Pages

Thursday, April 10, 2008

வழி4 ஆ



அதுக்கு சாதனா சதுஷ்டயம் ன்னு பேர். பயப்படாதீங்க.
சாதனை என்கிற வார்த்தை தெரிஞ்சதுதான். சதுஷ்டயம் ன்னா நான்கு. நாலு படிகள். அவ்வளவுதான்.
அதெல்லாம் என்ன?

1. நித்திய அநித்தியங்களில் நிர்ணயம் தெரிகின்ற விவேகம்
2. இந்த லோக/ மறு லோகங்களில் வரும் சுகங்களில் ஆசை இல்லாம இருப்பது.,
3. சமாதி என்று ஆறு கூட்டம் (சமம் முதலான ஆறு தொகுதி)
4. முத்தியை விரும்பும் இச்சை- உண்மையாக அதிகாரிக்கு உரிய சாதனம் இந்த நான்கே அப்படின்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க.

இப்ப ஒவ்வொண்ணா பாக்கலாமா?
1.நித்திய அநித்தியங்களில் நிர்ணயம் தெரிகின்ற விவேகம்

எதையும் இது எப்பவுமே இருக்கக்கூடியது. இது அழிந்து போகக்கூடியது அப்படின்னு பாகுபாடு செய்து பாக்கனும். எது எப்பவுமே இருக்கக்கூடியதோ அது விரும்பி அடையக்கூடியது. அழியக்கூடியதை தேடிப்பிடித்து என்ன பிரயோசனம்?
நாம தேடற விஷயத்தை ஒவ்வொண்ணையும் இப்படி பாக்கணும். ஒரு திண்பண்டம் வாங்கறேன். சாப்பிடறேன். அது ஆறு மணி நேரத்துல ஜீரணமாகி போயிடும். அப்ப அதை அடைய எவ்வளவு முயற்சி எடுக்கலாம்னு நான் முடிவு செய்துக்கலாம். உயிர் வாழ சாப்பாடா இல்லை சாப்பிட உயிர்வாழனுமான்னு யோசனை செய்யலாம். இது போல நமக்கு வேண்டியது எல்லாமே யோசனை பண்ணிவிடலாம். அப்ப உண்மைல பல விஷயங்கள் அவசியம் இல்லைனு தெரிய வரும். அதெல்லாம் தேடி கஷ்டப்படறதை விட்டுவிட்டு சுகமாக இருக்கலாம்.

வாழ்க்கைக்கு தேவையானதா நம்ம முன்னோர் சொன்னது சாப்பாடு துணிமணி இருக்க ஒரு இடம். அவ்ளோதான். இதற்கு மேல நம்ம தேவைகள் அதிகமானா பிரச்சினைகள்தான் அதிகமாகும்.

2. இந்த லோக/ மறு லோகங்களில் வரும் சுகங்களில் ஆசை இல்லாம இருப்பது.,
ஆசையே அழிவுக்கு காரணம்னு புத்தர் மாதிரி பெரியவங்க சொல்றாங்க. யோசிச்சு பாத்தா உண்மைதான்னு தோணுது. ஒரு விஷயத்தின் மேல ஆசை வச்சா அதை அடைய முயற்சி பண்ணுவோம் அதுக்கு தடையா இருக்கிறது மேல கோவம் வரும். அது மற்ற எல்லா பிரச்சினைகளையும் கொண்டுவரும். ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடை எப்பவுமே இந்த காமம் குரோதம்தான். அதாவது ஆசையும் கோபமும்.

இந்த பிறவில கிடைக்கிற சுகங்களில்தான் ஆசை ன்னு இல்ல. அடுத்ததா நான் சொர்கத்துக்கு போகணும். அங்க ஜாலியா இருக்கலாமாமேன்னு யாரை பூஜை பண்ணலாம் என்ன ஹோமம் பண்ணலாம் னு தேடறவங்களும் உண்டு. அது இப்ப குறைஞ்சு போச்சு. இது மேலோட்டமா பாத்தா நல்லது போல தோணினாலும் இதுவும் இந்த உலக ஆசைகள் போல பிரச்சினைகளை உண்டு பண்ணுவதுதான்.

