கு முடிந்தவரை, சுத்தமான உள்ளத்தோட வாரி கொடுக்கிறது.
11. அனவஸ்தை: அவஸ்தை தெரியுமில்லையா? கஷ்டப்படுகிறது. அனவஸ்தை எப்பவுமே சிரிச்சுகிட்டு நம்பிக்கையோட இருப்பது.
இந்த பதினொரு விஷயமும் பக்தி வழில சீரியஸா ஈடுபடறவங்களுக்கு இருக்க வேண்டிய விஷயங்கள். நமக்கு இதெல்லாம் இல்லைன்னா வளர்த்துக்க வேண்டியது.

13 comments:

ambi said...

நல்ல வழிகள் தான் சொல்லி இருக்கீங்க.

ஆனால் சிலது யுக தர்மத்தின் அடிப்படையில் கடைபிடிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும் இல்ல. (முடியவே முடியாது!னு சொல்ல வரலை) :))

திவாண்ணா said...

அம்பி, கஷ்டப்படாம நல்ல விஷயம் எதுவுமே கிடைக்கிறதில்லையே!
இந்த காலகட்டத்துல பலதும் நடைமுறை கஷ்டம்தான். தெரியும்.
எல்லாம் கஷ்டம்னு செய்ய முடியாதுன்னு ஒதுக்கிடாம எவ்வளவு முடியுமோ செய்வோம்னு அணுகினால் நிறையவே செய்ய முடியும்னு புரியும். இதை ஆசார விஷயங்களில் செய்து பாத்து நிறையவே முடியும் என்று நாங்கள் பலர் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.

Geetha Sambasivam said...

உண்மை தான், அம்பியாலேகடைப்பிடிக்கக் கஷ்டம் தான், அதான் யோசனை! :P

@திவா,
ம்ம்ம்ம் ரொம்பச் சுருக்கமா இருக்கு இந்த அத்தியாயம்?

Geetha Sambasivam said...

//இதை ஆசார விஷயங்களில் செய்து பாத்து நிறையவே முடியும் என்று நாங்கள் பலர் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.//

அம்பி, இதைக் குறிச்சுக்குங்க! :P

திவாண்ணா said...

@ கீதா
முதல்லேயே முடிவு செய்தது ஒரு பதிவில் ஒரு பேஜ் டவுன் அளவு மட்டுமே வர வேண்டும் என்பது.
நடுவில் கொஞ்சம் நீளமாகி விட்டது. சரி செய்திருக்கிறேன்.

jeevagv said...

முத்து முத்தா புட்டு புட்டு வைச்சிட்டீங்க! நல்லது!

ambi said...

//அம்பியாலேகடைப்பிடிக்கக் கஷ்டம் தான், அதான் யோசனை! //

@getha paati, ஹலோ யாருகிட்ட..? நாங்க எல்லாம் திருநெல்வேலி சம்ரதாய ஆசாரத்தை எள்ளளவும் குறையாம கடைபிடிக்கறவங்களாக்கும்.

பிளாக் மீட்டிங்குக்கு வந்தவங்களுக்கு இட்லி வடை கடையில எல்லாம் வாங்கிட்டு வந்து பறிமாற மாட்டோம். (information provided by TRC sir & KRS anna) :p

(எங்கிட்ட வாய குடுத்து மாட்டிக்கனும்னு தினமும் சங்கல்பமா?) :D

ambi said...

//முதல்லேயே முடிவு செய்தது ஒரு பதிவில் ஒரு பேஜ் டவுன் அளவு மட்டுமே வர வேண்டும் என்பது.
//

@கீதா பாட்டி, இதை நீங்க குறிச்சு வெச்சுகுங்க. உங்களுக்கு ரொம்ப கஷ்டம் தான், ட்ரை பண்ணி பாருங்க. :P

திவாண்ணா said...

கதை எல்லாம் படிச்சிட்டு போயிடலாம் அம்பி. கொஞ்சம் ஹெவின்னு பலர் நினைக்கிறதுதானே கொஞ்சமா எழுதனும்? கதைக்கு கேட்க எப்பவுமே ஆள் இருப்பாங்க. மத்தது கொஞ்சம் ஹெவியா போனாலும் அடுத்த நாள் வர மாட்டாங்க இல்லியா?
எள்ளவும் குறையாம ஆசாரத்தை கடை பிடிக்கிறது கேட்டு ரொம்ப சந்தோஷம்!

மெளலி (மதுரையம்பதி) said...

ரொம்ப சிம்பிளா அதே சமயம் தெளிவா சொல்லியிருக்கீங்க திவா சார்.

அம்பியும், கீதாம்மாவும் தங்களது கல்யாண குணங்களை (நீங்க சொன்ன கல்யாண குணமல்ல இது)இங்கும் காண்பிக்கறாமாதிரி தெரியறது?. :))

மெளலி (மதுரையம்பதி) said...

//கஷ்டப்படாம நல்ல விஷயம் எதுவுமே கிடைக்கிறதில்லையே!
இந்த காலகட்டத்துல பலதும் நடைமுறை கஷ்டம்தான். தெரியும்.
எல்லாம் கஷ்டம்னு செய்ய முடியாதுன்னு ஒதுக்கிடாம எவ்வளவு முடியுமோ செய்வோம்னு அணுகினால் நிறையவே செய்ய முடியும்னு புரியும். இதை ஆசார விஷயங்களில் செய்து பாத்து நிறையவே முடியும் என்று நாங்கள் பலர் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.//

நெத்தியடியா சொல்லியிருக்கீங்க....உண்மைதான்.

திவாண்ணா said...

வாங்க மௌலி. ஆளே காணோமே ன்னு நினைச்சேன்.
:-)

திவாண்ணா said...

@ மௌலி:
//அம்பியும், கீதாம்மாவும் தங்களது கல்யாண குணங்களை (நீங்க சொன்ன கல்யாண குணமல்ல இது)இங்கும் காண்பிக்கறாமாதிரி தெரியறது?//

மனித சுபாவம் குறிப்பான முயற்சி இல்லாமல் மாறாது.
விளையாட்டாகதான் இரண்டு பேரும் அடிச்சி கடிச்சிகிறாங்கன்னு தெரிஞ்சாலும் எனக்கு கொஞ்சம் சங்கடமா இது இருக்கு. பதிவுலேந்து கவனம் சிதறிடக்கூடாது. அதனால
அக்கா அன்ட் அம்பி, கொஞ்ச நாளாவது "வெய்டீஸ்" விடலாமா?