3. சமம் முதலான ஆறு தொகுதி அப்படி வேற சொல்லிட்டீங்க அது என்ன? என்னன்னா..

1.சமம் 2.தமம் 3.விடல் 4. சகித்தல் 5.சமாதானம் 6.சிரத்தை ஆறாம்.

சமம்னா மனச அடக்கறது. (அகக் கரண தண்டம்)
இந்த மனச பாருங்க. நம்மை பாடா படுத்தறது இதுதாங்க. சும்மா விட்டா எங்க எங்கயோ ஓடுது. எப்பவோ நடந்ததை எல்லாம் அசை போடுது. நாப்பது வருஷம் முன்னாடி நடந்ததை நினச்சு இப்ப வருத்தப்பட வைக்குது. கோபப்பட வைக்குது.
அது வேணும் இது வேணும்னு கேட்டுக்கிட்டே இருக்கு. சரி இந்தான்னு கேட்ட ஒண்ண சம்பாதிச்சு கொடுத்தா சும்மா இருக்கா? அடுத்ததா வேற ஒண்ணு மேல ஆசை. ஒரு நிலையா இல்லாம படுத்துது. இதுக்கு தீனி போட்டு மாளாது. அதனால இதுக்கு ஒரு செக் வைக்கனும். “தா சும்மா கெட” ன்னு சொல்ல பழகணும். அதான் சமம்.


14 comments:

Geetha Sambasivam said...

//வாழ்க்கைக்கு தேவையானதா நம்ம முன்னோர் சொன்னது சாப்பாடு துணிமணி இருக்க ஒரு இடம். அவ்ளோதான். இதற்கு மேல நம்ம தேவைகள் அதிகமானா பிரச்சினைகள்தான் அதிகமாகும்.//

தேவைகளும் பெருகிட்டே போகிறது, மனிதர்களின் ஆசைகளும் பெருகிட்டே போகிறது. இன்னொரு பக்கம் இம்மாதிரியான ஆன்மீகத் தேடல்களும் அதிகம் ஆகிறது. இதுவும் ஒருவிதப் பெரிய ஆசைதானோன்னு என் மனசு பல சமயங்களிலும் சொல்கிறது. உணமையிலேயே எதைத் தேடுகிறேன்? கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் இல்லை?

திவாண்ணா said...

ஆசைகளிலேயே இந்த ஆன்மீக தேடல் நல்ல ஆசை. நல்ல வழியில கொண்டு விட்டு பின்னால் காணாம போகும்! பிணம் சுடு தடி போல...
கொஞ்சம் இல்லை, நிறையவே யோசிக்க வேண்டிய விஷயம். கர்ம வாசனைகள் இழுத்துகிட்டேதான் இருக்கும். அதுல எது ஆன்மீக சாதனைக்கு உதவும் எது உதவாதுன்னு நிர்ணயம் செய்யறதும்தான் நித்யாநித்ய வஸ்து விவேகம்.

ambi said...

//ஒரு விஷயத்தின் மேல ஆசை வச்சா அதை அடைய முயற்சி பண்ணுவோம் அதுக்கு தடையா இருக்கிறது மேல கோவம் வரும். //


நான் அப்படி நினைக்க வில்லை. நியாயமான ஆசையா இருந்தா அதை அடைய என்ன யுக்தியை கையாளலாம்?னு யோசிக்க வைக்கும் நம்மை.

அதுக்கு உதவியா யாரை நாடலாம்? என்ன வழி?
சாம, தான, பேத தண்ட முறைகளை கையாளலாமா?னு யோசிக்க வைக்கும்.

இதுக்கு சாங்க்ய யோகம்னு சொல்வார்கள்.

நியாயமற்ற ஆசைகளை (பேராசைகளை) பற்றி நான் பேசவே இல்லை. :))

ambi said...

//கர்ம வாசனைகள் இழுத்துகிட்டேதான் இருக்கும். அதுல எது ஆன்மீக சாதனைக்கு உதவும் எது உதவாதுன்னு//

@diva sir, ஹஹா! உண்மை, உண்மை. கைலாச யாத்ரையில் சூடான காப்பி கேட்பது கூட கர்ம வாசனை தானோ? :P

திவாண்ணா said...

//நியாயமான ஆசையா இருந்தா அதை அடைய என்ன யுக்தியை கையாளலாம்?னு யோசிக்க வைக்கும் நம்மை.

அதுக்கு உதவியா யாரை நாடலாம்? என்ன வழி?//

அம்பி நீங்க சொல்லறது பண்பட்ட மனதுக்கு ரொம்ப கரெக்ட். ஆனா சாதாரணமா மனசு அப்படி இல்லை.
மேலும் வழி யோசனை போன்ற விஷயமெல்லாம் புத்தியோட வேலை. மனசோடது இல்லை.

திவாண்ணா said...

//@diva sir,//

அது tv அல்லது திவா

// ஹஹா! உண்மை, உண்மை. கைலாச யாத்ரையில் சூடான காப்பி கேட்பது கூட கர்ம வாசனை தானோ? :P//

அது காபியின் வாசனையும்தான்!

Geetha Sambasivam said...

@diva sir, ஹஹா! உண்மை, உண்மை. கைலாச யாத்ரையில் சூடான காப்பி கேட்பது கூட கர்ம வாசனை தானோ? :P

@அம்பி, எங்கே போனாலும் கேசரிக்கு அலையறதுக்கு என்ன வாசனைன்னு பேர்? சொல்ல முடியுமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கு தாமிரபரணி மகாத்மியம் அனுப்பி வைக்கலை, இருந்தும் நான் மானத்தை வாங்காமல் இருக்கேன், நினைவு இருக்கட்டும். :P

ambi said...

//எங்கே போனாலும் கேசரிக்கு அலையறதுக்கு என்ன வாசனைன்னு பேர்? சொல்ல முடியுமா? //

@geetha madam, நானும் நீங்களும் ஒன்னா மேடம்? நான் பால் மணம் மாறா பாலகன், நீங்க பதிவுலக காரைக்கால் அம்மையார். :))

//எனக்கு தாமிரபரணி மகாத்மியம் அனுப்பி வைக்கலை//

தாமிர பரணி மகாத்மியம் உங்க பினாமி மதுரையம்பதி அண்ணாவுக்கு அனுப்பியாச்சே!

எப்படியும் அவர் தான் உங்களுக்கு பதிலா பதிவு போட போறார். இப்ப பேச்சே வராதே! :P

திவாண்ணா said...

@ அம்பி கீதா அக்கா,
மத்ய கைலாஷ் பக்கம் வந்தா இரண்டு பேருக்கும் காபியும் கேசரியும் வாங்கி தாரேன். இந்த உ.கு எல்லாம் விட்டுடலாமா?
:-))

Geetha Sambasivam said...

ஐந்தாம் தந்திரம் 9-ம் அத்தியாயம், பாடல் எண் ஒன்றும், எட்டும்.

பாடல் எண் : 1


சாற்றுஞ்சன் மார்க்கமாம் தற்சிவ தத்துவத்
தோற்றங்க ளான சுருதிச் சுடர்கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.

சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
பொழிப்புரை :
எல்லாவற்றினும் மேலானதாகச் சிறப்பித்துச் சொல்லப் படுகின்ற சொரூப சிவத்தின் உண்மை இயல்பை விளக்குவனவாகிய வேத சிவாகமங்களில் ஞானப் பகுதியின் பொருளை உள்ளவாறு உணர்ந்து, அதனால் `வெகுளி, காமம், மயக்கம்` என்னும் முக்குற்றங் களும் நீங்கிச் சிவத்தோடு ஒன்று படும் நிலை சித்திக்கப் பெற்றுக் காலனை வென்றவரே குறிப்பொருளை (இலட்சியப் பொருளை) அறிந்து அடைந்தோராவர்.

குறிப்புரை :
`சன்மார்க்கமாம் சுடர்` என இயையும். இயல்பினை, ``தோற்றம்`` என வைத்து, காரணத்தைக் காரியமாகக் கூறினார். சிவா கமங்களும் சுருதியாதல் அறிக. `சுருதியில் கண்டு` என உருபு விரித்து முடிக்க. சுடர் - ஞானம்; அஃது அதனை உணர்த்தும் பகுதியைக் குறித்தது. ``சீற்றம்`` என்றது உபலக்கணம். கூற்றத்தை வெல்லுத லாவது, தூல உடம்பை விட்டு எமலோகம்போகாது, தூல, சூக்கும, பர உடம்புகளாகிய அனைத்தையும் விடுத்து இறைவனை அடைதல். `வெல்வார்` எனறப்பாலது, துணிபு பற்றி `வென்றார்` எனப்பட்டது.
இதனால், சரியை முதலிய நான்கனுள் முடிவாகச் சொல்லப் படுகின்ற உண்மை ஞானம், பிறவியாகிய பெருந்துன்பத்தை நீக்கிச் சிவானந்தமாகிய எல்லையில் இன்பத்தைத் தருதலால், `சன்மார்க்கம் - நன்னெறி` எனப்படுவதாயிற்று என்பது கூறப்பட்டது. `இதனின் மிக்க நன்னெறி பிறிதில்லை` என்பதாம்.
[இதன் பின் பதிப்புக்களில் உள்ள ``சைவப்பெருமை`` என்னும் மந்திரம் இத்தந்திரத்தின் இறுதி யதிகாரத்தில் வருவது.]

பாடல் எண் : 8


அன்னிய பாசமும் ஆகும் கருமமும்
முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் பேதாதி பேதமும்
தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே.

பொழிப்புரை :
பூர்வபக்க மதங்களின் உணர்வுக்கு அப்பால் உள்ள பிரதி பந்தமாகிய ஆணவ மலத்தை, முன்னர் உணர்ந்து பின்னர் ஏனைய கன்மம், மூலப்பகுதி, அம்மதங்களால் உணரப்பட்ட சாக்கிரம் முதலிய அவத்தைகள், அவைகளில் தொடக்குண்டு நிற்கின்ற அறிவின் நிலைகள், பொருள்களிடையே உள்ள சிறியனவும், பெரியனவுமாகிய வேறுபாடுகள் என்பவற்றோடு தலைவனாகிய இறைவனையும் உணரும் சித்தாந்த ஞானம் வாய்க்கப் பெற்றவரே `சன்மார்க்கத்தோர்` எனப்படுவர்.

குறிப்புரை :
`சித்தாந்த ஞானம் கைவரப்பெற்றவர்க்கே பிற வெல்லாம் பூர்வ பக்கமாதல் இனிது விளங்கும்` என்றவாறு. ``முன்னும் அவத்தையும்`` என்பதனை, ``மூலப்பகுதியும்`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க. அதிபேதம் - பெரியவேற்றுமை. ``தன்`` என்றது ஒருவனான இறைவனை. இது, ``கண்டவர்`` என்பதனோடு இயைதல் கூடாமையின், கண்டவரை உணர்த்தாமை அறிக.
இதனால், பிற ஞானங்கள் `சன்மார்க்கம்` எனப்படாது, சித்தாந்த ஞானமே `சன்மார்க்கம்` எனப்படுதல் பொருந்துமாறு கூறப் பட்டது.

ambi said...

நீங்க சொன்னா சரி சார்.

இந்தாங்க கீதா மேடம் போட்டி தவில் நாங்களும் வாசிப்போம் இல்ல:

நட்ட கல்லை சுற்றி வந்து
நாலு புஷ்பம் சாத்தியே
முணுமுணுவென்று மந்திரம் ஓதி
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச் சுவை தான் அறியுமோ?
நட்ட கல்லும் பேசுமோ?
நாதன் உள்ளிருக்காயில்
- சிவ வாக்கியர்.

Geetha Sambasivam said...

@ambi, போட்டி போட்டாலும் அது சரியா இருக்கணும் இல்லை? ஏன் கணேசன் அதுக்குள்ளே துபாய் போயிட்டானா? எழுதித் தர மண்டபத்திலே யாருமே இல்லையோ? இல்லை இந்த ஒரு பாட்டுத் தான் தெரியுமா? :P

திவாண்ணா said...

டாமும் ஜெர்ரியும் திருப்பி ஆரம்பிச்சாச்சா? :-))

Geetha Sambasivam said...

டாமும் ஜெர்ரியும் திருப்பி ஆரம்பிச்சாச்சா? :-))

எப்போ நின்னுருக்கு? :P